புட்டு சரியாக வர உதவுங்கள்

first time புட்டு செய்தேன்.i used ராகி மாவு and குழல்.But மாவு சரியாக வேகவில்லை.சரியாக வர உதவுங்கள்.

தண்ணீர் ரொம்ப குறைந்து விட்டதோ?..மாவில் தண்ணீரின் ஈரம் எல்லா இடமும் சரியாக பரவியிருக்கவும் வேண்டும் அதே சமயம் கூடினால் கட்டி பிடித்து விடும்..கொஞ்ச கொஞ்சமா நிதானமா தெளித்து விவர வேண்டும்..தேங்காய் துருவலை இடையிடையே லேயராக சேர்த்து செய்தால் ராகி புட்டு சுவையாக இருக்கும்.

டியர் சுதாகமல் நலமா? சகோதரி தளிகா கூறியதுப்போல் பிசைந்த புட்டு மாவில் தேங்காப்பூவை இடையிடையேயும் மற்றும் முழுவதுமாக மாவுடன் கலந்தும் செய்துபாருங்க.ஒரு கோப்பை மாவிற்கு கால் கோப்பை நீர் போதுமானது.

cooker ல தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்?மாவுக்கு எவ்வளவு தெளிக்க வேண்டும்?because this is the first time

குக்கரில் ஜல்லீஸ் முழ்கின்ற அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதும், நீர் நன்கு சூடேறியவுடன் மாவை வைத்து மூடி வெயிட் போடாமல் ஒரு பத்து நிமிடம் வேக வைத்தாலே போதும் நல்ல வாசனையுடன் வெந்திருக்கும். நான் மேலே குறிப்பிட்டதுப் போல் ஒரு கோப்பை மாவிற்கு கால்க்கோப்பை நீரை தெளித்து கலக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்