சாப்பிட இயலவில்லை.

வணக்கம் தோழிகளே
நான் தர்போது 7 வாரம் கர்ப்பமாக உள்ளென்.என்னால் எதையும் சாப்பிட இயலவில்லை.
சாப்பாட்டை பார்த்தாலே வெறுப்பாக உள்ளது.இதனால் இரவில் பசிக்கிரது.காலை எழுந்தவுடம் வெறும் வயறு பிரடுகிரது.இது இரனடவது பிரசவம் என்னகு.முதல் இது போல் எல்லாம் இல்லை.

சுடர் வாழ்த்துக்கள்..ஆமாம் அப்படி தான் இருக்கும்..முதல் கர்பமும் இதுவும் வேற..முதல் கர்பத்துக்கு சந்தோஷமும் பூரிப்பும் மட்டுமே நிறைந்திருக்கும்..குழந்தையைமனசில் நினைத்துக் கொண்டு சந்தோஷப்படவே நேரம் சரியா இருக்கும்..மத்த எதுவும் சீக்கிரம் மனசில் வராது
இது அப்படியல்ல மூத்ததை சமாளிப்பது,,அடுத்த பிரசவத்தை பற்றின நினைப்பு,மூத்த குழந்தையை பராமரிப்பது என பசிக்காது பசித்தால் வேளாவேளைக்கு சாப்பிடவும் முடியாது போகும்..எல்லாம் நம்ப கைய்யில் தான் இருக்கு..நல்ல நாளை ப்லான் பன்னி வேலையை செய்துட்டு எப்படியும் இந்த டைம்முக்குள் வயிற்றில் எதையாவது நிரப்ப வேண்டும் என்று நினைத்து கொள்ளுங்கள்..குழந்தைக்கு மணிக்கணக்காக ஊட்டிவிட்டு பின் நாம சாப்பிடலாம் என்பதெல்லாம் நடக்காத கதை
முதலில் நீங்கள் எதுவாவது ஒன்றை சாப்பிடுங்க பிறகு குழந்தைக்கு கொடுங்க..ஓட்ச் ,சத்து மாவு கஞ்சி,பால்,பழம் இப்படி எதையாவது ஒரே நேரத்தில் இல்லாட்டாலும் அப்பப்ப சாப்பிடுங்க.வயிற்றை காலியா போடாதீங்க..இரவில் பசித்தால் சின்னதாக சாப்பிடும் படியா எதையாவது ரெடியா வச்சுட்டு படுங்க

நன்றி தளிகா
நீங்கள் கூரியது மிகவும் சரி.முதல் பிரசவம் ஒரே குஷியில் போய் விட்டது.இப்பொழ்து தான் கஷ்டம் தெரிகிரது.நான் பால் சாப்பிட மாட்டேன்.பழம் மட்டும் தான் சாப்பிட பிடிக்கிரது.அதுவும் போர் அடிக்கிரது.வேறு சாப்பட்டை நின்னைத்தாலே ஓமட்டுகிரது.பசி பொறுக்க முடியவில்லை.என்ன செய்வது என்ட்றே தெரிய வில்லை.பைத்தியமெ பிடித்து விடும் போல் உள்ளது.
Anbe Sivam

Anbe Sivam

கவல படாதீங்க சரியாகிடும் சுடர்.பழம் சாப்பிட பிடித்திருந்தால் அதையே வெரைடியாக சாப்பிடுங்க..காலை எழுந்ததும் 1 அவகடோ ச்மூதீ,பின்ன 1 ஆப்பில்,பிறகு ஒரு ஆரஞ்,பிறகு பழம் அப்படி விட்டு விட்டு எதையாவது சாப்பிடலாம்..அல்லது எல்லாம் வெட்டி வைத்து சாஓஇடுங்க..முதல் சில வாரம் அப்படி தான் இருக்கும் போக போக சரியாகிடும்..ஆனால் ஒன்னு முதல் 3 மாதம் நாம சாப்பிடும் சாப்பாடின் போழுது தான் குழந்தை முழு வளர்ச்சி பெருகிறது ...அந்த நேரத்தில் நாம எப்படியாவது கஷ்டப்பட்டாது சாப்பிட்டால் பின்னாடி வருதத்தப்பட இடம் இருக்காது...குமட்டினால் எலுமிச்சை ஜூசை ரெடியா கலக்கி வcசுட்டு அடிக்கடி ஒரு சிப் எடுங்க கொஞ்சம் கட்டுப்படும்.இல்லையென்றால் வறுத்த ஜீரக தண்ணீர் அதற்கும் குமட்டல் கட்டுப்படும்..ஒரு 4 மாதம் போனால் நமக்கு உடம்பு ஸ்டெடியாகும் .பிறகு பயமாகிவிடும் அன்று ஒழுங்கா எதுவும் சாப்பிடலையே என்று..பசிக்கிறது எஙிறிர்கள் அப்ப உங்க ப்ரச்சனை முக்கால் வாசி உடம்பில் இல்லை மனசில் தான்..ரொம்ப டென்ஷனாகாதீங்க...பாலில் ஹார்லிக்ஸ்,பூஸ்ட் எதாவது கலக்கி மூக்கை பொத்தி குடிங்க.
நம்முடைய டென்ஷனே பெரிசு அதில் நம்மை சுற்றியுள்ளவர்கள் இது சம்மந்தமாக அட்வைஸ் பன்னிக் கொண்டிருந்தால் தவறு செய்து விட்டோமோ என்று வீனாக தேவையில்லாததை சிந்திக்கத் தோன்றும் அதுவே பசிபோக காரணமாகும்..வெறும் 9 மாதம் நமக்குள் வளரும் செல்வத்தை நம்மால் ஆண மாதிரி சாப்பிட்டு ஆரோகியமா வைக்க வேண்டியது நம் கடமையில்லையா.அப்படி நினைத்து சாப்பிடுங்க..

மேலும் சில பதிவுகள்