சிட்டுக்குருவி

தேதி: July 6, 2009

4
Average: 4 (2 votes)

 

மீடியம் ஃபர்(பச்சை)
பெல்ட் துணி(சிவப்பு, ஆரஞ்சு மற்றும் கருப்பு)
ஊசி
நூல்
பஞ்சு
கண்
கத்திரிக்கோல்
கலர் பேனா

 

சிட்டுக்குருவி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஒரு சாட் பேப்பரில் சிட்டுக்குருவிக்கான உடல் பகுதி, மூக்கு, இறகு, வால், கொண்டை போன்ற பகுதிகளை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிட்டுக்குருவியின் உடல் பகுதியை மீடியம் ஃப்ர் துணியின் மீது வைத்து வரையவும். அதன் எதிர் திசையில் சாட் பேப்பரை வைத்து மற்றொரு உடல் பகுதியை வரைந்துக் கொள்ளவும்
சிட்டுக்குருவிக்காக நறுக்கி வைத்திருக்கும் சாட் பேப்பரை அதற்கென்று உள்ள துணியில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு துணியிலும் கீழே குறிப்பிட்டுள்ள அளவில் சிட்டு குருவியின் ஒவ்வொரு பகுதியையும் இரண்டு என்ற கணக்கில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். மூக்கு பகுதி (சிவப்பு நிற ஃபெல்ட் துணி) - 2, இறகு பகுதி - 2 மீடியம் ஃபர்+2 ஆரஞ்சு நிற பெல்ட் துணி, வால் பகுதி - ஒரு மீடியம் ஃபர்+ஒரு ஆரஞ்சு நிற பெல்ட் துணி, கொண்டைப்பகுதி - ஒரு மீடியம் ஃபர் + ஒரு ஆரஞ்சு நிற பெல்ட் துணி.
முதலில் நறுக்கி வைத்திருக்கும் துணிகளில் படத்தில் கொடுத்திருக்கும்படி கலர் பேனாவால் புள்ளிகள் வைத்துக் கொள்ளவும். மீடியம் ஃபரில் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு உடல் பகுதியை இணைத்து ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து ஊசி நூலை வைத்து ஒரு முறை தைத்து மற்றொரு முறை அதே இடத்தில் விட்டு, ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டுக்கொள்ளவும். இதைப் போல் இரண்டு மூக்கு பகுதியையும் இணைத்து முடிச்சுப் போடவும். இறகு பகுதிக்கு ஒரு மீடியம் ஃபர் மற்றும் ஒரு ஆரஞ்சு நிற பெல்ட் துணி இரண்டையும் இணைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அதே போல் மற்றொரு இறகு செய்துக் கொள்ளவும். பிறகு கொண்டை மற்றும் வால் பகுதி இரண்டையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
முடிச்சுப் போட்ட பிறகு படத்தில் கோடு போட்டு காண்பித்திருக்கும் இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களை சுற்றிலும் தைக்கவும்.
தைத்து வைத்திருக்கும் குருவியின் உடல் பகுதியை திருப்புவதற்கு முன்பு படத்தில் உள்ளதுப் போல் இருபுறமும் "U" வடிவில் கத்திரிக்கோலால் துளை போட்டுக் கொள்ளவும்.
முதலில் தைத்து வைத்திருக்கும் மூக்குப் பகுதியை திருப்பிக் கொள்ளவும். சிட்டுக் குருவியின் தலைப்பகுதியின் இருக்கும் மூக்கு பகுதியின் உள்ளே மூக்கைவிட்டு அதன் ஒரங்களை சுற்றிலும் தைக்கவும். பிறகு சிட்டுக் குருவியின் உடல்பகுதியை திருப்பி வைத்துக் கொள்ளவும்.
தைத்த வால் மற்றும் கொண்டைப்பகுதி இரண்டிலும் நுனியில் மடித்து மூன்று தையல் போட்டுக் கொள்ளவும்.
தைத்த வால் பகுதியின் கூர்மையான பகுதியை சிட்டு குருவியின் பின்புறம் வைத்து உடலில் உள்ள துளையின் வழியாக வாலின் கூர்மையான பகுதி தெரியும் படி திருப்பிக் கொண்டு ஊசியை வைத்து தைக்கவும்.
அதே போல் கொண்டைப்பகுதியை குருவியின் தலைப்பகுதியில் உள்ள துளையில் கூர்மையான பகுதியை உள்ளே விட்டு உள்வழியாக தைக்கவும்.
அடுத்து தைத்து வைத்திருக்கும் குருவியின் இறகுப்பகுதியில் உள்ள துளையின் வழியாக பஞ்சை தினிக்கவும்.
பிறகு உடலில் U வடிவில் வெட்டி வைத்திருக்கும் இடத்தில் இருப்புறமும் இறகை வைத்து உள்வழியாக தைக்கவும்
கருப்பு பெல்ட் துணியை கண் வடிவில் வெட்டிக் கொண்டு அதில் குருவியின் கண்ணை வைத்து சொருகிக் கொள்ளவும். கொண்டையின் கீழ் பகுதியின் இருப்புறத்திலும் கண் வைப்பதற்கு கத்திரிக்கோலை வைத்து இரண்டு துளை போட்டுக் கொள்ளவும். அதில் பெல்ட் துணியில் சொருகி வைத்திருக்கும் கண்ணை வைத்து உள் வழியாக பட்டனை வைத்து அழுத்தவும்.
குருவியின் உடல் பகுதியில் இருக்கும் துளையின் வழியாக பஞ்சை ஒரே இடத்தில் வைத்து தினிக்காமல் எல்லா இடத்திலும் பரவலாக தினிக்கவும். பஞ்சு தினித்த பிறகு அந்த துளையை ஊசியை வைத்து தைத்து விடவும்.
அழகிய சிட்டுக்குருவி தயார். ஃப்ர் துணியைக் கொண்டு இந்த அழகிய சிட்டுக்குருவி பொம்மையை செய்து காட்டியவர் திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் ஷாந்தி,
அழகாக இருக்கிறது. குருவி பார்க்கச் செய்வதற்குச் சுலபமாகத் தெரிகிறது.
இரண்டாவது படத்தில் உள்ள வடிவங்களை சதுரக் கோடிட்ட தாளின் மேல் வைத்துக் காட்டியிருந்தால், அளவுகள் பிழைக்காமல் வெட்டி எடுக்க உதவியாக இருக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

விளக்கப்ப்டங்கள் நிறைய கொடுத்து ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கியது அருமை.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.