பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

ஹாய் தோழிஸ்,

அதிரா அக்கா உங்கள் தீர்ப்பு அருமை. அதன் விளக்கம் தெளிவாக இருந்தது. கலந்து கொண்டு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுக்கள்.

அறுசுவையில் என்னுடைய விடுப்பு இன்னும் நீடிக்கிறது. என் அண்ணி வளைக்காப்புக்காக ஊருக்கு செல்லவிருப்பதால் நான் மேலும் சில நாட்கள் காணாமல் போகிறேன்.

அறுசுவைக்கு இன்னும் சில நாட்கள் வர முடியாத நிலையில், நடுவர் பதவிக்கு என்னால் மேலும் சில நாட்கள் வர முடியாததை இங்கு அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தனா அக்கா மண்ணிக்கவும். தயவு செய்து அடுத்த நடுவரை தேடும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவும். பழையபடி அறுசுவைக்கு எப்போதும் போல் வந்த பின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

இடை இடையில் அனைவருக்கும் நான் ஏற்படுத்திய குழப்பத்துக்காக அனைவரிடமும் மண்ணிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

///:))) enakum adhan thonudhu iniku fulla velaiye odala. idhuku ellam muzhu mudhar karanam babu uncle///
ஹேமா... தானுண்டு தன்பாடுண்டு என இருந்தாலும் விடமாட்டீங்களே....., அமெரிக்காவில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாததுக்கும்.... நாகையில சிவனே என இருக்கிறதுக்கும் எப்படி முடிச்சுப் போடுவீங்கள்? இது ரொம்ப ஓவரா தெரியுது எனக்கு:).... குனியக் குனியக் குட்டப்படாது தெரியுமோ:)?..

ஜெயாராஜி மிக்க நன்றி. நீங்கள் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு வாங்கோ...

சந்தனா, வனிதா... இப்பவே அடுத்த நடுவரை முடிவு செய்திட்டால் நல்லதெல்லோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அறுசுவை தோழிகளே.... மீண்டும் உங்கள் உதவிக்காக வந்திருக்கேன்.... :D ஏற்கனவே வருவதாக சொன்ன

மிசஸ் ஹுசைன்
இஷானி

இப்போது வர நேரம் இருக்கிறதா? வர இயலுமா? உடனே வந்து சொல்லுங்கோ ப்ளீஸ்.

மற்ற தோழிகள் எல்லாம் வாங்க இந்த பக்கம். இம்முறை இலா, இமா, சீதாலக்ஷ்மி, கவிதா, உமா, தேவா மேடம், அனாமிகா, திரு ஹைஷ், இன்னும் யாரெல்லாம் பட்டிமன்றம் பக்கம் வந்து போகும் பழக்கம் உள்ளவர்களோ..... அவர்கள் யாரையும் விடுவதாக இல்லை.... வாங்கோ ப்ளீஸ்..... நீங்களே இந்த இழையிலேயே பதிவு போடுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க... கேட்டு இரண்டு நாட்கள் ஆகுது.... யாருமே முன் வரல.... :( ப்ளீஸ் சீக்கிரம் வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனோஅக்கா, சீதாக்கா... இஷானி...ரேணுகா, சந்தோ, ஹேமா, சுவர்ணா, ஷரொன்....அநாமிகா.. இலா, யதார்த்தமாகத்தான் பெயர் போட்டிருக்கிறேன் அல்லது யாராவது முன்வாங்கோ...திருமதி ஹூசைனுக்கு நோன்பென நினைக்கிறேன்... ஏலுமென்றால் வரலாமே....

இப்படி வனிதாவைக் கத்தவைப்பது நல்லாவே இல்லை...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா.... கத்தவிடுறதா???? அழவே விட்டுடுவாங்க போல.... எவ்வளவு நேரமா, நாளா கூவறேன்.... யாரும் வரமாட்டங்கறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போதான் உங்க பதிவை படித்தேன். அதான் பதில் போட லேட் ஆகிடுச்சு. நீங்க உமான்னு சொல்லி இருந்தது என்னைத்தான்னு நினைக்கறேன். எனக்கு நடுவர் பதவிலாம் வேண்டாம வனி. நான் போன முறை நடுவராய் இருந்து நொந்து போன கதை உங்களுக்கே தெரியும் இல்ல?

வேற யாரையாச்சும் நடுவரா இருக்க வைங்க. என்னால முடிஞ்சா பதிவு போடறேன். தவறாக நினைக்க வேண்டாம.

PS BTW உங்க சென்னை விசிட் எப்படி போயிட்டு இருக்கு? நல்லா என்ஜாய் பண்றீங்களா?? :)

அன்புடன்
உமா

வனிதா

எனக்கு வாதாட மட்டும்தான் தெரியும், தீர்ப்பு சொல்லத் தெரியாது! அதனால நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் நடுவரைத் தேட!

யாராவது சீக்கிரம் வாங்கப்பா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதா மற்றும் அதிரா மன்னிக்கவும் எனக்கு வாதடவே இன்னும் சரியா தெரியல
இதுல நடுவரா இப்பதான் நான் ஒன்னு ரெண்டு பதிவுகள் போட்டுட்டு இருக்கேன் இருந்தாலும் என்னையும் அழைத்ததிற்கு நன்றி.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இது என்ன கொடுமையா இருக்கு நடுவருக்கா பஞ்சம் வந்தது அறுசுவைல என்னால நம்பவே முடில எவ்ளோ பெரியவங்கல்லாம் இருக்கீங்க அப்புறம் ஏன் எல்லாரும் தயங்குறீங்க யாராச்சும் சீக்கிரம் வாங்க ப்ளிஸ் .

நான் அதிரா அம்மா வோட டூ ஏன்னா போன பட்டிமன்றத்துல என்ன கூப்டவும் இல்ல தேடவும் இல்ல (சும்மாதான் கலாய்ச்சேன் சிரியசா எடுத்துகாதீங்க ) ரொம்ப அருமையா இருந்தது வாதங்கள் அதற்க்கு மேல அதிரா அம்மாவோட தீர்ப்பு இன்னும் அருமையோ அருமை . என்னாலதான் கலந்துக்க முடில .

வனிதா நான் பதில் எழுதிட்டேன் பா அழாதீங்க யாராச்சும் கண்டிப்பா வருவாங்க அப்டி இல்லனா மறுபடியும் நடுவரா இருந்த யாரவது நடுவரா இருக்கலாமே .இது என்னுடைய கருத்து மட்டுமே .

அடுத்த பட்டிமன்றத்துக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
திவ்யாஆறுமுகம் .

KEEP SMILING ALWAYS

மேலும் சில பதிவுகள்