ஆலோசனை தேவை தோழிகளே

அன்பு தோழிகளுக்கு வணக்கம்.எனக்கு வெகு நாட்களாக கணிப்பொறி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள மிகவும் விருப்பம்.அதாவது கணிணியில் சாப்ட்வேர் இன்ஸ்டாலேசன்(software installation),ஹார்ட்வேர்(hardware) பற்றி மற்றும் Latest Technologies டெக்னாலஜி,மற்றும் இது போன்ற தகவல்கள்.இவை பற்றி அறிய ஏதாவது வெப் தளம்(web site address)இருந்தால் சொல்லுங்கள்.நிறைய computer ஞானம் இருக்கும் தோழிகள் தயை கூர்ந்து உதவவும்

ஹாய் அஞ்சலி
நானும் ரொம்ப கணினி ஞானமுள்ளவளில்லை உங்களை போல் தான் என்றாலும் சில விஷயங்கள்
எதுவும் தெரியாமல் கணினியை உபயோகித்து எதையாவதெல்லாம் க்லிக் பன்னி இன்ஸ்டால் பன்னி பார்த்துட்டே இருந்தால் அனுபவத்தில் கற்றுவிடலாம்..மற்றபடி ஒரு இணையதளத்தி பார்த்து கற்றுக் கொள்வது என்பது இன்னும் சிரமமாக தோன்றும்.
உங்களுக்கு விருப்பமான ஒரு சப்ஜெக்ட் எடுங்கள்..அது சம்மந்தமானவறை தேடி பாருங்கள்..பிறகு தேடினதில் கிடைத்தவற்றை கண்டுபிடிக்க பாருங்கள்,..அப்படி அப்படி நமக்கு நிறைய விஷயம் அனுபவத்தில் தானாக தெரியவரும்
உதாரணத்திற்கு எனக்கு முன்பு எதுவும் தெரியாது ஆனா வரைய பிடிக்கும்..அதனால் வரைவது பற்றி தெடினேன் அதன் பின் க்ராஃபிக்ஸ் பறேறி தேடினேன் அப்படி கிடைத்தது அடோப் ஃபோட்டோஷாப்..பின்பு அதை விளக்கமாக படிக்க ஆசைபட்டு அதனை பற்றி தேடுவேன் அதிலிலுர்ந்து அதன் ப்லகின்ஸ் நிறிய கிடைக்கும்..அப்படி அப்படி ஒன்றை தேடினால் இணையத்தில் ஒன்பது விஷயம் நாமறியாமல் கற்றுவிடுவோம்..
மற்றபடி சாஃப்ட்வேர் இன்ஸ்டலேஷனில் எதுவுமே இல்லை யாரும் செய்யலாம்...எந்த சப்ஜெக்ட் விருப்பமோ அது சம்மந்தமான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் பன்னுங்க இன்ஸ்டால் பன்னி பாருங்க...பிறகு பைரேடெட் சாஃப்வேர் என்றாலும் எப்படி க்றெக் பன்னுவது என்பது வரை தேடி அதையும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்;-)
பிசியும் அப்படி தான்...சின்ன ஐடியா மட்டும் மனசில் வைத்துக் கொண்டு எல்லா டேடாசும் பேக் அப் எடுத்துக் கொண்டு ஓரொருமுறை ஃபார்மேட் பன்னினால் போதும் அதையும் கற்றுவிடலாம்..கணினியை பொறுத்தவரை உபயோகிக்க உபயோகிக்க தான் சீக்கிரம் பழகுவோம் பார்த்து படிப்பதை விட
பிறகு இருக்கவே இருக்கு கூகில் செர்ச்..இன்றெல்லாம் யாரும் இணையத்தளத்தில் ஃபேவரைட்ஸில் கூட போடுவதில்லை..ஏனென்றால் ஃபேவரைட்ஸில் தேடும் நேரத்தை விட வேகமாக கூகிளில் வந்து விழும் தேடின விஷயம்
மட்டுமல்ல இன்று கணினி சம்மந்தமான வேலையில் இருப்பவர்களே கூகிளை நம்பி தான் இருக்கிறார்கள்...ஒரு தளத்தில் போய் அது சம்மந்தமானவற்றை தேட கூட அத்தளத்தின் தேடுதல் பகுதியை விட கூகிள் தேடுதல் வேகமாக இருக்கும்..
அதனால் கூகிளில் எது என்றாலும் தேடுங்கள்
என் பதில் உங்களை எரிச்சலடைய வைக்குமா தெரியவில்லை..ஆமாம் என்றால் மன்னிக்கவும்

தளிகா சொன்ன மாதிரி கம்ப்யூட்டரை உபயோகிக்கும் போதே நிறைய விஷயம் கற்று கொள்ளலாம். உதாரணத்துக்கு சாப்ட்வேர் என்று கூகுளில் தேடினால் பல விஷயம் கிடைக்கும். இல்லையா இருக்கவே இருக்கு நம்ப விக்கிபீடியா.

சாப்ட்வேர் இன்ஸ்டாலேசன் ரொம்ப சுலபம். ஹர்ட்வேர் பெரிய கடல்.

மேலோட்டமாக இதை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் உதவியாக இருக்கும் அண்ட் நினைக்கிறேன்.

http://www.comptechdoc.org/basic/basictut/
http://www.grassrootsdesign.com/intro/hardware.php

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உடனே பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி தளிகா. வேறு விஷயங்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்.

அஞ்சலி

உடனே பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி madam நீங்க கொடுத்த லிங்க் எனக்கு உபயொகமாக இருக்கும்.

அஞ்சலி

hai uma,

yeppadi irukenga, yen peru shabana. na puthusu. please yennakku oru doubt atha ninga than clear pannanum. na romba olliya irukken pa. pls ninga than athuku yethavathu vazhi sollanum. yerkanave na intha question na august 1st annaiku ketten yenaku pathil varavela. pls pls konjam sollunga. yenna unga friend da yethukka mattingala.

ஹாய் ஷபானா,

நீங்கள் உமா அக்காவிடம் சந்தேகம் கேட்பதாக இருந்தால் அழகு பற்றிய சந்தேகமா தோழிகளே? - பகுதி 3 அல்லது தோழிகளின் கவனத்திற்கு... பகுதி 3 போன்றவற்றிலுங்கள் பதிவுகளை போடுங்க!!

அந்த த்ரெட்டை உமா அக்கா இதுக்காகவே ஆரம்பிச்சு ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க!! நீங்க வேற த்ரெட்டில் போடுவதால் தான் அந்த அக்காவுக்கு தெரியலை.

அதுவும் போக உமா அக்கா ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்காங்க. பதில் விரைவில் கிடைக்குமானு தெரியலை. முயற்சி செய்து பாருங்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் ஷபானா நீங்க தினமும் எள்ளு மிட்டாய் மற்றும் கடலை மிட்டாய் சாப்பிட்டால் குண்டாவீர்கள்.

அஞ்சலி

மேலும் சில பதிவுகள்