பொழுது போகலயா? அரட்டை அடிக்கலாம் வாங்க - 86

நானும் எல்லாரையும் அரட்டைக்கு வாங்க வாங்கன்னு கூப்பிட்டே பழைய இழை 100 பதிவாயிடுச்சு..... அதான் நானே புது இழை ஆரம்பிச்சுட்டேன். இங்கயாச்சும் பதிவு போடுங்க. இல்லன்னா..... அழுதுடுவேன்'னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா??? அஸ்கு புஸ்கு.... பென்ச் மேல நிக்க வெச்சுடுவேன்.

வாங்க வாங்க.... தோழிகள் எல்லாம் என்னோட கதைக்க வாங்க.... (இப்படி கூப்பிட்டாலாச்சும் இந்த அதிரா பாட்டிக்கு காது கேக்குதான்னு பாக்கறேன்).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கீங்க வனி நலமா?குடும்பத்தில் அனைவரும் நலமா?

# இந்த அதிரா பாட்டிக்கு காது கேக்குதான்னு பாக்கறேன்)#

வனி இந்த இந்த இந்த வார்த்தைதான் என்னை இழுத்துட்டு வந்து பதிவு போட வைத்துட்டு படிக்கவே கண்ணுக்கு குளிச்சியா இருக்கு..இதை எழுதிய உங்களுக்கு வைர மோதிரம் தோ பிடிங்க :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதிராவைத்தான் தேடுவீங்களா தேன்மொழி ஆன்ட்யிடமும் கதைக்கலாமே..
checked your profile..
hi hi hi very good

ஹாய் வனிதா ..சிரியா வ மறந்தாச்சா ? சென்னை கிளிமடே எப்படி இருக்கு? சிரியா தொடர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது . சென்னை பதியும் அப்படி ஏதச்சும் சொல்லுங்களேன் . தெர்ஞ்ச சென்னை தான் .. இருந்தாலும் உங்களுக்கு இப்போ பக்க வித்யாசம் இருக்கும் ? வெளிநாட்டில் இருந்து அங்க வந்து செட்டில் ஆவது ரொம்ப கஷ்டமா ? எப்படி இருக்கு ? உள்நாட்டு வாழ்கை?

என்ன பத்தி சொன்ன தான் என்னையும் செர்த்துபின்களோ ? நான் ஸ்ருதி (புனை பெயரே) . ஒரே ஒரு கணவர் . இருவரும் மடி கனியுடன் வாழ்கை நடத்துகிறோம்.சிங்கை தன இப்போ வாசம் .... ஊருக்கு வர ரொம்ப ஆசை...

வாங்க மர்ழி வாங்க.... உங்களுக்கு மட்டுமா... அதை படிக்கும் எல்லாருக்குமே சந்தோஷம் குஷி.... எக்கசிக்கமா தான் இருக்கும். ;) வைர மோதிரம் சூப்பர். அதிரா பாருங்க.... அழகா இருக்கா?

தேன்மொழி.... நான் தான் எல்லாரையும் வாங்கன்னு சொன்னேனே..... ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க.... ஆன்ட்டின்னு நீங்களே ஒத்துகிட்டீங்களே..... ;) ஹிஹிஹீ...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா ஸ்ருதி.... மிக்க நன்றி. இப்ப தான் முதல்ல பேசுறோம்'னு நினைக்கிறேன். சென்னை பற்றி தெரியும் தான்னு நீங்க சொன்னதால் சொல்றேன்.... வெளிநாடு போய் அந்த ஊரை பற்றி நாம தெரிஞ்சிக்க காட்டும் ஆசையில் ஒரு பாதியை கூட நம்ம ஊர் பற்றி தெரிஞ்சிக்க காட்டுவதில்லை. பல நாட்கள் நான் சிரியா பற்றி எழுத ஆரம்பிச்ச பிறகு யோசிச்சது உன்டு.... நம்ம ஊரில் இப்படி எத்தனை சரித்திர புகழ் மிக்க இடம், பிரம்மிப்பான விஷயங்கள் இருக்கு.... இதுவரை அதை பெருசா நினைக்கலயேன்னு வருத்தபட்டிருக்கேன். பலமுறை என்னவரிடம் சொல்லியதுன்டு.... "நம்ம ஊரில் இருக்கும் இடங்கள் பற்றி இது போல் ஒரு கட்டுரை வரணும், தெரியாத விஷயங்களை பலருக்கும் தெரியப்படுத்தனும்"னு. பார்ப்போம்.... நேரம் கிடைச்சா நிச்சயம் அதை செய்ய வேணும். இன்னும் சில மாதங்களில் அடுத்த நாட்டுக்கு கிளம்பிடுவேன்.... அதனால் நேரம் அமையுமான்னு தான் தெரியல.

நீங்க உங்களை பற்றி சொன்னதில் பிடிச்ச விஷயம் ... //ஒரே ஒரு கணவர்//

ஹஹஹா..... சூப்பர். எனக்கும் ஒரே ஒரு கணவர் தாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வடிவேல் மாதிரி அடி வாங்க வைக்க மாட்டீங்களே
அழுதுடுவேன் .......................

நானும் சிங்கப்பூர்தான் . எனக்குகூட ஒரே கணவர்!!!!!!!!!!!!!!

ஹஹஹஹா..... வடிவேலுக்கு இபோ அடி நிச்சயமா விழ போகுது. வாங்குறதுக்கு வசதியா ஒரே ஊரு வேறு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருக்கு சென்னை. எனக்கும் அரட்டை அடிக்க ஆசை தான் ஆனா என் வாண்டு என்னை விடமாட்டா நானும் அடுத்த மாசம் இந்தியா போறேன் நாளை என்னிடிருக்கேன் உங்க இந்தியா விசிட் குஷியா இருக்க எனோட வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்