உதவுங்கள் தோழிகளே...(shower filter)

ஷோவேர் பில்டேர் (shower filter) பற்றி தெரிஞ்சவங்க எனக்கு அத பத்தி சொல்லுங்க
அதனால் என்ன உபயோகம்? முடி கொட்டுவது குறையுமா? என்ன பிராண்ட்(brand) வாங்கலாம்? உதவுங்கள் தோழிகளே...

லக்ஷ்மி.....

நீங்க கூகிள் பண்ணி பார்த்தீங்களா?? நான் யூஸ் பண்ணினதில்லை / மத்தவங்க - வீட்டுலயும் பார்த்ததில்லை.. நீங்க கேட்டத வச்சு தேடி பார்த்தேன்.. நல்ல விதமா தான் கொடுத்திருக்காங்க.. ஆனா அது அட்வர்டைசிங் நோக்கத்தோட கொடுத்ததான்னு தெரியலை.. இந்த லிங்க் பாருங்க..

http://beauty-products.suite101.com/article.cfm/shower_filters

இதுல போட்டிருக்கறதா படிச்சா பேசாம நானும் ஒன்னு வாங்கிடலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.. :)

நீங்க வாங்கினா வந்து சொல்லுங்க - என்ன வாங்கினீங்க, எப்படி இருந்ததுன்னு

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா,

மிக்க நன்றி லிங்க் கொடுத்ததற்கு.

நான் shower filter எங்க கிடைக்கும் எல்லாம் பார்த்தேன் இந்த லிங்க் பார்க்கல.
ரேட் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்த மாதிரி இருந்தது. (இன்னும் 6 மாதத்திற்கு அப்புறம் இங்க இருப்போமானு தெரியல) அதனாலதான் அதனோட பயன் இருக்கான்னு இங்க கேட்டேன். (இன்னும் 6 மாதத்திற்குள் எல்லா முடியும் கொட்டிற கூடாதே :)

இந்த லிங்க் பார்த்த இன்னும் கொஞ்சம் கூட பயமா இருக்கு :)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்