புடலங்காய் குழம்பு

தேதி: July 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.3 (3 votes)

இந்த புடலங்காய் குழம்பு குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

 

புடலங்காய் - ஒன்று
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
தக்காளிப் பழம் - 1
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பால் - 1 கப்
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு


 

புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயைப் போட்டு பொரிக்கவும்.
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். புடலங்காயை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காய, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விடவும்.
புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் பாலை ஊற்றவும்.
பாலை சேர்த்த பின்னர் ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் புடலங்காயை போடவும். குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான புடலங்காய் குழம்பு ரெடி. இது சோறு, புட்டு, இடியப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Pudalangai kulambu super.photos udan parkum pothu seivatharku migavum easy aga iruku.udan nan seithu parthu vitu solgiren.migavum nanraga iruku.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

pal means milk or cococunut milk pls reply

I added milk,right? how long should the puli boil? i did this today... but i have a doubt whether puli boiled well or not:-(