வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

இயந்திரத்தனமாக இருக்கும் இந்த உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மக்களே! கொஞ்சம் நில்லுங்கள்! சிறிது இளைப்பாருங்கள். நம்ம தோழி வனிதா அவர்கள் ஆரம்பித்த பாடல்கள் லிஸ்ட் வெற்றிகரமாக போயிக் கொண்டிருக்கும் இந்நிலையில், கவலைகளை மறந்து கொஞ்சம் சிரிப்பதற்காகவே இந்த இழை.

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்ற பழமொழிக்கேற்ப உங்களுக்கு பிடித்த, நீங்கள் ரசித்த, நாங்களும் சிரிக்க உங்களுக்கு பிடித்த திரைப்படக் காமெடி சீன்களை இங்கு பகிர்ந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்க வாங்க வாங்க என்று அன்புடன் வரவேற்கிறேன்.

எனக்கு பிடித்த சில காமெடிகள்:-

1) சப்பாத்தி சுடுவதற்கு வழி முறைகள் சொல்லும் போது வரும் காமெடி (படம் பெயர் தெரியவில்லை) - அதான் தெரியுமே, அதான் தெரியுமே, அதாங்க தெரியாது.
2) சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்களின் அனைத்து நகைச்சுவை சீன் ரொம்ப பிடிக்கும்.
3) சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா அவர்களின் நகைச்சுவை அனைத்தும் ரொம்ப பிடிக்கும். அதிலும், கிஷ்முவிடம் பேசும் ""கமுனா கம்மு கம்முனாட்டி கோ!!""என்னை மிகவும் கவர்ந்தது.
4) அதே படத்தில் விசு அவர்கள், ஊரை தெரிஞ்சுகிட்டென் பாடலில் செய்யும் காமெடி அருமையாக இருக்கும். தலையனை வைத்து விட்டு அதில் வைத்துக் கொண்டு தரையில் படுப்பது. (கருத்தான பாடலில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்)
5) செந்தில் - கவுண்டமணி வாழைப் பழ ஜோக்கை யாராலும் மறக்கவே முடியாது.
6) சின்ன கவுன்டர் படத்தில் மனோரமாவின் பல்லை பார்த்து செய்யும் காமெடி. அதிலும் "ஆத்தா கொஞ்சம் வாய முடூ, பயன் பயந்துட்டான் வேப்பிலை அடிக்கனும் போலிருக்கே!!""
7) பார்த்திபன் - வடிவேல் காமெடியில், மீன் விற்க்கும் காட்சிகள்.
8) விஷ்வனாதன், ராமமூர்த்தி திரைப்படத்தில் கோவை சரளாவை விவேக் கிண்டல் செய்யும் காட்சி.
9) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் வெட்டியாக அலப்பரை கொடுத்து வரும் வடிவேலு, குஷ்பூவிடம் தஞ்சம் புகும் காட்சி. அதற்கு கோவை சரளாவின் பேச்சு.
10) விவேக் பஸ் ஸ்டாப் இது தானா என்று கேட்டுவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்று செய்யும் விதம், பேசும் பேச்சு.

இன்னும் பற்பல. அடுத்த லிஸ்ட்டுடன் அடுத்த பதிவில் மீண்டும் வருவேன்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

என்ன தோழிகளே எல்லாரும் பிஸியா? இங்கயும் கொஞ்சம் எட்டி பாருங்க. சிரிக்க வாங்க, சிரிக்க வையுங்க!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

பாலு அண்ணா, பாலு அண்ணா,
தலைப்பைப் பார்த்து யாரோ வந்துவிட்டார்களோ, புதிதாக என நினைக்க வேண்டாம். ஜெயாராஜி உங்களுக்காக ஒரு நினைவை மட்டும் இப்போ சொல்லிப்போக வந்தேன் நிறைய இருக்கு, ஆனால் நேரமில்லை இப்போ.

படத்தின் பெயர் நினைவில்லை. 4 boys ஒன்றாக இருக்கிறார்கள், படம் தயாரிக்கவேண்டும் என தேடித்திரிகிறார்கள். நடிகை பெயரும் நினைவிலில்லை, சேரனின் ஆட்டோகிராப்பில் நடித்தவ என நினைக்கிறேன்.

அந்த நால்வரின் ஒருவரின் பெயர் பாலு. அப்போ ஒருநாள் ஒரு பெண்பிள்ளை, அவரைப் பார்த்து "பாலுஅண்ணா" பாலுஅண்ணா" எனக் கூப்பிடுவா, உடனே இவர் திரும்பிப்பார்த்து முறைத்தபடி கேட்பார் "எப்படிக் கூப்பிட்டாய்?" என்று, பிள்ளையும் அப்பாவியாகச் சொல்வா, "பாலுஅண்ணா எனக் கூப்பிட்டேன்" என்று, உடனே தன் நண்பர்களுக்குச் சொல்வார், என்னை "அண்ணா" எனச் சொல்லி இன்ஷல்ட் பண்ணிவிட்டாள் என்று. இதைப் பலதடவை நினைத்து நினைத்துச் சிரிப்பேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா அக்கா. நீங்க சொல்ற காமெடி எதுவென்று எனக்கும் நினைவுக்கு வரவில்லை. பார்ப்போம் நம் தோழிகள் என்ன சொல்கிறார்கள் என்று. அவ்வப்போது உங்களுக்கு பிடித்த மற்ற காமெடிகளை பற்றி கூறி பதிவு போடவும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா நல்ல த்ரெட் ஆரம்பித்து இருக்கீங்க. எனக்கு பிடித்தவை

அந்த சப்பாத்தி சுடும் சீன். திரு தங்கவேலு மற்றும் சரோஜா அவர்களின் நடிப்பு சிரிப்பை வரவைக்கும். அதே படத்தில் நிறைய காட்சிகள் வரும். மன்னாரன் கம்பெனியில் மானேஜர், பெரிய எழுத்தாளர் என்று கதை விட்டு திரிவார்.

தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில் வரும் ரயிலில் பயணிக்கும்போது வரும் காட்சிகள்

நாகேஷ் ஒரு படத்தில் ஒரு திகில் படம் எடுப்பதை விவரிப்பார். சிரிப்பாக இருக்கும்.

கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ ஜோக். ஒரு படத்தில் கவுண்டமணி மாலைக் கண் நோய் வந்து அதை மறைக்க பாடுபடுவார்.

விவேக் ஒரு படத்தில் ரக்ஷபந்தன் நாளன்று பெண்களைக் கண்டாலே ஓடி ஒளிவார். ஒரு பெண் விடாமல் துரத்தி ராக்கி கட்டும். அப்போ நொந்து போய் ஏதோ டையலாக் விடுவார். காமெடியா இருக்கும். நண்பர்கள்ன்னு நினைக்கிறேன். விஜய், விவேக் வரும் காட்சிகள் நன்றாக இருக்கும்.

ஞாபகம் வரும்போது மீண்டும் வருகிறேன்.

மிக்க நன்றி வானதி அக்கா. உண்மையிலேயே உங்களுக்கு பிடித்த காட்சிகளை நினைத்து பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது.

நல்ல காமெடி சீன்கள் நீங்கள் கூறியவை!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

இங்க இப்படி ஒரு டிராக் போகுதா நான் இத பாக்கவே இல்லையே.... சரிசரி நானும் வந்துட்டேன்.....

வானதி அக்கா, அதிரா, சுபா சூஊஊஊஊஊப்பர் ஜோக்.......,

எனக்கு பிடித்த ஜோக்.....

பிரன்ஸ் படத்தில் வடிவேலு, சார்லி, விஜ்ய், சூரியா ஜோக் ரொம்ப பிடிக்கும்...

பூவே உனக்கா படத்தில் விஜ்ய், சாரில், சங்கிதா ஜோக் பிடிக்கும்....

உள்ளத்தை அள்ளிதா... அந்த படம் பிடிக்கும்...

வசுல் ராஜா M B B S படம் பிடிக்கும்...

கல்யாண பரிசுல் தங்க வேலு, ஜெமினி நடித்த படம்.... வேலைக்கு போவதாக பார்க்கில் உக்கந்து இருப்பா... அந்த நகைசுவை பிடிக்கும்....

கங்கா கௌவுரியில் லியோனியின் கஞ்சத்தனம் பிடிக்கும்....

மணல் கயிறுல் SV. சேகர் காமிடி பிடிக்கும்....

இன்னும் நிரைய அப்பரம் சொல்லுரேன்ப்பா.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

சுபா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ, ஜீனோ இஸ் ஹியர்!

நம்ம உலகத்தமிழன் கமல்ஹாசன் காமெடி ஜீனோக்கு ஆல் டைம் ஃபேவரிட்!!
டக்குன்னு நெனப்பு வரது சதிலீலாவதி படம்தான்!

இந்த படத்தில, கமல் ரமேஷ் அரவிந்த் கிட்ட சொல்லும் ஃபேமஸ் டயலாக் "நீ எப்படியுஞ் --------- வாங்கப்போறே!!" !! பாருங்களேன்...சிரிச்சு சிரிச்சு வயித்துவலியேவந்திடும் அத்த பார்த்தா! :)))))))))))))))))

http://www.youtube.com/watch?v=eiZM4QgGe0g&feature=PlayList&p=15BC7C9936BA5094&playnext=1&playnext_from=PL&index=29

லிங்க் பாருங்களேன்..சூப்பர் சீன் -ன்னு லைனா வரும்!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பிரபா அக்கா, ஜீனோ,

இருவர் பதிவிற்கும் மிக்க நன்றி.

பிரபா அக்கா நீங்க எல்லாமே அருமை. அதிலும் குறிப்ப வசூல் ராஜா மற்றும் மணல் கயிறு படக் காமெடிகளை மறக்கவே முடியாது.

ஜீனோ உண்மையிலேயே அருமையான காமெடி தான். அதை லின்க்குடன் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

எல்லாரும் இங்கயும் வந்து உங்க பதிவுகளை போட்டு கொஞ்சம் எல்லாரையும் சிரிக்க வைக்கலாமே!!

* சந்திரமுகி படத்தில் கார் கண்ணாடியைப் பார்த்து தலை சீவும் காட்சி. கடைசியில் தலை சீவும் வடிவேலுவை மதன்பாபு பார்க்கும் பார்வை, பேச்சு...

பேய் பங்களாவை பார்வையிடும் காட்ச்சி. அதிலும் " மாப்பு வைச்சுடான்யா ஆப்பு"

* படிக்காதவன் படத்தில் அம்பிகா கர்பினி பெண்ணாக வந்து ரஜினியிடம் நடிக்கும் காட்சி, ஜனகராஜின் "தங்கச்சிய நாய் கடுசிடுச்சு" போன்றது பிடித்தவை.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்