என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா.....

நாம் எல்லோரும் நம் கணவரை விட்டு எதாவது காரணத்தினால் சில காலம் தற்காலிகாமாக பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது குழந்தை பெறுவதற்காக அல்ல வேலை நிமித்தமாக கூட இருக்கலாம். அப்படி அவர்களை தனியே விட்டுட்டு வரும் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பகிர்ந்துகொள்ளலாமா? நம்மை தனியே விட்டுட்டு அவர்கள் எங்கும் போவதில்லை (டூர் எல்லாம் விட்டுடுங்க....பாவம்). அந்த மாதிரி பிரியும் போது கணவனும் மனைவியும் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் அவர்கள் அன்பை எப்படி வெளி படுத்துகிறார்கள்.....அப்போ முனுமுக்கும் பாடல் என்ன என்பதை பகிர்வோம்.

ஹாய் தோழி
நாங்கள் பாட்டேல்லாம் பாட மாட்டோம்..ஆனால் ரொம்ப வருத்தமா இருக்கும்,
இங்கிருந்து ஊருக்கு போவதாக இருந்தால் அவருக்கோ 1 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது போர் அடிக்குது என்று ஓடி வந்து விடுவார்..ஆனால் என்னையும் விட மாட்டார் நீயும் வா வா வா என்று நச்சு..அப்ப ஒரே சண்டை போடுவேன் கோபித்துக் கொள்வேன் எனக்கு 1 மாதமாவது தங்க வேண்டுமென்று...சம்மதமில்லாமல் தலையை ஆட வைத்து ஒரு விதமாக நான் தங்குவேன்..ஆனால் அவர் தனியாக இங்கு திரும்பும் நாள் வந்தா கரெக்டா ஒரே உருத்தலா இருக்கும்..தப்பு பன்னிட்டோமோ கூட போயிருக்கலாமோ..நாம இல்லாம நிக்க கஷ்டப்பட்டு தானே அழிக்கிறார் நாம சுயநலமா என் அம்மா அப்பா ந்னு இருந்துட்டோமேன்னு இருக்கும்..
பிறகு அவர் வந்தபின் ஓரிருநாள் ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கும்..அவருக்கு இங்க நாங்க திரும்பும் வரை கஷ்டம் தான்..அப்ப தான் ஒரே குற்ற உணர்ச்சியா இருக்கும் அடடே அவருக்கு இவ்வளவு நாள் சமைச்சதை விட நல்ல சமச்சு போட்டிருக்கலாமே பாவம் சாப்பாடுக்கு என்ன கஷ்டப்படுறாரோ என்று அடித்துக் கொள்ளும்..பிறகு வீட்டில் திட்டு வாங்குவேன் இப்படி விட்டத்தை பாத்துட்டு கவலை பட்டு எங்க கூட நிக்கிறதுக்கு நீ பேசாம கூடயே போயிருக்கலாம் என்பார்கள்.
அதன் பின் அவங்க திட்டுக்கு பயந்து அங்கயும் லேசா நடிப்பு இங்க இவர்கிட்டயும் நான் ரொம்ப எஞாய் பன்றேன்னு நடிப்பு கடைசியில் திரும்ப வர போகும் நாள் வருவதற்குள் இங்குள்ள வாழ்க்கை மறந்து ஊரோடு ஒன்றிப் போயிருப்போம் திரும்ப அவர்களை விட்டு விட்டு வருவது அதை விட பெருன்கொடுமை..அனேகமாக இது தான் எல்லா வீட்டிலும் நடக்குமென நினைக்கிறேன்.
இப்ப கூட இன்னொரு 3 மாதத்தில் ஊர் செல்லலாம் என நினைக்கிறேன் இப்பவே ஆரம்பித்து விட்டார் நான் தனியா இருக்க மாட்டேன் என்று..அப்பப்ப இதையே தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.

நானும் ஒன்னும் ஒரு மாதத்தில் என் கணவரை விட்டு ஊருக்கு போக வேண்டி உள்ளது. நினைத்தாலே ஒரே கழ்டமாக உள்ளது. ஊருக்கு சென்று உறவினர் எல்லோரையும் பார்கபோகிறோம் என்கிற சந்தோசத்தை விட அவரை தனியே விட்டு போகிறோமே என்கிற வருத்தம் தான் ரொம்ப இருக்கிறது. அவரு சாப்பாடுக்கு எவ்ளோ கஷ்டவடுவார், ஆபிசில்ருந்து வீட்டுக்கு வந்தால் யாரு அவருக்கு ச்னக்க்ஸ் தருவார்கள், கூட பேச்சு துணைக்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள், காலை எப்படி கரக்டான நேரத்திற்கு கிளம்பி போவார்...எப்படி எல்லா வகையான கவலைகள்.

விட்டுட்டு ஊருக்கு போகும் முன் எந்த போடி அரைத்து வைத்து போக வேண்டும் என்ன செய்து வைத்து போக வேண்டும், இந்தியன் ஸ்டோரில் என்ன வாங்கி ஸ்டாக் பண்ண வேண்டும் எப்படி பல யோசனை.

வேலை நிமித்தமாக அவரை விட்டு சென்ற ஓரிரு வாரம் எல்லாம் ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. விடுமுறைக்காக அவரை விட்டு செல்ல தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எனக்கு தெரியும் அங்கே சென்றும் முழு நேரமும் அவருடன் போனில் அல்லது நெட்டில் சாட்டிங் தான் நடக்க போகிறது......கல்யாணத்திற்கு முன் இது போல் தான் நடக்கும் அப்போவும் திட்டு வாங்கி கொண்டு தான் செய்வேன்.....எப்போவும் அப்படிதான்.

நிறைய பாடல்களை உள்ளன.....என்னை பார்த்து அவர் முதல் முதல் பாடின "லூசு பெண்ணே லூசு பெண்ணே....." அவர் என்னை முதல் முதலில் விட்டு US சென்ற போது நான் பாடின "நியூ யார்க் நகரம் உறங்கும் போது....." எப்பொழுது ஹிடாகயுள்ள "கண்கள் இரண்டால்....." எப்படி பல......

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்