வணக்கம் தோழிகளே எனக்கு 13 ணாம் தேதி நல்ல முறையில் பெண் குழந்தை பிறந்தது. என்னன இன்று தான் systemல் உட்கார அனுமதித்தார்கள் அதனால் தான் late. எனக்கு தாய் பால் மிகவும் கம்மியாக உள்ளது. எதாவது தாய் பால் சுரக்க வழி இருந்தால் சொல்லுங்கள் please.
வணக்கம் தோழிகளே எனக்கு 13 ணாம் தேதி நல்ல முறையில் பெண் குழந்தை பிறந்தது. என்னன இன்று தான் systemல் உட்கார அனுமதித்தார்கள் அதனால் தான் late. எனக்கு தாய் பால் மிகவும் கம்மியாக உள்ளது. எதாவது தாய் பால் சுரக்க வழி இருந்தால் சொல்லுங்கள் please.
ஹாய் johnsily
ஹாய் johnsily உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.......
அனுபவம் உள்ள தோழிகள் உங்கலுக்கு பதில் தருவார்கள்ப்பா......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் தோழி
நிறைய தண்ணீர் பால் குடியுங்கள்.அடிக்கடி பாலூட்டுங்கள்
நெய்யில் பூண்டை வதக்கி சாதத்தில் பிசைந்து சப்பிடுங்கள்
மதர் ஹார்லிக்ஸ் அல்லது வேறு ஏதெனும் இது போன்றவற்றை பாலில் கலக்கி குடியுங்கள்
முன்னை போல ஓரிரு கப் என்றில்லாமல் ஒரு 4 கப் தண்ணீர் கலக்காத பாலாவது தினசரி குடியுங்கள்.
நல்ல சத்தான ஆகரமாக சாப்பிடுங்கள்
தாய்ப்பால்...
அரை கப் புழுங்கல் அரிசி ரவையுடன் தண்ணீர் சேர்த்து,நான்கு பல் பூண்டை உரித்துப்போட்டு நன்கு வேகவிடவும். ஆரியதும், மோர் சேர்த்து உப்பு போட்டு பருகவும்.
hai, i read this in one article just now...
ida mari saptu vandaa paal nalla surakkum nu pottrundanga... :)
take care... and,
congrats on my behalf... :)
வாழ்த்துக்கள். :) வெந்தயம் பொடி செய்து வைத்து காலை மாலை 1/2 தேக்கரண்டி சாப்பிடுங்க, பால் கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Fenugreek
Congrats.
Some babies does not like Garlic flavor in breast milk. My daughter stopped taking milk once I started eating Garlic. So have a try before consuming it everyday. Fenugreek might be other option. But don't consume a lot if you have diabetic. Check this website
http://www.breastfeedingonline.com/fenugreek.shtml
அன்புடன்,
Ishani
அன்புடன்,
இஷானி
வாழ்த்துக்கள்... முட்டைகோஸ் பொரியல் தினமும் சாப்பிடுங்கள்.பழ ஜூஸ் நிறைய குடிங்க.மட்டன் சாப்பிடுங்கள்..பூண்டு சாதம் சாப்பிடுங்கள்.
Be Happy
Be Happy
தாய்ப் பால் நன்கு சுரக்க
வாழ்த்துக்கள் ஜான்சிலி, குழந்தை செலத்துக்கு என் அன்பான ஆசீர். தாய் பால் நன்கு சுரக்க பசும் பால் நிறைய குடித்தாலே போதும், ஒரு ஆறு மாசத்திற்கு குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு லிட்டராவது கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்க, அதனுடன் அசைவம் சாப்பிடுவராய் இருந்தால் முட்டை, மீன், கோழி, போன்ற புரதச்சத்து அதிகமுள்ள உணவை சேர்த்துக்குங்க. எதிலும் காரம் குறைவாக சாப்பிடுங்க. நல்லதொரு பேலன்ஸ்ட் உணவாக முக்கியமாக தண்ணீரும் சற்று அதிகமாகவே குடியுங்க. கட்டி பெருங்காயம் கிடைத்தால் வாங்கி சிறு சிறு கட்டிகளாக உடைத்து வெறும் சட்டியில் போட்டு பொரியவிட்டு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும், சாப்பிட்டு முடித்தவுடன் கடைசி உருண்டையின் உள்ளே அதில் ஒரு பட்டாணியளவு வைத்து பற்களில் படாமல் விழுங்கிவிடவும், இதனால் சாப்பாடு நன்கு ஜீரணமாகும், குழந்தைக்கும் சேர்த்து நன்றாக பசியும் எடுக்கும். நன்றி.
Johnsily
போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத அம்மாக்கள், வெத்தலையில ஆமணக்கு எண்ணெய் பூசி, லேசா வாட்டி, மார்பில வெச்சு கட்டிக்கிட்டு இரவு படுத்து எழுந்தா, மறுநாள் தாய்ப்பால் நல்லா சுரக்கும்.
Source : Aval vikatan
சமீபத்தில் படிக்க நேர்ந்தது.எந்தளவு உண்மை எனத் தெரியாது.முடிந்தால் try செய்து பாருங்கள்.
Patience is the most beautiful prayer!!
கர்ப்பினி பெண்கள்
எனக்கு முதலில் ஆண் குழந்தை,அடுத்து பெண் பிறந்து நான்கு மாதங்களாகிறது.கடந்த ஒரு மாதமாக என்னிடம் தாய்ப்பால் குடிக்க மாட்டேங்கிறாள்.வாய் வைத்தால் அழுது கத்துகிறாள்.பாலும் கையில் எடுத்து தான் குடுக்கிறேன்.மிகவும் கஷ்டமாக உள்ளது.பாலும் கம்மியாக இருக்குது.please help and reply me.
கர்ப்பினி பெண்கள்
எனக்கு முதலில் ஆண் குழந்தை,அடுத்து பெண் பிறந்து நான்கு மாதங்களாகிறது.கடந்த ஒரு மாதமாக என்னிடம் தாய்ப்பால் குடிக்க மாட்டேங்கிறாள்.வாய் வைத்தால் அழுது கத்துகிறாள்.பாலும் கையில் எடுத்து தான் குடுக்கிறேன்.மிகவும் கஷ்டமாக உள்ளது.பாலும் கம்மியாக இருக்குது.please help and reply me.