பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

நடுவரா என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிட்டீங்க,இப்போ நல்லா மாட்டினீங்களா? என்னை பொருத்தவரை இது ஒரு உற்சாகமான பொருப்பான வேலை..தீர்ப்பு எந்த பக்கம் இருந்தாலும் கவலை இல்ல,என்னோட கருத்துக்களை சொல்லலாம்னு தான் ஓடிவந்தேன்,இந்த தலைப்பில் 2பக்கமும் எடுத்து சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு..ஆனால் நான் கருத்து சொல்ல விரும்புவது வெளிநாட்டு வாழ்க்கையால் மக்கள் பெற்றதுதான் அதிகம்..

இந்த தலைப்பில் நான் வாதாட வந்ததன் முக்கிய காரணமே வெளிநாடு, இந்தியா இரண்டிலும் நான் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கிறேன்..மொத்த 9வருட திருமண வாழ்க்கைல 4வருடம் வெளிநாட்டு வாழ்க்கை, 5வருடம் இந்தியா..ஒரு வருசமோ இல்ல 2வருசமோ வெளிநாட்டுல இருந்துவிட்டு இந்தியா போகும்போது கண்டிப்பா உற்சாகத்துக்கு அளவே இருக்காது..ஆனால் என் அனுபவத்தில் அதே உற்சாகம் ரொம்ப நாள் இருக்காது..3மாதம் கூட ஜாலியா இருக்கலாம்..அப்புறம் எல்லாமே போன இடம் தெரியாது..காரணம் வெளிநாடு வாழ்க்கைக்கு ஏங்குவதோ அல்லது இந்தியா சலித்துவிட்டதோ கிடையாது..எங்க இருந்தாலும் இரண்டுமே ஒன்றுதானு புரிஞ்சு போகும்..எல்லாத்துக்குமே மனசுதான் காரணம் என்பதும் புரியும்..எப்படி?

இந்தியாவிலே இருந்தாலும் எல்லோரும் அவரவர் சொந்த ஊரில் வேலை பார்க்கமுடியுமா? எல்லோருமே சென்னை போன்ற நகரங்களில் தான் வேலை..சென்னைல இருந்து கூட ஒரு விசேசத்துக்கு சொந்த ஊர் போகனும்ன்னா கிட்டதட்ட 12மணிநேர பயணம் பண்ணிதான் ஆகனும்,குடும்பத்தோட போகும்போது 2நாள் லீவு போதுமா? கையில் கொஞ்சம் பணம், ஒரு வாரம் லீவு,நினைக்கும் நேரத்தில் டிக்கெட் எல்லாம் இருந்தால் தான் போகமுடியும், சாதரணமா சென்னையில் இருந்து உள்மாவட்டங்களுக்கு போகவே இவ்வளவு இருந்தால் வெளிமாநிலத்துல வேலை பார்க்கிறவங்களுக்கு சொல்லவே வேண்டாம்..இவ்வளவு இருப்பதால் நாம நினைச்ச நேரத்துகெல்லாம் சொந்த ஊர் போக முடியாது, ஃபோன் பேசி,சாட் பண்ணித்தான் அங்கயும் ஏக்கத்த தீர்த்துக்கனும்..சுருங்கிவிட்ட இந்த உலகத்துல தூரம் என்பது ஒரு தடை இல்ல, சாதாரணமா மும்பைல இருந்து தமிழ்நாட்டுக்கு போகும் நேரத்துல நாம வெளிநாட்டுல இருந்து சொந்த ஊருக்கே போயிறலாம்..இது என் அனுபவத்துல கண்ட உண்மை..(வெளிநாட்டில் இருப்பதால் பொருளாதார தடை வேறு இருக்காது என்பதால்)

அடுத்து எல்லோரையும் மிஸ் பண்றது!!எல்லோரும்ன்னா யாரு? அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை இவர்கள் தானே? இப்போ இருக்கிற நிலமைல இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு தெரியாதா? அது ஒரு தடை இல்லனு சொன்னாலும் பொருளாதாரம் போதுமா? அதுவிம் தடை இல்லனு சொன்னாலும் அந்த பெற்றோருக்கு நாம மட்டும் தான் பிள்ளையா? நமக்கு கூட பொறந்தவங்க இருந்து பெத்தவங்க அவங்க கூடவும் இருக்கனும்னு நினைக்கலாமே? ஆக எங்க இருந்தாலும் சொந்தங்கள் ஒரு தூரம் வரை தான் வரமுடியும்..வெளிநாட்டுல இருந்தாலும் இந்தியாவில் இருந்தாலும் அவங்கள மிஸ் பண்றது பண்றது தான்!! இந்தியா மிக பெரிய நாடு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரொம்ப விசாலமானது..அதான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் தாங்குது..இதுல எங்க சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்துலதான் இருப்போம்னு அடம் பிடிக்க முடியாது..இருக்கவும் முடியாது..இந்தியாவிற்குள்ளவே வேறு இடம்னு சென்றுவிட்டால் அதற்கும் வெளிநாட்டிற்கும் வித்தியாசம் இல்ல..

செத்தாலும் இந்தியாவில் தான் சாகனும்னு நினைக்கிறேன்!! வெளிநாட்டுல யாரும் இல்லாத அனாதையா சாக விரும்பலனு சொல்லமுடியாது,ஏன்னா இந்தியாவில் எல்லோரும் இருந்தும் அனாதையா சாகும் ரொம்ப பேர் இருக்காங்க..அவங்கள அடையாளம் கண்டுபிடிச்சு சொந்தங்கள் கிட்ட கொடுக்கும் முன்னால ஒரு வாரம் ஏன் ஒரு மாதம் கூட ஆகிவிடும்..என் சொந்தகாரர் ஒருவர் அப்படிதான் இறந்தார்..இத்தனைக்கும் வெளி மாநிலத்துல இல்ல,சென்னைலதான்..சொந்த ஊருல இருந்து ஒரு வேலையா சென்னை சென்றவர் அங்க திடீர் மாரடைப்புல இறந்துட்டார்..அவர யாருனு அடையாளம் கண்டுபிடிச்சு ஒப்படைக்கிறதுக்குள்ள ரொம்ப நாட்கள் கடந்து போய்டுச்சு..அவருக்கு குட்டி குட்டியா இரண்டு பிள்ளைங்க,இப்படி அழகான குழந்தையும் அன்பான மனைவியும் விட்டு நிரந்தர பிரிவு வரும் போது உயிர் எங்க போனால் என்னங்க..இருந்தாலும் வெளிநாட்டுக்கு போய் வாழ்ந்தவங்க அதிகமா?செத்தவங்க அதிகமா? நீங்களே இந்த கேள்விக்கு பதில் சொல்லிக்கங்க..

வெளிநாடுல என்ன குறை? படிக்க ஸ்கூல் இருக்கு, சத்தியமா இந்தியாவில் இருக்கும் குழந்தைங்க படிக்கும் படிப்பு சுமை இல்ல, ஆனால் நிறைய பிராக்டிகலா செய்து பார்க்கிறாங்க..எனக்கு தெரிஞ்சு அங்க மெட்ரிகுலேசன் படிக்கும் பிள்ளைங்க பேசும் ஆங்கிலத்தவிட இங்க இருக்கும் குழந்தைங்க அதே அக்செண்ட்ல பேசுறது எவ்வளவு நல்ல விஷயம்? (நாம மட்டும் நடிகைங்க தமிழ் சரியா பேசலானா குதிக்கிறோம்?)..

கொஞ்ச நாள் முன்னாலதான் இந்தியா போய்ட்டு வந்தேன், என் பையனுக்கு சத்தியமா இந்தியா பிடிக்கல(காரணம் தேடிட்டு இருந்தேன்) இத்தனைக்கும் இங்ககூட எங்க போனாலும் பஸ்,ட்ரைன் தான்(கார் இல்ல) ஆனால் ஊருல எல்லாத்துக்கும் ஆட்டோ, கார் தான்..எல்லா சொந்தங்களும் அங்க தான்..நிறைய பேர் ராஜா செல்லம்னு கொஞ்ச, கேட்க்காமலே வாங்கி கொடுக்கனு அவ்வளவு சொந்தம்..அவனோட ஆசையா விளையாட குட்டி பிள்ளைங்க கூட்டம் வேற..எல்லாம் இருந்தும் எதையோ மிஸ் பண்ற மாதிரி இருந்தான்..காரணம் அவனுக்கு இந்த ஊர் பழகிடுச்சு,அவன் பொறந்தது இந்தியானாலும் அவன் பழகினது இந்த யூஎஸ்ல தான்..சொந்த ஊருபோல இருந்த இத பிரிஞ்சு வர பிடிக்கல..அதுபோல தான் நமக்கும் சொந்தங்களோட இருக்கிறதும், சொந்த நாட்ட பிரிவதும் கஷ்டம்தான் ஆனால் நாம அவன மாதிரி சின்ன பிள்ளை இல்லையே? எல்லோரும் ஏதோ ஒரு காரணத்துக்கு தான் வெளிநாட்டுல இருக்கோம்,இதை இழந்ததாவோ,கஷ்டமாவோ ஏன் நினைக்கனும்? இல்லாதத நினைச்சு ஏங்குவது முட்டாள்தனம், இருக்கிற பெருமையா நினைக்கிறதுதான் உண்மையான சந்தோசம்..

வெளிநாட்டுல கூட நாம நினைக்கிற சொந்தங்கள் கிடைக்கும்,மனசுதான் வேணும்..கூட பழகிறவங்களை அக்கா, அண்ணன் என்று கூப்பிடும் போது சும்மா வாய் வார்த்தையாவா கூப்பிடுறீங்க? அன்போட நட்போடதானே? சொந்தங்ககிட்ட மட்டும்தான் அன்ப கொடுக்கனுமா? நட்பு எல்லாத்தையும்விட பெரிய சொந்தம் என்பதுதான் என் கருத்து..

தனிஷா சொன்னாங்க ஏதோ நாம கொஞ்சம் நல்லா இருக்கோம் அதனால வெளிநாட்டில வசதிகளை அனுபவிக்கிறோம், ஆனால் சாதாரணமா படிக்காதவங்க இங்க வந்து அத அனுபவிக்க முடியாமல் கஷ்டபடுறாங்கனு..முடியாமல் கூட இருக்கலாம், அது கஷ்டமா கூட இருக்கலாம்..ஆனால் ஊருல இருக்கிற சொந்தங்கள் சந்தோசமா இருப்பாங்களே? அவரும் அங்கயே இருந்திருந்தால்? குடும்பத்துல யார் முகத்துல சந்தோசம் இருக்கும்? ஆனால் அவர் ஒருத்தர் கஷ்டபட்டால் அவங்க குடும்ப கஷ்டமே தீர்ந்து போகுமே? படிக்காத்தால அவங்க உழைப்ப மட்டுமே நம்பி வந்தவங்க, அதனால இதெல்லாம் பார்த்து ஏங்ககூட அவங்களுக்கு நேரம் இருக்காது..

உதவிக்கு ஆள்? என்ன உதவி? தன் குடும்பத்த தான் தான் காப்பாற்றனும்..யாரா இருந்தாலும் சப்போர்ட் மட்டும் தான்..உதாரணமா குழந்தை பிறக்கும் சமயம் உதவிக்கு ஆள் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணும், இப்போ எல்லாம் அம்மா அப்பா 2பேரும் வெளிநாட்டுக்கு வந்து உதவி செய்துட்டு போறாங்க..இல்ல அந்த சமயத்துல இவங்க இந்தியா போய்டுறாங்க..யாரா இருந்தாலும் அது பெத்தவங்களாவெ இருந்தாலும் உதவிதான் செய்ய முடியும், அதுவும் முடிந்த வரைதான்..இதுல வெளிநாடு இந்தியாவெல்லாம் ஒன்னும் கிடையாது..

இப்படி இந்தியாவுக்கும் வெளிநாட்டுக்கும் வித்தியாசங்கள் ரொம்ப குறைவா இருக்கும்போது வெளிநாட்டுல இருக்கும் போது நிறைய பணம்,புகழ்(கண்டிப்பா நாம வெளிநாட்டுல இருக்கிறது பெருமையான விஷயமாதானே இந்தியாவில் இருக்கும் சொந்தங்கள் பார்க்கிறாங்க!), உலகஅறிவு(இங்க இருக்கும் உணவு,உடை,பழக்கவழக்கம்), இப்படி சொல்லி கொண்டே போகலாம், ஆனால் இழந்தது என்னனு யோசித்தால் மிக குறைவே!! அதுக்காக பணம் என் கண்ணை மறைக்குதுனு நினைக்க வேண்டாம்..என்னை பொருத்தவரை வெளிநாட்டில் நிம்மதியாக, சுதந்திரமாக, சந்தோசமாக இருக்கிறேன்..

அதிரா உங்கள ரொம்ப படிக்க வச்சுட்டேன், உங்களுக்கு ரொம்ப பொருமை இத படிச்சதுல இருந்து தெரியுது..அதிரா மட்டும் இல்ல இத படிச்ச எல்லோருக்கும் தான்..அப்பப்போ வந்து எட்டி பார்க்கிறேன்..நன்றி!! தீர்ப்பு எந்த பக்கம் இருந்தாலும் எனக்கு துளி வருத்தம் இருக்காது,ஏன்னா எதற்கு தகுந்த விளக்கமும் கண்டிப்பா இருக்கும் என்று முடிக்கிறேன்,,அப்பாடா முடிச்சாசு..சந்தோஷ் அம்மாக்கு ஒரு ஜீஸ் பிளீஸ்!!

ஆமா வின்னி சொல்றதை தான் நானும் சொன்னேன். அதிரா, எது சிறந்தது/ எதில் மகிழ்ச்சி அதிகம்/ எதில் பெற்றது அதிகம் இப்படி எத்தனை கொக்கி கேள்வி போட்டாலும் எனக்கு ஒரே மாதிரி தான் தெரியுது :-( சரி மக்கள்ஸுக்கு பேச விஷயம் இருக்குனா டபுள் ஓகே நான் ஃப்ரீயா விடறேன்.. ஓரமாவே நின்னு பாக்கறேன் திரும்ப..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

வின்னி, ஹேமா...

வின்னி இன்னும் குழப்பமா? அதிகம் யோசிச்சு வருத்தம் தேடிடாதீங்கோ, சட்டென யோசித்து, பட்டென முடிவுக்கு வாங்கோ.
///அதுவறை இங்கும் அங்கும் நகராமல் கதிரையில் அமருங்கோ:)/// நானா மாட்டேன் என்கிறேன், என்ர பூஷ்.. எந்தக்கட்சி கதைக்கிறதோ அந்தக் கதிரையில் ஓடிப்போய் இருந்துவிடுகிறது, நான் என்ன செய்ய பின்னாலேயே ஓடி ஓடி இளைத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் நேற்றே இத் தலைப்பை தெரிவு செய்த விதம்பற்றிக் கூறிவிட்டேனே, பின்னரும் ஏன் மீண்டும் அதைக் கிளறவேண்டும். நான் அறுசுவைக்குள் வரமுன்பே விவாதிக்கப்பட்ட தலைப்பாக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு தெரியவில்லை, அதைவிட பட்டிமன்றம் என நடத்தப்பட்டவற்றையே நான் கவனத்தில் கொண்டேன். அதுக்கு முந்தினதெல்லாம் பார்க்கவில்லை, யாரும் அப்படிப் பார்க்கச் சொல்லி சொல்லித்தரவுமில்லையே.

எது எப்படியோ, அது கருத்துக்களம்தானே, தீர்ப்பு வழங்கப்படவில்லைத்தானே..நான் இன்னும் தேடியும் பார்க்கவில்லை. சில நல்ல தலைப்புகள் வெவ்வேறு நடுவர்களால் திரும்பத் திரும்ப பட்டிமன்றமாக மேடைகளில் நடத்தப்பட்டிருக்குதானே. அதிலும் ஒரு வருடத்துக்கு முன் நடந்ததென்பதால்(நான் வருமுன்), இப்போ நிறையப் புதியவர்கள், நிறைய வித்தியாசமான கருத்துக்கள் வரும்தானே.... ஏன் முன்பு கருத்துச் சொன்ன பழையவர்களும் கூட, இப்போ தம் எண்ணத்தை மாற்றலாம்தானே. எனவே அதைப்பற்றி யோசிக்காமல் நாங்கள் பட்டிமன்றத்தை தொடர்வோம். ஹேமா, உங்கள் கருத்தும் ஒருவேளை இப்போ மாறியிருக்கக்கூடும் எனவே வந்து கலக்குங்கோ.

சந்தோ நாளை உங்களுக்குப் பதில் அனுப்புகிறேன். இது அவசரப்பதிவு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவர் அவர்களே எதிர் அணியினர் எல்லோரும் வெளிநாட்டில் கிடைக்கும் பணம் அதனால் வரும்வசதி மட்டுமே கரித்தில் கொண்டு வாதிக்கிறார்கள் அனல் வெளிநாட்டிலும் நிறைய பேர்வேலை இல்லாமல் கஸ்ரப்படுகிரர்கல் அவர்களுக்கு நம்நாட்டில் எண்டால் சொந்தங்கள் குட இருக்கும் அறுதல் சொல்லுவதற்கு அனா வெளிநாட்டில் யாரும் இல்லாமல் மனவேதனையிலையே நிறைய பேர் தற்கொலைசெய்கிரர்கள் அல்லது மனநோயாளிகள் ஆகின்றார்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அதிரா அவர்களுக்கு வணக்கம்!!!!!!!!!!1
மற்றும் அசத்திக்கொண்டு இருக்கும் தோழிகளுக்கு ஒரு வரவேற்ப்பு!!!!!!!!!!!!!!!!!!!!
இழந்ததுதான் அதிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தோழிகளுக்கு நான் சொல்ல விரும்புவது;என்னத்தை பெரிசாக இழந்து விட்டீர்கள் அன்பையும்
அரவணைப்பையும் தானே. அது எங்கிருந்தாலும் அப்படியேதான் இருக்கும். பக்கத்தில் இருந்துதான் கொடுத்து பெறவேண்டும் என்றில்லை. நீங்கள் இழந்ததுதான் அதிகம் என்று சொலிக்கொண்டு, ஏன் வெளிநாட்டுக்கு போனிர்கள்???????? நாடு கடத்தப்பட்டு வந்தீர்களா????????? இல்லையே விரும்பித்தானே வந்தீர்கள். பிடிக்காட்டி திரும்பி போகவேண்டியதுதானே. ஏன் துன்பத்தை விலை கொடுத்து வாங்குகின்றிர்கள். நடுவர் அவர்களே இதற்கு பதில் வேண்டும்.பணமா பாசமா என்னும்போது பாசம்தான் என்றாலும்
பணம் இல்லாமல் வாழ்கையில் என்ன செய்ய முடியும். அதற்குதானே வெளிநாடு என்று விரும்புகின்ரிர்கள். நாடாமை திர்ப்பை மாத்தி சொல்லு.ஹி ஹி ஹி ஹி!!!!!!!!!!!!!!! மிண்டும் வருவேன் இது அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சரி நடுவரே, இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என ஆவலா இருந்ததால், மீண்டும் மூக்கை நுழைக்கிறேன் :) வெளிநாட்டில் வந்து வாழ்வதால் நாம் அதிகம் பெறுகிறோம் என்று வாதாட போகிறேன். நான் இந்தியன் என்பதால் அதை வைத்து முதலில் பேசி விடுகிறேன்.

என்னோட கொள்ளு தாத்தா திருச்சி கிட்ட ஒரு கிராமத்துல இருந்தாரு. அவரோட பையன் திருச்சிக்கு வந்தாரு. அவரோட பையன் மெட்ராஸுக்கு வந்தாரு. அவ்ரோட பொண்ணு (நான் தாங்க) அமெரிக்க வந்துருக்கேன். எதிர் கட்சியினர் சொல்றதை பாத்தா இன்னும் அந்த கிராமத்துலயே தான் எங்க வம்சம் இருந்து இருக்கணும். இருந்து இருந்தா இப்போ இருக்கற மாதிரியா இருக்கும் என் வாழ்க்கை? நிச்சயமாக இல்லை. (கிராமத்தில் வாழ்வதை குறை என்றோ மட்டம் என்றோ நான் கூறவில்லை. ஆனால், இந்திய கிராமங்கள் பலவற்றின் இன்றைய நிலை என்ன என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.) அதெல்லம் தமிழ்நாட்டுகுள்ளேனு சமாதனம் எல்லாம் சொல்லிக்க முடியாது. அன்னிக்கு இருந்த வசதிக்கு திருச்சில இருந்து கிராமத்துக்கு போக நிச்சயம் 12 மணி நேரம் ஆகும். அப்போ மாட்டு வண்டி இப்போ ஃப்ளைட். இவ்ளோ தான் வித்தியாசம்.

ஒரு இடத்தில் இருப்பதை விட இன்னொரு இடத்தில் நல்ல வாழ்வாதரம் இருந்தால் அங்கு இடம் பெயர்வது மிருகங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான இயல்பு - migration. மிருகம் உணவு வெப்பம் இதுக்காக மட்டும் இடம் பெயருது, பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் படிப்பு வேலை மூலமாக செல்வத்தை அடைய இடம் பெயருகிறான். இதன் மூலம் புதிய கலாச்சாரம், மொழி, தட்ப வெப்பம், உணவு என்று எவ்வளவோ விஷயங்களை கற்கிறான். இதெல்லாம் உள்ளூருலயே காலேஜ் மேல கலேஜ் போனாலும் கிடைக்காத செல்வம். இதை தவிர பணமும் சம்பாதிக்க முடிகிறதென்றால் இதில் இழக்க என்ன இருக்கிறது? திரைகடல் ஓடியும் திரவியம் தேடுனு சும்மா சொல்லி வெக்கலை. இந்தியாவில் இருந்தால் மட்டும் எல்லாம் நன்மையா? அங்கயும் பெங்களூர், ஹைதராபாத், மும்பைனு வேற்று ஊர் தான், மொழி தான்.

//வெளிநாட்டில் கிடைக்கும் பணம் அதனால் வரும்வசதி மட்டுமே கரித்தில் கொண்டு வாதிக்கிறார்கள் அனல் வெளிநாட்டிலும் நிறைய பேர்வேலை இல்லாமல் கஸ்ரப்படுகிரர்கல் அவர்களுக்கு நம்நாட்டில் எண்டால் சொந்தங்கள் குட இருக்கும் அறுதல் சொல்லுவதற்கு அனா வெளிநாட்டில் யாரும் இல்லாமல் மனவேதனையிலையே நிறைய பேர் தற்கொலைசெய்கிரர்கள் அல்லது மனநோயாளிகள் ஆகின்றார்கள். //

***நல்ல வேளை அவங்க வெளிநாட்டுலயே இருக்காங்க.. இல்லனா வேலை வெட்டி இல்லாம நிக்கற தண்ட சோறுனு கிண்டல் பண்ணற சொந்தங்களுக்கு நடுல நிக்கற கொடும நடந்து இருக்கும்.

//வசதிகள் மட்டும்தான் நம் வாழ்க்கையா? குடும்பத்தில் நடக்கும் ஒரு சுபகாரியம், இழப்பு இவற்றில் எல்லாம் கலந்து கொள்ள முடியாமை. இன்றைய சூழ்நிலையில் ஒருவரை அடிக்கடி பார்த்துக் கொள்வது இந்த மாதிரி நிகழ்ச்சியில்தானே இவற்றை எல்லாம் மிஸ் பண்ணுவது எவ்வளவு இழப்பு. நமக்கு கிடைத்த சிறு வயது அனுபவங்கள் நம் பிள்ளைகளுக்கு எங்கே கிடைக்கிறது. தாத்தா, பாட்டியின் அன்பு, அவர்கள் கூறும் கதைகள். ஊரில் தம் சிறார்களுடன் விளையாடும் விளையாட்டு. நம்ம ஊர் பல்லாங்குழி ஆட்டம். இது எல்லாமே அவர்களுக்கு கிடைக்காது என்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.//

***இது ரொம்ப ஓவர்ங்க.. நீங்க ஸ்கூல்ல படிக்கும் போது போர்ட் எக்ஸாம் போது எல்லாம் உங்க வீட்டில் திருமணமே நடக்கலையா? என் வீட்டில் எல்லாம் எவ்வளவோ நடந்து இருக்கு.. எத்தனையோ விழாக்களை மிஸ் பண்ணி இருக்கேன். இத்தனைக்கும் கல்யாணத்துக்கு போறதுனா எனக்கு உயிர். ஆனா என்ன பண்ணுறது? பரீட்சை தானே முக்கியம்?
அதே போல தானே இதுவும்? உள்ளூரிலேயே இருந்து அன்னிக்கு முக்கியமான வேலைனு லீவு தர மாட்டேன்னு சொன்ன என்ன பண்ணுவீங்க? வெளிநாட்டில் இருந்தாலும் மிக முக்கியமான நல்லது / கெட்டதுக்கு சம்பந்த பட்டவர்கள் போய் கொண்டு தான் இருக்கிறார்கள், அதை முன்னிட்டு பணமும் - லீவும் சேமித்து வைப்பது நம் கடமையும் கூட.

//எத்தனை பேரால் தாய் தகப்பனோடு போய் வெளிநாட்டில் வாழ முடிகிறது? எத்தனை பேரால் மனைவி பிள்ளையோடு போய் வெளிநாட்டில் வாழ முடிகிறது. எத்தனை பெண்களால் கணவரோடு போய் வாழ முடிகிறது? ஏதோ சம்பாதிக்கிறேன், வாழ்க்கை தரத்தை ஏற்ற பார்க்கிறேன், என் பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் நல்ல எதிர் காலம் குடுப்பேன் என்று பல கற்பனைகளோடு போகிறோம், போகிறார்கள். போன பின் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு கூட பங்கு எடுக்க முடியாமல் தவிக்கிறோம். எத்தனையோ பேர் பெற்றோரின் உறவுகளின் கடைசி நிமிஷங்களில் கூட உடன் இருக்க குடுத்து வைக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள்.//

***டாய்லெட் கழுவினாலும் வெளிநாட்டு டாய்லெட் தான் மதிப்பானதுனு நினைக்கிறோமே நம்மளோட அந்த எண்ணம் தான் தப்பு. இதை தான் ப்ரோக்கர்களும் ஏஜெண்டுகளும் தவறாக பயன் படுத்தி கொள்கின்றனர். நல்ல படிப்பு/ திறமை - சமார்த்தியம் /வெலை எதுவும் கையில் இல்லாமல் வெளிநாடு போயே ஆக வெண்டும் என்று யார் கட்டாய படுத்தினார்கள்? அதை முதலில் எந்த நாடு அனுமதிக்கிறது என தெரியவில்லை. சில நாடுகள் ரொம்ப மோசமாக நடத்துகின்றனர் என்றால் அந்த நாட்டுக்கு ஏன் போறாங்க? தற்சமயம் கிடைப்பதை விட அதிகம் வசதி வாய்ப்பு போன்றவை கிடைக்குமானே தெரியாமல் வெளிநாடு போக ஆசை பட்டா அதை எந்த கணக்குல சேர்க்கறது? எத்தனை "வெற்றி கொடி கட்டு" எடுத்தாலும் புண்ணியமில்லை.

//குடும்பத்தினருடன் எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும், ஒரு உடம்பு சரியில்லை என்றால் உடனே எல்லோரும் ஓடி வந்து விடுவார்கள். ஆனால் இங்கே யார் வருவார். ஒரு ஆத்திர அவசரத்துக்கு கூட யார் கிட்டயும் போக முடியாது. இங்கு நாம் பெறும் வசதிகளை விட நாம் இழந்தவைதான் அதிகம் என்று கூறி என் முதல் சுற்று வாதத்தை முடிக்கிறேன். //

***வருவாங்க.. வெளிநாட்டுலயும் ஏதாவது ஒண்ணுனா நண்பர்கள் வருவாங்க. அவர்களுக்கு ஒண்ணுனா நாம போனோம்னா கண்டிப்பா அவங்களும் வருவாங்க :-) அப்படி பட்ட நண்பர்களை சம்பாதிக்க வேண்டியதும் நம் பொறுப்பு. இதுவே இன்னொரு பெறுதல் - மனிதர்களை புர்நிது கொள்வது எப்படி, நல்லவர் கெட்டவர் அடையாளம் காணுவது எப்படி - people skills! இதை சொந்த நாட்டில் வீட்டில் இருந்து கொண்டே பெற்று விட முடியுமா?

//அதை போல் நம் குழைந்தகள் படும்பாடு நம்பன்பட்டை கடைப்பிடிப்பதா அல்லது தங்கள் பிறந்தனட்டு பண்பாட்டை கடைபிடிப்பத எண்டு தெரியாமல் முளிக்கின்ரர்கள்.//

***பிறக்கும் போதே குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரம் தெரிந்து விடுகிறதா என்ன? நாம் தானே நீ வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியனாக இருக்கணும்னு குழப்பறோம்? முதல்ல நாம் தெளிவாக ஏதாவது ஒரு முடிவு எடுத்து செயல் படுத்த ஆரம்பித்தால் அவர்கள் குழம்ப தேவை இல்லை.

நான் பெற்றவை இவை:

1. சுய அறிதல் - அடுத்தவரை சாராமல் என்னால் ஒரு நல்ல மனைவியாக, தொழிலாளியாக இருக்க முடியுமென அறிந்து கொண்டது. 3 வருடங்களுக்கு முன்னால் சொல்லி இருந்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிருக்கும்.

2. பல்வேறு நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு. அரசியல், சரித்திரம், விஞ்ஞானம் போன்ற பலவற்றில் உலக அளவில் என்ன நடக்கிறது என அறியும் வாய்ப்பு.

3. தெரியாத கலையை கற்று கொள்வது ஒன்றும் இயலாத விடயம் அல்ல என்று அறிந்து கொண்டது - இந்தியாவில் இருந்து இருந்தா அம்மாவோ மாமியாரோ தான் சமைச்சுருப்பாங்க, என்னை விட்டிருக்கவே மாட்டாங்க.

4. கணவருக்கும் எனக்குமான அன்னியோனியத்தின் வளர்ச்சி.

5. எவரையும் தெரியாத ஊரிலும்/நாட்டிலும் என்னால் சமைத்து, உண்டு, வீடு கட்டி, நண்பர்கள் சேர்த்து, வேலைக்கு போய், விருந்து அளித்து - எல்லாம் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை.

6. எனது தாய் தந்தை எந்த அளவு என் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்தது.

7. விளையாட்டில் - உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் வந்தது.

8. தமிழை/தமிழநாட்டை மறக்க கூடாதுனு தமிழ் படிக்கறது ப்ளாக் எழுதறதுனு தீவிரம் காட்டுவது. பண்டிகைகளை என் அம்மாவை விட ஓவராக கொண்டாடுவது.

8. இயற்கையை, வெளி உலகை மேலும் ரசிக்க வியக்க கற்று கொண்டது.

இவை எல்லாம் சொந்த நாட்டிலும் சாத்தியம் தான் ஆனால் அதற்கு வாய்ப்பு நாமே உருவாக்கி கொள்ள கூட சந்தர்ப்பம் அமைவதில்லை. இங்கு இதெல்லாம் கட்டாயமாக கற்று கொண்டு இருக்கிறேன். விரும்பியும் கற்று கொண்டு இருக்கிறேன் :-)

அம்மா மடி என்னிக்குமே சுகம் தான். ஆனா அவங்க தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி மகளை புகுந்த வீட்டுக்கு துரத்தற ஆள்! :) விடுமுறைல போய் அம்மா மடில தூங்கறது சுகமா இல்ல தினமும் அம்மா மடியை நாடுவதில் சுகமா? நீங்களே யோசிச்சுக்கோங்க :) சொந்த நாடு வீடு எல்லாம் என்றுமே அருமை தான். யாருமே இதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக அடைப்பட்ட புறாவாக ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழல்வது மனிதனின் கற்கும் திறனையே முறிக்க கூடியது. தாய் நாட்டில் கிடைப்பதை விட நல்ல வாய்ப்புகள் கிடைக்குமாயின் அவற்றை பயன்படுத்தி பின்னர் தாய் நாட்டை முன்னேற்றும் பணிக்கு அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம். இதற்கு இளமையில் அயராது ஓடினாலே ஒழிய முடியாது. மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இதுவே பொருந்தும் என எண்ணுகிறேன். தன்னுடைய இடத்தில் கிடைப்பதை விட எதோ ஒன்று அதிகம் கிடைப்பதால் தான் இடம் பெயர்கிறோம். அது படிப்பூ, பணமோ, வேலையோ எதுவாக இருந்தாலும் நிச்சயம் அதிகம் பெறுகிறோம் என்பதே உண்மை. விரைவில் மற்ற நாட்டினர் வந்து நம் நாட்டில் வேலை செய்யும் படியான சூழ்நிலை அமைய வேண்டும். இப்போவே கொஞ்சம் பேர் செய்துட்டு தான் இருக்காங்க, இன்னும் மாறணும். இது தானா இன்னும் 100 - 200 ஆண்டுகளில் நடக்கலாம். அப்போவும் மு.க. - ஜெ.ஜெ இவங்க தான் இருப்பாங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது :D

வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி சோடாவை உடைத்து கொள்கிறேன்.

அன்புடன்,
ஹேமா.

P.S: இவ்ளோ பேசுற நீ எதுக்காக வெளிநாட்டில் சம்பாதிச்சு அங்கே வரி கட்டுறே தாய் நாட்டுக்கு என்ன செஞ்சேனு யாரவது நிச்சயம் கேப்பாங்க - நான் என்னால் ஆன அளவு செய்து கொண்டு தான் இருக்கிறேன். அதற்கு மேல் செய்ய என் இளமையை செலவழிக்க நான் தயாரில்லை. தற்போதுள்ள அரசியல்வியாதிகளை எல்லம் களையெடுக்க எனக்கு சக்தி இல்லை :-) இந்தியாவிலேயே இருந்து இருந்தால் என்னால் இது எதுவும் செய்திருக்க இயலாது. இந்தியா திரும்பிய பின் இன்னும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

அன்புடன்,
ஹேமா.

சாரி அதிரா - வாரயிறுதியில் வரேன்னு சொல்லிட்டேன், ஆனா நேத்து கொஞ்சம் நேரம் தூக்கம் வராம இருந்ததால் எழுந்து வந்து அடிச்சு செவ் பண்ணி வச்சிருந்தேன்... அப்புறமா போடலாம்ன்னு.. அப்புறம் யதேச்சையா இன்னைக்கு சாப்பிடும் போது படிக்கலாம்ன்னு வந்தா - அப்படியே நான் சொல்ல வந்ததை ஹேமா சொல்லியிருக்காங்க, ஆனா எதிரணியில :))) பழமொழியும் அப்படியே.. ஆனா explanation வேற.. interesting ... அதான், ஆர்வம் தாங்க முடியாம போட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்..

வாழும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப்ப தம்மை பக்குவப்படுத்தி மாற்றி கொள்ளும் திறமை எல்லோருக்கும் இருப்பதில்லை... அப்படி குறையப் பெற்றவர்களில் நானும் ஒருத்தி...

வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவதேன்பது ஒரு dynamic process.. நேற்றை விட இன்றைக்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது, இன்றை விட நாளை அதிகமாகவும் பிடிக்கலாம், இல்லை பிடிக்காமலும் போகலாம்... இவ்வருடம் எவ்வளவோ பரவாயில்லை.. வந்த காரணத்திற்கான பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன்... இப்பட்டி மன்றத் தலைப்பு இன்னும் ஒன்றிரண்டு வருடங்களுக்கு அப்புறம் மறுபடியும் வந்தால் ஆச்சர்யமில்லை, நான் அணி மாறினாலும் மாறியிருப்பேன்... எனினும் இந்த அணியிலேயே இருப்பதற்கான சாத்தியங்கள் தான் இப்போது அதிகம்...

பெற்றதும் இருக்கிறது என்பதை மறுக்கப் போவதில்லை.. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.. சுத்தம், சுகாதாரம், சுய சார்பு, நல்ல மேனர்ஸ், டெக்னாலஜி, உயர்கல்வி, comfort, போக்குவரத்து, சட்டதிட்டங்களை மதித்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.. இங்கு வராதிருந்தால் இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும்.. இங்கு தனி மனிதனுக்கான peace, விரும்பும் வழிப்படி நடப்பதற்கான secularity, சோஷியல் செக்யூரிட்டி அதிகம்.. நம் நாட்டில் அது குறைவு..வந்ததால் தான் அமெரிக்கா எவ்வளவு அழகான நாடு, இயற்கையை எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.. இல்லையென்றால் ஊரில் இருக்கும் கொஞ்ச நஞ்ச தோட்டத்தையும் பிளாட் போட்டு விற்றோ இல்லை வீடு கட்டியோ முடித்திருப்போம்..

சரி, என்னென்னவற்றை இழந்திருக்கிறோம் என்று பார்த்தோமானால், இதிலே நீண்ட காலம் (அட்லீஸ்ட் நான்கைந்து வருடங்கள்??) முன்பு இங்கு வந்து செட்டில் ஆனவர்களுக்கும் இப்போது இங்கு வந்திருப்பவர்களுக்கும் நிறைய வேற்றுமை இருக்கும்... முதலாமானவர்கள் இந்நேரம் ஓரளவுக்கு பழகியிருப்பார்கள்.. permanent resident ஆகியிருப்பார்கள்.. புதியவர்களுக்கு, அதுவும் சுய விருப்பம் குறைவாக, மற்றவர்களின் வேண்டுகொளுக்கினங்கவோ இல்லை சூழ்நிலை காரணமாகவோ வந்தவர்களுக்கு நிறைய இழந்ததாகத் தான் தோன்றும்..

என்னதான் மாற்றாந்தாய் வீடு அழகாயிருந்தாலும் என் அம்மா தான் எனக்கு அம்மா.. அந்தம்மா அவர்களுக்கே அம்மா... !!!

குடியுரிமை இல்லை இங்கு.. படித்திருந்தும் வேலைக்கு போகும் தகுதியினை இழந்தேன் (முதலில் H4 கைதி, இப்போது தான் போராடி விடுதலை பெற்றிருக்கிறேன்).. என் identity இழந்தேன்.. பாங்க்கில் சுயமாக ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க கூட முடியவில்லை.. எனக்கு பிடித்த உடை அணிந்து வேலைக்கு போகும் சௌகரியத்தை இழந்தேன்...எனக்கு ஏதாவது குறையிருந்தால் தட்டிக் கேட்கும் வாய்ப்பினை இழந்தேன்.. என் நாட்டு க்ளைமேட்டை இழந்தேன்.. எப்பவுமே மனிதர்கள் சூழ்ந்திருந்த சூழ்நிலையை இழந்தேன்.. எதிரில் வருபவர்களை கண்ணுக்கு கண் பார்க்கும் வாய்ப்பினை இழந்தேன்.. இங்கே மெஜாரிட்டி நேராகவே பார்த்துக்கொண்டு நடக்கிறார்கள், மனிதர்களை பார்க்க மறுக்கிறார்கள்.. நான் சொல்லுவது இளம் தலைமுறையினரை, வயதானவர்கள் பரவாயில்லை..

அதிகமில்லை, கொஞ்சம் சத்தம் அதிகமாக பேசினாலும் பக்கத்து வீட்டில் தட்டுகிறார்கள்.. மிக்ஸீ மாலை வேலையில் போட முடியவில்லை.. காரணம் apartment அப்படி.. அவர்கள் மட்டும் சத்தமாக டிவி வைக்கிறார்கள்.. என்னால் அவர்களுடன் தைரியமாக பேச முடியவில்லை.. காரணம் நான் இந்நாட்டுகாரரில்லை.. இதுவே என் ஊராயிருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு பேசியிருக்க மாட்டேன்?? எங்கள் நண்பர்கள் நல்ல திறமை இருந்தும் உயர்படிப்புக்கு மிக நல்ல கல்லூரி பெரும் வாய்ப்பை இழந்தார்கள், காரணம் இந்நாட்டு பிரஜை இல்லை.. அவர்களுக்கு போனது போக மிச்சம் இருக்கும் இடங்களே இவர்களுக்கு.. நம் நாட்டில் திறமைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் போயி வேலை செய்யலாம், இங்கு முடியுமா?? எனினும் சிலவற்றை இழந்தால் தானே சிலவற்றை பெற முடியும் என்பதாலே எல்லாரும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்..

மொத்தத்தில் நான் நானாக இருக்கும் வாய்ப்பினை இழந்தேன்.. இதற்க்கெல்லாம் இந்நாட்டினை குறை சொல்லப் போவதில்லை.. காரணம் இது என்நாடில்லை ... நம் நாட்டுக்கு இவர்கள் வந்தாலும் இந்நிலைமை தானிருக்கும்..

நமக்கு ஒரு ஜெனரேஷன் முன்னாடியே இங்கு வந்து செட்டில் ஆனவர்களையும் நம்மையும் எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் பிள்ளைகளும் நாமும் ஒரே வயதுக்கார்கள் என்றால் - இதுவரை நாம் நம் சிறுவயதில் பருவத்தில் எந்த விதத்தில் இவர்களை விட மகிழ்ச்சி குறைந்து இருந்திருக்கிறோம் என்று நினைக்கறீங்கள்?? technology, comfort மட்டுமே நம்மிடம் இவர்களை விட குறைவு.. கூட்டமான பஸ்சில் சென்றாலும் தோழிகளுடன் கிண்டல் அடித்துக் கொண்டு பேசிக்கொண்டு சென்றால் சிரமந்தான் தெரியுமா?? இருவர் இருக்க வேண்டிய ஹாஸ்டல் அறையில் நான்கு பேர் தங்கியிருந்தாலும் இங்கு போல் தனியாய் இருப்பதை விட அது நன்றாக இருந்தது...

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு.. அக்காலத்திலேயே எழுதி வைத்தார்கள்.. அப்பொழுதே வணிகர்கள் அங்கும் இங்கும் சென்று அங்குள்ளவற்றை கற்றுக் கொண்டு பெற்றுக் கொண்டு வந்தார்கள்.. என்றாலும், அவ்வாறு சென்றவர்களில் அங்கேயே இருந்துவிட்டவர்கள் குறைவு.. மீண்டும் தன்னாட்டுக்கே பொருளீட்டி திரும்பி வந்தவர்களே அதிகம்... எங்கிருந்தாலும் வாழும் படி வாழ்ந்தால் நல்வாழ்வே.. அதுப்போல் நம்நாட்டிலும் நல்லபடியாக வாழமுடியும், வெளிநாட்டிலும் வாழ முடியும்.. ஆனால் எனக்கு நம்நாடு தான் நல்லாயிருக்குமேன்று இன்று தோன்றுகிறது..

இப்பொழுது தெரியாது... உடம்பு நல்லாயிருக்கும் வரை இந்த ஊர் தாங்கும்... எந்த விதத்திலும் உடல்நலக் குறை ஏற்ப்பட்டால் அப்போது புரியும்.. எனக்கு ஒரு முறை கையில் அடிபட்டிருந்த போது கையை அசைக்காமல் இருக்க வேண்டியிருந்தது... ஊரென்றால் ஒரு கையாவது உதவிக்கிருக்கும்.. இங்கு யார் வருவார்கள்?? நண்பர்கள் - may be for a week.. பிறகு?? இளவயதிலேயே பெற்ற நட்புக்கு தான் வலிமை அதிகம்.. இங்கு colleagues என்பவர்கள் நம்நாட்டினரே ஆனாலும் அந்தளவுக்கு வர மாட்டார்கள்.. நாளை பிள்ளை பையன்கள் நம் கலாச்சாரத்திலிருந்து விலகும் போது வலிக்கலாம்.. நம் நாட்டிலும் அத்தவறுகள் நடக்கலாம், என்றாலும் இந்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் அதிகம்... மேலும், நாம் விரும்புவது போன்ற விடுமுறை கிடைக்காது... நெருங்கிய உறவின் மறைவுக்கு கூட போக முடியாமல் தவித்தவர்களை தெரியும்.. நம் நாடென்றால் எத்தனையோ வழிகள்.. ட்ரைனில் ரிசர்வ் செய்யாமல் அன்ரிசர்வ்டில் கழிப்பறை பக்கம் அமர்ந்து கூட பயணம் செய்து நேரத்துக்கு போக முடியும்.. எத்தனையோ தனியார் பேருந்துகள் இருக்கின்றன - இது இல்லாவிட்டால் இன்னொன்று.. அது போல் இங்கிருந்து விமானம் பிடித்து நாம் வேண்டுமானால் வந்து விடுவோம்.. வேலை பார்க்கும் கணவர்களால் வர முடியுமா? லீவ் தான் கிடைக்குமா??

நான் இங்கு பிரஜையானாலும் கூட - எனக்கு தேவை என்றால் அவர்கள் வரவும், அவர்களுக்கு தேவையென்றால் நாங்கள் செல்லவும் அவ்வளவு அதிவேகமான இணைப்பிருந்தால் நானும் இந்நாட்டை விரும்பியிருப்பேன்.. எங்கள் உறவுகள் மற்றும் பெற்றோர் நினைத்தவுடன் எங்களுடன் வந்து இருக்க முடியுமென்றால், அவர்களால் கடைசி காலத்தை இங்கேயும் சந்தோஷமாக கழிக்க முடியுமென்றால், என் குழந்தைகளும் நம்மை போலவே வாழ்வார்கள் என்றால் நானும் இந்நாட்டை விரும்பியிருப்பேன்.. ம்ம்ம்...அதுவரைக்கும், என்ன தான் கற்று பெற்று இங்கு வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இழந்த விஷயங்களே அதிகம்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//வெளி நாட்டு வாழ்க்கையில் சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பது உண்மைதான்,........................தன்னம்பிக்கையும் மிக அதிகமாகப் பெறுகிறார்களே!//
உண்மையை சொலபோனால் இது தனம்பிகை என்று கூறமுடியது, இந்நாட்டினருக்காக அடங்கி போகும் நிலைக்கு தள்ள படுகிறோம்.

//தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள் - கிட்ட இருந்தால் முட்டப் பகை என்று//
நாம் உள்ளுரில் இருந்தால் கண்டிபாக அம்மா வீட்டிலேயே
இருக்க போவது கிடையாது, ஏதோ ஒரு சனி அல்லது ஞயாயிறு கிழைமைகளில் தானே போகிறோம் அது எப்படி பகையில் முடியும். atleast நாம் போவதற்கு ஓன்று இரண்டு இடங்கள் இருகிறதே என்று சந்தோசம்.
நீங்கள் கேட்கலாம் இங்கு நண்பர்கள் இருக்கிறார்களே என்று நண்பர்கள் வீட்டில் போய் காலையில் இருந்து இரவு வரை டிவி பார்த்து கொண்டு படுத்து கொண்டு இருக்க முடியும் என்பது சாத்தியமில்லை.

//அடுத்து எல்லோரையும் மிஸ் பண்றது!!எல்லோரும்ன்னா யாரு? அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை இவர்கள் தானே? இப்போ இருக்கிற நிலமைல இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு தெரியாதா?//
அட்லீஸ்ட் இந்தியாவில் இருந்தா நாம் நினைக்கும் நேரத்திற்கு அவர்களை நாம் கூப்பிட்டு கொள்ளலாமே!!!!!!!!! ஒருமுறை அம்மா ஒருமுறை மாமியார் சில நாட்கள் அக்கா, சில நாட்கள் நாம் அங்கு போய் இருப்பது இப்படி எவ்ளவோ இருக்கு அது வெளிநாட்டில் இருந்தால் முடயுமா????

//உதாரணமா குழந்தை பிறக்கும் சமயம் உதவிக்கு ஆள் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணும், இப்போ எல்லாம் அம்மா அப்பா 2பேரும் வெளிநாட்டுக்கு வந்து உதவி செய்துட்டு போறாங்க.//
என்னுடைய விசயத்தில் நான் மிகவும் ஏங்குவது இதற்கு தான் இபோதெல்லாம் இங்கே அம்மாவுக்கு விசா கொடுப்பது கூட ஒரு மாதம் தான். என் நிலைமைக்கு நான் பெட் ரெஸ்ட் எடுப்பது அவசியமான ஓன்று அது முடியவில்லையே :(
கணவர் வெளியில் சாப்பிட்டாலும் நமக்கு எதாவது செய்வதற்கு யாராவது வேண்டும் அல்லவா!!!!

நடுவர் அவர்களே சோகங்களை மட்டும் அல்ல நாம் சந்தோசங்களை பகிர்த்து கொள்வதற்கு கண்டிபாக உறவுகள் அவசியம்.
நாம் ஊரில் இருந்தால் ஒரு 600 sq ft வீடு வாங்கினாலும். என் பையன் வீடு வாங்கி இருக்கான், பெரிய டிவி வங்கியிருகான் என்று சந்தோஷ படுவதற்கு உள்ளங்கள் உண்டு, ஆனால் இங்கு பெரிய வீடு இருந்தாலும் மிகவும் luxury life lead பண்ணினாலும் அதை நாம் மட்டுமே அனுபவிக்க முடியும், அதை கொண்டாடுவதற்கும் வாழ்த்துவதற்கும் நம் பெற்றோர் அருகில் இருப்பது மிகவும் அவசியம்.

இன்னும் சில கருத்துகளுடன் வருவேன்

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

சந்தோ,
///நடுவரா என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிட்டீங்க,இப்போ நல்லா மாட்டினீங்களா? என்னை பொருத்தவரை இது ஒரு உற்சாகமான பொருப்பான வேலை..தீர்ப்பு எந்த பக்கம் இருந்தாலும் கவலை இல்ல/// நான் எங்கே தப்பினேன்.. அப்பவே காலைச்சுற்றிய பாம்புதான்... விடவே இல்லை:). உண்மைதான் தீர்ப்பைவிட பட்டிமன்றம் நடக்கும் விதம்தான் சுவாரஸ்யம்.

///ஆனால் என் அனுபவத்தில் அதே உற்சாகம் ரொம்ப நாள் இருக்காது..3மாதம் கூட ஜாலியா இருக்கலாம்..அப்புறம் எல்லாமே போன இடம் தெரியாது/// எவ்வளவு அழகாக சிந்திக்கிறீங்கள்... இப்போதான் உங்கள் எதிரணியினர் இதை யோசிப்பார்களென நினைக்கிறேன்:).

///ஃபோன் பேசி,சாட் பண்ணித்தான் அங்கயும் ஏக்கத்த தீர்த்துக்கனும்..சுருங்கிவிட்ட இந்த உலகத்துல தூரம் என்பது ஒரு தடை இல்ல, சாதாரணமா மும்பைல இருந்து தமிழ்நாட்டுக்கு போகும் நேரத்துல நாம வெளிநாட்டுல இருந்து சொந்த ஊருக்கே போயிறலாம்..இது என் அனுபவத்துல கண்ட உண்மை/// ஆகா உங்கள் வரிகள் பார்த்து, பூஷே கலங்கி நிற்கிறதே... நாம் பட்ட அனுபவங்கள்தான் எப்பவும் வாழ்க்கைக்கு உதவும்.

//இந்தியாவிற்குள்ளவே வேறு இடம்னு சென்றுவிட்டால் அதற்கும் வெளிநாட்டிற்கும் வித்தியாசம் இல்ல../// இனி எதிர்க்கட்சியினர் வாயே திறக்கமாட்டார்களே.. ஷிப்தான் போடுவார்களோ வாய்க்கு??:) பார்ப்போம்...

///இந்தியாவிற்குள்ளவே வேறு இடம்னு சென்றுவிட்டால் அதற்கும் வெளிநாட்டிற்கும் வித்தியாசம் இல்ல../// எதிர்தரப்பில் இதற்கு என்ன பதில் வரப்போகுதென ஆவலாக இருக்கிறோம்(நானும் பூஷு ம்).

///அதிரா உங்கள ரொம்ப படிக்க வச்சுட்டேன், உங்களுக்கு ரொம்ப பொருமை இத படிச்சதுல இருந்து தெரியுது/// என்னை ரொம்ப புகழாதீங்கோ... பிறகு உணர்ச்சிவசப்பட்டு இப்பவே முடிவைச் சொல்லிப்போடுவேன்.... அதுக்காகத்தான் கையோட பூஷ் இருக்கு, என்னை அதிகம் துள்ள விடாமல் வைத்திருக்கு:).

///தீர்ப்பு எந்த பக்கம் இருந்தாலும் எனக்கு துளி வருத்தம் இருக்காது/// நீங்க பேசியதிலேயே எனக்குப் பிடிச்சது, பிறகு வார்த்தைமாறி:) கல்லெடுக்க மாட்டீங்க இல்ல??

///,ஏன்னா எதற்கு தகுந்த விளக்கமும் கண்டிப்பா இருக்கும் என்று முடிக்கிறேன்,,/// கடைசில காலை வாரிவிட்டுவிட்டீங்களே.... இதுதான் பிடிக்கேல்லை.
ஓகே சந்தோ நேரமுள்ளபோது இன்னும் எடுத்து வந்து முழங்குங்கோ.
((குட்டி சந்தோ.!!!.. அப்படியே, இந்த குட்டி ஆண்ரிக்கும் ஒரு கப் ரீ... பூஷுக்கும் ஒரு ஸ்ரோபெரி மில்க்க்ஷேக் பிளீஸ்ஸ்ஸ்!!!:) ).

//// //// //// //// //// //// //// ////
சுகா!! சுகா!!! எதிர்க்கட்சியினர் பயந்துபோய்விட்டார்களோ என நினைத்தேன்... அப்படியேதுமில்லை என உறுதியாக சொல்லிக்கொண்டு வந்திட்டீங்கள்..
////வெளிநாட்டிலும் நிறைய பேர்வேலை இல்லாமல் கஸ்ரப்படுகிரர்கல் அவர்களுக்கு நம்நாட்டில் எண்டால் சொந்தங்கள் குட இருக்கும் அறுதல் சொல்லுவதற்கு அனா வெளிநாட்டில் யாரும் இல்லாமல் மனவேதனையிலையே நிறைய பேர் தற்கொலைசெய்கிரர்கள் அல்லது மனநோயாளிகள் ஆகின்றார்கள்./// இரண்டு வரிகளுக்குள் நிறைய அர்த்தங்கள்.... அழகாகச்
சொல்லி எதிரணியை அமரச் செய்திட்டீங்களென நினைக்கிறேன்:)
... உங்களால் இன்னும் பேச முடியும் வாங்கோ.

//// //// //// //// //// //// //// ////
யோகராணி ///நாணயமான நடுவர் அவர்களே /// தலைப்பிலேயே என்னைக் கவிழ்க்கப்பார்க்கிறார்களே... (பூஷ் என்னைப் பார்த்து முறைக்கிற முறைப்பில்.. "நாணயமா?? உன்னிடமா?? என்பதுபோல இருக்கு:), இருப்பினும் உங்களுக்காவது புரிந்ததே ராணி அதுக்கு மிக்க நன்றி:)...

//என்னத்தை பெரிசாக இழந்து விட்டீர்கள் /// ஆகா எதிரணியினர் ஓடுவதுபோல சத்தம் கேட்கிறதே... :).

///ஏன் வெளிநாட்டுக்கு போனிர்கள்???????? நாடு கடத்தப்பட்டு வந்தீர்களா????????? இல்லையே விரும்பித்தானே வந்தீர்கள். பிடிக்காட்டி திரும்பி போகவேண்டியதுதானே. ஏன் துன்பத்தை விலை கொடுத்து வாங்குகின்றிர்கள்//// நாக்கைப் பிடுங்கிறமாதிரி நாலுகேள்வி கேட்டுவிட்டீங்கள் ராணி.... எனக்கே வெட்கமாக இருக்கு:).. இருப்பினும் நான் ஸ்ரெடியாகிவிட்டேன்... பார்ப்போம் எதிர்க்கட்சி வந்து என்ன பதில் சொல்லப்போகிறார்களோ..

///நாடாமை திர்ப்பை மாத்தி சொல்லு/// இதென்ன வம்பாப்போச்சு:), சும்மாவே இந்த பூஷோட காலம்கழிக்க முடியாமல் அவதிப்படுகிறேன்:), இப்ப போய் இப்படிச்சொன்னால், பூஷ் என்னைப்பார்த்துக்கேட்கிறது "முந்திரிக்கொடைபோல அவசரப்பட்டு தீர்ப்பை உளறிட்டியா... இன்னும் வாதங்கள் வர இருக்கெல்லோ" என்று.. முடிவில தானே தெரியும் என் "முடிவென்னவென்று"??:):). சரி சரி ராணி... இன்னும் தொடருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹேமா!! ///இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என ஆவலா இருந்ததால், மீண்டும் மூக்கை நுழைக்கிறேன்/// இதுதான் தேவை எமக்கு... நன்றி.

///என்னோட கொள்ளு தாத்தா திருச்சி கிட்ட ஒரு கிராமத்துல இருந்தாரு. அவரோட பையன் திருச்சிக்கு வந்தாரு. அவரோட பையன் மெட்ராஸுக்கு வந்தாரு. அவ்ரோட பொண்ணு (நான் தாங்க)/// கொஞ்சம் இருங்கோ.. மண்டை குழம்பிப்போச்சு, தாத்தாக்கு நீங்க யாரென முறை யோசிக்கிறேன்...:).

///திரைகடல் ஓடியும் திரவியம் தேடுனு சும்மா சொல்லி வெக்கலை. இந்தியாவில் இருந்தால் மட்டும் எல்லாம் நன்மையா? அங்கயும் பெங்களூர், ஹைதராபாத், மும்பைனு வேற்று ஊர் தான், மொழி தான்./// எதிரணியினர் திருதிருவென முழிப்பது தெரியுது...:) இதை யோசிக்காம விட்டுவிட்டோமே என..

///நல்ல வேளை அவங்க வெளிநாட்டுலயே இருக்காங்க.. இல்லனா வேலை வெட்டி இல்லாம நிக்கற தண்ட சோறுனு கிண்டல் பண்ணற சொந்தங்களுக்கு நடுல நிக்கற கொடும நடந்து இருக்கும்/// இப்படியும் உங்களால சிந்திக்க முடிகிறதே என மண்டையே கலங்கிப்போச்சு.. எனக்கல்ல எதிரணிக்கு:).

///உள்ளூரிலேயே இருந்து அன்னிக்கு முக்கியமான வேலைனு லீவு தர மாட்டேன்னு சொன்ன என்ன பண்ணுவீங்க? வெளிநாட்டில் இருந்தாலும் மிக முக்கியமான நல்லது / கெட்டதுக்கு சம்பந்த பட்டவர்கள் போய் கொண்டு தான் இருக்கிறார்கள், அதை முன்னிட்டு பணமும் - லீவும் சேமித்து வைப்பது நம் கடமையும் கூட./// சரியான விளக்கம் கொடுத்து அமர வச்சிட்டீங்க எதிரணியை... பூஷுக்குகூட இந்தளவுக்கு மூளை வேலை செய்ததில்லை:).

///வருவாங்க.. வெளிநாட்டுலயும் ஏதாவது ஒண்ணுனா நண்பர்கள் வருவாங்க. அவர்களுக்கு ஒண்ணுனா நாம போனோம்னா கண்டிப்பா அவங்களும் வருவாங்க :-) அப்படி பட்ட நண்பர்களை சம்பாதிக்க வேண்டியதும் நம் பொறுப்பு. இதுவே இன்னொரு பெறுதல் - மனிதர்களை புர்நிது கொள்வது எப்படி, நல்லவர் கெட்டவர் அடையாளம் காணுவது எப்படி - people skills! இதை சொந்த நாட்டில் வீட்டில் இருந்து கொண்டே பெற்று விட முடியுமா?/// கலக்கிட்டீங்க நல்ல பதில் கொடுத்து... எதிரணியினர் கேட்ட கேள்வியால, ஓடி ஒழிக்கப்போறீங்களோ என் யோசித்துக்கொண்டே "இருந்தோம்"...(பன்மை... நானும் பூஷும்:)).

///சொந்த நாடு வீடு எல்லாம் என்றுமே அருமை தான். யாருமே இதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக அடைப்பட்ட புறாவாக ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழல்வது மனிதனின் கற்கும் திறனையே முறிக்க கூடியது. தாய் நாட்டில் கிடைப்பதை விட நல்ல வாய்ப்புகள் கிடைக்குமாயின் அவற்றை பயன்படுத்தி பின்னர் தாய் நாட்டை முன்னேற்றும் பணிக்கு அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம்/// அழகாக சொல்லிட்டீங்க... எதிரணியினர் மேடையை விட்டே போய்விட்டார்கள் போல இருக்கே... :)

சரி சரி சோடாவை உடைக்காமல்..குடிக்கிற வழியைப் பாருங்கோ.. இன்னும் தொடருங்கோ.

//// //// //// //// //// //// //// ////
சந்தனா!! சந்தனா!! ///சாரி அதிரா - வாரயிறுதியில் வரேன்னு சொல்லிட்டேன்/// சரியாகத்தானே வந்திருக்கிறீங்க.. போனவார இறுதி இது.. அப்படி எடுப்போமே...:).

///வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவதேன்பது ஒரு dynamic process.. நேற்றை விட இன்றைக்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது, இன்றை விட நாளை அதிகமாகவும் பிடிக்கலாம், இல்லை பிடிக்காமலும் போகலாம்... இவ்வருடம் எவ்வளவோ பரவாயில்லை/// முன்னேறிக்கொண்டு வருகிறீங்களென சொல்லாமல் சொல்கிறீங்கள்.

///மொத்தத்தில் நான் நானாக இருக்கும் வாய்ப்பினை இழந்தேன்.. இதற்க்கெல்லாம் இந்நாட்டினை குறை சொல்லப் போவதில்லை.. காரணம் இது என்நாடில்லை ... நம் நாட்டுக்கு இவர்கள் வந்தாலும் இந்நிலைமை தானிருக்கும்/// சரியாகச் சொல்லிட்டீங்கள்..

///எங்கிருந்தாலும் வாழும் படி வாழ்ந்தால் நல்வாழ்வே.. அதுப்போல் நம்நாட்டிலும் நல்லபடியாக வாழமுடியும், வெளிநாட்டிலும் வாழ முடியும்.. ஆனால் எனக்கு நம்நாடு தான் நல்லாயிருக்குமேன்று இன்று தோன்றுகிறது/// இப்பத்தான் கண்டுபிடித்தேன் நீங்க எந்தக்கட்சி என்று.. அதையும் பூஷ் தான் காட்டித்தந்தது நன்றி பூஷ்:).

///ஊரென்றால் ஒரு கையாவது உதவிக்கிருக்கும்.. இங்கு யார் வருவார்கள்?? நண்பர்கள் - may be for a week.. பிறகு?/// எதிரணியினர் இதுபற்றி இனித்தான் யோசிக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன். அதுசரி may be for a week????? அப்படியென்றால் என்னவென்று பூஷ் கேட்கிறது:).. புரியவில்லையாம்.

///நான் இங்கு பிரஜையானாலும் கூட - எனக்கு தேவை என்றால் அவர்கள் வரவும், அவர்களுக்கு தேவையென்றால் நாங்கள் செல்லவும் அவ்வளவு அதிவேகமான இணைப்பிருந்தால் நானும் இந்நாட்டை விரும்பியிருப்பேன்.. எங்கள் உறவுகள் மற்றும் பெற்றோர் நினைத்தவுடன் எங்களுடன் வந்து இருக்க முடியுமென்றால், அவர்களால் கடைசி காலத்தை இங்கேயும் சந்தோஷமாக கழிக்க முடியுமென்றால், என் குழந்தைகளும் நம்மை போலவே வாழ்வார்கள் என்றால் நானும் இந்நாட்டை விரும்பியிருப்பேன்/// அப்போ வருங்காலத்தில நீங்கள் வெளிநாடுதான் நல்லதெனவும் சொல்லலாம் அப்படித்தானே? அப்பாடா... "உள்கட்சிப்பூசலை" உருவாக்கிவிட்டேன்... நடுவர் எஸ்கேப் ... பூஷ் எப்படியோ சமாளிக்கட்டும்....

தொடருங்கள் சந்தனா..
//// //// //// //// //// //// //// ////

சுவர்ணா... ///அட்லீஸ்ட் இந்தியாவில் இருந்தா நாம் நினைக்கும் நேரத்திற்கு அவர்களை நாம் கூப்பிட்டு கொள்ளலாமே!!!!!!!!! ஒருமுறை அம்மா ஒருமுறை மாமியார் சில நாட்கள் அக்கா, சில நாட்கள் நாம் அங்கு போய் இருப்பது இப்படி எவ்ளவோ இருக்கு அது வெளிநாட்டில் இருந்தால் முடயுமா???? /// ஆகா இக்கேள்வியைப் பார்த்ததும், அங்கே இருந்த பூஷ், என் காலைவாரிக்கொண்டு இக்கதிரைக்கு வந்துவிட்டது. எதிரணியினர் என்ன சொல்லப்போகிறார்களோ இக்கேள்விக்கு..

///நடுவர் அவர்களே சோகங்களை மட்டும் அல்ல நாம் சந்தோசங்களை பகிர்த்து கொள்வதற்கு கண்டிபாக உறவுகள் அவசியம்/// அழகாக ஒருவரியில் சொல்லிட்டீங்க... எதிர்க்கட்சியின் முழக்கமே நின்றுபோச்சே... எங்கே போயிட்டீங்க.. வாங்கோ வந்துகட்சியை தூக்கி நிறுத்துங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்