கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவது நல்லதா? இல்லையா? ப.மன்றம்-4

சகோதர, சகோதரிகளுக்கும், எனது அன்பு தோழிகளுக்கும் வணக்கம். எனக்கு ஊக்கமளித்து இங்கே தலைப்பு கொடுக்க வைத்த அனைவருக்கும் என் நன்றி...

இன்றைய பட்டிமன்றத்திற்கான தலைப்பு இதுதான்,

கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா?

அதாவது திருமணத்திற்கு முன் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள், சில சங்கடங்கள், சில மாற்றங்கள் மற்றும் திருமணத்திற்கு பின்பு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள் இதை எல்லாமே கணவனிடம்/மனைவியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டுமா? இல்லை நம்முடைய தனிப்பட்ட விஷயம் இதெல்லாம் தெரிந்தால் இருவருக்குள் இருக்கும் மகிழ்ச்சி போய்விடும் என தவிர்த்து விடலாமா ?

நிறைய தலைப்பு பிடிச்சிருந்தது. அறிவியல் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட நன்மை தீமையை கடந்த பட்டிமன்றத்தில் பார்த்தோம். இந்த முறை கொஞ்சம் குடும்பத்திற்குள்ளே போகலாமேனு தோணிச்சு. அதான் இந்த தலைப்பு. நமது தோழி வனிதாவின் தலைப்புதான் இது. இங்குள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் பெரும்பாலும் திருமணமானவர்கள் என்பதால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருமணம் ஆகாதவர்களும் தொடரலாம். உங்கள் அனைவரின் சூடான, சுவையான வாக்குவாதத்தின் அருமையை சொல்லவும் வேண்டுமா! உங்கள் வாதத் திறமையால் என் வேலையை எளிதாக்கி விடுங்கள். என்னை நடுவராக அழைத்த வானதிக்கு என் நன்றி. 17 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படும்.

அன்புடன்
தனிஷா

நல்ல தலைப்பு நடுவரே!!! சுவாரஸ்யாமான தலைப்பும் கூட. ஆனா இவ்வளவு சீக்கிரமே தலைப்பை சொல்லிடீங்க!!!

வாழ்த்துக்கள் தனிஷா அக்கா.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா நாளைக்கு காலையில் ஒரு பார்ட்டி. இன்று காலைதான் இன்வைட் பண்ணினார்கள். கண்டிப்பா நாளைக்கு போகனும். திரும்பி வருவதற்கு இரவு ஆகும் என்று இன்றே போட்டு விட்டேன்.

எல்லோரும் மேடையில் பட்டைய கிளப்புங்க. அதிரா போன முறை கோட் சூட் எல்லாம் தைத்து வைத்திருக்கிறார். அது தெரியாம நம்ம வானதி ஆலமரத்தடியில் பட்டிமன்றத்த வச்சுட்டாங்க. அதனால் இந்த முறை சாலமன் பாப்பையாவின் மேடையை ஒருவாரத்திற்கு புக் பண்ணியிருக்கோம். எல்லோரும் மேடைக்கு வந்து நாளைக்கு ஆரம்பிங்கோ.. எனக்கு சாலமன் பாப்பையா சேர் வேணாம்.. அவரெல்லாம் பெரிய ஆள். அவர் இடத்தில் அமரலாமா நான். உங்க பக்கத்தில் ஓரமா ஒரு இடத்த போட்டு வையுங்க திங்கள் காலையில் வருகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அருமையான தலைப்பு :) எனக்கு வெகு நாட்களாக இப்படி ஒரு தலைப்பு கொடுக்க மாட்டார்களா என்று இருந்தது. அதுதான் பார்த்த உடன் பதிவை போடுகிறேன். :)

என்னுடைய கட்சி நிச்சயமாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது முடியாத விஷயம் மட்டும் அல்ல அது அவசியமும் இல்லை என்பதுதான்.

கல்யாணம் ஆனாலும் எல்லாரும் தனிப்பட்டவர்கள்தான். அவரவர்கென சில விஷயங்கள் தனிப்பட்ட முறையில் இருக்கத்தான் செய்யும். அதை கணவர் என்பதற்காகவோ மனைவி என்பதற்காகவோ எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும்? நடுவர் அவர்களே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்களும் எதிர் கட்சியினரும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைப்பு "எல்லா விஷயத்தையும்" பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பது. நானும் அதை மனதில் கொண்டுதான் வாதிடுகிறேன்.

கணவன் மனைவி இடத்தில ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்பது உண்மை தான். ஆனால் சில விஷயங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பை உருவாக்கும் என்ற சூழ்நிலை வந்தால் எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும்? சில விஷயங்கள் நமக்கு புனிதமானதாக இருக்கலாம் அது அடுத்தவர்க்கும் (கணவனானாலும் சரி) புனிதமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில விஷயங்களை நாம் மறக்க நினைப்போம் அதை ஏன் நினைவு கொள்ள வேண்டும்?

இது என்னுடைய முதல் கட்ட வாதம். மீண்டும் வருவேன் :)

அன்புடன்
உமா

வாழ்த்துக்கள் நடுவரே! நடுவருக்கே ஒரு ஓரமாத்தான் இடம்னா நாங்கள்லாம் ஓரமா நின்னுக்கிட்டே அள்ளிவிடறோம் நடுவரே!
நானும் உமா கட்சிதானுங்கோ. வாதத்துடன் திங்கள் கிழமை சந்திப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் நடுவரே எனது வணக்கம், சூப்பராயிருக்கு தலைப்பு.
நானும் கூட பார்க்கிறேன், வருகிற எல்லா தலைப்பும் எனக்கு குழப்பமாகவே இருக்க மாதிரி வருது.இதுலயும் சிலது பேசலாம்,சிலது பேசக்கூடாது என்று சொல்லத்தோன்றுகிறது.

அதிகமாக, கண்டிப்பாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தான் வேண்டும் என நினைக்கிறேன். இதில் கணவர்மார்களின் மென்டாலிட்டி பொருத்து கூட சொல்லுவதும் தேவைதானா அல்லது தேவையில்லையா என்றிருக்குமில்லையா????????

சிலர் ரொம்ப ஈசியா எடுத்துப்பாங்க,சிலர் அப்படியிருக்கமாட்டாங்க...
அதைதான் சொல்றேன்.......சரி முடிஞ்சா ஒரு ஓர நின்று பட்டிமன்றத்தை பார்த்து செல்கிறேன்.

தனி,உனக்கு எனது வாழ்த்துக்கள்,நல்ல தீர்ப்பை கொடுத்து அசத்தவும்.

தனிஷா - ரொம்ப சுவாரசியமான தலைப்பு... ரொம்ப பிடிச்சிருக்கு.. இதை கொடுத்த வனிதா அவர்களுக்கும் (??!!) இதை தேர்ந்தெடுத்ததற்காக உங்களுக்கும் எங்கள் நன்றிகள்..

ரொம்ப நாளா குழப்பம் இல்லாம இருந்தேன் (நன்றி வின்னீ :))... இப்ப எந்த பக்கம் பேசறதுன்னு மறுபடியும் குழப்பமா இருக்கு.. இது, ஒவ்வொரு குடும்பத்துலயும் கணவர் மனைவிக்குள்ள இருக்கற பரஸ்பர புரிதலை வச்சு முடிவு செய்ய வேண்டிய விஷயம்.. மற்றவர் தப்பா எடுத்துக்க மாட்டாரென்றால் எல்லாத்தையும் சொல்லிடலாம்.. ஒருவர் தனக்கும் கொஞ்சம் private space தேவைன்னு நினைக்கறவர் என்றால் அவர் நம்மிடம் எல்லாத்தையும் சொல்லிடனும்ன்னு எதிர் பார்க்காம இருப்பது நலம்... நான் எல்லாத்தையுமே பகிர்ந்துக்கனும்ன்னு நினைக்கிற ஆள்.. ஆனா இதை வைத்து பொதுவா எப்படி பேசறதுன்னு குழப்பமா இருக்கு.. இருந்தாலும், பெரும்பான்மையான மக்களுக்கு எது நல்லதுன்னு யோசிக்கணும்.. அதனால எந்த அணின்னு இன்னமும் முடிவு பண்ணலை
பார்ப்போம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உங்க வாழ்த்துக்கு நன்றீ உமா. வாதத்தை ஆரம்பித்து விட்டீர்களா!
///--சில விஷயங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பை உருவாக்கும் என்ற சூழ்நிலை வந்தால் எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும்?///

உமா ரொம்ப நல்ல கேள்வியைத்தான் கேட்டுருக்கீங்க. வரும் எதிரணியினர்தான் பதில் சொல்ல வேண்டும்.

கவிசிவா வாங்க திங்கள் அன்று உங்கள் அனல் பறக்கும் வாதத்தை அள்ளி வீசுங்க.

ஹாய் பாப்ஸ் உமா. குடும்பம் என்றாலே கொஞ்சம் குழப்பம்தானே. எட்டி நின்று பார்க்க வேண்டாம். ஏதாவது ஒரு அணியில் குதித்து விடு. நன்றிப்பா வாழ்த்துக்கு.

சந்தனா உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா. குழப்பத்தில்தான் நல்ல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவரும். ஏதாவது ஒரு பக்கம் யோசிச்சு முடிவெடுத்து வாங்கப்பா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பட்டிமன்ற நடுவருக்கு....
நடுவர் அவர்களே.... முதலில் இந்தாங்கோ பால் குடியுங்கோ.... குடித்துவிட்டு றிலாக்ஸ்சாக இருங்கோ.... திங்கள்.../ செவ்வாய் வருகிறேன்... .

"ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை....". ஆனால் மனிதர்கள், இந்தக்காலத்தில் கோட் சூட்டுக்குத்தானே மரியாதை அதிகம் கொடுக்கிறார்கள்... போன பட்டிமன்றத்திலே கோட் சூட் போடாமல், நான் போனதாலதானே:) என் பேச்சே எடுபடவில்லை:).. இனியும் அத் தவறைச் செய்யமாட்டேன்:)... கோட் சூட்டோடு.. செண்டும் அடித்துக்கொண்டு வருகிறேன்:).... கோட் சூட்டுக்கு மரியாதை கொடுப்பீங்க இல்ல?:):).(கவிசிவாவின் ஒம்லெட் கதைபோல ஆக்கிடாதீங்கோ.. என் கதையையும்..:) ).

எனக்கு தலைப்பைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கு. குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட தலைப்பென்பதால் நல்ல சூடுபிடிக்குமென்பதில் சந்தேகமே இல்லை.

இதில் எனக்கு, என் சொந்தப் பழக்கத்தை வைத்து, அதுதான் சரியென வாதாட மனம்வரவில்லை.

எவராயினும், எப்படிப்பட்ட திருமணமாயினும்(காதலோ, நிட்சயிக்கப்பட்டதோ), ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழத் தொடங்கிய பின்னரே, உண்மைநிலை தெரியவரும். அதிலும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளவே, காலமெடுக்கும். அதன் பின்னர்தான் எதையும் ஒழிவுமறைவில்லாமல் சொல்லலாமா வேண்டாமா எனத் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்து, ஒரு விஷயத்தைச் சொல்லாமல் ஒழித்துப் போட்டு, பின்னர், அது தெரியவந்தால், ஏன் சொல்லவில்லை எனக் கோபம் வருமெல்லோ... அப்போ திருட்டுமுழி முழிப்பதைவிட.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை என , சின்ன வயதிலிருந்தே... எதையுமே அம்மாவிடம் ஒப்புவித்துவிடுவேன்... அதேபோல்தான் இப்பவும் கணவரிடம்... ஒன்றும் விடாமல் சொல்லிவிடுவேன்(கணவரிடம் மட்டுமே). அவரும் அப்படித்தான். எந்தச் சின்ன விஷயமாயினும் உடனுக்குடனே போனிலேயே சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால்....

மேடை ஒன்றில் ஏறி, எல்லோருக்கும் பொதுவாக கருத்தைச் சொல்கின்றபோது, நான் செய்வதுதான் சரி, இப்படித்தான் நடவுங்கள் எனச் சொல்ல மனம் வரவில்லை. எண்ணங்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். உலக அனுபவம்தான் காரணம். அதனால், நான் குதிக்கவிருக்கும் கட்சி, எடுத்தோம் கவிழ்த்தோம் என, எல்லா உண்மைகளையும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. பட்டிமன்றம் ஆரம்பிக்கட்டும், பின்பு வருகிறேன்.

ஜெயாராஜி, girl... உமா, கவிசிவா, பொப்ஸ் உமா, சந்தனக்காற்றே... சந்தனா... எல்லோரும் கலக்குங்கோ... வரவிருக்கும் சகோதர:), சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

நடுவர் அவர்களே.. திரு. சாலமன் பாப்பையாபோல், இதுவும் சரி... அதுவும் சரியெனத் தீர்ப்புச் சொல்லாமல்.... அதிரா சொல்வதுதான் சரி(உப்படி முறைக்கப்படாது தெரியுமோ:).. எனச் சட்டெனத் தீர்ப்பைச் சொல்லிடுங்கோ.....:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் தனிஷா
நல்ல தலைப்பு குடுத்திருக்கிரிர்கள் என் வாழ்த்துக்கள்.வனிதா இந்த தலைப்பை
குடுத்ததற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
"கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா?"
இது நான் அடிக்கடி என்னையே கேக்கும் கேள்வி.அதற்கு பதில் ஒருகிளமையில் தெரியபோகுது எண்டு சந்தோசமே.நான் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி என் கணவருக்கு சொல்லிவிடுவேன்.அனா அது சரியா தப்பானு தெரியல??????????
நளை என் விட்டுக்கு விருந்தாளிகள் வருவதால் என்னால் பட்டிமன்றத்தில் வாதாட முடியுமோ தெரியாது முடிந்தால் கண்டிப்பாக வருகிறேன்.
எல்லோருடைய வாதத்தையும் ஆவலுடன் எதிர்பாக்கிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நடுவரே, நல்ல தலைப்பு செலக்ட் செய்து இருக்கிறீர்கள். நான் வழக்கம் போலவே ஒரு இரண்டு நாள் விட்டு பிடித்து எந்த அணியில் தாவுவது என்று முடிவு செய்கிறேன்:)

சந்தனா சீக்கிரம் எந்த அணின்னு முடிவு பண்ணுங்க. எல்லோரும் இப்படி லேட் செய்தா அப்புறம் நான் எப்படி முடிவு செய்கிறது:)

மேலும் சில பதிவுகள்