பாலக் பனீர் கிரேவி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பாலக் கீரை - ஒரு கட்டு
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பனீர் - 2 கப்
பூண்டு - 5 பல்
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப


 

பாலக் கீரையை தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம், ஒரு தேக்கரண்டி சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
வெந்தக் கீரையை ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, பனீரை அதனுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீருடன் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
இந்தக் கலவையுடன் அரைத்தக் கீரையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். பாலக் பனீர் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

palak keerai eppadi erukum?

palak keerai keerai madiri pachiya erukum nithya

varun