ஃபர் பேபி பொம்மை

தேதி: July 16, 2009

4
Average: 3.7 (3 votes)

 

ஸார்ட் ஃபர் துணி (short fur cloth) - பச்சை நிறம்
பெல்ட் துணி - சிவப்பு நிறம்
ஊசி
நூல் (எண்:12)
காட்டன் பஞ்சு
பொம்மையின் தலைப்பாகம்
கைப்பகுதி - 2
கால்பகுதி - 2
கத்திரிக்கோல்

 

ஃபர் பொம்மை செய்வதற்கு குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிவப்பு நிற பெல்ட் துணியை திருப்பி விரித்துப் போட்டு சிறிய இதயம் போன்று வரையவும். வரைந்தப்பகுதியை கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதே அளவில் மற்றொரு துண்டுகள் நறுக்கிக் கொள்ளவும்.
சதுரமான அளவில் பச்சைநிற ஃபர் துணியை எடுத்துக் கொள்ளவும். அந்த துணியை திருப்பி விரித்துப் போட்டு அதன் நான்கு மூலைகளையும் படத்தில் உள்ளது போல் நறுக்கிக் எடுத்துக் கொள்ளவும்.
ஊசியில் நூலை கோர்த்துக் கொண்டு அடியில் முடிச்சு போட்டுக் கொள்ளவும். துணியின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு இன்சாக மடக்கி மடக்கி தைக்கவும்.
இதேப் போல் சுற்றிலும் தைத்துக் கொண்டே வரவும். ஆரம்பித்த இடத்தில் வந்து முடிக்கும்பொழுது அந்த இடத்தில் ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். தைத்து முடித்ததும் பார்ப்பதற்கு ஒரு பூசணிக்காய் போன்று இருக்கும்.
இப்போது தைத்த துணியின் நடுவில் இருக்கும் துளையின் வழியாக தேவையான அளவு பஞ்சை எடுத்து உள்ளே தினிக்கவும். நிறைய தினிக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்க்க பருமனாக இருந்தால் போதும்.
பஞ்சு தினித்த துளையில் பொம்மையின் தலைப்பகுதியை வைத்து ஊசி நூலால் சுற்றிலும் தைக்கவும். அதாவது பொம்மையின் கழுத்துப் பகுதியில் உள்ள வரும்பை மடக்கி தைத்திருக்கும் ஃபர் துணியுடன் சேர்த்து வைத்து சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.
தலைப்பகுதிக்கு கீழே நேராக கைப்பகுதியை வைக்காமல் வலது புறம் சற்று தள்ளி வைக்கவும். முன்பு சொன்னது போல் கையில் உள்ள வரும்புப் பகுதியை ஃபர் துணியுடன் சேர்த்து வைத்து தைக்கவும்.
இதேப் போல் வலது கைக்கு நேராக இடது புறத்தில் மற்றொரு கைப்பகுதியை வைத்து தைத்து கொள்ளவும்.
பிறகு இரண்டு கைப்பகுதிக்கும் அடியில் இரண்டு இன்ச் இடைவெளிவிட்டு கால்பகுதியை சற்று குறுகளாக வைத்து தைத்துக் கொள்ளவும்.
இதயம் வடிவில் நறுக்கிய இரண்டு பெல்ட் துணிகளின் நல்லப்பக்கத்தை உள்ளே வைத்து வெளிப்பக்கம் மேலே தெரிவது போல் வைக்கவும். பிறகு ஊசியில் நூலை கோர்த்துக் கொண்டு இதயத்தின் அடிப்பகுதியை இணைத்து வைத்து ஒரு முறை தைத்து மற்றொரு முறை அதே இடத்தில் விட்டு, ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டுக்கொள்ளவும். இதேப் போல் இதயத்தின் மேல் பகுதியில் இரண்டு முனைகளையும், நடுப்பகுதியையும் இணைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் பஞ்சை உள்ளே வைத்து தினிப்பதற்கு ஏதாவது ஒரு பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு மற்ற பக்கங்களை சுற்றிலும் நெருக்கமாக தைத்துக் கொள்ளவும். தைத்த பிறகு நல்ல பக்கத்தை திருப்பிக் கொள்ளவும்.
இடைவெளி விட்டிருக்கும் பகுதியின் வழியாக பஞ்சை தினிக்கவும். பிறகு அந்தப் பகுதியை நூல் கொண்டு தைத்து விடவும்.
தைத்து வைத்திருக்கும் இதய வடிவ பெல்ட் துணியை பொம்மையின் இரண்டு கைகளுக்கு இடையில் வைத்து தைத்துக் கொள்ளவும்.
அழகாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய ஃபர் பேபி பொம்மை தயார். இதனை செய்துகாட்டியவர் திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் ஷாந்தி,
பொம்மை அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

hi shanthi
baby doll is sooooo cute...congrats
anbudan
kala

Kalai

மிக அழகாயிருக்கிறது உங்கள் பொம்மை. படங்களும் நன்றாக இருக்கின்றன.
அன்புடன்,
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta