கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவது நல்லதா? இல்லையா? ப.மன்றம்-4

சகோதர, சகோதரிகளுக்கும், எனது அன்பு தோழிகளுக்கும் வணக்கம். எனக்கு ஊக்கமளித்து இங்கே தலைப்பு கொடுக்க வைத்த அனைவருக்கும் என் நன்றி...

இன்றைய பட்டிமன்றத்திற்கான தலைப்பு இதுதான்,

கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா?

அதாவது திருமணத்திற்கு முன் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள், சில சங்கடங்கள், சில மாற்றங்கள் மற்றும் திருமணத்திற்கு பின்பு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள் இதை எல்லாமே கணவனிடம்/மனைவியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டுமா? இல்லை நம்முடைய தனிப்பட்ட விஷயம் இதெல்லாம் தெரிந்தால் இருவருக்குள் இருக்கும் மகிழ்ச்சி போய்விடும் என தவிர்த்து விடலாமா ?

நிறைய தலைப்பு பிடிச்சிருந்தது. அறிவியல் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட நன்மை தீமையை கடந்த பட்டிமன்றத்தில் பார்த்தோம். இந்த முறை கொஞ்சம் குடும்பத்திற்குள்ளே போகலாமேனு தோணிச்சு. அதான் இந்த தலைப்பு. நமது தோழி வனிதாவின் தலைப்புதான் இது. இங்குள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் பெரும்பாலும் திருமணமானவர்கள் என்பதால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருமணம் ஆகாதவர்களும் தொடரலாம். உங்கள் அனைவரின் சூடான, சுவையான வாக்குவாதத்தின் அருமையை சொல்லவும் வேண்டுமா! உங்கள் வாதத் திறமையால் என் வேலையை எளிதாக்கி விடுங்கள். என்னை நடுவராக அழைத்த வானதிக்கு என் நன்றி. 17 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படும்.

அன்புடன்
தனிஷா

அனைத்து தோழிகளும் நலம் தானே.. தங்கள் அழைப்பிற்கு மிகுந்த நன்றி நடுவர் தனிஷா.. திட்டு வாங்கினாலும் எல்லாவற்றையும் சொல்லி விடும் அணியில் வாழ்க்கை ஓடினாலும், தற்சமயம் என்னால் கலந்து கொள்ள இயலாது.
தனிஷா, மன்னியுங்கள்.. கண்டிப்பாக அடுத்த மன்றத்தில் கலந்து கொள்ள கூடிய வாய்ப்பை கடவுள் எனக்கு அளிக்கட்டும் .. (கலந்து கொள்வதே பெரிய விசயம், என்னைப் பொருத்த வரை...) இரண்டு அணியினரும் வெகு அருமையாக வாதிடுகிறார்கள்... வாழ்த்துக்கள்...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

தீவிர யோசனைக்குப் பின் நானும் வந்துட்டேன்:) முதலில் ஹூஸைனம்மா தனியா இருக்காங்களே, துணைக்கு போகலாமுன்னு பார்த்தேன்:) இப்போதான் அவங்க வலுவான கூட்டணி அமைச்சுட்டாங்க :) அதனால் கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்ற அணியில் குதிச்சுட்டேன்:)

நடுவருக்கு முதலில் வணக்கம். எங்க அணியில் ஏற்கனவே கலக்கிக் கொண்டு இருக்காங்க. ஏதோ ஒன்றை நம் துணையிடம் சொல்லாமல் தவிற்கிறோம் என்றால் அது நாம் துரோகம் செய்கிறோம் என அர்த்தமல்ல. வீண் ப்ரச்சனைகளுக்கு இடம் அளிக்காமல் இருக்க வேண்டுமெனில் சிலவற்றை சொல்லாமல் தவிற்பதே நல்லது. என் அணியினர் ஏற்கனவே சில எடுத்துக்காட்டுகளை கூறிவிட்டனர்.

நம்மைப் போன்று அனைவரும் நல்லவர்களாக:) இருந்துவிட்டால் எதையும் நம்மிடம் சொல்வதில் ப்ரச்சனையில்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த மாதிரி அமைவதில்லையே. கணவனோ, மனைவியோ சந்தேக குணம் கொண்டவராக இருந்தால், அவ்வளவுதான் எதை சொன்னாலும் குற்றமாக இருக்கும். அப்படிப் பட்டோரிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்ல வேண்டும்.

பெற்றோருக்கு பண உதவி செய்வதுகூட சில இல்லங்களில் மனைவியிடம் சொல்ல முடிவதில்லை. வேறு வழி, மனைவிக்குத் தெரியாமல்தான் அனுப்ப வேண்டும். மனைவியிடம் சொன்னாலும் பரச்சனை, சொல்லாவிட்டாலும் ப்ரச்சனை என்றால், அதற்கு சொல்லாமல் இருந்து விடுவதே மேல்.

அவரவற்கு ஒரு பெர்ஸனல் ஸ்பேஸ் வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கையும். மற்றவர் ஈமெயிலை ஒப்பன் செய்வது, ஃபோனை நோட் பண்ணுவது, இதிலல்லாம் எனக்கும் விருப்பமில்லை. அவர்களை கொஞ்சமாவது ஃப்ரீயாக இருக்க விடுவேமே:) என்ற நல்ல எண்ணம்தான்.

வாழ்க்கைப் பயணம் இனிதாக அமைய இரு மனங்களும் ஒத்துப் போக வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று ஒருவர் நினைக்கும்போதே, ஒகே.. அவளோ, அவரோ இதை நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும், இல்லை மறந்து போயிருக்கும் என்ற நினைப்புதான் முதலில் வரவேண்டும். அதுவே பரஸ்பர நம்பிக்கை.

எதிரணியினர் வள வளன்னு அவிங்க அவிங்க வீட்டுல பேசிட்டு இருப்பாங்க:) ஆகவே நடுவர் அவர்களே சொல்ல வேண்டிய விஷயத்தை கரெக்டா சொல்லும் எங்க அணியினருக்கு பார்த்து தீர்ப்பை சொல்லுங்க :)

பி.கு: ஹர்ஷ், இதோ எந்த அணி என்று முடிவு பண்ணிட்டேன். நீ அக்கா பக்கமா, இல்லை அக்காவிற்கு எதிர்பக்கமான்னு சீக்கிரம் முடிவு பண்ணு:)

ஒரு முறை தான் சொல்வேன்!உண்மையிலே உங்க கணவரை நேசிக்கிரீங்களா கிவ் ஹிம் சம் ஸ்பேஸ்.. சும்மா நொய் நொய்ன்னு பக்கத்து வீட்டு பூனை நம்ம வீட்டுல கக்கா போன விஷயத்தில இருந்து தண்ணி டேங்ல எவ்வளவு தண்ணி இருக்குன்னு அச்சு பிச்சு விஷயங்கள"பகிர்தல்" என்ற பேரில பிளேட் போடாதீங்கன்னு சொல்ல வர்ரேன்... என் பிரெண்ட் தன் கணவரிடம் எப்பவும் ( 1 மணிக்கு ஒரு முறையாவது) பேசி முடிக்கும் போது எதோ பய் ஜான் ( ஹிந்தியில உயிரே??) என்று சொல்லுவாள்... என்னை கேட்டதுண்டு நீ ஏன் அடிக்கடி போன் செய்வதில்லைனு...எதாவது முக்கியமான விஷயம் என்றால் பேசலாம் ஆபிஸ் நேரத்தில ஒழுங்கா வேலை செய்யட்டும் என்று சொல்வேன்...

என் கருத்து... இதுவும் கூட ஒரு சார்ந்து இருப்பது தான். கணவன் மனைவி இருவருமே தன் தனி சுதந்திரம் பறிபோகாத அளவில் விஷயங்கள ஷேர் பண்ணிக்கணும். சும்மா எல்லாம் சொல்லுவேன்னு சொல்வது ==> இது மனைவிகளாவே உருவாக்கிக்கும் ஒரு தியரி! என் கணவர் என்னிடம் ஒரு விஷயத்தை பற்றி சொல்லவில்லையெனில் அவர் இந்த விஷய்த்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தானே சொல்வேணே ஒழிய அதனை "எனக்கு முக்கியதுவம் " தரவில்லை என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். எனக்கு மன வருத்தமோ உளச்சலோ தரும் விஷயத்தை சொல்லாமல் இருப்பதில் என்ன தவறு. எ.கா மாமியார் ஒரு குறை சொன்னால் நம்மிடம் சொல்லாம இது ஒரு விஷய்ம் இல்லை அவங்க வயசானவங்க சொன்னா கேக்கமாட்டாங்க மனைவியோ மார்டன் மங்கை இங்கயும் நம் பேச்சு அம்பலம் ஏறாது என்று தெரிந்தால் சொல்லாம இருப்பதே நல்லது இல்லையா??!!!!

இந்த முறை எதிரணி ரொம்ப வீக்கா இருப்பதால் இத்துடன் என் உரையை முடிக்கிறேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னுடைய முதல் பதிவு எல்லா பட்டிமன்றதிலேயும் ஒரு குழப்பமானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் நிச்சயம் ஒரு பக்கம் சாய்ந்திருப்பேன். இதிலும் அதே நிலைதான். "எல்லா விசயத்தையும்" சொல்ல வேண்டும் என்பதே எனது வாதமும்.

முதலில் தலைப்பைப் பற்றி ஒரு தெளிவிற்கு வருவோம். "எல்லாவற்றையும் சொல்வது" என்றால் என்ன - நாங்களும் கலையில் எழுந்திருந்தது, பல் தேய்ச்சது, குளிச்சது, காரை எடுத்தது, எந்த street வழியா போனது - இப்படிப்பட்ட விஷயங்களை உக்கார்ந்து சொல்லிக்கிட்டு இருக்கணும்னு சொல்லல (அது அவரவர் விருப்பு வெறுப்பை பொறுத்தது). எந்த விஷயம் நாம் சொல்லாமல் வேரொரு வழியில் நம் வாழ்க்கைதுணை அறிய நேர்ந்தால் அது அவரை சஞ்சலபடுத்துமோ அந்த விசயங்களை நாமே சொல்லிவிடல் வேண்டும் என்பதே. உதாரணமாக கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தன் பெற்றோருக்காக, உடன்பிறப்புக்காக செலவு செய்வதைக் கூட தவறு என்றே சொல்வேன். தன்னுடைய செயலை நியாயப்படுத்தி (அதில் சிறிது வாக்குவாதம் வந்தாலும்) சிறிது கலந்துரையாடலுக்கு பின் அந்த காரியத்தை செய்வதே நீண்ட கால சந்தோஷமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும். இல்லையெனில் நீங்கள் செய்யும் செயல் தெரியாமலே இருந்துவிட்டால் பிரச்னை இல்லைதான். தெரிந்துவிட்டால் பிரச்சனை பல மடங்காகிவிடும்.

கணவன் மனைவி உறவு என்பது business relationship அல்ல. சாதகமானதை, நல்லதை மட்டும் சொல்வதற்கு, சங்கடமான விஷயத்தை விட்டுவிடுவதற்கு. அது ஒரு (நிர்) பந்தத்தில் :-) தோடங்கி Credibility - ன் அடிப்படையில் வளர்வது. என்று அந்த credibility உடைக்கப்படுகிறதோ, என்று கணவன் அல்லது மனைவியின்பால் ஒரு நம்பிக்கையின்மை ஏற்படுகிறதோ, அன்றிலிருந்து அது கண்ணாடியில் ஏற்பட்ட கீரல் போன்று, பெரிதாகுமே ஒழிய குறையாது. வாழ்க்கைத்துணையிடம் சொல்லாமல் மறைப்பது குறுகிய கால சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும். உண்மை தெரிய வரும்போது அது நீண்ட கால மகிழ்ச்சிக்கு உலை வைத்துவிடும்.

சொன்னா சரியான முறையில் புரிந்து கொள்ள மாட்டங்க அதனால சொல்ல தேவையில்லைன்னு ஒருத்தங்க சொல்றாங்க, இன்னொருத்தங்க சொல்லாமலே சரியா புரிஞ்சிபாங்கன்னும் சொல்றாங்க. தெளிவா சொன்னாலே சரியா புரிஞ்சிகாதவங்க சொல்லாம என்னத்த புரிஞ்சிபாங்கன்னு தெரியல. ஒரு உதாரணம் சொல்றேன்- ஒருநாள் கணவனுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டு சென்றதுன்னு வச்சிகோங்க. எதிரணி சொல்றதுபோல கணவனுக்கு எதோ பிரச்சனைன்னு வேணா கண்டுபுடிச்சிடலாம் (அதுவும் அவர் சோர்வாக இருந்தால் மட்டுமே). ஆனா என்ன பிரச்சனைன்னு எப்படி கண்டுபிடிக்கிறது. கணவன் மறைக்கும் கொஸ்டியாக இருந்தார்ன்னு வச்சிகோங்க, உண்மைய சொன்னா மனைவி கஷ்டபடுவாங்கன்னு நெனச்சு, சும்மா தலை வலிதான்னு சொல்றாருன்னு வச்சிகோங்க, பின்னால் பாதிப்பு எல்லாருக்குமே தான். எதிரணி சொல்றத பார்த்த, இல்லங்க நீங்க நிக்கிறது, நடக்கிறது, பேசுறது வேற மாதிரி இருக்குது அதனால இது தலை வலி இல்ல நிச்சயமா உங்களுக்கு நெஞ்சு வலிதான்னு ஜோசியம் சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

personal space பத்தி சில பேர் பேசினாங்க. கணவன் மனைவிக்கிடையில் personal space என்பது - உனக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு பிடிச்சதெல்லாம் நான் செய்வேன், என் விசயத்தில் நீங்க தலையிடாதீங்க - என்பதல்ல. கணவன் அல்லது மனைவியின் விருப்பு வெறுப்புகள், ஆசைகள், சந்தோசங்களை அறிந்து, உணர்ந்து, அதற்கும் மதிப்பளித்து அதனை அடைவதற்கான அவர்களின் வழி முறைகளில் தடங்கல் ஏற்படுத்தாமல் இருத்தல் மட்டுமே. இந்த personal space எல்லோருக்கும் கிடைப்பது இல்லை என்பது உண்மையே. ஆனால் அது கிடைக்கவில்லை என்பதற்காக நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன் என்னுடைய personal space -க்குள் நீ வராதே என்றால் அது பெரிய பிரச்சனையிலேயே தான் கொண்டு போய் முடிக்கும். இந்த அறிதல், உணர்தல், புரிந்துகொள்ளுதல் என்பது தானாக நடப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. கலந்து பேசிதான் அதை அடைய முடியும். இந்த process நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் அல்லது சிலவற்றை மறைத்து விட்டீர்கள் என்று கணவனுக்கோ மனைவிக்கோ மற்றொருவர் மூலம் தெரிய நேர்ந்தால், இந்த process முற்று பெறாது, மற்றவர் உங்களைமுழுமையாக நம்பப்போவதும் இல்லை, உங்களுக்கு நீங்கள் சொல்லும் personal space கிடைக்கப்போவதும் இல்லை வாழ்வில் நிம்மதியும் இருப்பதில்லை. எனவே நீங்கள் சொல்லும் personal space கிடைப்பதற்கு கணவன் மனைவி உறவு ஒளிவு மறைவு இன்றி இருத்தல் அவசியம்.

எங்கள் அணி சொல்வது இதுதான். நம்பிக்கை தான் குடும்ப உறவின் ஆதாரம். அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது ஒவ்வொரு கணவன் மனைவியின் கடமை. இங்கு எனக்கு personal space இருக்கிறது, என் துணைக்கு தெரிவிக்காமல் என்னால் சில விசயங்களை செய்ய முடியும், எனக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது என்று வாதடும் ஒவ்வொருவரும் அந்த நம்பிக்கையை மற்றவர்க்கு ஏற்படுத்தியவர்கள். சில பொய் சொல்லியும், மறைத்தும் அந்த நம்பிக்கையை சீண்டி பாருங்கள். அப்போது புரியும் பிரச்சனை.

தெரிந்தே மறைக்கும் விஷயங்கள் மறைந்திருக்கும் வரைதான் நிம்மதியை தரும். வெளியே தெரியும்போது சில நேரங்களில் ஒட்டு மொத்த நிம்மதியையும் எடுத்துச் சென்றுவிடும். திரும்பவும் சொல்வது இதுதான், துணையிடம் சொல்ல முடியாத விசயங்களை, மறைத்துவிடலாம் என எண்ணாமல், செய்யாமல் இருப்பதே குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை தரும்.

அதிரா, நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளுமே சந்தேக புத்தியால் வருவது. அது வேற நோய். அது உள்ளவர்களுக்கு எப்படியும் பிரச்சனைதான். மறுபடியும் நீங்க தோக்குற கட்சியில இருக்கீங்களே -னுதான் கவலையா இருக்கு :-( கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

///---அம்மாவிடம் சொல்லமுடியாதது என்று சில விஷயங்கள் உண்டு; அப்பாவிடம் சொல்லக்கூடாதவை உண்டு. ஏன் நண்பர்கள், சகோதர/ ச‌கோதரிகளிடம் பகிர முடியாதவையும் உண்டு. ஆனால் கணவன்_மனைவி பேசிக்கொள்ள முடியாத விஷயம் உண்டா?--//

உசேனம்மா எப்படி இப்படியெல்லாம்? ம்ம் வெளுத்து கட்டுங்க.

வனிதா புரிதல் இருந்தா போதும் எல்லாத்தையும் நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்கிறீங்க. சரிதாங்கோ..

அதிரா உங்க உண்மைகதை எல்லாம் கஷ்டமாதான் இருக்கு என்ன செய்வது மனிதர்கள் பலவிதம். இந்த முறை ஒரே கலக்கல்தான் அதிரா.

கவிசிவா குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிய அழகா படம் பிடித்து காட்டுறீங்க. நல்ல படியா ஊர் சுத்திட்டு வாங்க. தீர்ப்புதான் எந்த பக்கம்னு என்னால் முடிவு பண்ண முடியல.

உமா நல்ல பதிலடி கொடுக்குறீங்க. இந்த முறை ரொம்ப எமஷோனலாயிடீங்க. பேசும் போது மைக்கும் சேர்ந்து சூடாகி விட்டது.

வாங்க வானு, எங்கே காணோம்னு நேத்துதான் நினைச்சேன். நம்ம எல்லோருக்கும் ஒரு பெர்சனல் ஸ்பேஸ் வேணும் என்கிறீங்க. பார்ப்போம்

இலா சூப்பர் பாயிண்ட் இது,

--//என் கணவர் என்னிடம் ஒரு விஷயத்தை பற்றி சொல்லவில்லையெனில் அவர் இந்த விஷய்த்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தானே சொல்வேணே ஒழிய அதனை "எனக்கு முக்கியதுவம் " தரவில்லை என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். எனக்கு மன வருத்தமோ உளச்சலோ தரும் விஷயத்தை சொல்லாமல் இருப்பதில் என்ன தவறு--//

ஆனால் பூனை கக்கா போன விஷயத்தையெல்லாம் சொல்லனுமானு கேக்கல. தினமும் வாட்டர் டெலிவரி செய்யும் டெலிவரி பாய் திடீர்னு ஒருநாள் நம்ம ஒருமாதிரி பார்த்தானா கண்டிப்பா சொல்லனுமா வேண்டாமா? அதுமாதிரி விஷயங்களைதான் கேக்குறேன்.

இஷானி

--///கணவன் மனைவி உறவு என்பது business relationship அல்ல. சாதகமானதை, நல்லதை மட்டும் சொல்வதற்கு, சங்கடமான விஷயத்தை விட்டுவிடுவதற்கு. அது ஒரு (நிர்) பந்தத்தில் :-) தோடங்கி Credibility - ன் அடிப்படையில் வளர்வது. என்று அந்த credibility உடைக்கப்படுகிறதோ, என்று கணவன் அல்லது மனைவியின்பால் ஒரு நம்பிக்கையின்மை ஏற்படுகிறதோ, அன்றிலிருந்து அது கண்ணாடியில் ஏற்பட்ட கீரல் போன்று, பெரிதாகுமே ஒழிய குறையாது. வாழ்க்கைத்துணையிடம் சொல்லாமல் மறைப்பது குறுகிய கால சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும். உண்மை தெரிய வரும்போது அது நீண்ட கால மகிழ்ச்சிக்கு உலை வைத்துவிடும்.//--

சூப்பரான வரிகள். இஷானி உங்களுடைய நச் நச் என்ற பதிவை படிக்கும் போது எந்த பக்கம் தீர்ப்பை சொல்லுவது ஒரே குழப்பமா இருக்கு. ஒரமா தலையில் துண்ட போட்டு உக்கார்ந்திருக்கேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எல்லாருக்கும் வணக்கமுங்க.......
ரொம்ப நாள் கழிச்சி பார்க்கிறோம்.....எல்லாரும் எப்படி இருக்கீங்க....
இந்த தலைப்பு என்னை சுண்டி இழுத்து விட்டது...
சூசூசூசூசூசூப்பர் தலைப்பு.......

நான் எந்த கட்சி என்றால் "எல்லாமும்" பகிர்ந்து கொள்ள வேண்டும்....

முதலில் சந்தேகத்துடன் அலையும் மனிதர்களை விடுங்கள்.......(அதற்கு தீர்வு வேறு)
அதற்கு இன்னொறு இழை ஆரம்பித்து கொள்ளலாம்..
personel space என்றால் என்ன?
உங்கள் மனத்தின் உண்மையான வெளிப்பாடு...சரிதானே....(mails,phones,diary then ..like thatஎனக்கு தெரிந்த வரைக்கும்)
முதலில்"my personel"என்னும் வார்த்தையெய் துறந்து"our personel"என்றால்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி உள்ளது...

எதிரணியினர் நாம் சொல்லுவதைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்வதைப் பார்த்தாலே புரிகிறது இவர்களிடம் ஏன் துணை "எல்லாம்" சொல்லுவதில்லை என்று!!

மீண்டும் மீண்டும் சந்தேகக் கேஸ்களையே உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒரு நோய்! அதுபோலத்தான் கெட்ட துணைவர்களும், மிரட்டும் துணைவர்களும்!! ஆனால் இதெல்லாம் மருந்துகளினால் மட்டுமல்ல, இந்த வகை புரிதலின் மூலமும் குணப்படுத்த முடியும்.

//அது தான் கணவன் மனைவி உறவு. ஒருவரை பற்றி ஒருவரிடம் சொல்லாமலே புரிந்து வைத்திருப்பது.... //

இந்தப் புரிதல் எப்படி வந்தது உங்களுக்குள்? மந்திரம் போட்டதுபோல் திருமணமான முதல் நாளே வந்துவிட்டதா? பேசியதன் மூலம்தானே இந்தப் புரிதல், பரஸ்பர நம்பிக்கை வந்தது?

எல்லாருக்கும் திருமணமான‌ முதல் 1 அல்லது 2 வருடம் மேடுபள்ளமாகத்தான் சென்றிருக்கும். ஆனால் அப்ப பேசிப்பழகியதன் மூலமே நம்மால் நம் துணை குறித்து ஒரு கணிப்புக்கு வந்திருக்க முடியும், ஒரு விஷயத்தை அவர் எவ்வாறு மிகைப்படுத்துவார் அல்லது குறைப்படுத்துவார்; சில விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்வார் என்றெல்லாம் புரிதல் ஏற்படுவது பேசுவதன் மூலம்தான். அந்தக் கணிப்பைக் கொண்டுதான் சொல்லியே ஆக வேண்டிய விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லவேண்டும்.

காக்கா எச்சம் போட்டது போன்ற உப்புபெறாத விஷயங்களைக் கூட சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நானும் சொல்லவில்லை. இன்றைய பரபரப்பான உலகத்தில் அதற்கு எங்கே நேரம்? அதைக்கூடப் பகிர்ந்து கொள்வதை விரும்பும் துணை கிடைத்தால் வரம்தான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லாமலிருந்தால் அது நம் வாழ்வில் இன்றில்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் சலனம் உண்டாக்கும் என்றால் சொல்லித்தான் ஆகவேண்டும். உடனே முடியவில்லை என்றாலும் பிறிதொரு நாளிலாவது சொல்லிவிட வேண்டும்.

அதுபோலத்தான் ஈ மெயில், ஃபோன் எல்லாம். இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் இப்பக் கூட அவர் ஃபோன் செய்து, தான் வெளியே இருப்பதால், தனது பெர்ஸனல் மெயிலைத் திறந்து ஒரு விவரம் தேடிதரும்படிக் கூறினார். செய்தேன். நான் என்ன தினமும் அவர் மெயிலைத் திறந்து செக் பண்ணிக் கொண்டா இருக்கிறேன்? உடனே மீண்டும் சந்தேகக் கேஸ்கள் பற்றிப் புராணம் பாடாதீங்கோ யாரும். எங்கள் பாஸ்வேர்டுகளைப் பகிருமளவு "புரிதல்" இருக்கிறது.

மணிக்கொரு முறை ஃபோன் செய்வது என்பதெல்லாம் அவரவர் விருப்பம். அவர்களுக்கு நேரம், விருப்பம் இருக்கிறது. செய்கிறார்கள், பேசுகிறார்கள். அது ஒருவரின் கட்டாயத்தின் பேரில் நிகழவில்லை என்றால் அதில் என்ன தவறு?

//இதற்கு பேர் Personal space இல்லீங்க. Its called suffocation//

இதற்கு நாம் வைத்துக் கொள்ளும் பெயர் நமக்குள் உள்ள புரிதலைப் பொறுத்து, பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்து இருக்கிறது. அது எப்படி வரும் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

இஷானி, அழகா, தெளிவாக விளக்கியிருக்கீங்க!! இதற்கு மேலும் எதிரணியினர் வர்றாங்களா பாப்போம்!!

ஆயிஸ்ரீ, வரமுடியவில்லையென்றாலும் உங்கள் தரப்பைக் கூறியதற்கு நன்றி.

ஷர்மி, வாங்க, வாங்க, ரொம்ப மாதங்கள் கழிச்சு வந்தாலும் வந்தீங்க, அதிரடியா ஒரு விஷயம் சொல்லியிருக்கீங்க. "எனது" என்பது "நமது" என்று மாற வேண்டும். அற்புதம்!!

உண்மைதான் ஷர்மி!! மற்ற எல்லா உறவுகளும் இரத்த சம்பந்ததால் வருவன. கணவன் மனைவி உறவுக்கும் மற்றவற்றிற்கும் உள்ள வித்தியாசமே அதுதான்.

நடுவர் அவர்களே, ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க. எதிரணியினர் எல்லாருமே ஒளிவு மறைவு இல்லாமத்தான் இருக்குறாங்க; அல்லது இருக்கணும்னு ஆசை; ஆனாலும் மறைச்சுட்டு இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்க. ஏமாந்துறாதீங்க!!

சர்மி வாங்க. நாங்க அனைவரும் நலம். எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழிச்சி வரீங்க.

---///முதலில்"my personel"என்னும் வார்த்தையெய் துறந்து"our personel"என்றால்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி உள்ளது...--///

எப்படிங்க சர்மி இப்படி வரும் போதே வெலுத்து கட்டுறீங்க. நாலு வார்த்தை சொன்னாலும் நச்சுனு சொல்றீங்க.

மிஸஸ் உசேன் உங்க அணிக்கு வலு கூடிக் கொண்டே போகுது. உங்க வாதமும் சும்ம நச்சுனு இருக்கு. பேசாம நானும் களத்தில் குதிக்கலாமானு தோணுது. எதிரணியினர் உங்களை கண்டு மிரண்டு போயிட்டாங்கனு நினைக்கிறேன். இன்னும் யாரையும் காணோமே. ஆமை முயல் கதை மாதிரி போயிட்டு இருக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வரவேற்ததற்கு நன்றி mrs.hussian அவர்களே....,
என்ன எதிரணியினரிடமிருந்து பதிலே கணோம்.....
இதை பற்றி கணவரிடம் விவாதிக்க போய் விட்டார்களோ???????

"சந்தேகக் கோடு, அது சந்தோஷக் கேடு"

///அவர்கள் சந்தேகப்படும் துணையா புரிந்துகொள்ளும் துணையா என்பது நீங்க விஷயத்தை சொன்ன அப்பரம் தான் தெரியும். By then its a tad too late and the damage is already done! // சரியாச் சொன்னீங்கள் Girl உமா, சந்தேகத்துக்கு வேறு தலைப்புப் போடலாம் என்கிறார்கள், அப்படியில்லை, தேவையிலாமல் எல்லாம் உளறுவதால்தான் சந்தேகம் உருவாகிறது. எடுத்தவுடன் மட்டும் சந்தேகம் வருவதில்லை, நாளடைவில் ஒருவரின் கதைபேச்சின் போக்கிலிருந்துதான் சந்தேகம் உருவாகிறது. அந்தச் சந்தேகத்தால்தான், குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது அதைத்தான் சொல்கிறோம்.

Girl உமா, ///அதுவும் இல்லாமல் உண்மை உண்மை நு சொல்றீங்களே அது என்னங்க உண்மை??/// உங்கள் இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்தேன். நன்கு கேட்டீங்கள் ஒரு கேள்வி. எதிரணியினர் ஏதோ மூட்டை மூட்டையாக உண்மையைக் கட்டிவைத்துக்கொண்டு சொல்லட்டோ சொல்லட்டோ எனத் திரிவதுபோல இருக்கு. இப்படிப் பார்த்தால், உண்மையில் எம்மிடம்தான் உண்மையில்லை, அதுதான் எல்லாத்தையும் சொல்லிட்டோமே:).

ஒழிவு மறைவென்பதெல்லாம் வைத்திருக்கச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் உளறி, இருக்கும் மகிழ்ச்சியைக் கெடுத்திடாதீங்கோ என்றுதான் சொல்கிறோம். எங்கள் வீட்டிலும் மெயில் பாஸ்வேட்டுகள் இருவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது(இப்படித்தான் நிறைய வீடுகளில் இருக்கிறது கேள்விப்பட்டிருக்கிறேன்). ஆனால் ஒருவருடையதை மற்றவர், பார்ப்பதில்லை. அதுக்காக, "நான் எதையுமே மறைப்பதில்லை, எனக்கொரு மெயில் வந்திருக்கிறது திறந்து பாருங்கள் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார்", என நாமே அரித்து, தேவையில்லாத கதைகளைக் கொட்ட வேண்டாம் என்பதுதான் எமதணியின் நோக்கம். அதேநேரம் எல்லா பாஸ்வேட்டும் இருவருக்கும் தெரியும் என்பதற்காக ஒருவரிடம் ஒழிவு மறைவில்லை எனச் சொல்லிட முடியுமா? ஒருவர் ஒழிக்க நினைத்தால், பத்து மெயில்களும் வைத்திருக்கலாமே, அதில் ஒன்றை ஒழித்து வைத்திருக்கலாமே, எனவே மொத்தத்தில் நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லாவற்றையும் சொல்வதில்தான் நம்பிக்கை இருக்கென்பது அர்த்தமில்லை.

என் கணவருக்கு, ஒரு போன் கோல் வந்தால், அது கணவருக்கு நண்பரோ/வேண்டியவரோ ஆக இருந்தால், சிலவேளைகளில் நான் பக்கத்தில் இருந்தால் கதைக்கும்போது என் காதிலும் வைப்பார்(கதை கேட்க), பின்னர், தான் பதில் சொல்வார், இப்படியும் நடப்பதுண்டு. ஆனால் சிலவேளைகளில் தானே பதில் சொல்லிக் கதைத்துவிட்டு பேசாமல் இருப்பார். அதுக்காக, இப்போ ஏன் தரவில்லை, என்ன கதைத்தீங்கள் ஏன் சொல்லவில்லை என்றெல்லாம் நான் கிண்டுவதில்லை. அவருக்கு தெரியும் சொல்லக்கூடியதெது, சொல்லத் தேவையிலாததெதென்று. அதைத்தான் இடைவெளி விடுங்கள் எனச் சொல்கிறோம்.

///சும்மா நொய் நொய்ன்னு பக்கத்து வீட்டு பூனை நம்ம வீட்டுல கக்கா போன விஷயத்தில இருந்து/// இலா எப்படி எப்படி இலா இதெல்லாம் எழுதுறீங்கள்... சிரித்ததில் சுழுக்கிவிட்டது(கடவுளே இது சரியான "ழு" வோ தெரியேல்லை).. இருந்தாலும் இலா, இந்த வாக்கியம் ஒரு கிரேஏஏஏஏட் இன்சல்ட்:) பூனைக்கு.

வின்னி இப்பவாவது கைகொடுத்தீங்களே.....கலக்கிட்டீங்க.

///அதிரா, நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளுமே சந்தேக புத்தியால் வருவது. அது வேற நோய். அது உள்ளவர்களுக்கு எப்படியும் பிரச்சனைதான்///
சந்தேகமுள்ளவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீங்க? இஷானி அப்போ இப்படிப்பட்டவங்களுக்கு என்ன கருத்துச் சொல்லப்போறீங்க? எல்லாவற்றையும் சொல்லவேண்டாமென்றா? சொல்லுங்கோ என்றா?. நீங்கள் வந்தபின் காப்போனாக சிந்திக்கிறீங்கள். நாங்கள் வருமுன்காப்போனாக இருக்கச் சொல்கிறோம்.

//மறுபடியும் நீங்க தோக்குற கட்சியில இருக்கீங்களே -னுதான் கவலையா இருக்கு// முடிவே பண்ணிட்டீங்களா?:), எங்கே போயிட்டீங்க எங்கள் கட்சியினரே.... இங்கே என்னைத் தனியாக்கூட்டிவந்து முறைக்கிறார்கள் ஓடிவாங்கோ....:).

நடுவர் அவர்களே!!! அப்பப்ப வந்து வயிற்றில புளியைக் கரைக்கிறீங்க!!!!...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்