தோழிகளே உதவுங்கள்.!!!!!!!!!!

என்னுடன் இங்கு இருக்கும் தோழி ஒருவருக்கு பல் வலி உள்ளது.இப்போதுதான் அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு 1மாதம் ஆகிறது.துனைக்கு வேறு யாருமில்லை.கடவா பல் வலிக்கிறது என்கிறார்.பல்லின் ஈரு வீங்கியுள்ளது.பல் எடுக்கவேண்டாம் என வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள்.இதற்க்கு ஏதாவது தற்காலிக வைத்தியம் சொல்லி உதவுங்களேன் தோழிகளே.குழந்தையும் பார்த்துக்கொண்டு பல் வலியில் அவஸ்த்தை ப்டுகிறார்
அன்புடன்
கலா

கிராம்பு தைலத்தை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்தால் வலி தெரியாது. இதை தற்காலிகமாக உபயோகித்து, பின் மருத்துவரை பார்ப்பது தான் நல்லது

வீட்டினரின் பேச்சை கேக்காமல் பல்மருத்துவரை காண்பது தான் தீர்வு இல்லையென்றால் அது வேறெதுவாவதில் கொண்டு போய் விடும்.
இன்று கர்பகாலத்தில் கூட பல்லை பிடுங்கவும் சிகிச்சை செய்யவுமான அளவுக்கு மருத்துவம் வளர்ந்து விட்டது 1 மாத குழந்தை இருப்பதால் அதை தாங்கிக் கொண்டிஉர்ப்பது சுமம நாளை தள்ளிக் கொண்டு அனுபவிப்பார்களே தவிற நிரந்தர தீர்வுக்கு மருத்துவர் தான் ஒரே வழி.
கிராம்பி தைலம் ஒரு டெம்பரரி ரிலீஃபுக்கு தான்..அதுவே தொடர்ச்சியாக உபயோகித்தால் பல் அரித்து விடுமாம்.

shreevi,thalika
இருவருக்கும் நன்றி.நானும் அதயே தான் கூறினேன்,பாவம் டாக்டர் அப்பாயின்மென்டும் அடுத்தவாரம்தான் கிடைத்துள்ளது.. பதில் த்ந்து உதவியதற்க்கு என் நன்றிகள்ப்பா.
அன்புடன்
கலா

Kalai

மேலும் சில பதிவுகள்