வனிதா.. வனிதா... நீங்கள் கேட்டதற்காக.. அதிராவின் குறிப்புக்கள் இதோ.....

வனிதா.. வனிதா... நீங்கள் கேட்டதற்காக.. அதிராவின் குறிப்புக்கள் இதோ.....

அறுசுவை அன்புள்ளங்களே!!! மிகவும் கஸ்டப்பட்டு, யாரும் சமைக்கலாமில், என் குறிப்புக்களை ஒன்றொன்றாகத் தேடி எடுத்து வந்துள்ளேன். இதில் பெயரைப் பார்த்து "தேடுக" வில் தேடினால், குறிப்புக்கள் கிடைக்கும். ஏதோ என்னால் முடிந்தது, இவ்வளவும்தான். குறைநினைத்திடாதீங்கோ. என் கண்ணே பட்டுவிடும்போல இருக்கே... நான் இதுவரை எண்ணியதில்லை, இப்போதான் எண்ணினேன். இதில் அடுத்தவர்களின் குறிப்பைப் பார்த்துச் செய்ததும் இருக்கிறது, அதற்குப் பெயர் குறிப்பிட்டுள்ளேன்.

1)பீற்றூட் கறி
2)பீற்றூட் பிறியாணி ...சவூதி செல்வி
3)முட்டை அவியல் கறி ...கவிசிவா
4)கறிபன்
5)பாகற்காய் பிரட்டல்
6)மீன் சொதி
7)பொன்னாங்கண்ணிக்கறி
8)சைனீஸ் ப்ரைட் ரைஸ் ...ரஸியா
9)சிக்கன் சாட்டே
10)முட்டை மற்றும் சாசேஜ் ரோஸ்ட்
11)மீன் குழம்பு
12)வெங்காய வடகம் ..ஸாதிகா அக்கா
13)வெண்டைக்காய் வெள்ளைக்கறி
14)வெந்தயக் குழம்பு ...மாலதி அக்கா
15)வாழைக்காய்ப் பிரட்டல்
16)நெத்திலிக் கருவாட்டுக்கறி
17)ஸ்பினாஜ் கீரைக்கறி
18)பீன்ஸ் பிரட்டல்... வனிதா
19)காலிஃப்ளவர் பொரியல் ...தளிகா
20)சிக்கன் கைமா ரொட்டி... செல்வி அக்கா
21)உருளைக்கிழங்கு வறுவல்.. செல்வியக்கா
22)காராமணிவடை
23)சிக்கின் பிரட்டல் கறி
24)உருளைக்கிழங்கு பிரட்டல்
25)கத்தரிக்காய்ப் பொரிக்கறி
26)மீன் கட்லட் .. ஜலீலாக்கா
27)கணவா பிரட்டல்
28)மரவள்ளிக்கிழங்கு கருவாட்டுக் கறி
29)கத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை).. மனோகரி அக்கா
30)குறிஞ்சா வறை/சுண்டல்
31)இறால் கருவாட்டுச் சம்பல்
32)கடாய் காளான் ... ஆசியா
33)தாளித்த சொதி
34)வாழைப்பூக் கறி
35)வேர்க்கடலை வடை ... மனோ அக்கா
36)ரணபீன்ஸ் கறி
37)மரவள்ளிக்கிழங்கு வறை
38)பொரித்து இடித்த சம்பல்

கூட்டாஞ்சோறிலுள்ள என் குறிப்புக்கள்

39)புரோகோழி (Broccoli)அவியல்
40)கத்தரிக்காய் சம்பல்
41)Oven சிக்கின் கறி
42)சிக்கின் பொரியல்
43)மரக்கறி பாஸ்ரா

இத்தனையும்தான் அறுசுவையிலுள்ள என் குறிப்புக்கள். செய்துபார்த்துக் கருத்து தெரிவிக்கப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள். இதனை உற்சாகத்தோடு தொடக்கிவைத்த வனிதாவிற்கும் ஸ்பெஷல் நன்றி. வனிதா.... தொடக்கி வைத்தமையால் அதிகம் செய்து அசத்துவீங்களென்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு:).

இது உங்களுக்கு தேடும் வேலையை இலகுவாக்கவே தந்திருக்கிறேன். மற்றும்படி, சந்தேகம், பின்னூட்டமெல்லாம் குறிப்பிலேயே கதைப்போம்.

எனக்குத் தெரிந்த, இத்தனை குறிப்புக்களை, வெளி உலகுக்கு காட்ட உதவிய அறுசுவைக்கு... மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்..

இப்படியொரு தலைப்பைப்போடும் முறையைச் சொல்லித்தந்த, சிந்தனைத் திலகத்துக்கும் மிக்க நன்றி.

ஹாய் அனைவருக்கும் காலை வணக்கம்......... இன்றைய பொழுது இனிய போழுதாகுக......

அதிரா உண்மையிலே உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா..........

நல்ல ஜடியா குடுத்த வனிதாவுக்கும் என்னுடைய வாழ்த்துகக்ள்......

///கூட்டாஞ்சோறிலுள்ள என் குறிப்புக்கள்//// தனியா 5 குடுத்து இருக்கிங்க அது ஏன்ப்பா?

நீங்க நிரைய குடுத்து இருக்கிங்கலா கூட்டாஞ்சோறில். அப்பரம் எதுக்கு தனியா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அதிரா.... இதை விட பெரிய உதவி செய்ய இயலுமா?? ;) இதுவே பெரிசு. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. ரேணு எப்போ வருவாங்களாம்? இந்தமுறை யாரை கணக்க பிள்ளை ஆக்குவது என்று யோசிக்கறேன். ;) யாராவது முன் வந்தால் சேர்த்துக்கலாம். பார்ப்போம். ஹிஹிஹீ.

பிரபா.... அவங்க கூட்டாஞ்சொறு பகுதியில் அதிகம் தரவில்லை. எல்லாமே யாரும் சமைக்கலாம் பகுதியில் தான் தந்தாங்க.... அதான் இங்க எல்லாத்தையும் தொகுத்து குடுத்திருக்காங்க. சரியா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,

அதிர அக்கா நமக்காக தொகுத்து கொடுத்திட்டாங்க. இனி நாம எல்லாரும் தான் வேலையை பார்க்கனும். எப்பொ ஆரம்பிக்கபோறீங்க? எல்லருமே அடுத்த திங்கட் கிழமைக்கு ஒப்புதல் தெரிவிச்சாசா?

இன்னொரு தடவை தெரிவிச்சுடுங்க அக்கா. வேற ஏதாவது உடவிகள் வேணாலும் நான் செய்யத் தயார். இத்தனை நாட்களாக சமைத்து அசத்தப்போவது யாரு பகுதியை அசத்திய அதிரா அக்கா, ரேனு அக்காவை கவுரவ படுத்துவதற்காக நானும் தயார்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா.... உதவி செய்ய தயாரா??? மிக்க நனறி. :D ஹிஹிஹீ.... அப்படின்னா நீங்க தானா இம்முறை கணக்கு பார்க்க போவது? ;) சொல்லுங்கோ.... எல்லாருக்கும் சொல்லிடலாம். ஆனா கனக்கு தப்பா போட்டா, எல்லாரும் மண்டையில் குட்டுவாங்கோ. உஷாரா செய்யணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,

//ஆனா கனக்கு தப்பா போட்டா, எல்லாரும் மண்டையில் குட்டுவாங்கோ. உஷாரா செய்யணும்//

அது என்ன கணக்கு தப்பா போட்டா, முதல்ல அப்படி தப்பா போட்டா தான? கொடுத்த வேலையை கரெக்ட்டா பண்ணனும்னு நினைக்கிறவா நான். என்ன கேள்வி கேட்டீங்க அக்கா?

சரி வேற யாராவது செய்றவங்க முன்வந்தால் ஓகே. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்கள் இஷ்டம்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

நான் என்னை போல் நீங்களும் கணக்கில் வீக்'அ இருக்க கூடாதே.... அப்பர்றம் தலை வீக் ஆயிடுமேன்னு உஷாரா சொன்னேன்... ;) ஹிஹிஹீ. நீங்க கெட்டிகாறர்'னா எனக்கு சந்தோஷமே.... ஒரு ஆள் கையதூக்கின பிறகு நாங்க காத்திருப்பதில்லை. :D அதனால் இம்முறை இந்த சிறப்பு சமைத்து அசத்தலாமின் கணக்கபிள்ளை நீங்கதான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டும்டும்டும்டும்.... இதனால் அறுசுவை தோழி சகோதர சகோதரிகளுக்கு சொல்வது என்னான்னா..... வரப்போகும் 24 ஆம் தேதி துவங்கி 31 வரை நம்ம அதிரா மற்றும் ரேணுகா குறிப்புகள் செய்து அசத்த போகும் "சிறப்பு சமைத்து அசத்தலாம்" பகுதி நடக்கப்போது. நீங்க எல்லாரும் எப்போதும் போல் உங்க ஆதரவை தந்து சிறப்பிக்கனும்'னு அறுசுவை சார்ப்பில் கேட்டுக்கறோம். இப்பகுதிக்கு கணக்கபிள்ளை பொறுப்பை ஏற்கிறார் நமது தோழி சுபா அவர்கள். கனக்கின் முடிவு 1 ஆம் தேதி வெளியாகும். மறக்காம எல்லாரும் வந்துடுங்கோ...... டும்டும்டும்டும்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ரேணுகா! அதிரா எங்களுக்கு நல்ல உதவி செய்துள்ளார். தேடும்வேலை மிச்சம்.நிச்சயம் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். ரேணுகா உங்களுக்கும் நேரம் இருந்தால் உங்கள் சமையல் குறிப்புக்களையும் போடலாமே!!!!!!!!!!!!!!!!? எங்களுக்கு உதவியாக இருக்கும்.நாளை தொடக்கம் சமைக்க தொடங்குவோம். மீண்டும் வருவேன் அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி... இப்படி ஸ்பீட்டாக இருக்கிறீங்களே:) சமையல் ஆரம்பிப்பது வரும் திங்கட்கிழமையாம்..... நான் உங்களுக்கு தேடும் வேலையை மிச்சப் படுத்தியிருக்கிறேன், ஏன் தெரியுமா? அப்போதானே, நேரமிருக்கும் சமைக்க:). ரேணுகாவின் குறிப்புக்கள் கூட்டாஞ்சோறில் மட்டுமே இருக்கிறதென நினைக்கிறேன், அதனால் பிரச்சனை இருக்காது.

ரேணுகா, எல்லோரையும் விசாரித்ததாகவும், விரைவில் தான் வருவேன் எனவும் சொல்லிவிடச் சொன்னா. ஊரால் வந்த களைப்பும், வேலையும் இன்னும் முடியவில்லைப்போலும்.

அத்தோடு நானும் விடவில்லை:) இப்போ போனால், வனிதா பிரம்போடு திரிகிறா... தனக்கும் ஒரு எக்கவுண்டன் வேணுமாம், உங்களைப் பிடித்துவிடுவா, என மறித்துப்போட்டேன்:), இப்போ நல்ல ஒரு "சுறா" மீன்:) மாட்டிவிட்டதாகத் தகவல் வந்திருக்கு கணக்கெடுக்க இனிக் கவலையில்லை... ரேணுகா வரலாம் இனி...:). ("சுபா"....) வாழ்த்துக்கள் ஜெயாராஜி..

மிக்க நன்றி பிரபாதாமு....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா அக்கா வனிதா அக்கா,

ஒரு விஷயம். சற்று முன் கிடைத்த தகவல்படி வருகிற 23ம் தேதி என் மாமனார், மாமியார் எங்க வீட்டுக்கு வருகிறார்கள். அதனால் என்னால கணக்காளர் பொறுப்பை ஏற்க முடியாது அக்கா. மண்ணிக்கவும். இதை ஆசை பட்டு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இப்போ வர முடியாதா சூழ்நிலை. அதனால் வேறு யாரையாவது கேளுங்க அக்கா.

அதுவும்போக இப்ப மாதிரி எல்லா பதிவிலும் பதில் போட முடியாது.அதனால யாரும் என்னை மறந்துடாதீங்க!!

மறுபடியும் மண்ணிக்கவும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்