முத்துக்கள் பதித்த நெக்லஸ் மற்றும் ஜிமிக்கி தோடு செய்வது எப்படி?

தேதி: August 13, 2009

5
Average: 4.3 (9 votes)

 

தோடு
முத்து - 24
பெரிய டாலர் - ஒன்று
சிறிய முத்து போன்ற பொடிமணிகள்
ஜாங்கிரி மணி
கியர் லாக்
கியர் ஒயர் - அரை மீட்டர்
கோல்டன் மணி
ஜிமிக்கி
சிறிய வளையம்
பெரிய வளையம் - 2
கோல்டன் ரோப்
குரடு

 

கொடுக்கப்பட்டிருக்கும் தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நெக்லஸ் செய்வதற்கு அரை மீட்டர் அளவுள்ள கியர் ஒயரை எடுத்துக் கொண்டு அதன் ஒரு முனையில் சிறியதாக இருக்கும் கியர் லாக்கை விடவும். கியர் லாக்கை உள்ளே தள்ளி விடாமல் பாதியில் பிடித்துக் கொள்ளவும்.
அதே முனையில் பெரிய வளையத்தை விட்டு ஒயர் நுனியை மடக்கி கியர் லாக் துளையின் வழியாக விடவும். மடக்கிய நுனியை விரல்களில் பிடித்துக் கொண்டு கியர் லாக்கை வளையத்தின் அருகில் நெருக்கி விடவும். படத்தில் இருப்பது போல் குரடை வைத்து கியர் லாக்கை நன்கு அழுத்தி விடவும்.
பிறகு கியர் ஒயரின் மற்றொரு முனையின் வழியாக ஐந்து கோல்டன் மணிகளை கோர்க்கவும். அடுத்து ஒரு முத்து, ஒரு கோல்டன் மணி, ஒரு முத்து என்று கோர்த்துக் கொள்ளவும்.
அதை தொடர்ந்து 2 ஜாங்கிரி மணி, ஒரு முத்து கோர்க்கவும். அதன் பின்னர் மீண்டும் ஒரு கோல்டன் மணி, ஒரு முத்து கோர்க்கவும். இதைப்போல் 12 முத்துக்கள் வரை மாறி மாறி கோர்த்துக் கொண்டே வரவும். 12 முத்துக்கள் கோர்த்து முடித்ததும் அதில் 2 ஜாங்கிரி மணி, 2 கோல்டன் மணி, 2 ஜாங்கிரி மணி கோர்க்கவும். (இதில் ஜாங்கிரி மணி என்பது சிறிய பூவின் வடிவில் இருப்பது).
பின்னர் ஒரு சிறிய வளையத்தில் ஐந்து முத்து போன்ற பொடிமணிகளை கோர்க்கவும். இதை போலவே 5 வளையங்களில் ஐந்தைந்து சிறிய பொடிமணிகளை கோர்த்து எடுத்துக் கொள்ளவும்.
கோர்த்து வைத்திருக்கும் ஐந்து வளையங்களை எடுத்து பெரிய டாலரின் கீழ் பகுதியில் இருக்கும் சிறிய துளைகளில் வளையங்களை மாட்டி விட்டு குரடால் நெருக்கி விடவும்.
12 முத்துக்கள் கோர்த்து வைத்திருக்கும் கியர் ஒயரில் இந்த பெரிய டாலரை கோர்த்து விடவும். பிறகு அதில் 2 ஜாங்கிரி மணி, 2 கோல்டன் மணி, 2 ஜாங்கிரி மணி கோர்க்கவும்.
2 ஜாங்கிரி மணிக்கு பக்கத்தில் ஒரு முத்து, ஒரு கோல்டன் மணி, ஒரு முத்து கோர்க்கவும். அடுத்து 2 ஜாங்கிரி மணி, ஒரு முத்து, ஒரு கோல்டன் மணியை கோர்க்கவும். இதைப் போல் தொடர்ந்து வலது பக்கத்திலும் 12 முத்துக்கள் வரும்வரை கோர்த்துக் கொண்டே வரவும்.
12 முத்துக்களும் கோர்த்து முடிந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக ஐந்து கோல்டன் மணியை கோர்க்கவும்.
ஆரம்பத்தில் கியர் லாக் கோர்த்தது போன்று கடைசியிலும் கோர்த்து கொள்ளவும். கோர்த்து முடிந்ததும் மீதமுள்ள கியர் ஒயரை வெட்டி விடவும்.
பிறகு இரண்டு பக்கத்திலும் கோர்த்து வைத்திருக்கும் பெரிய வளையத்தில் கோல்டன் ரோப்பில் உள்ள லாக்கை வைத்து நன்கு அழுத்தி மாட்டி விடவும். இப்பொழுது அழகிய முத்துக்கள் பதித்த நெக்லஸ் ரெடி.
தோடு செய்வதற்கு முதலில் சிறிய வளையங்களில் தனித்தனியாக ஐந்தைந்து முத்துப் போன்ற பொடிமணிகளை கோர்த்து வைத்து கொள்ளவும். இந்த வளையங்கள் மேல் தோடு மற்றும் ஜிமிக்கியில் மாட்டுவதற்கு தேவையான அளவு செய்து வைத்து கொள்ளவும். பின்னர் தோடின் கீழ்ப்பகுதியில் உள்ள மூன்று துளைகளில் நடுவில் உள்ள துளையை தவிர மற்ற இரண்டு துளைகளிலும் முத்துக்கள் கோர்த்த வளையத்தை மாட்டிவிட்டு வளையத்தை நன்கு நெருக்கி விடவும்.
ஜிமிக்கியின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு துளையிலும் முத்துக்கள் கோர்த்த வளையத்தை கோர்க்கவும். ஜிமிக்கியின் மேல் பகுதியில் ஒரு வளையத்தை கோர்த்து விட்டு அதை தோட்டின் நடுவில் இருக்கும் துளையில் கோர்த்து வளையத்தை நன்கு நெருக்கி விடவும்.
சுலபமாக வடிவமைத்து செய்யக்கூடிய முத்துக்கள் பதித்த நெக்லஸ் மற்றும் கண்ணை கவரும் அழகிய ஜிமிக்கி தோடு தயார். இந்த செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. ஒஃபீலியா அவர்கள். இதுப்போல் அவரவர் கற்பனை திறனுக்கு ஏற்றாற்போல் இந்த கற்களை கொண்டு கைசெயின், நெத்திச்சூட்டி, மாட்டல், ஒட்டியாணம் என வெவ்வேறு டிசைன்களில் செய்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் ஒஃபீலியா,
மிகவும் அழகாக இருக்கின்றன உங்கள் நெக்லஸ் & தோடுகள். :)
நீங்கள் குறிப்பிட்டுள்ள சில பொருட்கள் இங்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் ஒஃபீலியா,

வாவ்!!! அருமையாக இருக்கிறது. கண்ணை கவர்கிறது நெக்லசும் & தோடுகளும். வாழ்த்துக்கள்.

நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் தோழி திருமதி. ஒஃபீலியா சூப்ப்ப்ப்ரா இருக்குப்பா....... உங்கலுக்கு என்னுடய வாழ்த்துக்கள்ப்பா..............

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஒபீலியா, நான் இதை செய்து பார்த்து படத்தை அட்மினுக்கு அனுப்பியிருக்கிறேன். என்னிடம் டாலரும் ஜிமிக்கியும் இல்லை. மற்றபடி நல்லாதான் இருக்குன்னு நினைக்கிறேன். பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்த நெக்லஸ் மற்றும் தோடின் படம்

<img src="files/pictures/white-jewel-thahira.jpg" alt="picture" />

சுப்பர்ப் :)

‍- இமா க்றிஸ்

தேடிப்பிடிச்சு பாராட்டினதுக்கு நன்றி இமா...

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

தேடிப்பிடிச்சு பாராட்டினதுக்கு நன்றி இமா...

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

thank u so mush

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

Nan arusuvaiku pudithu...
Intha necless model super ah iruku.
Ithu pola muthu enga kidaikum.Please help me..