கருணைக்கிழங்கு குழம்பு

தேதி: August 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த கருணைக்கிழங்கு குழம்பு குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

 

கருணைக்கிழங்கு - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கருணைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருணைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வெந்தயத்தைப் போட்டு கிளறி புளிக்கரைசல், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் மிளகாய்த்தூளைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடவும்.
மிளகாய்த்தூளின் பச்சை வாசனை அடங்கியதும் பாலைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின்பு பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கினைப் போடவும்.
குழம்பு கெட்டியாக வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
சுவையான கருணைக்குழம்பு ரெடி. இது சாதம், புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வத்சலா ரொம்ப அருமையாக இருக்கு பார்ப்பதற்கு. மிக்க சுவையாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த வாரம் செய்து பார்க்கிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வத்சலா மேடம்.. உங்க குறிப்பு பாத்தாலே சாப்பிடனும்போல இருக்கு.. ஆனா
எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.. படத்தில் காண்பித்திருப்பது கருணைக்கிழங்கா? இது சேனைக்கிழங்கு கிடையாதா?.... கருணைக்கிழங்கு சற்று சேப்பங்கிழங்கு மாதிரியல்லவா இருக்கும்.. மூலவியாதிக்கு அதை அதிகம் உபயோகப்படுத்துவார்கள்... இல்லை நான் தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேனா... தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா இங்க அவங்க குறிப்பிட்டிருப்பது சேனைக்கிழங்கைத்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா, நானும் எல்லா விளக்கப்பட குறிப்பும் பார்த்தேன்.. சேனைக்கிழங்கு தான் கருணைக்கிழங்கு குறிப்பிலும் இருந்தது... அதுதான் கேட்டேன்... நன்றிப்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி