சன்னா மசாலா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கிலோ
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
புதினா - சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1


 

கொண்டைக் கடலையையும், சோடா உப்பையும் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, பின் வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, புதினா ஆகியவற்றுடன் வேக வைத்த கொண்டைக்கடலை ஒரு தேக்கரண்டி சேர்த்து நைசாக அரைக்கவும்.
தக்காளியை மிக்ஸியில் தனியாக அடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் 4 தேக்கரண்டி விட்டு அரைத்த மசாலாவை வதக்கவும்.
அதன்பின் தக்காளி சேர்த்து, தனி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி போட்டு, வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும்.
அத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
பிறகு திறந்து எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி தூவி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, நெய்யில் வறுத்து பொடி செய்து தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சன்னா மசாலா ரொம்ப அருமையா வந்து இருக்கு. புதினா சேர்த்து செய்தது முதன்முறை. இப்ப தான் கடை டேஸ்ட் தெரியுது :)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..