பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

அதே கதைதான்... பூதம் கிணறுவெட்ட...
அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு போன கதையாய்க்கிடக்கு சிலபேரின் கதை:).

கத்திக்குத்து, ஒப்பாரி எல்லாம் முடியட்டும் எனக் காவல் இருந்து:), முடிவை அறிவித்ததும்(அதுவும் தமக்குச் சாதகம் என்றதும்:)), ஓடி வந்து வாழ்த்துகினம்:).

இருந்தமாதிரியே பேசாமல் இருந்திருக்கலாம்:), ஓடிவந்து "திறமையான நடுவர்கள்" என்றதும், இனி வரப்போகும் எங்களுக்கெல்லோ உதறுது:), இப்படியெல்லாம் திறமையாக, எம்மாலயும் தீர்ப்புச் சொல்ல முடியுமோ என்று:).

///"அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா" /// சத்தியமாக நானும் முதலில் அவதானித்தது இதைத்தான், தலைப்பைப் போட்டபின்னர் எதுவும் கேட்டு, குழப்பிடக்கூடாதென்று, பெருந்தன்மையாக விட்டிட்டேன்:).

அப்பப்பா கண்களா அவை:), மூலை, மூலையாக ஆராய்கிறார்களே...:):):).

.............................

சுவர்ணா... உண்மையேதான்:), பேசாமல் இருந்திருக்கலாம் நான்:).

ஆசியா, உங்களையும் என்னையும் நினைத்தேன் ஒரு பாட்டுத்தான் மனதில் வருகிறது....
உன்னைக்கண்டு நான் வாட:)
என்னைக்கண்டு நீவாட:)
கண்ணீரில் பதில் சொல்லும் பட்டிமன்றம்:)...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அட்மின் அண்ணாவுக்கு நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அதிரா பாட்டு நல்ல பொருத்தம்,ஆனால் நீங்கள் வாடத்தேவையில்லையப்பா, பட்டிமன்றம் நகைச்சுவையாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனி, என்னதிது. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன். இன்னும் அடுத்தடுத்த நடுவர் முடிவாகவில்லையே;-0

இதோ இந்த லிஸ்ட்டில் உள்ளவங்க எந்த சாட்டும் சொல்லி ஒளியக் கூடாது:) தனிஷா நீங்கதான் எனக்கு பிறகு நடுவர். சரின்னு சொல்லுங்கோ. வனி நான் சொல்றது சரிதானே:)

திருமதி.தனிஷா,
திருமதி.இஷானி,
திருமதி.ஆயிஸ்ரீ
திருமதி.ஜெயராஜி(சுபா),
திருமதி.சேகர்(சந்தனா),
திருமதி.அதிரா,
திருமதி.தேன்மொழி,
திருமதி.வனிதா,
திருமதி.சுகா,
திருமதி.ஆசியா,
திருமதி.தேவா,
திருமதி.மனோகரி,
திருமதி.உமா(ஆஸி)

எல்லோருக்கும் வணக்கம்.
சகோதரி அதிரா, சைலன்ட் ரீடரா இருக்க விட மாட்றீங்களே!!!
\\ அப்பப்பா கண்களா அவை:), மூலை, மூலையாக ஆராய்கிறார்களே...:):):). //

நம்ம எல்லோரோட வேலையே அதானே.... நீங்க 'சகோதரர் ஹைஷ் மனைவி' புதிதாய் இணைந்தவர்கள்ல வந்ததும் கண்டுபிடிச்சு உடனே கேட்டீங்களே.. அத விடவா... :)

ஹாய் இளவரசி
இது எப்படி ??எப்படி இப்படி அழகாக தீர்ப்பு சொன்னீங்க??எல்லா வரியும் 100 க்கு 100 உண்மை..எனக்கு 1வருஷம் உக்காந்து யோசிச்சா கூட இப்படி தீர்ப்பு சொல்ல வராதே..அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...இதில் உபயோகிக்கப்பட்ட உங்க தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு..வாழ்த்துக்கள்.

அய்யோ...அய்யய்யோ...இதென்ன (அ)நியாயம்.நான் பாட்டுக்கு மிரண்டா குடுத்துக்கிட்டிருக்கேன்....என்னையும் கொண்டுபோய் நடுவர் லிஸ்டில் சேர்க்கிறீர்களே!!
நானே நாலு எழுத்தை கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு டைப் அடிச்சிக்க்கிட்டிருக்கேனுங்கோ...
விட்டுடுங்கோ.....

டியர் வானதி எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? நமது பட்டி மன்ற நடுவர் பட்டியலில் எனது பெயரும் இணைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியே, ஆனாலும் மன்னிக்கவும் என்னால் நடுவர் பொருப்பை ஏற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறு பட்டிமன்றத்தில் கலந்துக் கொள்பவர் கட்டாயம் நடுவர் பதவியை ஏற்கத் தான் வேண்டும் என்ற நிபந்தனை இருந்தால் தயவுச் செய்து தெரிவிக்கவும், மேலும் எனது பெயரை நடுவர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் நன்றி.

ஹாய்
என்ன இது நானே இப்பதான் தமிழ் எழுத்துகுட்டி எழுதி பழாகிகிட்டு இருக்கிறன் அதுக்குள்ளே நடுவரா அதுக்கெல்லாம் கொஞ்சம் தமிழ்யணம் வேண்டுமெல்லோ தோழிகளே என்னையும் மன்னிக்கவேண்டும் என்னலும் நடுவராகா முடியாது. அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மனோகரி அக்கா, நான் நலம். நீங்களும் நலம்தானே. அக்கா, அப்படி நிபந்தனையெல்லாம் எதுவும் இல்லை. நான் தான் அடுத்த நடுவருக்கு இவர்களையெல்லாம் கேட்டுப் பார்க்கலாம் என்று எழுதினேன்.உங்களால் நடுவராக இருக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை.ஆனால் அடுத்த பட்டிமன்றத்தில் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டும். ஆமாம் இப்பவே சொல்லிட்டேன்:)

ஒகே தோழிகளே, சுகா மற்றும் தேன்மொழி நடுவராக இருக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நீங்களும் அடுத்த பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு வாக்கு வாதம் செய்ய வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்:)

மேலும் சில பதிவுகள்