கார்லிக், ஒலிவ் & பேஸில் நாண்

தேதி: July 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

இந்த நாண் வகைகளை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

மா (all purpose unbleached) - 2 கப்
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
சீனி - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உள்ளி - 8 - 9 பற்கள்
ஒலிவ் - 8 - 10
காய்ந்த பேஸில் - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் - சிறிது


 

ஒரு பாத்திரத்தில் கால் கப் மிதமான சூடுள்ள தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஈஸ்ட் மற்றும் சீனியை சேர்த்து கரைத்து வைக்கவும்.
மாவுடன் தயிர் மற்றும் உப்பை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அதில் கரைத்து வைத்துள்ள ஈஸ்ட் கரைசலை ஊற்றி சப்பாத்தி பதத்தை விட சற்று இளக்கமாக பிசைந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த மாவுக் கலவையை ஈரத்துணியால் மூடி 2 மணி நேரங்கள் அப்படியே வைத்து விடவும்.
பூண்டை கொதி தண்ணீரில் 3 - 4 நிமிடங்கள் போட்டு அவிந்ததும் எடுத்து நசித்து வைக்கவும்.
பின்னர் ஊதிய மாவுக் கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒரு உருண்டையை எடுத்து மாத்தூவிய தட்டில் போட்டு நீளமாக தேய்க்கவும். சப்பாத்தி போல மெல்லிதாக தேய்க்காது சிறிது தடிப்பாக தேய்க்கவும்.
கார்லிக் நாண்: தேய்த்து வைத்திருக்கும் மாவின் மேல் நசித்த உள்ளியை பரவலாக போட்டு மீண்டும் ஒரு முறை உருட்டு கட்டையால் தேய்த்து விடவும்.
அவனை Broil (low) மோடிற்கு set செய்யவும். பின்னர் இதனை ஒரு பேக்கிங் ஷீட்டில் போட்டு அவனின் மேல் ட்ரேயில் வைத்து 1 - 1 1/2 நிமிடங்கள் அல்லது மேல் பக்கம் சிறிது சிவக்கும் வரை பேக் செய்யவும்.
பின்னர் வெளியே எடுத்து மறு பக்கம் திருப்பி போட்டு மீண்டும் 1 - 1 1/2 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பின்னர் சூடாக இருக்கும் போதே இதன் மேல் சிறிய துண்டு பட்டரை போட்டு பரவி விடவும். சூடான சுவையான கார்லிக் நாண் ரெடி.
ஒலிவ் நாண்: தேய்த்த ரொட்டியின் மேல் நறுக்கின ஒலிவ் துண்டுகளை பரவலாக போட்டு அழுத்தி மேற் சொன்னவாறு பேக் செய்து பட்டர் பூசவும்.
பேஸில் நாண் : தேய்த்த ரொட்டியின் மேல் நறுக்கின பேஸில் தூளை பரவலாக போட்டு அழுத்தி மேற் சொன்னவாறு பேக் செய்து பட்டர் பூசவும்.
சுவையான கார்லிக், ஒலிவ், பேஸில் நாண்கள் தயார். இதனை பாலக் டோபு/பன்னீர் அல்லது கறிகளுடன் சாப்பிட சுவையா இருக்கும். தனியாகவும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

2 நிமிடத்திற்கு மேல் பேக் செய்ய வேண்டாம் நாண் எரிந்து விடும். காய்ந்த பேஸிலுக்கு பதிலாக ப்ரஷ் பேஸில் இலையை சிறிதாக அரிந்தும் போடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சமையல் குறிப்பு மிக நன்றாக இலகுவாக இருக்கிறது. படங்களும் அழகாக இருக்கின்றன.
அன்புடன்,
செபா.

நர்மதா அருமையான குறிப்பு , ஒரே கல்லில் முன்று மாஙகாயா?

Jaleelakamal