ஃபர் துணியில் அழகிய பஞ்சவர்ண கிளி செய்வது எப்படி?

தேதி: July 30, 2009

5
Average: 5 (3 votes)

இந்த அழகிய பஞ்சவர்ண கிளியை செய்து காட்டியவர் திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.

 

லாங் ஃபர் (long fur)- சிவப்பு, லேவண்டர்
பெல்ட்(Felt) துணி - மஞ்சள் மற்றும் சிவப்பு
மீடியம் ஃபர் - வெள்ளை நிறம்
பஞ்சு
கண்
கத்திரிக்கோல்
ஊசி
நூல்

 

பஞ்சவர்ண கிளி செய்வதற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். அதில் சிவப்பு நிற லாங் ஃபர் கிளியின் உடலுக்கும், லேவண்டர் நிற லாங் ஃபர் வால் பகுதிக்காக எடுத்துக் கொள்ளவும். சிவப்பு நிற பெல்ட் துணி மூக்கிற்கும், மஞ்சள் நிற பெல்ட் துணி தலைக்கும் மற்றும் வெள்ளை நிற மீடியம் ஃபர் கிளியின் கொண்டைப்பகுதிக்காக எடுத்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் ஒரு சார்ட் பேப்பரில் கிளியின் தலை, மூக்கு, உடம்பு, வால்பகுதி என்று தனித்தனியாக வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சார்ட் பேப்பரில் வெட்டி வைத்திருக்கும் கிளியின் தலைப்பகுதியை மஞ்சள் நிற பெல்ட் துணியில் பின்பக்கத்தில் வைத்து வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதே போல் சிவப்பு நிற பெல்ட் துணியில் கிளியின் மூக்கு பகுதியை வைத்து வரைந்து தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கிளியின் மூக்கு பகுதி செய்ய: இப்பொழுது வெட்டி வைத்திருக்கும் சிவப்பு நிற பெல்ட் துணியை இரண்டாக மடித்து, நீளமாக இருக்கும் பகுதியில் இரண்டு ஓரத்தில் கலர் பேனாவால் புள்ளி வைத்துக் கொள்ளவும். அந்த இடத்தில் ஊசி நூலை வைத்து ஒரு முறை தைத்து மற்றொரு முறை அதே இடத்தில் விட்டு, ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அதைப் போல மற்றொரு புள்ளியிலும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இரண்டு புள்ளிக்கும் இடையில் உள்ள இடைவெளியை ஊசி நூல் வைத்து முடிச்சுப் போடுவதுப் போல் நெருக்கமாக தைத்துக் கொள்ளவும்.
கிளியின் தலை செய்ய: வெட்டிய மஞ்சள் பெல்ட் துணியை இரண்டாக மடித்து வளைவாக உள்ள பகுதியில் படத்தில் உள்ளது போல் மூன்று புள்ளிகள் வைத்து கொள்ளவும். புள்ளிகள் வைத்த பகுதியை ஊசி நூலால் மேற்சொன்ன முறையில் முடிச்சுப் போட்டு கொள்ளவும்.
வெள்ளை நிற மீடியம் ஃபர்ரை கிளியின் தலைக்கு தகுந்தாற்போல் வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெள்ளை நிற ஃபர்ரை முடிச்சு ஆரம்பமாகும் இடத்திலிருந்து உள்பக்கமாக வைத்து நெருக்கமாக தைத்து கொள்ளவும். கடைசி முடிச்சு முடியும் பகுதி வரை தைக்கவும்.
கிளியின் உடல் பகுதி செய்ய: கிளியின் உடலுக்குகாக வெட்டிய லாங் ஃபர்ரை இரண்டாக மடக்கி, மடக்கிய இரண்டு ஒரங்களிலும் புள்ளி வைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முடிச்சுப் போட்ட இரண்டு புள்ளிக்கு இடையில் உள்ள இடை வெளியை ஊசி நூல் வைத்து நெருக்கமாக தைத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் கிளியின் தலை, மூக்கு, உடல் பகுதிகளை தயார் செய்து கொள்ளவும். இதில் வால் பகுதியை தைக்க தேவையில்லை.
கிளியின் மூக்கு மற்றும் தலையை இணைப்பது: வெள்ளை நிற ஃபர்ரை வைத்து தைத்து வைத்திருக்கும் கிளியின் தலைப்பகுதியில் உள்ள ஓட்டையில் தைத்து வைத்திருக்கும் கிளியின் மூக்கை திருப்பி கூர்மையான பகுதியை உள்ளே நுழைத்து தையல் போட்டிருக்கும் இடத்திலிருந்து ஊசியை வைத்து சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு தலைப்பகுதியை திருப்பிக் கொள்ளவும்.
கிளியின் உடலும் தலையும் இணைப்பது: திருப்பி வைத்திருக்கும் தலையை உடல் பகுதியில் உள்ளே நுழைத்து தையல் போட்டிருக்கும் இடத்திலிருந்து ஊசியை வைத்து சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.
பின்னர் தலையுடன் சேர்த்து திருப்பிக் கொள்ளவும்.
தைத்த தலைப்பகுதி, உடல் பகுதியை திருப்பிக் கொள்ளவும். அதில் காட்டன் பஞ்சுகளை கிளியின் அடிப்பகுதியில் தேவையான அளவு பஞ்சை வைத்து மூக்கில் வைத்து நிரப்பவும். அதன் பிறகு தலையில் வைத்து நிரப்பவும். பின்னர் உடல் முழுவதும் வைக்கவும்.
கிளியின் உடலுடன் வால் பகுதியை இணைப்பது: பஞ்சுகளை தினித்தப்பிறகு சதுரமான வடிவில் வெட்டி வைத்திருக்கும் லேவண்டர் நிற வால் பகுதியை அதன் இரண்டு எதிர் எதிர் முனைகளை இணைத்து முடிச்சுப் போட்டுக்கொள்ளவும். மற்றொரு முனையை உடலின் அடிப்பகுதியில் தையல் போட்டிருக்கும் இடத்தில் வைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
கிளியின் கண்ணில் பெவிக்காலை தடவி தலையின் இருப்புறமும் ஒட்டவும். அழகிய பஞ்சவர்ண கிளி ரெடி. இதன் தலை உச்சி பகுதியில் நூல் அல்லது எக்ஸ்பாண்டாட் லேஸ் வைத்து தைத்து ஊஞ்சல் அல்லது குழந்தைகளின் தொட்டிலில் கட்டி விடலாம் பல வர்ண நிறங்களுடன் பார்க்க அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கிளி மிக மிக அழகாக இருக்கிறது சாந்தி. :)
இமா

‍- இமா க்றிஸ்

நல்ல கலர் காம்பினேஷன் + கிளியும் மிக அழகு.

Patience is the most beautiful prayer!!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta