அரட்டை அரட்டை அரட்டை 88

எல்லோரும் இங்க வந்து அரட்டை தொடருங்க

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க? நானும் வரேன் அப்பறமா கொஞ்சம் வேலை இருக்கு எல்லோரும் வந்து பிஸி வேலை இருக்குன்னு சொல்லும் போது நானும் சொல்ல வேண்டாமா அதுக்குதான் இந்த பதிவு :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹலோ லக்ஷ்மி! காலையிலே என்ன காமெடி! நானும் பார்க்கிறேன் இது இப்ப ஒரு ஃபாஷன். நானும் பிஸியாக்கும் சொல்வது ( உண்மையாவே இருப்பவர்கள் மன்னிக்கவும்) எனக்கு நிறைய நேரம் இருக்கு அதை எப்படி செல்விடுவதுன்னு யோசிச்சே சில பொழுதுகள் கழியும் .. சில நேரம் உண்மையாவே வேலை இருக்கும்.. நாம தான் வேலைன்னா அப்படி ஒரு சுறு சுறுப்பு... அப்புறம் டிவி இல்லை வேற எதாவது பொழுது போக்கு... இதுல என்ன காமெடின்னா சிலர் அவங்களே போன் செய்து பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்வாங்க.. முன்பெல்லாம் ரொம்ப எரிச்சல் வரும் இப்ப அவங்கள பார்க்கும் போது ஒரு கழிவிரக்கமே தோனுது. ஹைஷ் அங்கிள் சொல்லியபடி பார்த்தால் இதுவும் ஒருவிதமான பிளாக்மெயில் .. நாமும் அடுத்தவங்க அக்கரைபடுதலுக்கோ இல்லை கவனத்துகோ பிச்சை எடுக்கிரோமோன்னு தோணும்( அவர் நல்ல முறையில் சொன்னாலும் இது என் இன்டெர்ப்ரெட்டேஷன்) அரட்டையில் இவ்வளவு சீரியாசா பேசிட்டேனோ??!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தொளிஸ் நலமா?
லக்ஷ்மிஷங்கர் நிங்க சோன்ன மாதிரி இல்லை உண்மையில பிஸி இது என்பதிவுக்கு வரணும் எண்டு இந்த பதிவு.
இலா நலமா?
பிரபா எங்க என்னும் காணல்லை.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

என்ன இலா இப்படி பண்ணிட்டிங்க நானும் சும்மா காமடியா தான் எழுதினேன் காலேல எழுத்ந்தவுடன் அறுசுவையை ஓபன் பண்ணினேன் அப்ப அரட்டை பாகம் 87 சரியாக 100 . அதனால இத ஆரம்பிச்சுட்டு அப்படி ஒரு பதிவு போட்டுட்டு போனேன் . இன்னும் யார்லாம் வந்து எனக்கு கொடை :) கொடுக்க போறாங்களோ தெரியல இருந்தாலும் ஆடி ஸ்பெஷல் கொடை தானே .........

அப்பரம் //எனக்கு நிறைய நேரம் இருக்கு அதை எப்படி செல்விடுவதுன்னு யோசிச்சே சில பொழுதுகள் கழியும் .. சில நேரம் உண்மையாவே வேலை இருக்கும்.. நாம தான் வேலைன்னா அப்படி ஒரு சுறு சுறுப்பு... அப்புறம் டிவி இல்லை வேற எதாவது பொழுது போக்கு...இதேதான் இங்கயும் :)
நானும் இப்பவே சொல்லிட்டேன் உண்மையாவே பிஸி ஆக இருப்பவர்கள் மன்னிக்கவும் நன்றி இலா
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்ஷ்மி!!! இதுக்கா கவலை... நாங்க எல்லாம் வாங்காததா :)) ஆனாலும் ஒரு பாச பிணைப்பு தான் ... நம்ம அக்காஸ்/தங்கைஸ்/அண்ணா/தம்பி/அம்மா/மாமி தானே.. ஒரு ரெண்டு நாள் அப்ஸ்காண்ட் ஆகிட்டா போகுது...

சுகா! நலமா? ஏன் அதிராக்கு மட்டும் தான் புரியாத மாதிரி கேள்வி கேப்பீங்களா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுகா,
நீங்க உண்மையாலுமே பிஸி அப்படின்னா யாரு பொய்யா பிஸி அப்படின்னு சொல்றாங்க வந்து சீக்கரம் சொல்லுங்கோ :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இலா
//ஒரு ரெண்டு நாள் அப்ஸ்காண்ட் ஆகிட்டா போகுது...
நல்ல நல்ல டிப்ஸா அள்ளி விடுறீங்க இதுவும் நல்ல யோஸனை தான்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

என்ன இலா வந்தாசா?
ஒரேகலை கட்டுர மாதிரி இருக்கு,அதிரா எபப்டி இருக்கீங்க.
இறட்டையர்கள் நலமா?

Jaleelakamal

ஹலோ தோழிகளே,
என்னப்பா இப்போதான் அரட்டை- 87 பார்த்தமாதிரி இருந்திச்சு,அதுக்குள்ள 88 ஆ,அப்படினா எல்லாரும் அரட்டை அடிக்க ச்ரியான ஆளுங்கனு ஃப்ரூப் பன்னியாச்சு போல.
லஷ்மி வெளில போய்ட்டு வந்தாச்சு,நீங்க கொடை பத்தியெல்லாம் பேசி ஊர ஞாபகப்படுத்திடீங்க,எனக்கு இப்பொவே ஊருக்கு போய் கொடை பாக்கனும் போலருக்கு
ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க? உங்கள அக்கானு கூப்பிடவா ஆன்டினு கூப்பிடவா எனக்கு தெரியல நீங்களே சொல்லிடுங்க.
இலா சுகமா,லஷ்மி சொல்றமாதிரி நிறய டிப்ஸ் குடுப்பீங்க போல அப்படியா?
சுகா சுகமாப்பா?
மீண்டும் பேசுவோம்
கலா.

Kalai

கலா,
உங்கள்ட்ட இருந்து தப்பிச்சுட்டேன் :) திட்டு எதுவும் வாங்கல நல்லவேளை இப்ப அறுசுவைல நிறைய பேர் ஊருக்கு போயிட்டு வராங்களே நீங்க போலையா?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்