பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

தலைவர் இளவரசிக்கு வாழ்த்துக்கள். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இளவரசி எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என்னை பொறுத்தவரைக்கும் இருவருக்குமே சந்தோஷம், கஷ்டம் சமமாக இருப்பதை போல்தான் இருக்கு. இருந்தாலும் ஏதாவது ஒருபக்கம்தான் வாதட வேண்டும் என்பதால் நல்ல யோசித்து விட்டு வருகிறேன். நன்றீ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

துன்பம் என்று பார்த்தால் ஆண்களால் பெண்கள் துன்பப்படுவதும் பெண்களால் ஆண்கள் துன்பப்படுவதும் உலக வாழ்வியலில் சமச்சீரான வடிவிலேயே இருகிறது.அதே போலத்தான் சந்தோசமும் ஆண்களால் பெண்களும் பெண்களால் ஆண்களும் வாழ்வை சந்தோசமாக்குகிறார்கள்.
‘’சக்தியின்றி சிவனில்லை சிவனின்றி சக்தி இல்லை’’
’’உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்’’
ஆனால் நம்நாட்டு பெண்கள் ,ஆண்கள் என்று பார்க்கும் போது இதில் ஏற்றத்தாழ்வு வரலாம்.ஆண்கள் சுமைதாங்கிகளாகவும் முன்னுரிமையுள்ளவர்களாகவும் பெண்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களாகவும் கலாச்சாரத்திலும் நடைமுறையிலும் பகுக்கப்படுவதால்.

தலைப்பு பொதுவான பெண்கள் ஆண்களா நம்மூர் பெண்கள் ஆண்களா?

திருமணமான பெண்கள் ஆண்களா? ஆகாத பெண்கள் ஆண்களா?இரண்டுக்கும் நேர் எதிரான பாகுபாடுகள் இருக்கினறதனால்??
அதாவ்து தனிப்பட்டவர்களா? இணைந்திருப்பவர்களா?[இணந்திருப்பவர்கள் ஒருவர் மட்டும் அதிகமாக சந்தோசமாக இருப்பது எப்படி?]

அன்பு தோழிகளுக்கும்,சகோதரர்களுக்கும் என் வணக்கம்….
முதலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த தோழிகள் தனிஷாவுக்கும் ,ஷரோனுக்கும் என் வாழ்த்துக்கள்.

தலைப்பின் அர்த்தம் பொதுவான ஆண்கள்,பெண்கள்தான்.

திருமணமானவர்கள் மட்டுமென்றால் கணவனா?மனைவியா? என்று கேட்கபட்டிருக்குமல்லவா?.:)

இதில் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் வெவ்வேறு உறவு பரிமாணங்களில்
வாழும் ஆண்களையும்,பெண்களையும் குறிக்கிறது.

இங்கே நீங்கள் நம் நாட்டு ஆண்கள்,பெண்கள்,மற்றும் பிறநாட்டு குடியுரிமை பெற்ற நம் நாட்டு ஆண்கள் ,பெண்கள் எல்லாரையும் கருத்தில் கொள்ளலாம்.

அதுபோல் ஆண்கள் / பெண்கள் இருவரின் சந்தோசம் குடும்பம் மற்றும் குடும்பம் விடுத்த வெளியுலகம்…இரண்டிலிருந்தும் கிடைக்கிறது.

இருபாலாருக்கும் பொறுப்புகளின் சுமை வேறுபடுகிறது.
அதை கையாளும் மனநிலை வேறுபடுகிறது.
சமுதாயத்தின் பார்வை/கண்ணோட்டம் இருபாலாருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

சந்தோசத்தை அனுபவிக்கும் விதமும் ஒருவருக்கொருவர் நிச்சயம் மாறுபடுகிறது

உங்களின் தலைப்பை பற்றிய குழப்பத்திற்குதான் இந்த விளக்கம்:-(ஏதோ என் அறிவுக்கெட்டியது :)

என்ன தோழிகளே மேலும் குழப்பிவிட்டேனா?:)

அதிரா… அதிரா…ஓடிவாங்க..உங்க தலைப்பிற்கான என் விளக்கம் சரிதானே….:\
இதற்குமேல் பேசினால் நான் ஏதோ ஒரு அணியில் வாதாட இறங்கிவிடுவேன்…;)

வேறு ஏதேனும் சந்தேகங்களிருந்தால் இன்றே முடித்துகொள்ளலாம்…அ
ப்போதுதான் நாளை வாதாட வசதியாக இருக்கும்.

அப்பாடா…இந்த முறை இஷானியிடமிருந்து தப்பியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.:D

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் அவர்களே!!
நல்லவேளை, சும்மா ஒரு தடவை பார்க்க வந்தேன். ... ஆகா.. நல்ல தலைப்பேதான், நீங்கள் சொன்ன விளக்கம் தான் நானும் நினைத்தேன்...
பெண் பெண்ணேதான், ஆண் ஆணேதான்..(குழந்தை முதல், வயோதிபம் வரை) மொத்தத்தில் இரு பாலாரையும் வைத்துத்தான் தலைப்பை முன்பு கொடுத்தேன்.

ஆனால் உங்கள் எழுத்தின் வேகத்தைப் பார்த்தால்.. திருமதி ஹூசைன் சொன்னதுபோல்:), நடுவர் என்பதையும் மறந்து, ஒரு பக்கம் குதித்து விடுவீங்கபோல இருக்கே:), நீங்கள்தான் நடுவர் மறந்திடாதீங்கோ. காலை வச்சிட்டீங்க.... இரு தரப்பு வாதத்தையும் பலமுறை படிச்சு, அலசி, ஆராய்ந்து... முடிவாக தீர்ப்பைச் சொல்லுங்கோ. வாழ்க!!!

நானும் தலைப்புக் கொடுத்தபோது என்ன நினைத்துக்கொடுத்தேன் என்று இப்போ மறந்துவிட்டேன்:), இப்போ எனக்கும் தலை சுத்துது:) எந்தப் பக்கம் குதிப்பதென்று:).

இரு பகுதியிலும், சந்தோஷம் இருக்கிறது. இருப்பினும் , பெண்கள்தான் அதிகம் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனும் கட்சியிலேயே நான் களமிறங்குகிறேன். நாளைமுதல் தானே ஆரம்பம் வருகிறேன். ஏனோ தெரியவில்லை, நடக்கவும் முடியாமல் கால்களெல்லாம் நடுங்குது:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

//பெண் பெண்ணேதான், ஆண் ஆணேதான்..(குழந்தை முதல், வயோதிபம் வரை) மொத்தத்தில் இரு பாலாரையும் வைத்துத்தான் தலைப்பை முன்பு கொடுத்தேன்//
எப்படி அதிரா இப்படியெல்லாம் தத்துவம்...உதிர்க்கறீங்க....?:-
//நானும் தலைப்புக் கொடுத்தபோது என்ன நினைத்துக்கொடுத்தேன் என்று இப்போ மறந்துவிட்டேன்:), இப்போ எனக்கும் தலை சுத்துது:) எந்தப் பக்கம் குதிப்பதென்று:). //

பத்தியா..:)என்னை மாட்டிவிட்டுட்டு நழுவறிங்களே!!
தலை சுத்த என்ன காரணம்ன்னு நல்ல மருத்துவரா
பாருங்க...:)...சரியா?
பொதுவா எல்லா பட்டிமன்ற தலைப்பும் இரண்டு பக்கமும் சரிதானே?இதற்கு என்ன பட்டிமன்றம் என தோன்றும்,நம்ம அதிரா மாதிரி கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டு தனித்தனியாப்பபார்த்தால் அந்தந்த பக்கங்களிலும் உள்ள நியாயமான வாதங்கள் புரியும்.:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி... ஏற்க்கனவே குழம்பிபோயிருக்கும் இந்த ஜீவனை குழப்பறதுக்குன்னே இப்படி தலைப்பை தேர்வு செய்யறீங்களோ :)

நான் ஒரு வழியா ரொம்ப யோசிச்சு ஒரு பக்கமா காலை வச்சிருக்கேன்.. அத இப்போ சொல்ல மாட்டேனே :) எதிரணியில யார் யார் இருக்காங்கன்னு பாத்துட்டு அப்புறமா காலை திருப்பி இழுக்கறதா வேணாமான்னு முடிவு பண்ணிக்கறேன்.. :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வணக்கம்.நல்ல தலைப்பு,எனக்கும் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது,ஏனெனில் எங்கள் வீட்டில் ஆண்கள்,பெண்கள் சமமாக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது,சற்று உற்று நோக்கினால் ஆண்கள் தான் சிரமப்படுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.பார்ப்போம்,எந்தப்பக்கம் குதிப்பது?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் இளவரசி
முதலில் நடுவரான உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நல்லா தலைப்பு தெர்தேடுத்திருக்கிரிர்கள்.
தலைப்பு குடுத்த அதிராக்கும் என் வாழ்த்துக்கள்.
இதில் ரொம்ப கஷ்ரமான விடையம் எந்தப்பக்கம் வாதர்றது எண்டுதான் நாளை யோசித்து விட்டு வந்து பதிவு போர்றேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நடுவர் அவர்களுக்கும் எனதருமை சக அணியினருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என மனதறிந்து பொய் சொல்லப் போகும் எதிரணியினருக்கும் வணக்கங்கள்.
இப்போதே புரிந்திருக்குமே நான் எந்த அணிக்கு பேசப் போகிறேன் என்று. அதேதான் பெண்களை விட ஆண்களே அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்கள் என்ற அணியில்தான் பேசப் போகிறேன்.
இவ்வுலகில் பிறந்த அனைவருமே இன்பம் துன்பம் இரண்டையுமே அனுபவிக்கிறார்கள். யாரும் என் வாழ்வில் இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது ஒரு துன்பம் கூட இல்லையென்றோ அல்லது மறித்தோ சொல்ல முடியாது. இதில் சந்தோஷம் அதிகம் அனுபவிப்பவர்கள் யார் என்று கேட்டால் நிச்சயம் ஆண்கள்தான்.
ஒரு பெண் குழந்தைக்கு கருவிலிருக்கும் போதே ஆபத்து ஆரம்பித்து விடுகிறது. பெண் குழந்தை என்று தெரிந்ததுமே அழிக்க முற்படுபவர்களிடம் இருந்து தப்பி இந்த பூமியை கண்டதும்
கள்ளிப்பாலிடமிருந்தும் நெல் மணியிலிருந்தும் தப்பினால்தான் ஒரு பெண் குழந்தை இவ்வுலகையே காணமுடியும். ஆண் குழந்தை என்றால் வயிற்றிலிருக்கும் போதே ராஜ உபச்சாரம்தான். இங்கே ஆணுக்குதான் சந்தோஷம் அதிகம்.
அந்த பெண் குழந்தை ஒரு அண்ணனோ அல்லது தம்பியுடனோ சேர்ந்து வளரும் போது பெற்றோரும் வீட்டிலுள்ள மற்ற முதியோரும் அறிந்தோ அறியாமலோ விளையாட்டாகவோ சொல்லும் சில வார்த்தைகள் "அவன் ஆம்பிளை சிங்கம் நீ பெண்தானே விட்டு கொடுத்துப் போ", "அடுத்த வீட்டுக்குப் போகும் பொண்ணுதானே". இவற்றை கேட்கும் அந்த குழந்தைக்கு தான் இரண்டாம்தரமாக நடத்தப் படுகிறோம் என்ற வேதனை ஏற்படாதா? தாழ்வுமனப்பான்மை வராதா? அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும் போது சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியுமா? இந்த வீடு நமக்கு சொந்தமில்லையோ என்ற எண்ணம் இருந்தால் சந்தோஷப் பட முடியுமா. ஆண் குழந்தை இது போன்ற மன உளைச்சல்கள் இல்லாமல் சந்தோஷமாகத்தான் இருக்கும். இங்கேயும் ஆணுக்குத்தான் சந்தோஷம் அதிகம்.

அந்த ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் வளர்ந்து பருவ வயதை அடைகிறார்கள். பட்டாம்ப்பூச்சிகளாய் சிறகடித்து பறக்கும் வயசு. காமவெறியர்களின் தீண்டல்களிலிருந்து தப்பிக்க எப்போதுமே அந்த பெண் ஒரு விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் 'இடி'அமீன்களிடமிருந்தும் தடவல்ராஜாக்களிடமிருந்தும் இருந்து ஒரு பெண்கூட தப்பியிருக்க மாட்டார்கள்.அதனால் ஏற்படும் மன உளைச்சல்களும் அதிகம்.அப்படீன்னா அங்கேயும் அவளால் அந்த பருவத்தை முழுமையாக அனுபவித்து சந்தோஷப்பட முடிவதில்லை. இந்த கலிகாலத்தில் பருவ வயது ஆண்பிள்ளைகள் கூட இது போன்ற காமவெறியர்களிடமிருந்து தப்பிக்க விழிப்பாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்களைப் பார்த்தால் பெண்களின் சதவீதம்தான் அதிகமாக இருக்கிறது. இங்கேயும் ஆண்கள்தான் அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்.

அடுத்து கல்யாண பருவத்தை அடையும் போது வரதட்சணை என்னும் பேய் பெண்களின் முன்னே தலை விரித்தாடுகிறது. கடைகளுக்கு போனால் பொருட்களில் விலைச்சீட்டு(price tag)
போட்டிருக்கும். நாம் விலை கொடுத்து வீட்டிற்கு எடுத்து வருவோம். ஆனால் கல்யாண சந்தைக்குப் போனால் மணமகன் கழுத்தில் விலைச்சீட்டு இருக்கும்.பெண் விலையை கொடுத்து மணமகனை விலைக்கு வாங்குவாள். ஆனால் அவன் கூடவே போய் விடவேண்டும். எந்த ஊர் நியாயம் இது? "வேற எந்த ஊரு நம்ம ஊர் நியாயம்" தான்னு நடுவர் சொல்றது கேக்குது.

சரி அங்க போனாலாவது சந்தோஷமா இருக்க முடியுதா? அதுவும் இல்லை. புகுந்த வீட்டில் யாராவது தும்மினால் கூட எல்லாம் இவ காலை எடுத்து வச்ச நேரம்தான்னு குத்த
ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா நல்லது நடந்துச்சுன்னா அய்யோ என் மகனோட ராசிதான்னு கொண்டாடுவாங்க. அதாவது கெட்டது நடக்கறதெல்லாத்துக்கும் மருமகள்(பெண்) காரணம்.
நடக்கற நல்லதுக்கெல்லாம் மகன்(ஆண்) காரணம். அங்கேயும் அவள் சந்தோஷத்துக்கு வேட்டு வச்சாச்சு. நல்ல புகுந்த வீடு அமையற பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமாத்தானே இருக்காங்கன்னு எதிரணியினர் போர்க்கொடி தூக்காதீங்க. அப்படிப்பட்ட புன்ணியவதிகள்(நானும் அந்த அதிர்ஷ்ட சாலிதான் :)) நம்ம நாட்டில ரொம்ப கொஞ்சம்தான்.
எல்லாத்தையும் விடுங்க. திருமணம் ஆகறதுக்கு முன்னாடி ஆண் பெண் இருவருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். திருமணத்திற்கு பின்னும் அந்த ஆணின் நட்பு எந்த சிக்கலும் இல்லாமல் சந்தோஷமாக தொடரும். ஆனால் பெண்ணுக்கு அது கேள்விக் குறிதான். இப்போதும் பெண்களை விட ஆண்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
அடுத்து ஆண் பெண் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். ஆனால் இன்று கூட விவசாயம் மற்றும் கட்டிட தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் தொழிலாளிக்கு ஆண் தொழிலாளியை விட சம்பளம் குறைவு. ஆண் வேலை செய்யும் அதே 8 முதல் 12 மணிநேர வேலையைதான் அந்த பெண்ணும் செய்கிறாள். அவள் மனம் வேதனைப்படுமா இல்லையா? ஆண் அதிக
சம்பளத்தின் சந்தோஷத்தில் மிதக்கிறான். அட நிஜமாத்தாங்க.அதான் அரசாங்கமே அவர்களுக்காக வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை திறந்து வச்சிருக்குதே. போய் ஃபுல்லா ஏத்திட்டு உடல் வலி மறந்து சந்தோஷத்தில் மிதந்து திளைக்க வேண்டியதுதான். அதே வேலை செய்து அதே அளவு உடல் வலியுடன் வரும் பெண் அக்கடா என்று டி.வியை(அரசாங்கமே இலவசமா கொடுக்குதுங்க கவலையை மறக்க) போட்டால் பெண்களின் மனம் கவர்ந்த மெகா தொடர் என்ற விளம்பரத்தோடு வரும் தொடர்கள், அவர்களை கண்ணீர் சிந்த வைக்கிறது. ஆக அவனும் பெண்கள்னா கண்ணீர் சிந்தனும்னு முடிவு பண்ணிட்டான்.

நாட்டுல பொண்ணுங்க வாய்விட்டு சிரிக்கறதுக்கு கூட தடைதாங்க. அப்படி சிரிச்சா உடனே சொல்லிடுவாங்க ஒரு ப(கி)ழமொழியை "பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு"ன்னு. சிரிக்கறதுக்கு மட்டும் இல்ல தூக்கத்துக்கும் வேட்டுதான். அதுக்கும் வச்சிருக்காய்ங்களே ஒரு ப(கி)ழமொழி "பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி". அதாவது எல்லாரையும்
ஆராரோ ஆரிராரோ பாடி தூங்க வச்சிட்டு அதுக்கு அப்புறம் இவ தூங்கி எல்லாரும் எழும்ப முன்னாடி இவ எழும்பிடணுமாம். ஏன் பெண்ணுக்கு மட்டும் 8மணி நேர தூக்கம் அவசியமில்லையோ?. சரி இதையும் விட்டுத்தள்ளுங்க. மற்றவர்களை 10மணிநேரம் தூங்கப் போட்டால் நாம் 8மணிநேரம் தூங்கிக் கொள்ளலாம். பெண் உடுத்தும் உடைகளுக்கு கூட
பலவித கட்டுப்பாடுகள். சுடிதார் அணிந்து கல்லூரிக்கு செல்லக் கூட ஒரு பெண் கோர்ட் படியேற வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு பிரச்சினையே இல்லை எட்டு முழ வேட்டி கட்ட வேண்டாம். வசதியான பேண்ட் சர்ட் அணிய எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இதெல்லாத்தையும் தாண்டி வயோதிக பருவம் வருகிறது. இயற்கை கொடுக்கும் மெனோபாஸ் தொந்தவுகளினால் மனமும் உடலும் சோர்ந்து போகும் போது கூட பெண்ணுக்கு ஓய்வு கிடையாது. தொடர்ந்து வேலைகளை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் ஆண்களுக்கு 58 வயதுக்கு பின் உனக்கு ஓய்வு தேவை என்று அரசே ஓய்வெடுக்க சிஒல்லி அனுப்புகிறது.ஆனால் ரிட்டையமெண்ட் இல்லாத வேலை இல்லத்தரசிகளாகிய (பேரில் மட்டும்தான் அரசி மற்றபடி வேலைக்காரிதான்) பெண்களுக்குதான்.
அப்புறம் என்னத்த பெருசா சொல்றது ஆணை விட பெண்தான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கன்னு.
எல்லா விதத்திலேயும் பெண்களை அடக்கியே வைக்கிற இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எங்கங்க பெண் சந்தோஷமா இருக்காங்க?
எல்லா விதத்திலேயும் பெண்ணை விட ஆணே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்லி என் முதல் சுற்று வாதத்தை முடிக்கிறேன். அனைவருக்கும் நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் வணக்கம்.

வாதமிடப்போகும் தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள்
இந்தாங்க;-)~~~~~~~~~~~~~~~

கவிசிவா உங்கள் பேச்சில் இடிஇடிக்கிறது :/,மின்னலும் வருகிறது...:O

உங்கள் கருத்துமழையில் நனைந்த நடுக்கத்தில் காய்ச்சலே வந்துவிடும்போலிருக்கிறது :-&

அருமையான வாதம் ...அற்புதமான கருத்துக்கள் :~) ...

பாராட்டுக்கள்...கவி கலக்கீட்டீங்க :O)

வாங்க.....சந்தனா,ஆசியா,சுகா,ஷரொன்,தனிஷா இப்ப முடிவு பண்ணிருப்பீங்களே! எந்த அணியில் சேர்வதுன்னு :D

அதிராவுக்கு இன்னும் நடுக்கம் அதிகமாயிருச்சா?:))
எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.<:-|...

அன்புடன்
இளவரசி

அதிராவுக்கு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்