பீட்ரூட் பிரியாணி

தேதி: July 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சுத்தம் செய்த பீட்ரூட் - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி(ஒவ்வொன்றிலும் 15 இலைகள்)
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு, ஏலக்காய் - தலா 4


 

அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவலாக துருவிக் கொள்ளவும், அல்லது மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நாண்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு வதக்கி விடவும்.
அதில் ஊற்றிய அரிசி, உப்பு, 450 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். பிரியாணிப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
நல்ல வாசனையுடன், சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி ரெடி. இந்த பிரியாணியை <b> திருமதி. அதிரா </b> அவர்கள், திருமதி. செல்வி(சவுதி) அவர்களின் குறிப்பிகளிலிருந்து எடுத்து செய்து பார்த்ததை நமது அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

HAI,EVERY ONE.
BEETROOT BIRIYANI SEITHU KATIYA VITHAM SUPER.NANUM BEETROOT BIRIYANI SEIVEN,ANANL CHINA CHANGE,GRINDING TIME GARLIC,GINGER,PUDINA,DANIYA LEAF,PATTAI,LAVANGAM,PERUNSIRAGAM,ONE TOMATTO,ONE ONION,2 GREEN CHILLI ELLAM MIX IL POTU GRINDE SEITHA PIN ITAI POL SEITAL MIGAVUM SUPER AGA IRUKIM.PILLAIGAL MIGAVUM VIRUMBI SAPIDUVARGAL.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

பீட்ருட் பிரியாணி சூப்பர்

I LOVE ARUSUVAI.COM

அதிரா அப்படியே நான் செய்வதுபோலவே அழகாக செய்து இருக்கிறீர்கள்.நான் இப்பொழுதுதான் பார்த்தேன்.எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு.செய்து அனுப்பிய அதிராவுக்கும்,வெளியிட்ட அருசுவை குழுமத்திற்கும் என்னுடைய நன்றி.

சவுதி செல்வி

சவுதி செல்வி

Hi,
i tried beet-root biriyani yesterday.its came out
well . Its yummy and delicious.its very easy to prepare also.Thanks a lot.

Priya Benjamin

அதிரா போன வாரம் இந்த பீட்ரூட் ப்ரியாணி செய்தேன். எங்க வீட்டில் என்னை தவிர யாருக்குமே பீட்ரூட் என்றாலே பிடிக்காது. பயந்து கொண்டே தான் செய்தேன். நல்லவேளை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. என் பிள்ளைகளுக்கு இனி இந்த முறையில் பீட்ரூடை செய்து கொடுத்து விடலாம். நன்றி, இந்த குறிப்பை வழங்கிய செல்விக்கும் ஸ்பெஷல் நன்றி.

உங்க குறிப்பின் படியே செய்து பார்த்தேன். செம சூப்பராக வந்தது பிரியாணி.

பீட்ரூட் பிரியாணி செய்ய போறேன் என்று வீட்டில் சொன்ன போது பீட்ரூட் டில் பிரியாணி யா கேள்விப்பட்டதே இல்லை என்று கூற ஒரு பயத்துடன் தான் ஆரம்பித்தேன். பீட்ரூட் மட்டும் போட்டால் ஒரு மாதிரி இருக்கும் என்று கருதி கொஞ்சம் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியும் சேர்த்துக் கொண்டேன். எல்லாத்தையும் கலந்து எடுத்து ரைஸ் குக்கரில் வைத்த 5 நிமிடத்திலே மிக அருமையான மணம் வந்தது. அதை விட அருமையாக பிரியாணி இருந்தது.

பாகிஸ்தானி, ஸ்ரீலங்கன், வட இந்தியர்கள் என அனைவருக்குமே பிடித்து இருந்தது. இந்த முறை இந்தியா வரும் போது வீட்டில் இருப்பவர்களுக்கும் செய்து கொடுத்து அசத்த வேண்டும்.

குறிப்பிற்கு நன்றி :)

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

அதிரா மேடம்
இன்னைக்கு வீட்ல இந்த பிரியாணி தான் செய்தேன். ரொம்ப நல்லாருந்தது. பையனுக்கு பீட்ருட் ரொம்ப பிடிக்கும் . ஆனா எனக்கு பிடிக்கவே பிடிக்காது. வாங்கிட்டு வந்து எப்படி சமைப்பதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே உங்க குறிப்பு கண்ணுல பட்டுது. உடனே செய்து பார்த்துட்டேன். பீட்ருட் வாடையே தெரியாம ரொம்ப நல்லா இருந்தது. பையனும் விரும்பி சாப்பிட்டான். மிக்க நன்றி.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அதிரா மேடம்,
இந்த முறையில் நான் பிரியாணி செய்தேன். மிகமிக அருமையாக இருந்தது...................அருமையான பிரியாணி கற்றுக்கொள்ள உதவியதற்கு நன்றி

by,
AnuGopi,
Be happy and Make others happy........