அம்மா பற்றி பேச இந்த த்ரெட்: பேசுங்களேன். தயவு செய்து.

எனக்கு அம்மா தான் எல்லாம். நிறைய சொல்கிறேன்

ஹாய் தோழி pdhivvyaa இதர்க்கு என்னப்பா அர்த்தம்........ ஒன்னும் புரியால சீக்கிரம் வந்து செல்லுப்பா.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சகோதரி திவ்யா அவர்கள் அவருடைய வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத பெரும் சோகத்தை பதிவேட்டில் (guest book) கொடுத்திருந்தார். உள்நுழைவு செய்துள்ள உறுப்பினர்கள் மட்டுமே அதை படிக்க இயலும் என்பதால், அவர் அங்கு கொடுத்துள்ளதை அப்படியே எடுத்து இங்கே கொடுத்துள்ளேன்.

"அன்பிற்கு வணக்கம் என் வாழ்வில் திடீர் என சோகம் ஏற்பட்டு விட்டது. குடும்பதுடன் நான் குலு மனாலி ஆக்ரா டெல்லி சென்ற போது டெல்லி ரயில் நிலயத்தில் என் அம்மாவின் செயினை திருடன் பிடித்து இளுக்க அதில் அம்ம கீழே விழுந்து 36 மணி நேர போராட்டத்தின் முடிவில் அறுவை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டர்கள். நானும் என் தந்தையும் சிவகாசி திரும்பினோம். உஙகள் அன்பு என்றும் போல் தாருங்கள்.தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.அன்புடன் திவ்யா,ப்ரபு. "

-------

படித்தவுடன் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். என்ன நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும் என்று காட்சிகள் கண்முன்னே ஓடிச்சென்றது. எவ்வளவு மனவேதனையில் அதை எழுதியிருப்பீர்கள் என்பது புரிந்தது. உற்சாகமான ஒரு உல்லாச பயணம், இப்படி ஈடு செய்ய இயலாத இழப்பில் முடிவடைந்ததை படிக்கையில் கண்ணீர் வருகின்றது. அம்மா குறித்த உங்களின் ஏக்கம், மீள இயலாத சோகம், ஆறுதல் வார்த்தைகளைத் தேடும் இந்த பதிவில் தெரிகின்றது. வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல இது சாதாரண இழப்பு அல்ல. இருப்பினும், உங்கள் துயருக்கு ஆறுதல் மருந்து கொடுக்க, இங்கே உங்கள் தாய் ஸ்தானத்தில் பலர் இருக்கின்றனர். நீங்கள் இன்னமும் கல்லூரி மாணவிதான் என்று எண்ணுகின்றேன். தைரியமாக இருங்கள். உங்கள் தந்தைக்கு ஆறுதலாக இருங்கள். காலம் மட்டுமே உங்களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும். எங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

அட்மின் சகோதரர் எழுதி இருந்ததை படித்தேன். அதிர்ச்சியில் உறைந்த மாதிரி ஆகிவிட்டது. இப்படிப்பட்ட சம்பவங்களை புத்தகத்தில் படிக்கும்போதே நமக்கு மனம் பாரமாகிவிடும். நிஜமாகவே இப்படி உங்களுக்கு நடந்ததை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அம்மாவை யாராலும் ஈடு செய்ய முடியாதுதான். ஆனால் நீங்கள் இப்போதுதான் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும். அட்மின் சகோதரர் கூறி உள்ளது போல் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு தோழிகளாகவும், சகோதரிகளாகவும், அம்மாவாகவும் இருப்போம். எங்களுடன் நிறைய பேசுங்கள். உங்கள் சோகங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மனதுக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

May your mum's soul rest in peace.

அன்புடன்
உமா

பாபு அண்ணா எழுதியதை படித்ததும் மனம் பாரமாகிவிட்டது.ஒரு நொடியில் கண்களும் கலங்கிவிட்டது.என்ன சொல்வதென்று தெரியல.

உண்மையில் அம்மாவின் இழப்பு யாராலும் ஈடு செய்யமுடியாதது.நாங்கள் அனைவரும் உங்களுக்கு தாயாகவும்,தோழிகளாகவும்,சகோதரிகளாகவும் இருப்போம்.நீங்க தான் தைரியமாக இருந்து தந்தையை கவனிக்கனும்.

அடிக்கடி அறுசுவையில் எங்களுடன் பேசுங்கள்.மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

உங்கள் இழப்பு ஈடு செய்யமுடியாதது தான்,என்றாலும் காலம் தான் உங்கள் துயரத்தை மாற்ற வேண்டும்.அப்பாவை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.நாங்கள் அனைவரும் உங்களிற்காக இருக்கிறோம்.நானும் 5 வயதிலேயே தாயை இழந்தவள்,அந்த வலி நன்றாகவே தெரியும்.அதிக துக்கத்தை தந்த கடவுள் அதை ஈடுசெய்ய குறைவில்லாத வாழ்க்கையை அமைத்து தருவான்.மனதை அமைதிபடுத்த வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கவும்.நாம் திடமாய் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம்.உங்கள் அம்மாவின் ஆத்மசாந்திக்காகவும்,உங்கள் வளமான எதிர்காலத்திற்காகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் திவ்யா ப்ரபு உண்மையிலே மிகவும் துக்க கரமான விசயம் தான்..... படிக்கும் போது கஷ்டமாக உள்ளது.......

நான் அதற்க்கு மிகவும் வருத்தம் தேருவிக் கிரேன்ப்பா....... உங்கள் தாய் ஆத்துமா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிரேன்......

எங்கள் எல்லோருடய அன்பும் உங்கலுக்கு எப்பையும் உண்டு......

தவறாக நினைக்க வேண்டாம் மைக்ரோவேவ் வோவன் பற்றி எனக்கு தெரியாது. மற்ற தோழிகள் கட்டயம் பதில் தருவார்கள்......

இந்த தோழிக்கு கட்டாயம் உதவுங்கள் பிலீஸ்...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு தோழி திவ்யா,
உலகத்தில் யாராலும் தாயின் இடத்தை நிறப்ப முடியாதுதான்,ஆனால் அருசுவையில் இருக்கும் வயதில் பெரிய தோழிகள் பலர் உங்களுக்கு தாய் போல் இருந்து உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.எல்லா தோழிகளும் உங்களுக்கு எப்போதும் துனையாக இருப்பார்கள்.
ஆண்டவன் உங்களுக்கு துனையாக இருப்பார்.
"May your mothers soul rest in peace"
அன்புடன்
கலா

Kalai

I am sorry about ur mother may god bless u to get through this like admin and all other sisters said we are all here to support u when u need a shoulder to hold ur tears dont worry ur mother will always be with u in ur thoughts and in ur soul. I am a new responder to arusuvai everyone is arusuvai pls allow me to join in ur friends club in am living in US in staten island if there is anyone living in staten island pls reply me.

KEEP SMILING ALWAYS

KEEP SMILING ALWAYS

டியர் திவ்யா,தாயை இழந்து தாங்க முடியாத் துயரில் இருக்கும் உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை, இதுப் போன்ற ஈடுயிணையற்ற இழப்பிற்கு இந்த உலகில் நீங்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒரு நாளைக்கு இதைச் சந்திக்கத் தான் வேண்டும் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள். உடலளவில் உங்கள் தாய் உங்களை விட்டு பிரிந்து சென்றாலும் உள்ளத்தில் உங்க கூடவேயிருந்து உங்களை வழி நடத்துவார் ஆகவே கலங்க வேண்டாம், உங்க தந்தைக்கும் ஆறுதலாய் இருக்கவும். நிச்சயம் நாங்களும் உங்களுக்கு ஆறுதலாய் இருப்போம் என்ற நம்பிக்கையோடு உங்கள் மனக் குறைகளை வந்து பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஹாய் திவ்யா உங்கள பத்தி படித்ததும் மிகவும் வருத்தாம உள்ளது. நீங்க எதையும் நினைத்து வருத்த படாதிங்க. நானும் என் அம்மா அண்ணன் குடும்பம் லா விட்டுடு வெளிநாட்டில இருக்கிரேன். ஆனால் எனக்கு அம்மாவா அக்காவா தோழியா இந்த அருசுவை உறுப்பினர்கள் இருக்கிரார்கள். அதனால் நீங்க உங்க அம்மாவ இழந்து வருத்த பட வேண்டாம். உங்களுக்கு அம்மா இங்க நிரைய பேர் இருகாங்க. நீங்க உங்க அம்மாவா அவங்கள நினைத்துக்கலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்