பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

நடுவர் பொறுப்பில் இருக்கும் அதிரா மற்றும் பூஸுக்கு வணக்கம் (அதிரா.... துணைக்கு சமைத்து அசத்தலாமில் ரேணுகா, பட்டிமன்றத்தில் பூஸ் இருக்கே.....). கவலைபடாம கதிரையில் இருங்கோ.... ;)

வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் இழந்தது அதிகம் என்று போராட வந்திருக்கிறேன்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் நம்மில் பலர் வெளிநாட்டு வாழ்க்கையை பார்க்காததால் அங்கு போனால் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று கற்பனையோடு வாழ்கிறார்கள். ஆனால் அங்கேயே போய் வருட கணக்கில் இருக்கும் நமக்கு தானே தெரியும் அது எத்தனை பெரிய துயரம் என்று.

எத்தனை பேரால் தாய் தகப்பனோடு போய் வெளிநாட்டில் வாழ முடிகிறது? எத்தனை பேரால் மனைவி பிள்ளையோடு போய் வெளிநாட்டில் வாழ முடிகிறது. எத்தனை பெண்களால் கணவரோடு போய் வாழ முடிகிறது? ஏதோ சம்பாதிக்கிறேன், வாழ்க்கை தரத்தை ஏற்ற பார்க்கிறேன், என் பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் நல்ல எதிர் காலம் குடுப்பேன் என்று பல கற்பனைகளோடு போகிறோம், போகிறார்கள். போன பின் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு கூட பங்கு எடுக்க முடியாமல் தவிக்கிறோம். எத்தனையோ பேர் பெற்றோரின் உறவுகளின் கடைசி நிமிஷங்களில் கூட உடன் இருக்க குடுத்து வைக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள்.

இதோட முடியல.... போன ஊறிலாவது சந்தோஷமா இருக்காங்களா??? அதுவும் பாதி மக்களுக்கு இல்லை.... போற இடத்தில் வெளி நாட்டுக்காறன் என்று அடித்து விரட்டும் நாடுகளும் உண்டு.... எங்கோ பல கணவுகளோடு போய் உயிரை விட்டு அனாதையாக நாடு திரும்பும் மக்களையும் நாம் பார்க்க தான் செய்கிறோம்.

இத்தனை மக்களின் அனுபவத்தை பார்க்கும்போது வெளி நாட்டு வாழ்க்கையை நல்லதென்று சொல்ல எப்படி வாய் வரும்???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம், நடுவர் அதிரா அவர்களே,

எல்லோருக்கும் பூஸ்ட், டீ என்று வழங்கி தெம்பூட்டும் அதிராவுக்கு நாங்கள் என்ன தர!

இதோ ரோஸ் மில்க் கலந்து தருகிறேன், இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் - உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன், சில்லென்று கலந்து வைத்து இருக்கிறேன், குடித்துக் கொண்டே எல்லோரது பதிவுகளையும் படியுங்கள் என்ற அன்பு வேண்டுகோளுடன்!

வெளி நாட்டு வாழ்க்கையால் பெறக் கூடியது அதிகம் என என் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் இந்தியாவை விட்டு, ஏன் - தமிழ் நாட்டை விட்டுக் கூட எங்கும் சென்றதில்லை. அதனால் தெரியாத விஷயத்தில் எப்படி கருத்து சொல்வது என்று யோசித்தேன். ஆனால் .. வெளி நாட்டுக்கு சென்றிருக்கும் பிள்ளைகளை உடைய குடும்பங்களைப் பார்க்கிறேன். உள் நாட்டில், உள்ளூரிலேயே இருந்து குடும்பம் நடத்துபவர்களையும் பார்க்கிறேன். இதன் அடிப்படையில் என் கருத்துக்களை சொல்லுகிறேன்.

முதலில் பாசம் என்பதைப் பொறுத்த வரையில், வெளி நாட்டில் இருக்கும் பிள்ளைகள் அன்பின் தேவையையும் பாசத்தின் அருமையையும் சொந்தங்களின் பெருமையையும் நன்றாகவே உணர்ந்திருப்பதால் அன்பையும் பாசத்தையும் வஞ்சனையின்றி வாரி வழங்குகிறார்கள்.

வெளி நாட்டு வாழ்க்கையில் சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பது உண்மைதான்,ஆனால் முதலில் திகைத்துத் தடுமாறினாலும், பிறகு அதை எதிர் கொள்ளப் பழகும் விதத்தில் தைரியம், துணிவு மட்டுமல்லாது தன்னம்பிக்கையும் மிக அதிகமாகப் பெறுகிறார்களே!

இங்கே பள்ளிக் கூடத்திற்குப் போவதற்குக் கூட எந்த பஸ், எந்தப் பாதை என்று தெரியாமல் வளர்ந்த பெண்கள் அங்கே தனியே எல்லா இடங்களுக்கும் போக வேண்டிய நிர்ப்பந்தம், விமானத்தில் தனியே குழந்தைகளுடன் தாய் நாடு சென்று திரும்ப என்று அசத்துகிறார்கள்.

வீட்டில் ஒரு குடம் தண்ணீர் தூக்கி இடுப்பில் வைக்காமல் சொகுசாக வளர்ந்த பெண்கள், சாப்பிட்ட தட்டைக் கூட நகர்த்தாமல் அதிலேயே கை கழுவும் பையன்கள், இன்று எப்படி மாறி விட்டார்கள். கனமான பெட்டி படுக்கைகளை தானாகவே சுமந்து, தள்ளி, தானாக சமைத்து, சுத்தம் செய்து - அதுவும் எந்த விதமானதொரு முணுமுணுப்புமில்லாமல்! ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாற்றம்! இந்த மாற்றம் இங்கு தாய் நாடு வரும்போது நன்றாகவே தெரிகிறது. இரண்டு வார விடுமுறையில் வரும்பொழுதும் கூட பொறுமையாக எல்லா உறவினர்களின் வீட்டுக்கும் சென்று, அன்புப் பரிசுகள் கொடுத்து, குலதெய்வத்தை வணங்கி, அம்மா அப்பாவுக்கு வீட்டில் உதவி செய்து என்று நம்மை ஆச்சரியப் படுத்துகிறார்கள். இது நிச்சயம் வேஷம் அல்ல, காரணம் தொலை பேசியில் பேசும்போது கூட, பிள்ளைகள் பெற்றோருக்கு புத்திமதி அல்லவா சொல்கிறார்கள் - உறவினர்களிடம் கருத்து வேற்றுமை வேண்டாம் என்று.

தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள் - கிட்ட இருந்தால் முட்டப் பகை என்று.

வெளி நாட்டு வாழ்க்கையின் மிக முக்கியமான அடிப்படைக் காரணம் - பொருள் தேடல்.

பண பலம் மிகப் பெரிய பலம் - இது மிகவும் கசப்பான உண்மை.

உள்ளூர் வாழ்க்கை பிடித்துப் போய் இங்கேயே இருப்பவர்களை விட்டு விடுங்கள் - ஆனால் திறமை, தகுதி எல்லாம் இருந்தும் குடும்ப நிர்ப்பந்தம், சரியான வழிகாட்டி இன்றி, சாதிக்க முடியாமல் நொந்து போனவர்கள் எத்தனையோ பேரை நம் தோழிகள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் தாய் நாடு வரும் போது, உங்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்ணில் ஏக்கம் தெரிகிறதா? அது பொருளாதார ரீதியாக உயர முடியவில்லையே என்ற எண்ணம் அல்ல, வாழ்வின் கிடைத்து இருக்ககூடிய அனுபவங்களை இழந்து விட்டோமே என்ற தாபம்தான்.

மொத்தத்தில் வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என்று உள்ளூரிலேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி ஏதோ இருந்தோம், போனோம் என்று உதவாக்கரையாக வாழ்வதை விட - வெளி நாட்டில் பிரச்னைகளை சந்தித்தாலும், அதில் போராடி, அனுபவங்கள் பெற்று, தைரியம், துணிவு, தன்னம்பிக்கை என்று மெருகேறி, புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறார்கள்.

எங்களைப் போன்ற பெற்றோரின் பார்வையிலிருந்து பார்க்கும் போது - பிள்ளைகள் அருகில் இல்லாதது, அவர்களின் தேவைக்கு நாம் அருகில் இருந்து உதவ முடியாதது - இவையெல்லாம் மிகப் பெரிய ஈடு செய்ய முடியாத இழப்புகள்தான். ஆனால் யோசித்துப் பாருங்கள் - பெற்றோரின் கட்டாயத்துக்காக கூடவே இருந்தாலும், ஒரே வீட்டில் இருந்தும் முகம் கொடுத்து பேசாமல் இருக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்! அந்தக் கொடுமையை விட - தள்ளி இருந்தாலும் அன்பும் பாசமும் நிறைவாகத் தரும் பிள்ளைகள் எவ்வளவோ மேல் அல்லவா! ஒரு விதத்தில் பெற்றோர்களுமே சொந்தக் காலில் நிற்க, நிதரிசன நிலைமையை உணர, என்று பல விஷயங்களப் பெறுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

நடுவர் அவர்களே, சில பதிவுகள் படித்துப் பார்த்த பின் பதிவுகள் போடலாம் என்று காத்திருந்தால், எல்லாத் தோழிகளும்(இரு அணியிலுமே) அருமையாக வாதாடி அசத்தி விடுகிறார்கள். அவர்கள் பதிவுகளைப் படிக்கும் போது, “நாம் என்னத்த சொல்லி, என்ன பதிவு போடுகிறது” என்று ஒரு பயமே வந்து விடுகிறது. அதுதான் இந்தத் தடவை முதலிலேயே பதிவு போட்டு விட்டேன்.

அத்துடன் என்னை எப்பவும் உற்சாகப் படுத்தும் ஆஸியாவும் வந்ததை பார்த்ததும் டானிக் சாப்பிட்ட மாதிரி ஒரு உற்சாகம்.

ஆஸியாவுக்கு நல் வரவு.( நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோரையும் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களுக்கு வணக்கம்.
வெளிநாட்டு வாழ்க்கையில் நான் பெற்றது அதிகம், என்னும் தலைப்பில் வாதாட வந்துள்ளேன். நான் சொல்ல நினைத்ததெல்லாம் சிதாலட்சுமி மிக அழகாக சொல்லியிருக்கிறார். ஏன் தனிஸா கூட மறைமுகமாக பல நன்மைகளை சொல்லியுள்ளார்.
நான் ஒரு இலங்கையர் என்றபடியால் நான் பட்ட கஷ்டம் கொன்சனன்சம்மில்லை.
நாம் நின்மதியாக படிக்க முடியாது, வேலை பார்க்க முடியாது. நாம் நினைத்த குறிக்கோளை அடைவதற்கு எத்தனையோ தடைகள்.
கடந்த முப்பது வருடங்களாக நின்மதியற்ற வாழ்க்கை. ஏன் எவர் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. எப்பவும் என்னவும் நடக்கலாம் என்னும் வாழ்க்கை
இங்கு எனக்கு அது எதிர்மாறு. பிள்ளைகளையும் நினைத்தபடி படிப்பிக்க முடிகிறது.
ஏன் என் துணைவனார் தெநீர் கூட வைக்க தெரியாமல் இருந்தார் இங்கு சமைத்து அசத்துகின்றார். எமது அணியோன்னியம் மிகவும் நெருக்கமாகி உள்ளது.
எனது உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது சந்தோசம் என்றாலும் எத்தனைனாட்களுக்கு கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பது!!!? இப்போது நாட்டில் கஷ்டப்படும் எமது உறவுகளுக்கு கொஞ்சம் உதவுவது அதை விட சிறந்த்தல்ல்வோ. இது மற்றும் சகோதர சகோதரிகளுக்கு பொருந்தா விட்டாலும் எனக்கு நன்றாக பொருந்துகின்றது. இப்போது
எனது வாதத்தை முடித்துக்கொகின்றேன். இன்னும் பல நன்மைகள் உண்டு மீண்டும் வருவேன்.இது அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி உங்கள் நாட்டின் நிலையை உணர்ந்து நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இலங்கை நல்ல இயற்கை வளம் மிக்க நாடு. அங்கு போர் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சியம் உங்கள் நாட்டை பிரிந்து இருப்பது உங்களுக்கு பெரிய இழப்பாகத்தானே இருந்திருக்கும். பொதுவாக பார்த்தால் என் நாட்டை ஒவ்வொரு நிமிடமும் நான் மிஸ் பண்ணுகிறேன்.

இதுவே இந்தியா போனால் நான் ஒவ்வொரு கணமும் என் கணவரை மிஸ் பண்ணுவது போல்தான் வருந்தியிருக்கேனே தவிர இந்த அயல் நாட்டை மிஸ் பண்ணியது போல் உணர்ந்ததில்லை. என்ன எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம் இங்கு மாதிரியானு நினைப்பேன் அதன் பிறகு சே என்ன மடத்தனம் இதுதானே நிரந்தரம் என்று சமாதானம் அடைந்து விடுவேன். ப்ளைட்டில் இருந்து இறங்கி நம்ம ஊரில் கால் வைக்கும் போதே மனதிற்கு அப்படி ஒரு சுகமா இருக்கும். அப்படியே சுதந்திரமான காற்றை சுவாசிப்பது போல் நினைப்பேன். அதுவே இங்கு வரும் போது அழுமூஞ்சியாதான் வருவேன்.

சீத்தாம்மா கிட்ட இருந்தால் பகை என்றால் நம்ம ஊரிலே வேறு வேறு இடத்தில் இருக்கலாம். அதற்காக நாடு விட்டு நாடு என்பது மிக கடினமாக இருக்கிறது. வெந்ததை தின்று விதிவந்து செத்தாலும் சுற்றத்தாரின் அருகில் இருப்பது சுகம்தானே. உண்மையை சொல்ல வேண்டுமானால் இங்குதான் வெந்ததை திண்ணுட்டு, விதி வந்தா சாவோம்னு இருக்கோம்.

ஒரே வீட்டில் இருந்து பெற்றோருடன் முறைத்துக் கொள்வதை நாங்களும் விரும்பவில்லை. அதே சமயம் இந்தியாவில் வேறு ஏதேனும் ஒர் இடத்தில் இருந்தால் கூட போதும். ஒரு நல்லது கெட்டதிற்கு ஓடி வந்து விடலாமே!

///--நீங்கள் தாய் நாடு வரும் போது, உங்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்ணில் ஏக்கம் தெரிகிறதா? அது பொருளாதார ரீதியாக உயர முடியவில்லையே என்ற எண்ணம் அல்ல, வாழ்வின் கிடைத்து இருக்ககூடிய அனுபவங்களை இழந்து விட்டோமே என்ற தாபம்தான்.--///

நீங்கள் சொல்வது போல் பணபலம், பொருள் தேடல், ஏனைய வசதிகள் இவைதான் வெளிநாட்டில் குறைவின்றி கிடைக்கிறது ஆனால் இதுவும் படித்து நல்ல பதவியில் இருப்பவர்களுக்குத்தான், படிப்பவறிவு இன்றி இங்கு வந்து கஷ்டப்படும் மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அயல் நாட்டில் என்ன சுகம் கிடைக்கிறது. இவர்களால் இங்குள்ள வசதி வாய்ப்பினை ரசிக்க முடியுமா? இவர்கள் கண்ணில் தெரியும் ஏக்கத்தினை விடவா நம் நாட்டில் வாய்ப்பு கிட்டவில்லையே என்ற ஏக்கம் பெரிதாகி விடும். அவர்களுடைய ஏக்கம் வசதியாக வந்து இறங்கும் உறவினை பார்க்கும் சில மணி நேரங்கள்தான். ஆனால் இங்கு கூலிக்கு மாரடிக்கும் நம் மக்களின் ஏக்கங்கள் எப்போது தீரும்?

நீங்கள் சொல்வது அயல் நாட்டில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் ஆனால் அடித்தட்டு மக்களை பார்த்தால் அவர்களுக்கு பணத்தை தவிர அவர்களுக்கு வேறு எந்த நன்மையும் இல்லை. இழப்புதான் அதிகம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இலா, கெதியா கட்சியை தெரிவுசெய்துகொண்டு வாங்கோ. இங்கே பறக்கும் அனலில் என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் பூஷ் இன் பின்னால் ஒழித்திருக்கிறேன்.

சுவர்ணலக்ஸ்மி, ///கடவுளே எப்பதான் ஊறுக்கு போவேனோ!!!!!!!!!!!!!!!!!!!!/// உங்கள் மனதின் ஏக்கமே சொல்கிறது... உங்கள் கட்சியை. தொடருங்கள்.

சந்தனா.. வார இறுதிக்குள் சொன்னபடி வந்திடுங்கோ... இல்லாவிட்டால் பூஷ் கோபிக்கும்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா.. வனிதா... ///நடுவர் அதிரா மற்றும் பூஸுக்கு வணக்கம்/// நீங்க மட்டும்தானாம் பூஷுக்கும் வணக்கம் சொல்லியிருக்கிறீங்கள்.... அதனால் பூஷின் சந்தோஷ அட்டகாசம் தாங்கமுடியவில்லை:).

///இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் நம்மில் பலர் வெளிநாட்டு வாழ்க்கையை பார்க்காததால் அங்கு போனால் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று கற்பனையோடு வாழ்கிறார்கள். ஆனால் அங்கேயே போய் வருட கணக்கில் இருக்கும் நமக்கு தானே தெரியும் அது எத்தனை பெரிய துயரம் என்று/// உண்மையான வரிகள்.

இங்கே பூஷ் என்னைப் பார்த்துச் சொல்கிறது... "இம்முறை அதிராவின் கிட்னி பாதுகாக்கப்படுகிறது" என்று ஏன் தெரியுமா? என் கிட்னிக்கு வேலையே கொடுக்கத்தேவையில்லையாம்... எல்லோரும் இங்கே ஒரே கட்சியல்லவா? எதிர்க்கட்சியைக் காணவில்லையே அதனால்தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் கிட்னிக்கு வேலை வந்துவிட்டது:).

//// எல்லோருக்கும் பூஸ்ட், டீ என்று வழங்கி தெம்பூட்டும் அதிராவுக்கு நாங்கள் என்ன தர! //// சீதாக்கா!!!! என்னையும் ஒருவராக நினைத்து, நீங்கள் வந்து என் தலைப்பிலே பதிவு போடுறீங்களே... இதைவிடப் பெரியது என்ன வேண்டும் எனக்கு????

///உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன், சில்லென்று கலந்து வைத்து இருக்கிறேன், குடித்துக் கொண்டே எல்லோரது பதிவுகளையும் படியுங்கள் என்ற அன்பு வேண்டுகோளுடன்!///
மிக்க நன்றி.

///நான் இந்தியாவை விட்டு, ஏன் - தமிழ் நாட்டை விட்டுக் கூட எங்கும் சென்றதில்லை. அதனால் தெரியாத விஷயத்தில் எப்படி கருத்து சொல்வது என்று யோசித்தேன். ஆனால் .. வெளி நாட்டுக்கு சென்றிருக்கும் பிள்ளைகளை உடைய குடும்பங்களைப் பார்க்கிறேன். உள் நாட்டில், உள்ளூரிலேயே இருந்து குடும்பம் நடத்துபவர்களையும் பார்க்கிறேன். இதன் அடிப்படையில் என் கருத்துக்களை சொல்லுகிறேன்./// அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன், வெளிநாட்டுக்கு வந்தவர்களால் மட்டும்தான் பேசமுடியுமென்றில்லையே.... விண்வெளிக்குப் போகாத நாங்களெல்லாம், நிறையத் தெளிவான விஷயங்கள் அதுபற்றிக் கதைக்கிறோமே. அப்படித்தான்... இதுவும் தெரியாத விஷயமில்லை, எல்லோரும் கருத்தைச் சொல்லமுடியும். சொல்லுங்கோ.

///தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள் - கிட்ட இருந்தால் முட்டப் பகை என்று.
வெளி நாட்டு வாழ்க்கையின் மிக முக்கியமான அடிப்படைக் காரணம் - பொருள் தேடல்.
பண பலம் மிகப் பெரிய பலம் - இது மிகவும் கசப்பான உண்மை/// உங்கள் இந்த ஆளமான வரிகள் பார்த்தால், நிட்சயம் எதிரணியினர் திணறிப்போவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

///எங்களைப் போன்ற பெற்றோரின் பார்வையிலிருந்து பார்க்கும் போது - பிள்ளைகள் அருகில் இல்லாதது, அவர்களின் தேவைக்கு நாம் அருகில் இருந்து உதவ முடியாதது - இவையெல்லாம் மிகப் பெரிய ஈடு செய்ய முடியாத இழப்புகள்தான். ஆனால் யோசித்துப் பாருங்கள் - பெற்றோரின் கட்டாயத்துக்காக கூடவே இருந்தாலும், ஒரே வீட்டில் இருந்தும் முகம் கொடுத்து பேசாமல் இருக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்! அந்தக் கொடுமையை விட - தள்ளி இருந்தாலும் அன்பும் பாசமும் நிறைவாகத் தரும் பிள்ளைகள் எவ்வளவோ மேல் அல்லவா/// முழக்கத்தோடு இருந்த எதிரணியினர் இதுக்கு என்ன சொல்லப்போகிறார்கள் பார்ப்போம். தொடருங்கள் உங்கள் விவாதத்தை சீதாக்கா.

யோகராணி ////நான் ஒரு இலங்கையர் என்றபடியால் நான் பட்ட கஷ்டம் கொன்சனன்சம்மில்லை.
நாம் நின்மதியாக படிக்க முடியாது, வேலை பார்க்க முடியாது. நாம் நினைத்த குறிக்கோளை அடைவதற்கு எத்தனையோ தடைகள்.
கடந்த முப்பது வருடங்களாக நின்மதியற்ற வாழ்க்கை. ஏன் எவர் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. எப்பவும் என்னவும் நடக்கலாம் என்னும் வாழ்க்கை
இங்கு எனக்கு அது எதிர்மாறு/// நீங்கள் சொல்வதத்தனையும் உண்மை. ஆனால் பட்டிமன்றமென்று பார்க்கும்போது, நாம் போர் என்ற ஒன்றை மறப்போம், அதை விட்டு, இந்தியாபோலவே இலங்கையும் யுத்தமில்லாத ஒரு நாடாக இருக்கும் பட்சத்தில், வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அடைந்தது அதிகமா? இழந்தது அதிகமா? என்பதை மட்டும் சிந்திப்போம்.

இதை மனதில் கொண்டு உங்கள் விவாதத்தைத் தொடருங்கள். நான் சொன்னதில் குறையேதுமில்லைத்தானே?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா, பட்டிமன்றம் நல்லாய் தான் போய்கொண்டு இருக்கிறது. எல்லோரும் அறிவுபூர்வமாக சொல்லும் கருத்துக்களை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
நான் என் நிலையில் இருந்து கருத்துக்களை சொன்னேன். ஓகே; பட்டிமன்றம் என்றால் பொதவாக பார்ப்போமே. என்றாலும் நான் விடுவதாய் இல்லை. இங்கு நான் பெற்றது நன்மையே என்றுதான் சொல்லவருகின்றேன். இப்போது போகின்றேன். மீண்டும் சில கருத்துக்களுடன் வருவன்.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தனிஷா, யோகராணி..

தனிஷா// உண்மையை சொல்ல வேண்டுமானால் இங்குதான் வெந்ததை திண்ணுட்டு, விதி வந்தா சாவோம்னு இருக்கோம்./// ஆகா என்ன அருமையான விளக்கம். நான் நினைத்தேன், எதிரணியினரின் முழக்கத்தால் அமைதியாகிவிட்டீங்களோ என நினைச்சிடேன், பூஷ் கூடக் கேட்டது என்னைப்பார்த்து, ஏன் சோகமாகிட்டீங்க என்று:)?.

யோகராணி அதுதான் தேவை, விடாதீங்கோ வந்து முழங்குங்கோ உங்கள் வாதத்தை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவரே, நல்ல தலைப்பு தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். எனக்குத்தான் வழக்கம் போலவே குழப்பம்:) இப்போ வசிக்கும் இடத்தை பெருமையாக பேசுவதா, இல்லை மோசமாக பேசுவதா என்று:) நன்றாக யோசித்துவிட்டு வருகிறேன். அதுவறை இங்கும் அங்கும் நகராமல் கதிரையில் அமருங்கோ:)

பி.கு: ஹேமா சொல்வது ஏற்கனவே வாக்கெடுப்பு விவாதம் என்று முன்பு நடந்தது. அப்போது விவாதிக்கப்பட்ட ஒரு தலைப்பு

மேலும் சில பதிவுகள்