முடி பிரச்சனைக்கு உதவுங்கள்

அன்பார்ந்த தோழிகளே என்னுடைய மிகப்பெரும் பிரச்சனை சமீபகாலமாக முடிபிரச்சனை.நான் பஹ்ரைனில்(வளைகுடா நாடு)வசிக்கிறேன்.எனக்கு ஹீமோகுளோபின் 9 தான் உள்ளது என்றாலும் இந்தியாவில் இருந்தபோது முடி குறைவாகத்தான் கொட்டியது இங்கு வந்த பிறகு அதிகமாக கொட்டுகிறது.தலைக்கு குளிக்கும்போது சிங்கில்(sink)முடி நிறைந்து விடுகிரது.இந்தியாவில் நான் டவ் சோப் உபயொகிதேன்.இங்கும் டவ் சோப் தான் உபயோகிதேன்.அருசுவையில் ஹிமாலயா ஷாம்பு பற்றி படித்து ஹிமாலயா anti dandruff shampoo உபயோகிக்கிறேன் ஆனாலும் முடி உதிர்வு அதிகமாகத்தான் உள்ளது.தயைகூர்ந்து எதானால் கொட்டுகிறது.தண்ணீர்தான் காரணமாஎன்னுடைய பிரச்சனைக்கு வழி கூறுங்கள்.இந்த பிரச்சனையால் மற்ற விஷயங்களில் என்னால் concentrate பண்ண முடியவில்லை.தயவு செய்து உதவுங்கள்

ஹாய் அஞ்சலி, உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு சில விஷயங்கள் தெளிவு படுத்திக்கணும். உங்கள் வீட்டில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரே தண்ணீரா? அப்படி இல்லையென்றால் குடி தண்ணீரை தலை அலச மட்டும் தனியாக உபயோகியுங்கள். இரண்டுமே ஒன்றுதான் என்றால் கொஞ்ச நாளைக்கு முடி கொட்டும் பிரச்சனை சரியாகும் வரை மைல்டான ஷாம்பூக்களை உபயோகியுங்கள். ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்கள் வேண்டாம். இன்னும் சொல்லப் போனால் ஷாம்பூக்களுக்கு பதில் பயித்தம்மாவு, செம்பருத்தி இலை போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தலையை அலசுங்கள். பொடுகு இருந்தால் எலுமிச்சை சாறு தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து முடியை அலசுங்கள். அதோடு நல்ல இரும்புச்சத்துள்ள பேரிச்சைப் பழம் ( 5 வீதம் ஒரு நாளைக்கு), ஒரு கட்டு கீரை(ஒரு நாளுக்கு) என்று உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு நிறைய போட்டு சாம்பார், கூட்டு, பாதாம் பருப்பு என்று நன்றாக ப்ரோட்டீன் உள்ள அயிட்டங்களாக சாப்பிடுங்கள். இதற்கு மேலும் முடி கொட்டினால் நல்ல ஒரு தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள். தாமதிக்காமல் நடவடிக்கை எடுங்கள்.

டியர் தேவா மேடம் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.நாங்கள் குளிப்பதற்கு டாங்க் தண்ணீர் அதாவது வீட்டில் அனைத்து உபயோகத்திற்கும் பயன்படுத்தும் நீர்(அது உப்பு தண்ணீரா அல்லது சவரானதா தெரியாது)குடிப்பதற்கு மினரல் தண்ணீர் உபயோகிக்கிறோம்.இங்கு செம்பருத்தி கிடைக்காது.நான் பேபி ஷாம்பு உபயொகிக்கலாமா?நான் 6 மாதங்களாகவே டேட்ஸ் சாப்பிடுகிறேன்.இந்த நாட்டிற்கு வந்து 1 வருடம் ஆகிரது ஆனாலும் முடி கொட்டுகிறது.நான் என்ன செய்ய?அருசுவையில் உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.உங்களுடைய 1 பதிவில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போவதற்கு கோகோ பட்டெர் உபயோகிக்க பரிந்துரைத்து இருக்கிறீர்கள் நான் கடந்த 4 மாதங்களாகவே coco butter massage lotion for stretch mark use பண்ணுகிறேன்.ஆனால் stretch marks குறையவில்லை.stretch marks போக இந்தbrand use பண்ணக்க்கூடாதா?வேறு எந்த brand use பண்ண வேண்டும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

அஞ்சலி

நீங்க கோகோ பட்டரை ஸ்ட்ரெட்ச் மார்க் வந்தப் பிறகு உபயோகித்தால் அது முற்றிலும் தழும்பை போக்காது. வரும் முன் காப்போம்ங்கற மாதிரி நம்ம வயிறு விரிவடைய ஆரம்பிக்கும்போதே அதாவது குழந்தை உண்டாகி இருக்கும்போதோ அல்லது உடம்பைக் குறைக்க எக்சர்சைஸ் ஆரம்பிக்கும்போதோ, நமது ஸ்கின்னின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்க தினமும் குளித்த பின்பு கோக்கோ பட்டரைக் கொண்டு வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாமல் போய், ஸ்ட்ரெட்ச் மார்க் வந்தப் பிறகு உபயோகப்படுத்தினால், கோகோ பட்டர் உங்களோட ஸ்ட்ரெட்ச் மார்க்கை வெளுப்படைய வைத்து appearance ஐ நிச்சயம் குறைக்கும். அதாவது ஸ்ட்ரெட்ச் மார்க் பளிச்சென்று தெரியாமல் ஸ்கின் நிறத்திலேயே மாறி விடும். முற்றிலும் நீக்க வேண்டுமென்றால் சர்ஜரி அல்லது லேசர் சிகிச்சைதான் எடுக்க வேண்டும்.

ஹலோ தேவா மேடம்,
என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள், நான் ஒரு beauty parlor போய் முடி டிரிம் பண்ணலாம் என்று சென்றேன், ஆனால் அவர்கள் என் முடியை முக்கால் வாசியாக வெட்டி விட்டார்கள், இப்பொழுது எனக்கு பாப் கட் பண்ணியது போல் ஆகிவிட்டது, நான் என்ன செய்வது, முடி வளர எவ்வளவு நாட்கள் ஆகும், சீக்கரம் வளர ஏதாவது வழி இருந்தால் சொல்லுன்ஙள், எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது.
pls help me, evalavu seekaram valarutho avalavu nallathu, help me

எனக்கும் முடி உதிரும் பிரச்சினை உள்ளது. தண்ணீரில் உப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் முடி உதிரும் பிரச்சினை வரும் என்ரு ஒரு நாளிதழில் படித்தேன். இதற்கு நீரில் சோடா உப்பு கலந்து குளித்தால் நீரின் கடினத்தன்மை குறையும் என்று குரிப்பிடப்பட்டிருந்தது. இது சரியா? சரி என்றால் என்த அலவில் பயன்படுதுவது யாறேனும் பதில் கூரி உடதவூங்கள். நன்றி.

dont loose your hope

dont loose your hope

தேங்காய் எண்ணைக்கு பதில் பயன்படுத்தப்படும் hair moisturizing cream , ஜெர்மனியில் எந்த brand வாங்கலாம்? ஜெர்மன்ல hair moisturizing cream என்னனு எழுதி இருக்கும். எனக்கு ஜெர்மன் தெரியாது. அதனால் ஜெர்மனியில் இருப்பவர்கள் உதவி செய்யவும்.

முடி உதிர்வதற்கு இரு முக்கிய காரணம் அதிக உடல் சூடு, இரவில் அதிக நேரம் கண் விழித்தல். இவற்றை சரி செய்தாலே போதும் முடி கொட்டுவது குறைந்துவிடும்.

hi friend,
apply egg(both white & yellow)and leave for 30 min.
use mild shampoo and rinse your hair (don't use hot water)
do this once in a week.your hair will smell little.
use perfumed herbaloil(any).
Eat Dates, Badam, green leaves, fruits and milk daily.
sure this will help you
Be relax all the time
Thanks
hema

மேலும் சில பதிவுகள்