கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவது நல்லதா? இல்லையா? ப.மன்றம்-4

சகோதர, சகோதரிகளுக்கும், எனது அன்பு தோழிகளுக்கும் வணக்கம். எனக்கு ஊக்கமளித்து இங்கே தலைப்பு கொடுக்க வைத்த அனைவருக்கும் என் நன்றி...

இன்றைய பட்டிமன்றத்திற்கான தலைப்பு இதுதான்,

கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா?

அதாவது திருமணத்திற்கு முன் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள், சில சங்கடங்கள், சில மாற்றங்கள் மற்றும் திருமணத்திற்கு பின்பு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள் இதை எல்லாமே கணவனிடம்/மனைவியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டுமா? இல்லை நம்முடைய தனிப்பட்ட விஷயம் இதெல்லாம் தெரிந்தால் இருவருக்குள் இருக்கும் மகிழ்ச்சி போய்விடும் என தவிர்த்து விடலாமா ?

நிறைய தலைப்பு பிடிச்சிருந்தது. அறிவியல் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட நன்மை தீமையை கடந்த பட்டிமன்றத்தில் பார்த்தோம். இந்த முறை கொஞ்சம் குடும்பத்திற்குள்ளே போகலாமேனு தோணிச்சு. அதான் இந்த தலைப்பு. நமது தோழி வனிதாவின் தலைப்புதான் இது. இங்குள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் பெரும்பாலும் திருமணமானவர்கள் என்பதால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருமணம் ஆகாதவர்களும் தொடரலாம். உங்கள் அனைவரின் சூடான, சுவையான வாக்குவாதத்தின் அருமையை சொல்லவும் வேண்டுமா! உங்கள் வாதத் திறமையால் என் வேலையை எளிதாக்கி விடுங்கள். என்னை நடுவராக அழைத்த வானதிக்கு என் நன்றி. 17 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படும்.

அன்புடன்
தனிஷா

ஹுசேனம்மா பாருங்க நாம ரெண்டு பேரும் மறுபடியும் ஒரே அணி தான்.

மனசுக்குள்ளே வச்சு வருத்தப்படறதை விட சொல்லிட்டு திட்டு வேணாலும் வாங்கிக்கலாம் இல்லையா...

சரியா சொன்னீங்க ஹுசேனம்மா, மற்றவங்க மன்னிச்சுடுங்க,அனைத்து பதிவுகளையும் நான் படிக்கவில்லை.

தலைப்பு கொஞ்சம் குழப்பமாகவே இருக்கு. அதாவது "திருமணத்திற்கு முன் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள், சில சங்கடங்கள், சில மாற்றங்கள்" - சொல்ல தேவையில்லை. சந்தோஷமான விசயங்களை பகிர்ந்துகொள்ளலாம். நாமே மறக்க நினைக்கும் விசயங்களை சொல்ல தேவையில்லை. அல்லது கணவன் அல்லது மனைவியின் குண நலன்களை பொறுத்து சொல்லலாம்.

"திருமணத்திற்கு பின்பு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள்" - கட்டாயம் சொல்லுவதால் இருவருக்கும் நன்மையே.
என் தந்தை சின்ன வயசில சொன்னது - நீ சாயுங்காலம் உன் அம்மாவிடம் வந்து 'நான் இதை செய்தேன்' என்று சொல்ல முடியாத எந்த செயலையும் செய்யாதே. அப்படி உன்னால் உன் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டால் பெரும்பாலும் அந்த செயல் சரியானதாக இருக்காது. இதே விஷயத்தை பின்னால் சுகிசிவம் (அவர்தான் என நினைக்கிறேன்) சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பின் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்ல முடியாத எந்த செயலையும் (அது சரியான செயலானாலும் கூட) செய்யாமலிருப்பதே நலம். அதாவது, எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள், சொல்ல முடியாதவற்றை செய்யாதீர்கள். வாழ்க்கை சுகமாக இருக்கும்.

மீண்டும் வார விடுமுறையில் பார்க்கலாம்.

அதிரா, தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு விண்ணப்பம். முன்பே வேறொரு இழையில் சொல்ல நினைத்தேன். "விழையாடு" அல்ல விளையாடு. தமிழ் நீங்கள் நன்றாக எழுதுவதாலும், இந்த தவறு பல இடங்களில் ஏற்பட்டுள்ளதாலும் சுட்டிக்காட்டுகிறேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

ஹாய் தனிஷா,
நல்ல தலைப்பு தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சும்மா நம் தோழிகளும் பட்டையை கிளப்பறாங்க, சுவையான விவாதங்கள்! : ) என்னால் அப்பப்ப வந்து படிக்கமட்டுமே முடிகிறது. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன். வாழ்த்துக்கள் தனீ!.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கவிசிவா இப்படி பாயிண்ட்ஸ் எல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்களே. அருமையான வாதம். வள்ளுவரின் வரிகளை வேறு உவமையா கூறீடீங்க.

உசேனம்மா இத்தனை பேருக்கும் நீங்க ஒருவராக நின்று பதிலடி கொடுத்துட்டு இருக்கீங்க. வெல்டன்.

உமா (0z) வழக்கம் போலவே உங்கள் வாதம் அனைத்தும் ரொம்ப நல்லாயிருக்கு.
--//திருப்தி அடையும் அதே மனம் ஒரு மணி நேரம் கழித்து "ச்சே அவள் முழவதும் சொன்னாளா? இல்லை பாதி சொல்லி மீதியை மறைத்து விட்டாளா" என்று நினைக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்///--

நல்ல நியாயமான கேள்விதான். எதிரணியினர்தான் பதில் சொல்ல வேண்டும்.

அதிரா நல்ல கலக்குங்க

உமா பாப்ஸ் கடைசியா உசேன் அம்மா பக்கம் சேர்ந்தாச்சா. சீக்கிரம் வாதத்தை ஆரம்பிங்க.

இஷானி நீங்கள் கூறும் கருத்தும் சரிதான். ஏதாவது ஒரு பக்கம் முடிவு செய்து உங்கள் வாதத்தை ஆரம்பிங்க. உங்க வாதமும் அருமையாக இருக்கும். நாங்க ஆவலாக இருக்கோம்ல.

சுஸ்ரீ ரொம்ப நன்றிப்பா. முடிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மனோ மேடம், மனோகரி மேடம் உங்களை போன்ற அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்து இந்த பட்டிமன்றத்திற்கு அவசியம் தேவை. உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லோருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கும். வந்து கலந்துக் கொள்ளுங்கள்.

தேவா, ஆயிஷ்ரி, எல்லாம் எங்கே. பிஸியா. வாங்க. வரேன் சொல்லிட்டு போனவங்களையும் காணோம். இன்னும் ஒரு முடிவு எடுக்கலியா?

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்; அதுபோல நானும் என்று மார்தட்ட நினைத்தேன். தோழிகள் என் கருத்திற்கியைந்து அணிவகுக்கத் தொடங்கி விட்டார்கள். வாருங்கள் உமா, இஷானி. நன்றி!!

எதிரணித் தோழிகள் எல்லாருமே "கணவனிடம் உண்மையைக் கூறுவது" என்ற கோணத்திலேயே பார்க்கிறீர்கள். மனைவியிடம் கணவர் மறைக்கிறார் என்ற கோணத்தில் யாரும் சிந்திக்கவே இல்லை. என் கணவர் ஒரு விஷயத்தை என்னிடம் மறைக்கிறார் என்றால், அவரின் நம்பிக்கையை நான் பெறவில்லை அல்லது அவர் என்னிடம் உண்மையாக இல்லை என்றுதானே அர்த்தம்? இந்த நிராகரிப்பு எவ்வளவு வேதனை தருவது என்று எல்லோருமே அறிந்ததுதான். பின் ஏன் இதற்கு இவ்வளவு ஆதரவு?

ஹீரோ, ஹீரோயின் விருப்பு, வெறுப்புகள் எல்லோரிடமும் உண்டு. எனக்கு கமல் நடிப்பு பிடிக்கும் என்பதை யாரும் தவறாக எடுக்க மாட்டார்கள். ஆனால் கமல் கண் அழகு, சிரிப்பு அழகு என்ற ரீதியில் ரசித்தால் நல்ல கணவனாக இருந்தாலும் கோபம் வரும்.

என்னைப் பொறுத்தவரை நல்ல மனைவி/கணவரை விட சந்தேகப்படும் துணையிடம்தான் கவனமாக இருக்க வேண்டும். அதாவது எல்லா உண்மையையும் சொல்லிவிட வேண்டும்.

எல்லா விஷயத்திலும் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு; அதேபோல ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதிலும் சில "பேக் ஃபயர்" ஆகலாம்; ஆனால் சொல்லாமல் விடுவதால் வரும் விளைவுகளை விட இது மேல். மேலும் நிச்சயம் நாள்பட நம்மீது நம் துணைக்கு நம்பிக்கையை வரவைக்கும்.

தனிப்பட்ட ரசனை, தனிப்பட்ட விருப்பு/ வெறுப்பு, பிரைவேட் ஸ்பேஸ் என்பது நிச்சயம் வேண்டும், துணைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட‌. ஆனால் அந்த பிரைவேட் ஸ்பேஸிலும் என் துணை என்ன செய்வார் என்பது மனைவியாகிய எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் கணவன் மனைவி உறவு அப்பேர்ப்பட்டது.

அம்மாவிடம் சொல்லமுடியாதது என்று சில விஷயங்கள் உண்டு; அப்பாவிடம் சொல்லக்கூடாதவை உண்டு. ஏன் நண்பர்கள், சகோதர/ ச‌கோதரிகளிடம் பகிர முடியாதவையும் உண்டு. ஆனால் கணவன்_மனைவி பேசிக்கொள்ள முடியாத விஷயம் உண்டா?

நீங்கள் சொல்வதுபோல கணவன் மனைவியிடமோ, மனைவி கணவனிடமோ மறைக்க நேரும்போது அதைப் பார்த்து/ கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன நினைப்பார்கள்? ஓஹோ, இப்படிக் கூடச் செய்யலாம் போல என்று செய்ய ஆரம்பித்தால்?

கணவனும், மனைவியும் வெறும் கணவன் மனைவி மட்டுமல்ல. தாய், தந்தையும் கூட. அவர்களுக்குள் நிலவும் அந்நியோன்யத்தைப் பார்த்துக் குழந்தையும் கற்றுக்கொள்ளும்.

பெற்றோரிடம் பேசினால் விவாகரத்துச் செய்வேன் என்று மிரட்டும் கணவன், இது இல்லை என்றால் வேறு ஒரு காரணத்தை வைத்து மிரட்டுவான். அதெற்கெல்லாம் பயந்து மறைத்துக் கொண்டிருந்தால், குட்டக் குட்ட நாமே குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பது போல் ஆகிவிடும்.

இன்னும் வருவேன் விளக்கங்களுடன்!!

//கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்ல முடியாத எந்த செயலையும் (அது சரியான செயலானாலும் கூட) செய்யாமலிருப்பதே நலம்.//

இஷானி, சூப்பர் பஞ்ச்!! மிகவும் அருமையான மேற்கோள்!!

அதிரா, இந்தச் சென்னை வெயிலில் கோட், சூட்டெல்லாம் தேவையா? இப்பப் பாருங்க, வேர்த்து, விறுவிறுத்து.. இல்ல தெரிஞ்சேதான் போட்டுட்டு வந்தீங்களா, எப்படியும் எதிரணி வாதத்தினால வேர்க்கும். அப்ப கோட், சூட்டைக் காரணம் சொல்லலாம் என்று?

யானை கூட்டமா வந்தாலும் சிங்கிலா வந்தாலும் சிங்கம் தான் தோத்து போகும். :)

எதிர் அணி சொல்வது போல் மருத்துவர் மனம் விட்டு தான் பேச சொன்னாரே தவிர.... வலவலன்னு பேச சொல்லவே இல்லையே.... துணையிடம் எல்லாத்தையும் ஒலருனா அது வலவலா தான். அதை தான் நாங்க வேணாம்'னு சொல்றோம். இது பிரெச்சனை மட்டும் இல்லை.... ஆபத்தும் கூட. சிலர் சந்தேகப்பட்டு கொலை கூட பண்றாங்கப்பா.... இதை நாங்க சொல்லல.... பேப்பரும் செய்திகளும் சொல்லுது.

உலகத்தில் எத்தனை துணை நீங்க சொல்லுவது போல் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்பறாங்க.... எனக்கு தெரியல. நம்ம ஒன்னு சொன்னா, அதை வேறு விதமா எடுத்துக்க கூடிய மக்கள் தான் அதிகம். அதை புரிய வைக்க ஒரு சண்டை வரும்... அதில் 2 வார்த்தை வரும்... இப்படி மனகசப்பு அதிகமாகுதே தவிற, ஒரு நாளும் எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டு நிம்மதியா இருக்கிறதில்லை.

நாங்க துணைக்கு தெரியாம பொருள் வாங்குங்க, பணம் சேருங்க, பொய் சொல்லுங்கோன்னு சொல்லல.... துணையாகவே இருந்தாலும் சில நேரத்தில் சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதே நல்லதுன்னு தான் சொல்றோம். என் நண்பர் ஒருவர் மனைவி சரியான சந்தேக கேஸ். நண்பர் அவரை மிகவும் நேசிப்பதால் எதையும் மறைக்க மாட்டார். அப்படி தன்னோடு பணி செய்யும் பெண்கள், தோழிகள் பற்றி அவர் சொன்னதில் இருந்து வந்தது பிரெச்சனை. தினமும் அலுவலகத்துக்கு 10 முறை போன் செய்வது,என்ன செய்கிறாய், யாரோடு இருக்கிறாய் என்பது.... அப்பப்பா.... சந்தேகம் சந்தேகம். வேலை விஷயமாக கூட பெண்கள் யாரும் அவருக்கு போன் செய்துவிட கூடாது... "அவ ஏன் உனக்கு பண்றா??"னு கேப்பாங்க. இப்போ நண்பர் சுதாரிச்சிட்டார்.... யாரை பற்றியும் வீட்டில் சொல்வதில்லை... ஆப்பிஸ் விஷயம் ஆபீஸோடு... வீட்டு விஷயம் வீட்டோடு'னு இருக்கார். இப்போ தான் மனைவி தொல்லை இல்லாமல் குடும்ப வாழ்க்கை நிம்மதியாய் போகுது அவருக்கு.

நாங்களாம் இந்த மாதிரி பட்டு திருந்தாதிங்க... முன்னாடியே உஷாரா இருங்கன்னு சொல்றோம்... கேக்க மாட்டன்னு சொன்னா... நம்ம என்னங்க பண்றது!!!

கணவன் மனைவி... யாரிடம் யார் மறைக்கறாங்கன்னு நான் குறிப்பா சொல்லல. துணையிடம்'னு பொதுவா தான் சொல்றேன். நிச்சயம் என் கணவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்வதில்லை... அதை நிராகரிப்பு நான் எடுத்துக்கல... நமக்கு தேவை இல்லாத விஷயம்'னு தான் நினைக்கிறேன். அதே போல் அவருக்கு தேவை இல்லாத விஷயத்தை நானும் சொல்வதில்லை. நீங்க சொல்ற மாதிரி எல்லா விஷயத்தையும் திருமனம் ஆன புதிதில் இருவரும் ஒலிவு மறைவு இன்றி சொல்லித்தான் திரிந்தோம்.... இப்போ ஏன் சொல்வதில்லைன்னு நான் காரணமே சொல்ல வேண்டாம்'னு நினைக்கிறேன்... உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

அதனால் அவர் என்ன செய்வார் அவருடைய தனிபட்ட விஷயமா என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாம இல்லை.... என்னை பற்றி அவருக்கும் தெரியாமல் இல்லை. அவர் சொல்ல தேவை இல்லை... எனக்கு தெரியும்.... நான் சொல்ல தேவை இல்லை... அவருக்கு தெரியும்... சொல்லி தான் புரியனும்'னா நான் அவர் மனைவியா இருக்க முடியாது, அவர் என் கணவரா இருக்க முடியாது.... அது தான் கணவன் மனைவி உறவு. ஒரு வரை பற்றி ஒரு வரிடம் சொல்லாமலே புரிந்து வைத்திருப்பது.... மற்றவர் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இப்போ வியர்க்கவில்லை, ஏனென்றால் நான் யாரையும் எதிர்த்துக் கதைக்க வரவில்லை:), அடக்க ஒடுக்கமாக என் கருத்தைச் சொல்லிப்போகவே வந்தேன்:).

கணவன் மனைவிக்கிடையில், எந்தச் சந்தேகமோ, தப்பான அபிப்பிராயமோ தோன்றாதெனில் 100%மும், எதையும் கதைக்கலாம்?:). ஆனால், உலகம் அப்படியா இருக்கிறது. கணவனும் மனைவியும் மனிதப் பிறவிகள்தானே, கடவுளா? இல்லைத்தானே, அப்போ எல்லோரிடமும் எல்லாக் குணங்களும் இருக்கும்தானே. 100 வீதமும் நல்லவர்களாக இருக்க முடியாதுதானே.

சில, ஊரில் நடந்த உண்மைக் கதைகள்.....

///எனக்குத் தெரிந்த ஒருவர், அவருக்கு மனைவியில் சந்தேகம், அதனால் வேலைக்குப் போவாராம் திடீரென ஓடிவருவாராம். வரும்போது வெளியே வாசலில் சைக்கிள் அடையாளமோ சிலுப்பர் அடையாளமோ தெரிந்தால், யார் வந்தார்கள் எனக் கேட்பாராம். ஆரம்பத்தில் மனைவிக்குப் புரியவில்லை, பின்னர் புரிந்ததும் கஸ்டமாகிவிட்டது, பிரிந்துவிட்டனர். ஒரு குழந்தை, அப்பிள்ளைக்கு இப்போ 20 வயதாகிவிட்டது. அவருக்கு தெரியும் மனைவி நல்லவர் என, இருப்பினும் சந்தேகம் விடவில்லை. ஆனால் இப்பவும் சேர்ந்திருப்போம் என தொந்தரவு கொடுக்கிறாராம், மனைவியோ இனியும் என்னால் முடியாதென தனியே பிள்ளையோடு வாழ்ந்துவருகிறார்.

/// காதலித்து திருமணமான கணவன், மனைவி. திருமணத்தின் பின்னர் மனைவிக்கு கணவனில் சந்தேகம், தன்னைவிட்டுவிட்டு வேறு யாருடனும் தொடர்பாகிவிடுவாரோ என்று. அதுக்கு ஒரு காரணம், மனைவியை விட கணவன், மிகவும் அழகானவர். நல்ல பெரிய பொறுப்புள்ள தொழிலிலும் இருந்தார். 3 பிள்ளைகளும்.
மனைவி போன் பண்ணுவாராம், பதில் இல்லையாயின் நேரே ஒபிஸுக்குப் போய் விடுவாராம். இப்படிப் பல தடவை நடந்திருக்கிறதாம், ஆனாலும் அக் கணவர் நல்லவர் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் குடும்பம் நலமே போகிறது.

///இன்னொருவர், இதுவும் மனைவிக்கு சந்தேகம், சந்தேகம் என்றுமில்லையாம், தன்னைவிட அழகான பெண்களை, இவர் தப்பித்தவறிப்பார்த்தாலோ அல்லது பேசினாலோ பிடிக்காது. கோபித்துக் கொள்வாராம், சில நாட்களில் இருவரும் வெளியே போய் வருவார்களாம், வந்தபின் மனைவி பேசமாட்டாராம், கணவருக்கு தெரியாது என்ன நடந்ததென்று. பின்னர் திடீரெனக் கேட்பாராம் "யார் அந்தப் பெண்" என்று. கணவனுக்கோ, இவர் யாரைக் கேட்கிறார் என்றே தெரியாமல் இருக்குமாம். கணவனின் கண் எங்கே பார்க்கிறது எனப் பார்ப்பதுதான் மனைவியின் வேலையாம். கணவன் மிகவும் நல்லவர், ஒழுக்கமானவர், ஆனால் அவர் கேட்கிறார், வெளியே போகும்போது ஒரு பெண் எதிரே வந்தால், அவரைப் பார்ப்பதில் தப்பிருக்கோ என்று. ஆனால் குடும்பம் பிரச்சனையில்லாமல் இருக்கிறார்கள்.

அவர் கேட்டார், பெண்கள், ஆண்கள் எதுக்காக, அழகாக வெளிக்கிட்டு வரவேண்டும்? தம்மை அடுத்தவர்கள் பார்ப்பார்கள், அப்போ அழகாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே?. இல்லையென்றால், ஏன் மேக்கப் போடவேண்டும்? வீட்டிலிருப்பதுபோலவே வெளியேயும் வரலாமே சாதாரணமாக? என்று. இதுக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை.

///இன்னுமொரு கதை வெளிநாட்டில் நடந்தது. மனைவி ஒருவரை விரும்பினார், பின்னர் அது பிரிவாகிவிட்டது. வேறு ஒருவரைத் திருமணம் செய்தார். வாழ்க்கை நன்றாகவே போனது, குழந்தைகளும் பிறந்து நல்லபடி இருந்தார்கள். மனைவி முன்பு விரும்பிய கதையும் கணவனுக்கு தெரியும். மனைவி அதை மறந்துவிட்டார். பின்பு மனைவி வேலை செய்யும் அதே இடத்தில், முன்பு விரும்பியவருக்கும் வேலை கிடைத்தது. இதை மனைவி கணவருக்குச் சொல்லியுள்ளார், உடனே சந்தேகம் ஆரம்பமானது, மனைவி கொஞ்சம் தாமதித்தாலும் சந்தேகப்படத் தொடங்கினார் கணவர், அடிக்கடி போன் பண்ணி என்ன செய்கிறாய் என, வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தார், முடிவில் ஒரு பித்துப்பிடித்தவர் போலாகி மனைவியைக் கொன்று விட்டார். ஒருவேளை, மனைவி உண்மையைச் சொல்லாமல் விட்டிருந்தால், விதி வேறுவிதமாக இருந்திருக்குமோ என்னவோ.

இப்படியான குடும்பங்கள் தான் விகிதாசார அடிப்படையில் உலகில் அதிகமாக இருக்கிறார்கள். இதனால்தான், புரிந்துகொள்ளமுடியாத சூழலில் கணவனோ, மனைவியோ இருப்பின் உள்ளதை உள்ளபடி சொல்லாமல் விடுவதுதான் குடும்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும். முழு உண்மையையும் சொல்லவில்லை என்பதற்காக, அவர்கள் தவறானவர்கள் என அர்த்தம் கொள்ள முடியுமோ?

இவ்வளவு சத்தமாகப் பேசிவிட்டேன், இப்போதான் பார்க்கிறேன் எதிர்க்கட்சியில் ஒருவரையும் காணவில்லையே:), ஒருவரும் இல்லாத இடத்திலா சத்தமாகப் பேசினேன்? விரைவாக இறங்கி ஓடிவிட வேண்டியதுதான், இல்லாவிட்டால் எனக்குத்தான் என்னவோ பிடித்துவிட்டது எனச் சொல்லப்போகிறார்கள்:).

இஷானி இஷானி.....
நல்லவேளை நீங்கள் கவனித்துச் சொன்னீங்கள். உண்மையிலேயே எனக்கு எப்பவும் இந்த "ழ", "ள" இரண்டிலுமே குழப்பம், அது ஏனோ தெரியவில்லை. எழுதும்போது தடுமாறித்தான் ஏதோ ஒன்றைப் போட்டு முடிப்பேன். ஒரு தலைப்புப் போட்டு, "ழ", "ள" விலுள்ள சொற்களை எழுதச் சொல்லிக் கேட்கலாம் எனவும் பலதடவை நினைத்திருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. ஆமா.... நீங்க எந்தக் கட்சி?:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாவ் உமா(girl from oz) கலக்குறீங்க!

"அவர் சொல்ல தேவை இல்லை... எனக்கு தெரியும்.... நான் சொல்ல தேவை இல்லை... அவருக்கு தெரியும்" சூப்பர் வனிதா.

நடுவர் அவர்களே எதிரணியினர் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றே ஒன்றுதான். துணையிடம் எதையும் மறைக்காமல் சொல்லி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் அல்ப விஷயங்களைக் கூட மறைக்கமாட்டோம். சொல்லி விட்டு வலிய போய் துன்பத்தை ஏற்பதுதான் சிறந்தது என்கிறார்கள். மனதில் உள்ளதை கொட்டிவிட்டால் இவர்கள் பாரம் குறைந்து விடுமாம். உண்மைதான் இறக்கி வைத்த பாரம்தான் துணையின் நெஞ்சில் ஏறி விடுமே!

உதாரணத்துக்கு ஒரு வீட்டில் கணவனோ மனைவியோ ஊதாரி என்று வைத்துக் கொள்வோம். எப்படிப்பட்ட ஊதாரி என்றால் வீட்டில் 5 ரூபாய் இருந்தாலும் அதைக் கொண்டு போய் தெண்ட செலவு செய்பவர் என்று வைத்துக் கொள்வோம். திருந்தவே மாட்டேன் என்று அடம்பிடிப்பவராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் துணையிடம் வந்து பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று மறைக்கத்தான் செய்வார்கள். துணைக்குத் தெரியாமல் பாதுகாப்பாக பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பாரா அல்லது துணையிடம் எதையுமே மறைக்க மாட்டேன் என்று உள்ளதையெல்லாம் கொடுத்து பிள்ளைகளையும் சேர்த்து கஷ்டப் படுத்துவாரா? இதில் எதிரணியினர்டம் ஒரே ஒரு கேள்வி. இந்த சூழ்நிலையில் துணையிடம் சேமிப்பை மறைப்பது சரியா தவறா? துணையை திருத்த முயற்சிக்க வேண்டும் என்று சப்பைக் கட்டெல்லாம் கட்டக் கூடாது.

நம் அம்மாக்கள் கூட அப்பாவுக்கு தெரியாமல் கடுகு டப்பாவிலும் அரிசி டப்பாவிலும் பணம் சேர்த்து வைத்திருப்பார்கள். அவசரத்தேவைக்கு பணம் இல்லாமல் அப்பா தவிக்கும்போது சேர்த்து வைத்த பணத்தை அம்மா நீட்டும் போது அப்பா முகத்தில் தெரியும் நிம்மதி... அதை சொல்ல வார்த்தையில்லை. எனக்கு தெரியாம பணத்தை சேர்த்தியா என்று கோபப் பட மாட்டார்கள் மாறாக மனைவியை நினைத்து பெருமைப் படுவார்கள். பல நடுத்தர குடும்பங்களில் நடக்கும் நிகழ்ச்சிதான் இது.

இப்படிப்பட்ட விஷயங்களைத்தான் எங்கள் அணியினர் துணையிடம் மறைக்கலாம் தவறில்லை என்கிறோம். அதை விட்டு துணைக்கு தெரியாமல் ஊர் சுற்றுவதையும் தெண்டச் செலவு செய்வதையும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவதையும் எங்கள் அணி நியாயப் படுத்தவில்லை என்று சொல்லி வாதத்தை நிறைவு செய்கிறேன்.

3நாட்கள் ஊர் சுற்றப் போவதால் பின்னர் வந்து முடிந்தால் கலந்து கொள்கிறேன். எம்மணியினர் ஏற்கெனவே கலக்குகிறார்கள். அதனால் கவலையின்றி சென்று வருகிறேன். நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னங்க நடுவர் அவர்களே? நாங்க என்ன நம் கணவரையோ மனைவியையோ என்ன எதிரியாகவா பார்க்க சொல்றோம்?? இவங்க பேசறதா பார்த்தா நாங்க ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அவர் ஒரு மூலையிலும் நான் ஒரு மூலையிலும் உம்முன்னு உக்காந்து இருக்கோம்னு இல்ல ஆகுது? நாங்களும் பேசிட்டுதாங்க இருக்கோம் ஆனா அளவோட பேசறோம்! A to Z சொல்லலேன்னா எங்களுக்குள்ள அன்னியோன்னியம் இல்லையா என்ன??

**ஆனால் கமல் கண் அழகு, சிரிப்பு அழகு என்ற ரீதியில் ரசித்தால் நல்ல கணவனாக இருந்தாலும் கோபம் வரும்.**

ஆஹ்! இதைதான் எதிர்பார்த்தேன். ஏங்க? நாம எல்லாருமே உணர்ச்சியுள்ள மனிதர்கள் தாமே? கமல் கண் அழகாய் இருக்கிறதென்று ரசிக்க மாட்டோமா இல்லை ரசிக்க கூடாதா? (I personally prefer Arya's eyes btw) ;) அவரிடம் போய் அட அட ஆர்யா கண் எவ்வளவு ஷார்ப் அக இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும்?

எனக்கு Johnny Depp என்றால் உயிர். ஒரு படம் கூட விட்டதில்லை. ஆனால் என் தோழியுடன் தான் செல்வேன் அவளிடம்தான் பேசுவேன். இவரிடம்போய் Johnny Depp is so sleek அப்படின்னு சும்மா ஒரு கமெண்ட் சொல்லி இவர் BP எகிறி ஏங்க வம்பு?

**என்னைப் பொறுத்தவரை நல்ல மனைவி/கணவரை விட சந்தேகப்படும் துணையிடம்தான் கவனமாக இருக்க வேண்டும். அதாவது எல்லா உண்மையையும் சொல்லிவிட வேண்டும். **

அவர்கள் சந்தேகப்படும் துணையா புரிந்துகொள்ளும் துணையா என்பது நீங்க விஷயத்தை சொன்ன அப்பரம் தான் தெரியும். By then its a tad too late and the damage is already done! அதுவும் இல்லாமல் உண்மை உண்மை நு சொல்றீங்களே அது என்னங்க உண்மை??

**ஆனால் அந்த பிரைவேட் ஸ்பேஸிலும் என் துணை என்ன செய்வார் என்பது மனைவியாகிய எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.**

இதற்கு பேர் Personal space இல்லீங்க. Its called suffocation :)

என் செல் போன் அடித்தாலும் சரி எனக்கு text messages வந்தாலும் சரி அவர் attend செய்ய மாட்டார். அது போலதான் நானும். தலையிட மாட்டேன். அது எனக்கு தேவையும் இல்லை. இந்த விஷயத்தை எல்லாம் கூட சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என்றால் its practically impossible! அந்த அளவுக்கு கூட பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?

**ஆனால் கணவன்_மனைவி பேசிக்கொள்ள முடியாத விஷயம் உண்டா?**

Oh yes! நிச்சயம் உண்டு. உதாரணத்திற்கு என் கணவரின் வீட்டார் பற்றி எதாவது குறை கொட்டிக்கொள்ள வேண்டும் என்றால் என் கணவரிடமா கொட்டிக்கொள்ள முடியும்??

நிச்சயமாக என் தோழர்களிடம் இருக்கும் நெகடிவ் aspect என் கணவருக்கு தெரியாது. அது அவருக்கு தேவையும் இல்லை. அதே போல்தான் அவருடைய நண்பர்களின் negative குணங்கள் எனக்கு தெரியாது தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு ஜோக் கூட படித்த ஞாபகம். வீட்டுக்கு வந்த நண்பரை வரவேற்ற சிறுவன் அப்பா அப்பா இங்கே வாருங்கள். குடிகாரன் குடிகாரன் என்று சொல்லுவீங்களே அந்த மாமா வந்து இருக்காங்க என்று. தேவையா?

இவர்கள் பேச பேச எனக்கு இதில் தீவிரம் அதிகம் தான் ஆகிறது! நிச்சயமாக "எல்லா" விஷயத்தையும் கணவரிடமோ/மனைவிடமோ பகிர்ந்து கொள்ள முடியாது கூடவும் கூடாது!

அன்புடன்

மேலும் சில பதிவுகள்