தேதி: July 21, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இந்த செர்ரிப்பழ ஜாம் குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
செர்ரிப்பழம் - ஒரு கிலோ
சீனி - 150 - 200 கிராம்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
செர்ரி பழங்களை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

செர்ரி பழங்களின் விதைகளை நீக்கி விட்டு சிறியதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் செர்ரிப்பழங்களை போட்டு அதன் மேல் சீனியையும் போடவும்.

பழத்தையும் சீனியையும் நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். காய்ச்சும் போது பொங்கி வரும் அடுப்பைக் குறைத்து விட்டுக் காய்ச்சவும். அடிக்கடிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கரண்டியால் கலவையை எடுத்து பார்க்கும் பொழுது கெட்டியாக விழ வேண்டும். அதுவே ஜாமின் பதம். இந்த பதம் வந்ததும் இறக்கவும். இறக்கும் முன்பு வெனிலா எசன்ஸை சேர்த்து கிளறவும். சுவையான செர்ரி ஜாம் ரெடி. நன்றாக ஆறியதும் பாட்டில்களில் எடுத்து வைத்துக் கொண்டு குளிர்சாதனப் பெட்டில் வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.

இந்த ஜாமினைப் பயன்படுத்தும் போது உலர்ந்த கரண்டி அல்லது உலர்ந்த கத்தியினைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் கெடாமால் இருக்கும். சில நாடுகளில் ஜாம் செய்வதற்குரிய சீனி கிடைக்கிறது அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.