நான் ஆணையிட்டால்.... டன்டன்டன் டன்டன் டன்டன்டைங்...

என்ன பார்க்கறீங்க ???!!! எல்லாரும் இப்போ ஏதோ வேலைய பார்த்துகிட்டு சமைச்சு சாப்பிட்டுகிட்டு சுத்தறோம்....

இன்றில் இருந்து சரியா ஒரு மாசம் உங்களுக்கு ஒரு பெரிய பதவி குடுத்தாச்சு... நாட்டுக்கே பிரதமரா இருக்கலாம், ஜனாதிபதியா இருக்கலாம், எம்.பி., எம்.எல்.ஏ., அவ்வளவு ஏன் 8 பட்டிக்கு நாட்டாமையா கூட இருக்கலாம்.... பிடிக்கலயா... நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும்'னு உங்களுக்கு வரம் கிடைச்சதா நினைச்சுக்கங்க.... உங்க இஷ்டம் தான்.

ஆனா ஒன்னு.... அப்படி உங்களுக்கு பவர் இருந்தா நீங்க செய்யும் முதல் 3 வேலை என்னன்னு இன்னையில் இருந்து 1 மாசத்துக்குள்ள சொல்லுங்கோ.

நீங்க சொல்லும் விஷயம் ரொம்ப சீரியஸ்ஸா இருக்கனும்'னு இல்லை.... விளையாட்டான விஷயமா கூட இருக்கலாம்.... 3'கு மேல சொல்ல கூடாது.... சொன்னா பென்ச் தான். விளையாட்டு புரிஞ்சிதா???

மேல சொன்ன எல்லாம் புரிஞ்சிதா??? எல்லாரும் வாங்க... விளையாடலாம். :) உங்க மனசுல ஒரு நாள் நீங்க புருஷனாவும், உங்க கணவர் மனைவியாவும் இருக்கனும்'னு தோனுச்சுன்னா கூட சொல்லுங்கோ... ஹிஹிஹீ.... எதுக்கும் அவர் இதை படிக்காம பார்த்துக்கங்கோ [அப்பறம் வனிதா வில்லங்கமா இழை துவங்கிட்டா.... வீட்டில் மாட்டிகிட்டோமே'னு பொலம்பினா நான் பொறுப்பில்லை]. ;) ரெடியா? ஜூட்.....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வில்லங்கம்னு தெரிஞ்சே ஒரு நல்ல இழையை தொடங்கி வைத்து விட்டு, உங்களுடைய பதிவை போடாமா, இப்படி ஜூட் விட்டா என்ன அர்த்தம் வனி அக்கா.

இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கு. ஆனா அதை யோசிச்சு அடுத்த பதிவில் போடுறேன். ஹாஹாஹா......

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா.... மெதுவா சொல்லலாம்'னு நினைச்சேன்... சரி உங்களுக்காக ஒன்னு மட்டும் இப்போ சொல்றேன்.

என் முதல் ஆசை....

என்னவர் ஜனாதிபதி ஆகனும்.... [இது முதல் பாதி தான்... அதுக்குள்ள தப்பு தப்பா நான் ரொம்ப நல்லவன்னு யோசிகாதிங்க...], நான் பிரதமர் ஆகனும் !!! [நம்ம ஊரில் பவர் பிரதமருக்கு தானே.... ]

இரண்டாவது மூன்றாவது எல்லாம் மெதுவா சொல்றேன். ஒன்னுத்தை சொன்னதுக்கே இங்க பலரும் "அடி பாவி.... பொல்லாத ஆசை உனக்கு"னு திட்டுறது கேக்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இந்திய பிரதமர் ஆனால் மது கடையை ஓழிப்பேன்.ஏழை மக்கள் முன்னேறாமல் இருக்க அதுவும் ஒரு காரணம்.

பிச்சை எடுப்பவர்களை திருத்தி அவர்கள் பிழைப்புக்கு வழி செய்வேன்
US மாதிரி ROAD போட்டு ஏகப்பட்ட RULES போட்டு மீறுபவர்க்கு ஏகப்பட்ட fINE போடுவேன்.
(ஆன ஒரு DOUBT.US மாதிரி ROAD போட்ட இந்தியாவுல பாதி இடம் ROAD-கு போய்டும் .பாதி மக்களை ஏங்கே அனுப்பது என்று)

யாரு இப்படி SINCERE-A பதில் கொடுத்திருக்கிறது என்று கேட்பது புரியது.நான் ARUSUVAI-கு கொஞ்சம் பழசு .ஆமாங்க 1 வருடம் silent reader.உங்களுக்கு தான் கொஞ்சம் புதுசு

Be Good,Do Good

Be Good,Do Good

வனிதா உங்கட ஆசையைச் சொல்லவில்லையே...

எனக்கு நிறைய கோழிமுட்டைகளை அவித்து அடுக்கி வைத்துவிட்டு ஒவ்வொன்றாக ருசித்து ருசித்துச் சாப்பிட ஆசை... வருத்தம் ஏதும் வராமல் இருக்கவேணுமே..

ஒரு நாளைக்கு ஸ்பேஷில் கைகால் எதிலும் படாமல் நடந்து திரியவேணுமென்று ஆசை....

எனக்குத் தெரிந்த, பழகிய, சொந்த பந்த... உறவுகள் யாரும் இறந்திடக்கூடாதென ஆசை(என்னையும் அதற்குள் சேர்த்து).

இறப்பென்பது எனக்கு வரும்போது, அது எனக்குத் தெரியாமல் வந்திடவேணுமென ஆசை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அற்ப ஆசையாக கூட இருக்கலாம்.ஆனால் எனக்கு முதலில் நம் கோவில்களில் இருக்கும் special queue/darshan முறையை எடுக்க வேண்டும்.அங்கும் தரிசனத்தில் பணக்காரர்/ஏழை வித்தியாசம் தேவை இல்லை என நினைக்கிறேன்.வயதானவர்கள் போன்றவர்களுக்கென்று இருப்பது ok.

அநியாயத்திற்கு எல்லா கோவில்களிலும் இப்போது இந்த முறை சர்வ சாதாரணமாகிவிட்டது.

Patience is the most beautiful prayer!!

எனக்கும் ரொம்ப நாளா ஒரு கனவு இருந்துட்டே இருக்கு, பார்ப்போம் எப்ப பலிக்குதுன்னு!!

வனிதா, எப்படியோ நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிடறேன்னு வச்சுக்கோங்க, உடனே நான் செய்யும் முதல் மூணு வேலைகள் இதெல்லாந்தான்:

1. நானே இனி இந்தியாவின் நிரந்தர சர்வாதிகாரி என ஆணை பிறப்பிப்பேன்.

2. இந்த அரசியல்வியாதிகளெல்லாம் பிடிச்சு முதல்ல (உள்ளயெல்லாம் போடமாட்டேன்) சொத்துக்களைப் பறிமுதல் பண்ணி, (நிஜமான) பொதுச்சேவை செய்ய வைப்பேன்.
அரசியல்வியாதிகளை அடக்கிட்டாலே மத்த பிரச்னைகள் எல்லாம் ஒண்ணொண்ணா தன்னாலே தீர ஆரம்பிச்சுடும் இல்லையா?

3. சிறைச்சாலைகளை நவீனப்படுத்துவேன் (நாளைபின்னே ஒர் புரட்சி அது இதுன்னு வந்தா அங்கதானே போவேண்டியிருக்கும்?)

எனக்கொரு ஆசை. அந்த காலத்து மாயாஜால படத்தில் வருமே ஒரு பாய். நாம் நினைத்த இடத்தில் அது கொண்டு போய் விட்டு விடும். அதுபோல் எனக்கு ஒரு பெரிய பாய் வேண்டும். நினைத்த வுடன் அம்மாவை போய் பார்க்கலாம். விரும்பிய நாட்டுக்கெல்லாம் போகலாம். அம்மா, அப்பாவை விசா, பாஸ்போர்ட் இல்லாமல் இங்கே கூப்பிட்டு வரலாம். ஆஹா நினைக்கவே இனிக்குது. ம்ம் எனக்கு அந்த பாய் வேணும். இந்த கனாதான் எனக்கு அடிக்கடி வரும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

:-))

சங்கீதா.... நீங்க புதுசோ பழசோ நீங்க ரோடு போடணும்'னு சொன்ன விஷயம் புதுசு. சொன்ன மாதிரி நாட்டுல பாதி இடத்தை வாங்க வேண்டி இருக்கும். மிக்க நன்றி வந்து உங்க ஆசைகளை சொன்னதுக்கு.

அதிரா.... வாங்க வாங்க... வலது காலை எடுத்து வெச்சு வாங்க. :) நீங்க சொன்ன மூன்றாவது ஆசை எனக்கும் சின்ன பிள்லையா இருந்தப்போ இருந்தது.... இப்போ இல்லை. உங்க முதல் ஆசை.... ஆஹா.... இன்னும் பாபு அண்ணா கண்ணில் படவில்லையே....!!!

உத்ரா.... வருக வருக... அதென்ன ஒன்னோட விட்டுட்டு போயிட்டீங்க???!!! ஆனாலும் நியாயமான ஆசை. உண்மை தான்.... இதுவரை நான் யோசிக்காத விஷயம்.

திருமதி ஹுசைன்... நீங்க இந்தியாவில் பிறக்க வேண்டியவரே இல்லை.... :( நாங்கலாம் தொலஞ்சோம் நீங்க ஜனாதிபதி ஆனா'னு இப்பவே புரிஞ்சிடுச்சு. சும்மா சொன்னேன்... கோவிக்காதிங்க. மிக்க நன்றி உங்க ஆசைகளை சொன்னதுக்கு.

வாங்க தனிஷா.... ஏன் நீங்களும் ஒன்னொட முடிச்சுட்டீங்க???? நீங்க சொல்லுவது போல் ஒரு பாய் கிடைச்சா எனக்கும் ஒன்னு அனுப்புங்கோ.... ;) மிக்க நன்றி... சீக்கிரம் வந்து மிச்ச இரண்டு ஆசையையும் சொல்லுங்கோ.

கவி.... அதென்ன வந்து சிரிச்சுபுட்டு ஓடிட்டீங்க.... சொல்ல முடியாத ஆசைகளோ??? அல்லது ஆசைகளே இல்லையோ???? வாங்க....வந்து உங்க ஆசையயும் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்