கத்திரிக்காய் மசாலா

தேதி: July 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

1. கத்திரிக்காய் - 4
2. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
3. உப்பு
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. தனியா தூள் - 3/4 தேக்கரண்டி
அரைக்க:
1. தேங்காய் - 4 மேஜைக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 2
3. மிளகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. சோம்பு - 1/4 தேக்கரண்டி
6. ஏலக்காய் - 1
7. கறிவேப்பிலை - சிறிது


 

கத்திரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். அரைக்க வேண்டியதை நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர் விட்டு, மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேர்க விடவும். காய் வெந்ததும் திறந்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.


இது சாம்பார் சாதம், வெறும் சாதம், பூரி, சப்பாத்தி அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கத்தரிக்காய் மசாலா நேற்று தான் செஞ்சேன், ரொம்ப சூப்பரா இருந்தது.... செய்முறையும் ரொம்ப ஈஸியா இருந்தது... எனக்கு இங்க கத்தரிக்காயில் என்ன டிஷ் பண்ணினாலும் வாய்க்காது, எண்ணெய் கத்தரிக்காய் தவிர!! ரொம்ப நாள் கழிச்சு நல்ல ஒரு மசாலா டிஷ் கிடைச்சது... ஆத்துக்காரருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு...

அனேக அன்புடன்
ஜெயந்தி

எனக்கும் கத்த்ரிக்காயில் செய்ரது எதுவும் சரியா வராது இது ரெம்ப ஈசியா இருக்கு நெம்ப நன்றி வனிதா
நீங்க ரெம்ப வாரது இல்லை எல்லாரும் எதிர் பாக்குரோம் வாங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்