அடை/கார தோசை

தேதி: July 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.

 

அரைக்க:
புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 4 (அ) 5
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - சுவைக்கு
தாளிக்க:
வெங்காயம் - 2
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

அரிசி மற்றும் பருப்பை நன்றாக 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அரைக்க தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
அரிசியை தனியாக அரைத்து எடுக்கவும். பருப்பு, மிளகாய வற்றல், பூண்டு, தேங்காய் துருவல் தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் கலந்து உப்பு சேர்த்து வைக்கவும்.
தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுத்து, பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலந்து வைக்கவும்.
தோசை கல்லை காய வைத்து மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு (விரும்பினால்) சுட்டு எடுக்கவும்.
இரண்டு பக்கமும் நல்ல கலர் வரும்படி சிவக்க சுட்டு எடுக்கவும்.
இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம், விரும்பினால் தனியாகவே சாப்பிடலாம். காரம் சேர்ப்பதால் சுவையாக இருக்கும்.

அடை தோசைக்கு விரும்பினால் மட்டுமே தேங்காய் சேர்க்கலாம். இல்லாமல் செய்தாலும் சுவையாக இருக்கும். காரம் உங்கள் ருசிக்கு சேர்க்கவும். மொறு மொறுப்பாக வேண்டுமானால் மாவை சற்று தண்ணியாக அரைக்கவும். இல்லை என்றால் வழக்கமான தோசை மாவு பதமே போதும். உளுந்து கடலை பருப்பு தாளிக்கும்போது கூட, வெங்காயம் அனைத்தும் உங்க ருசிக்கு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு எனது நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா