ஜோக்ஸ் கார்னர் - 1

ஆமாம்பா, இங்க கடி ஜோக் சொல்ற நூல் எங்கப்பா....

தேடி தேடி புது நூல் எடுதிட்டேன்.......வாங்க வந்து வுடுங்க உங்க ஜோக்ஸ்-அ, அதான் வந்து கடிங்க :-)

வாங்க வந்து வுடுங்க உங்க ஜோக்ஸ்-அ, அதான் வந்து கடிங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சேல்ஸ்மேன் : சார், எறும்புக்கு பவுடர் கொண்டு வந்திருக்கேன். வாங்கி யூஸ் பண்ணி பாருங்க.

சர்தார் : அதெல்லாம் முடியாது....இன்னைக்கு பவ்டர் வாங்கி தந்தா நாளைக்கு லிப்ஸ்டிக் கேக்கும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மைக்ரோசாஃப்ட் நம்ம சென்னைத் தமிழ்ல Windows ரிலீஸ் பண்ணா, எப்படி இருக்கும் ஒரு கற்பனை[எனதள்ள, எனக்கு மெயில்ல வந்தது...தமிழ்-ல மட்டும் நான் டைப் பண்ணேன் :-)]

Open = தொர னைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து ப்ரிண்டடி
View = லுக்கு விடு
Cut = வெட்டு - குத்து
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
File = பெயிலு
Save = வெச்சிக்கோ
Save as = அய்யே இப்டி வெச்சிக்கோ
Save All = அல்லாத்தையும் வெச்சிக்கோ
Find = தேடு
Find Again = இனொரு தபா தேடு
Move = ஜகா வாங்கு
Zoom = பெர்சா காட்டு
Zoom Out = வெளிலவந்து பெர்சா காட்டு
New = புச்சு
Old = பல்சு
Replace = இத தூக்கி அத்லே போடு அத தூக்கி இத்லே போடு
Run = ஓடு னைனா
Execute = கொல்லு
Delete = கீஸிடு
Tools = ஸ்பானரு
Toolsbar = ஸ்பானரு செட்டு
Exit = ஓடுரா டே
Compress = அமுக்கிபோடு
Next = அப்பால
Previous = முன்னாகாட்டி
Trash bin = குப்ப தொட்டி
Drag & hold = நல்லா இஸ்து புடி
Double click = ரெண்டு தபா அழ்த்து னைனா
Do you want to delete selected item? = மையாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மையாலுமே கடாஸிடவா ?
Do you want to save selected item? = மையாலுமே வச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஷ்டம் இலாட்டி உட்டுடு
Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிகீற நீ
General protection fault = அல்லாம் காலி
Access denied = கை வெச்சே, கீஸிடுவேன்
Unrecoverable error = படா பேஜாருமே
Operation illegal = Bemani...Savu grakki...Kasmalam

இம்மா ஜோரா கீதில்ல :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

படா ஜோரா கீது நைனா..ஆல்ரெடி பட்ச்ச ஜோக்கா இர்ந்தாலும் இத்தல்லாம் மர்க்கா,மர்க்கா படிக்க படிக்க சொம்மா சிர்ப்பு-சிர்ப்பா வரும்...அக்காங்!:) :)

ஜீனோ இப்புடி ஒரு கடி சொல்லிக்கினே தான்
அறுசுவைல என்டராச்சு..அன்னிக்கு ஜீனோக்கு சுக்கிர தச :);) உச்சத்துல இருந்துச்சா..அதான் அப்பால ஜீனோ கடிக்கறதே இல்ல..அக்காங்! :)

அதே கடிய ஜீனோ மர்க்கா சொல்லிக்கிது...

" மட்டன் ஷாப்ல தொங்கற ஆட்டைப் பார்த்து
உன்ர கண்ணுல தண்ணீ வந்தா நீ சைவம் மாமே!
நாக்குல தண்ணீ வந்தா நீ அசைவம் மாமே! "

அப்றமா கண்டுக்கலாம்,வர்ட்டா....
~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹர்ஷினி ஹர்ஷினி.. இந்த மைக்ரோசாப்ட் டு சென்னை தமிழ் படிச்சிட்டு சிரிப்பு தாங்க முடியல..

ஜீனோ - உங்க சென்னை பாஷையும் அருமை.. டோராக்கு தமிழ் கத்துக் கொடுக்க முடியாட்டியும் பரவாயில்லை.. சென்னை பாஷை மட்டுமாவது கத்து(தி)க் கொடுத்திருங்க..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் ஹர்ஷினி,

உங்க மைக்கிரோசாப்ட் வெளியிடுற கற்பனை விண்டோஸ் மிகவும் அருமை. இன்னமும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன்.

ஜீனோ உங்க கடிய எங்கேயோ கேட்ட நியாபகம்.

என் கடிகளுன் அடுத்த பதிவில் வருகிறேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

எப்படி இருக்கீங்க. என்ன கடி ஜோக்குடன் கலக்க வந்துட்டீங்களா. உங்க மைக்கிரோசாப்ட் வெளியிடுற கற்பனை விண்டோஸ் இதை நீங்க சென்னை தமிழ்ல சொல்றதை கர்ப்பனை செய்தேன் சிரிப்பு தாங்க முடியலை. தப்பா நினைக்காதீங்க.

ஜீனோ உங்க ஜோக்கும் நல்லா இருக்கு.

இது எனக்கு ஒரு ப்ரெண்ட் சொன்னது
சர்தார் மனைவி
என்னங்க உங்களை பார்க்க டாக்டர் வந்திருக்கார்.

சர்தார்
எனக்கு தான் உடம்பு சரியில்லையே இப்ப யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிடு.

இன்னொரு ஜோக்
மனைவி கணவனிடம்
என்னங்க போன வாரம் முழுக்க சினிமாவா போனோம்.

இந்த வாரம் முழுக்க சாஃப்பிங் போகலாம்.

உடனே கணவன் அடுத்த வாரம் முழுக்க சிவன் கோவிலுக்கு போகலாம்.

மனைவி அப்பாவியாக ஏங்க
கணவன் பிச்சை எடுக்கத்தான்.

என்ன ஹர்ஷினி போரா மீண்டும் வருகிறேன்.

அன்புடன் கதீஜா.

பார்ட்டிக்கு போய்ட்டு இப்போதான் வந்தேன். உங்க ஜோக்க படிச்சு போட்டு சரியான சிரிப்பு. உங்களை ரொம்ப நாளா காணோம். இப்போ பார்ப்பதில் மகிழ்ச்சியா இருக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹர்ஷ், சன்னல படிச்சுட்டு ஒரே சிரிப்பா போச்சு போ:)

ஹாய் ஹர்ஷினி,

தமிழில் சன்னல்'ஸ் படிச்சி ஒரே சிரிப்பா வருது. அதிலையும், அந்த
//நல்லா இஸ்து புடி,
ரெண்டு தபா அழ்த்து னைனா
மையாலுமே தூக்கிறவா?
கை வெச்சே, கீஸிடுவேன்// வரிகளை படிச்சிட்டு வாய்விட்டு சிரிச்சிட்டு இருக்கேன்... : ) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்