செர்ரிப்பழ ஜாம்

தேதி: July 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

செரிப்பழம் - 1 கிலோ
சீனி - 150 - 200 கிராம்
வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி


 

செரிப்பழத்தின் விதையை நீக்கி சிறிதாக வெட்டுங்கள்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெட்டிய செரிப்பழங்களையும் சீனியையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் வைத்து காய்ச்சவும். அடிப்பிடிக்கா வண்ணம் அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.
கலவையை கரண்டியில் எடுத்து விடும் போது கெட்டியாக விழவேண்டும். அப்பொழுது வெனிலா எசன்ஸை விட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் பாட்டில்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டில் வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.


இங்கு சீனி 150 - 200 கிராம் எனக் கொடுத்திருக்கிறேன் அவரவர் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜாமினைப் பயன்படுத்தும் போது உலர்ந்த கரண்டி அல்லது உலர்ந்த கத்தியினைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் கெடாமால் இருக்கும். சில நாடுகளில் ஜாம் செய்வதற்குரிய சீனி கிடைக்கிறது அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆகா வத்சலா இன்று தான் நான் இந்த குறிப்பை தரலாம்'னு வந்தேன்... நீங்க முந்திகிட்டீங்க. ;) எனக்கு செர்ரி ஜாம் ரொம்ப இஷ்டம். நான் இதுக்கு வென்னிலா எஸன்ஸ் சேர்ப்பதில்லை, ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்ப்பேன்.... நீங்க சேர்த்து பாருங்க... சிரியன் செர்ரி ஜாம் அப்படி தான் இருக்கும். :) இதுல கூட ரொம்ப பழுத்த செர்ரி'ன எலுமிச்சை சேர்க்கலாம். நல்ல குறிப்பு.... நேற்று தான் நான் வழக்கமாக செய்வது போல் செய்து பிரிஜ்ஜில் வைத்தேன், இன்று உங்க குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, இதை நான் நீண்ட நாட்களாக கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். கடந்தவாரம் இதைச் செய்தேன்.நேற்று நேரம் கிடைத்தது உடனே கொடுத்து விட்டேன். இங்கு வனிலா எசன்ஸ் சேர்த்தும் செய்வார்கள், சேர்க்காமலும் செய்வார்கள். அடுத்த முறை செய்யும் போது ரோஸ் எசன்ஸ் சேர்த்து சிரியன் முறைப்படி செய்து பார்க்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"