பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது அம்மாவை பிரிந்து 3 மணி நேரம் இருக்க அழுகிறது. பின்னாளில் 3 வருடம் கூட ஹாஸ்டலில் தங்கி படிக்கிறது. அன்னிக்கு முதல் நாள் அழுத உடனே ஐயோனு பள்ளிக்கு அனுப்புறதை நிறுத்திடுறோமா? இல்லையே! அம்மாவின் அருகாமை என்னும் சந்தோஷத்தை சிறிது பிரிந்து இருந்தால் தான் கல்வி எனும் பெரும் விஷயத்தை பெற முடியும். எதையுமே இழக்காமல் எதையும் பெற முடியாது, இது உலக நியதி. ஆகவே பிறந்த மண் - சொந்தங்களை விட்டு வேற்று மண்ணுக்கு வருகிறோமேயானால் அது நன்மைகளுக்காகவே. அதே போல பணம் பகட்டு இது மட்டும் போதுமாங்கற தொனில எதிரணியினர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பணம் சம்பாதிப்பதற்கும் பகட்டிற்கும் துளியும் சபந்தம் இல்லை, அது அவரவர் வளர்ந்த முறையை பொறுத்தது. மற்றபடி, பணம் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு தேவைனு நானா சொல்லி தெரியணும்? ஒரு ஆபரேஷன்னா அப்பா பக்கத்துல இருந்து பாத்துக்கற மாதிரி நிச்சயமா வராது, ஆனா பணமே இல்லாம அப்பா கஷ்டபடுறதை பக்கத்தில் இருந்து பார்க்க இயலுமா? அங்க பணம் தானெ முக்கியமாகுது? அதனால், பணத்தை தேடி வெளிநாடு செல்வது ஒன்றும் இளக்காரமல்ல.

வெளிநாட்டிற்கு வந்த உடன் வேலை கொடுத்து லைசென்ஸ் கொடுத்து தங்க தாம்பாளத்தில் தாங்குவார்கள் என்று ஏன் எதிர் பார்க்க வேண்டும்? நம் நாட்டிலும் அப்படி நடத்த மாட்டர்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். வந்த புதிதில், சுற்று புறத்தை நடந்து தெரிந்து கொள்ளுங்கள். புது நிகழ்ச்சிகளை பாருங்கள். வீட்டை அலங்கரியுங்கள். பின்னர் 2 - 3 டாகுமெண்ட் சேர்ந்த பின் லைசென்ஸ் வாங்குங்கள். நீங்களே வன்டையை ஓட்டி ஊர் சுற்றுங்கள். H4 எல்லாம் ஸ்வைன் ஃப்ளூ போல வெறும் ஹைப் தான். நான் H4ல் இருந்த காலத்தில் தான் மிக சந்தோஷமாக இருந்தென் என கூறுவேன் :-)

எல்லோராலும் சுழ்நிலை மாற்றத்தை சுலப்மாக ஏற்று கொள்ள முடியும்னு நான் சொல்லலை. அம்மாவை விட்டு பிரிந்து இருக்க முடியாதுனு பொண்ணு நினைக்க்கிறானு கல்யாணமே பண்ணாமல இருக்காங்க? என்னையே எடுத்து கொண்டால் நான் என் அப்பா அம்மவிற்கு ஒரே பெண், 20 வருடம் அவர்களுடனேயே தான் இருந்தேன். திடீரென்று கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க. எப்படி சமாளிக்கறேனு கேக்காதவங்க இல்லை, ஆனால் நான் சந்தோஷமா தான் இருக்கேன். இதே போல தான் முக்கால்வாசி பேரும். இருக்கும் மீதி பேருக்கு கஷ்டமா இருந்தா அவங்க தான் நல்லதை எடுத்துக்க பழகிக்கணும்.

அப்புறம் என்ன உங்களுக்கு உடம்பு சரியில்லேனா ஒரு வாரத்துக்கும் மேலா சொந்தங்கள் உதவ வருவாங்களா? என் அம்மாவுக்கு நான் பிறந்ததில் இருந்து விதம் விதமான பிரச்சனைகள். கிட்ட தட்ட 10 ஆபரேஷன் செய்து இருக்காங்க, ஒரு 8 மணி நேர ஆபரேஷன் உட்பட. 99% சத்வீத நேரம் நானும் அப்பாவும் தான். பாட்டி தாத்தா அத்தை மாமா எல்லாம் எட்டி தான் பாக்க முடியுமே தவிர, கூடவே இருக்க முடியாதே - ஏன்னா அவங்க குடும்பம் பசங்க இதை எல்லம் யார் பாக்கறது? எனவே எங்கு இருந்தாலும் ஓரளவு தான் சொந்தமோ நண்பர்களோ செய்ய முடியும். அதற்கு மேல நம் கை தான். ஆனால் சொந்தங்கள் தான் ஜாஸ்தி செய்வார்கள், நண்பர்களை விடனு எல்லம் சொல்லவே சொல்லாதீங்க. அதெல்லாம் சினிமாவில் வரும் பெரிய செட்டிநாட்டு வீட்டுல இருக்கும் கூட்டு குடும்பத்தில் மட்டுமே நடக்கும்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை நடுவரே. ஒரு வாதமே போதும்னு நினைச்சேன், 2ஆவதும் போட்டுட்டேன். இனிமே ஓர பார்வை தான். பாத்து தீர்ப்பு சொல்லுங்க!

அன்புடன்,
ஹேமா.

P.S: ஆமா பூஷ்னா என்ன??? அப்போலேர்ந்து கேக்கணும்னு நினைச்சு மறந்து போயிடுது!

அன்புடன்,
ஹேமா.

அதிரா மன்னிக்கவும் நடுவர் அதிரா அவர்களுக்கு முதலில் வணக்கம் மற்றும் நன்றியை சொல்லி கொள்கிறேன்.உங்கள் அருகில் உட்காந்து இருக்கும் பூஷ்க்கும் என்னொட வணக்கம்.நான் உங்களுக்கு ஜூஸ் கொடுத்தா சாப்பிடமாட்டீங்கன்னு தெரியும்.அதனால் சூப்பரா ஒரு டீ.ஓ.கே வரேன் தலைப்புக்கு

நல்லதொரு தலைப்பு,இதில் பங்கு பெற வேண்டும் என்று மிகவும் ஆவல்.அதற்க்காக ரெம்பவும் பாடு பட்டேன்.ஒரு வழியாக அறுசுவை கிடைத்துவிட்டது.

நான் எடுத்து கொள்ளும் தலைப்பு அதிகம் பெற்றது.

இந்தியாவிற்க்கும் வெளிநாட்டிற்க்கும் வித்தியாசங்கள் நிறைய இல்லை.என்னை கேட்டால் ஒன்று தான்.சொந்தங்கள் நம்மோடு இங்கு கிடையாது.ஆனால் சொந்தங்களை விட நம்மீது அதிகமாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை காட்ட நல்ல நண்பர்கள் உண்டு.

மற்றபடி இங்கும் அங்கும் ஒரே சூழ்நிலை தான்.என்ன தான் உள்நாட்டிலேயே அம்மாவும் நானும் தனிதனியாக இருந்தாலும் அங்கு இருக்கும் போது இருக்கும் பாசத்தை விட நான் வெளிநாட்டில் இருக்கும் போது இரட்டிப்பாக கிடைக்கும்.

எங்கள் உறவினர் சிலர் கர்நாடகவில் உள்ளனர்.எப்படியும் அவர்கள் ஊர் வந்து சேர 1 1/2 நாள் ஆகிறது.இதுவே வெளிநாட்டில் என்றால் மாலையில் கிளம்பினால் நைட் டிபன் சாப்பிட வீட்டில் இருக்கிரோம்.

வெளிநாட்டில் சுதந்திரமாக சிந்திக்கிறோம்.யாரை பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.நான்,என் கணவர்,என் பிள்ளை என்று மட்டும் தான் இருக்கிறோம்.அவர்களுக்கான கடமையை நாம் முடித்த பிறகு நாம் நம்மை பற்றி சிந்திக்கலாம்,நம்முடைய திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.கற்றுகொள்ள எத்தனையோ விஷயங்கள் உள்ளன.ஆனால் இது ஊரில் நிச்சயம் சாத்தியம் இல்லை.யாரும் எதும் சொல்லுவார்களோ என்று யோசிக்க வேனும்,அக்கம் பக்கத்திற்க்கு தான் நேரம் போகும் நமக்காக ஊரில் நேரம் இருப்பதில்லை.

இன்று நான் அறுசுவை வந்து இத்தனை தோழிகள் பிடித்து வைத்திருக்கிறேன் என்றால் வெளிநாட்டில் இருப்பதால் தானே,நான் ஊரில் இருந்தால் நிச்சயம் இது சாத்தியம் இல்லை.

வெளிநாட்டில் நாம் பெற்றது தைரியம்,சுய சிந்தனை,பிரச்சனைகள் வந்தால் எதிர்க் கொள்ள கற்று கொள்வது,நம் திறைமைகளை வளர்த்து கொள்வது,இன்னும் இது போல் நிறையா சொல்லி கொண்டே போகலாம்.

பண்டிக்கைகள் நாம் எங்கு இருந்தாலும் கொண்டாடலாம்.நம் ஊரில் மட்டும் மா கொண்டா முடியும்,இன்னும் சொல்ல போனால் ஊரில் நம் வீட்டு பண்டிக்கை மட்டுமே கொண்டாடுவோம்.ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் தீபாவளி பொங்கல் மட்டும் இல்லை ரம்ஜான்,பக்ரித்,கிர்ற்ஸ்மஸ் என எல்லா பண்டிக்கையும் கொண்டாடுகிறோம்.
நான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கனும் இங்க வெடிக்க முடியலன்னு போக முடியுமா?நான் ஊருக்கு போகும் போது வெடி வெடித்து கொள்வேன்,.வருஷம் இரண்டு முறை தீபாவளி கொண்டாடுறேனே:)

பிளைட்டை விட்டு இறங்கும் போது அத்தனை சந்தோஷம்,அம்மா அப்பாவை பார்க்கும்சந்தோஷம் இது நம்ம ஊருன்னு ஒரு சந்தோஷம் எல்லாம் இருக்கும் நிச்சயம் அந்த நிமிஷம் எல்லாருக்கும் பிடிக்கும்,லைனில் நிற்க பொறுமை இருக்காது,லக்கேஜ் எடுக்க பொறூமை இருக்காது,அந்த நிமிஷங்களை நினைத்தாலே புல்லரிக்கும்.அந்த சந்தோஷம் வெளி நாட்டில் இருப்பதால்.போனவுடன் விடிய விடிய தூங்காமல் அரட்டை,எதும் தூரத்தில் இருப்பதால் தான். அருகில் இருந்தான் அத்தனை முக்கியதுவம் இல்லை.என் பாட்டி 80 வயதிலும் நைட் ஒரு மணிக்கு நாலு மாடி கிழே இறங்கி வந்து என்னை பார்க்கறாங்கன்னா நான் வெளிநாட்டில் இருந்து வரேன் பார்த்து நாளாச்சு என்பதால் தானே,அந்த பாசம் இதுவே நான் அடிக்கடி போனால் இத்தனை சந்தோஷம் இருக்குமா??என்னமோ வந்தா போனா என்று தானே இருக்கும்.

வெளிநாட்டில் இருப்பதால் நமக்கு சொந்தங்களின் பாசம் கூட அதிகமாக கிடைக்குது.

நடுவரே இன்னும் நிறையா சொல்லனும் பிறகு வருகிறேன்....அதுவரை டீ குடிங்க.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நடுவர் அவர்களுக்கும்நம்மணி தோழிகளுக்கும் எதிர்ரணி தோழிகளுக்கும் வணக்கம்
"***பிறக்கும் போதே குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரம் தெரிந்து விடுகிறதா என்ன? நாம் தானே நீ வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியனாக இருக்கணும்னு குழப்பறோம்? முதல்ல நாம் தெளிவாக ஏதாவது ஒரு முடிவு எடுத்து செயல் படுத்த ஆரம்பித்தால் அவர்கள் குழம்ப தேவை இல்லை."
அதைத்தானே நானும் சொல்கிறேன் எம்மாலேயே ஒரு முடிவுக்கு வரமுடியதபோது எம்பிள்ளைகள் என்னபன்னுவர்கள்.சரி எனக்கு எங்கள் கலச்சாரம் தான் பிடிக்கிகுது அதுக்காண்டி என்பிள்ளயளையும் அதற்க்கு வற்புறுத்த முடியுமா?இங்கு அது முடியதவிசயம் எண்டு உங்களுக்கே தெரியும் நம் நாட்டில் எண்டால் இதபற்றி யோசிக்கவே தேவை இல்லையே.
"பிடிக்காட்டி திரும்பி போகவேண்டியதுதானே. ஏன் துன்பத்தை விலை கொடுத்து வாங்குகின்றிர்கள்//// இதற்கு விளக்கம் கொடுப்பது இந்த ப்படிமன்றததின் திசை திருப்பிவிடும்.அனல் நாம் ஒவ்வருவரும் ஒவ்வரு கட்டாயத்தின் பேரில்தான் வெளிநாட்டுக்கு வருகிறோம் அதே மட்டும் சொல்லமுடியும்.
" இன்று நான் அறுசுவை வந்து இத்தனை தோழிகள் பிடித்து வைத்திருக்கிறேன் என்றால் வெளிநாட்டில் இருப்பதால் தானே,நான் ஊரில் இருந்தால் நிச்சயம் இது சாத்தியம் இல்லை."
கண்டிப்பாக நானும் உரில் இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன் எனண்டல் அங்கு நம்மை சுத்தியே நண்பர்களும் உறவுகளும் இருக்கும் பொது இணையதளத்தில் தேடவேண்டிய அவசியம் இருந்திருக்காது.நல்லா காலம் அறுசுவையில் நல்லுறவுகள் கிடைத்திருக்கின்றன அதனால் எங்களுக்கு நன்மையே.அனான் இனைய தலங்களில் தப்பான நற்புகொண்டு சிலர் படும் அவஷ்தகள் சொல்லிலடங்க்கது.இந்தா பிரச்சனை நமுரில் இல்லையே.
நிறைய எளிதிவிட்டேன் எண்டு நினைக்கிறேன் அதிரா உங்கள் புஷ் என்னேரம் முடிந்துவிட்டது எண்டு சொல்வதால் இத்துடன் இன்றைய வாதத்தய் முடிக்கிறேன்.
எங்கே நம் அணி தோழிகள் எல்லோரும் போய்விடிர்கள்..
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

பெரிய நடுவரம்மா & சின்ன நடுவர் (பூஸ்),

நானும் வந்துட்டேன்!!

எப்பவும் நான் இருக்கும் அணியில் மெதுவாகத்தான் தோழிகள் கருத்து கூற வருவார்கள். இந்த முறை இப்பவே நிறைய பேர் வந்திருப்பதும் ஊக்கமளிக்கிறது.

அது எப்படி சீதாக்கா, நாம ரெண்டு பேரும் ஒரே அணியில இருக்கோம் எப்பவும்?? "Great people think alike!!" ஆனா, இந்த தடவ கண்டிப்பா ஜெயிச்சுடுவோம் அக்கா. என்ன செய்ய ஒரு சமாதானந்தான், ஜெயிக்காட்டியும் பெரியவங்க மனசு போலவே எம்மனசும்னு...

என்னென்னவோ பழமொழியெல்லாம் எதிரணிக்காரங்க சொல்றீங்க, ஆனா இத மறந்துட்டீங்க பாருங்க...

"திரைகடலோடியும் திரவியம் தேடு"

இது இன்னக்கு நேத்திக்கு சொன்னதில்லீங்க, பலநூறு வருஷத்துக்கு முன்னே சொன்னது!!

இப்பப் புரிஞ்சுடுச்சா, நான் எந்த அணின்னு?? அதேதாங்கோ, பெற்ற‌தே அதிகம்!!

நிதியா, நிம்மதியா-வில் சொன்னது போலவே இப்பவும் சொல்கிறேன், இழந்தது அதிகம் அணியில் இருப்பவர்கள் அதிகம் பேர் வெளிநாட்டில் இருப்பவர்களே!! அதுவும் அதிகமானோர் கட்டாயத்தின் பேரில் அல்லாமல் சொந்த விருப்பத்தில் வந்தவர்களே!! புதிதாக வந்தவர்களும் இல்லை, குறைந்தது 2 வருடமாவது இருப்பவர்கள். இழந்தது அதிகம் என்று கருதினால் உடனே திரும்பிப்போகுமள‌வு சுதந்திரமும், வசதியும் உடையவர்களே!! அப்படித் திரும்பிப் போயிருக்கும் யாராவது ஒருவர் எதிரணியில் உண்டா? அல்லது இழக்க நேரிடும் என்று அயல்நாடு வரமறுத்த ஒருவர் உண்டா?

பட்டிமன்றங்களில் காணப்படும் இந்த முரண் எப்பவும் என்னை அதிகம் யோசிக்க வைக்கிறது. நான் மட்டுமே "கைப்புள்ள" லெவலில் உண்மைவிளம்பியாக இருக்கிறேனோ என்று தோன்றுகிறது?? இதனாலேயே இந்தப் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அதிரா மனம்வருந்துமோ என்று (ஹி..ஹி..) என் தரப்பையும் விளக்கிச் சில பதிவுகள் மட்டும் போட வந்தேன்.

வாழ்க்கை, வசதி, பணம், உறவுகள் இப்படியெல்லாம் ஏற்கனவே நிதியா, நிம்மதியா_வில் நிறைய பேசிட்டோம். அதப்பத்தி மறுக்கா மறுக்கா பேசினா போராயிடும். ("war" இல்லை, "bore"!!)

எனக்குத் தெரிந்த சில விஷயங்களை, வெளிநாட்டில் பெற்ற அறிவு என்ற பார்வையில் சொல்கிறேன்.

நம் தாய்நாடு இந்தியா வளமான நாடு; பல சிறப்புகளை உடைய நாடு. பழங்கால கலைகளுக்கு உயிர்கொடுக்கும் நாடு. பல்வேறு போராட்டங்களையும், இன்னல்களையும் சந்தித்திருந்தாலும் அவற்றையெல்லாம் சிறந்த (அந்நாள்) தலைவர்கள் துணையுடன் வென்று வந்த நாடு!! இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது! (இந்தக் கருத்துக்கள் இலங்கைக்கும் பொருந்தும்!!)

ஆனால், இந்தியாவில் அன்றைய சுத‌ந்திரம் முதல் இன்றுள்ள லேட்டஸ்ட் மருத்துவ வசதிகள், டெக்னாலஜிகள் வரை வெளிநாடு சென்று படித்து/ சம்பாதித்து வந்தோரின் பங்கே அதிகம்!! புரியவில்லையா?

சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்குபற்ற‌ காந்திஜி்க்கு இந்த முதல் எண்ணம் எழுந்தது எங்கே? தென்னாப்பிரிக்காவில் அவர் இருக்கும்போது!! அதுபோல சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய, முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்த பலரும் வெளிநாட்டில் படித்து வந்தவர்களே!!

சுதந்திரம் பெற்ற பின்னரும், இந்தியாவை வழிந‌டத்திச் செல்லும் பொறுப்பில் இருந்தவர்களும் அவ்வாறே!! ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரும் அயல்நாட்டில் படித்தவரே!!

தட்டுத்தடுமாறி முன்னேறி வந்த இந்தியாவின் இன்றைய அபரிமிதமான வளர்ச்சியில் "என்.ஆர்.ஐ" எனப்படும் அயல்நாட்டில் தங்கி இருக்கும் இந்தியர்களின் பங்கு பெருமளவு இருக்கிறது என்பது மறுக்கவே முடியாத உண்மை!!

இன்டர்நெட் ஆகட்டும், கட்டுமானப் பணிகளாகட்டும், உள்கட்டமைப்பு துறையாகட்டும், மருத்துவத் துறையாகட்டும், எதில் என்.ஆர்.ஐக்களின் பங்கு இல்லாமல் இருக்கிறது? நான் இங்கு "என்.ஆர்.ஐக்களின் பங்கு" என்று குறிப்பிடுவது, அவர்களின் பணம் மட்டுமல்ல, அவர்களின் கல்வித்திறன், வேலை நுணுக்கங்கள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான்!!

இன்றும் ஒருவர் இந்தியாவில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால், உடனே ஒரு என்.ஆர்.ஐ - யைத்தான் பங்குதாரராகச் சேர்க்க விழைகிறார்!! ஏன், பணத்திற்காக மட்டுமா? அவர் வெளிநாட்டில் இருப்பதால் லேட்டஸ்ட் தொழிநுட்பங்களையும் பெற்று, கற்று தருவார் என்பதாலும்தானே?

இன்று மருத்துவ சிகிச்சை பெற பல நாட்டினரும் இந்தியாவைத் தேடி வருமளவு முன்னேறியிருப்பது எப்படி? வெளிநாட்டில் பயிற்சி பெற்ற/ வேலை பார்த்த மருத்துவர்கள் தாங்கள் கற்ற நுணுக்கங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்துவதாலேயே!!

அநேகமாக எல்லா முண்ணனி நிறுவனங்களும் வெளிநாடுகளில் கிளை வைத்து இருப்பதும், இந்தியாவில் பணியாற்றுபவர்களைச் சுழற்சி முறையில் அந்தக் கிளைகளுக்கு அனுப்புவதும் எதற்காக? அவர்கள் அதன்மூலம் அறிவைப் பெருக்க வாய்ப்பு கொடுத்து, அதைத் தம் நிறுவன முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே!!

இதில் செயலாற்றுவது இந்தியாவில் இருப்பவர்களாக இருந்தாலும், ஊக்கியாக இருப்பது வெளிநாடு வாழ் இந்தியர்களே!! அவர்களின் அருமைகளை அறிந்ததாலேயே, இந்திய அரசு, என்.ஆர்.ஐ களுக்கென தனி துறை உருவாக்கி, ஒரு மந்திரியையும் நியமித்துள்ளது!! சிறந்த என்.ஆர்.ஐ விருதும் ஆண்டுதோறும் வழங்குகிறது!!

இல்லை, இதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்னு சொல்றவங்களுக்கு இதோ உறவு, பணம் என்ற வகையில் ஒரு விளக்கம்!!

என் தந்தைக்கு 3 சகோதரிகள், 4 மகள்கள். பரம்பரை சொத்து எதுவும் கிடையாது. எல்லாரையும் குறைவில்லாமல் கரை சேர்த்து, இன்று என் அம்மாவும், அப்பாவும் யார் கையையும் எதிர்பார்க்காமல் தன்னிறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், என் அப்பா வெளிநாட்டில் வேலை செய்ததே!! இழந்தது சிலவற்றை என்றாலும், இன்று வயதான காலத்தில் நிறைவாக வாழும் வாழ்வு அயல்நாட்டு வேலை தந்த பரிசே!!

ஒரு எதிரணித் தோழி எழுதியிருந்தார், தான் இருக்கும் நாட்டில் அந்நியருக்குப் பயந்து வாழ்வதாக!! நம் நாட்டில் மட்டும் என்ன, இந்தியராகிய நான் இந்தியானாகிய அரசியல்வியாதிகளுக்கும், ரவுடிகளுக்கும், போலீசுக்கும் ( !! ), அதிகாரிகளுக்கும் பயந்து வாழத் தேவையிருக்கிறதே!! எத்தனை இடத்தில் நாம் அவர்களின் அராஜகத்துக்குப் பயந்து அடங்கி இருக்க வேண்டியிருக்கிறது?

என் கருத்துககளைத் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்!! அவசியம் இருந்தால் மீண்டும் வருவேன்!!

அப்பப்பா.... கொஞ்சம் நேரம் வராம இருந்தா இந்தனை பதிவா????!!!

எதிர் கட்சியினரை ஒன்று கேட்கிறேன்.... இலங்கையில் வாழவே வழி இல்லை, சுதந்திரம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று நாட்டை விட்டு ஓடியவர்கள் பல..... இதில் எத்தனை பேர் உண்மையில் சந்தோஷமா இருக்கேன்.... என் நாட்டை நான் மிஸ் பண்ணவே இல்லை'னு சொல்றாங்க??? முக்கியமா நம்ம போன்ற பெண்கள்.... வாசல் தெலித்து ஒரு கோலம் போட முடியுதா ஒரு நல்ல நாள்'னு? பிள்ளை உண்டானா வாய்'க்கு ருசியான காய்கறிகளை எல்லா நாட்டில் வாழ்பவராலும் வாங்கி சமைச்சு சாபிட முடியுதா??? அமெரிகா, லன்டன்'னு இந்தியர்கள் அதிகமா இருந்து எல்லா சாமானும் கிடைக்க கூடிய ஆட்களே பேசுறீங்க.... சிரியா'ல நம்ம ஊர் காய்'னு எனக்கு வருஷத்தில் அதிகமான நாள் கிடைக்ககூடியது கத்திரிக்காய் மட்டுமே. முருங்கை, வெண்டைக்காய் (ஒரே ஒரு மாசம் கிடைக்கும்), அவரை, வாழைக்காய், வாழைப்பூ, சிறு கீரை, அரைகீரை..... அம்மம்மா.... எத்தனை வகை நம்ம ஊரில்.... பழகி போன நாட்டு காய்கறிகளின் சுவையை நான் இத்தனை வருடன் இழந்தேனே.... முதன் முதலில் பிள்ளை உண்டான போது முருங்கை கீரை'கும் காய்'க்கும் ஏங்கிய நாட்கள் எத்தனை?!! சிரிக்க கூடாது..... இதுவும் இழப்பு தாங்க. உங்களுக்கு எது முக்கியமோ அது கிடைக்கலன்னா அது இழப்பு தானே???

கிணறுக்கு போய் துணி துவைத்து குளித்து விட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை இங்கிருந்தால் வருடத்தில் சில நாட்களாவது அனுபவிக்கிறோம்.... அங்கே அனுபவிக்க முடியுமா??? அங்கிருந்து இங்கு வரும் சில நாட்களில் எல்லா உறவுகளையும் ஒரு ரவுன்டு வரவே சரியா போகுது. அதிலும் எனக்கு என்ன வாங்கி வந்த அவங்களுக்கு என்ன வாங்கி வந்த, மாமியார் மருமக சண்டை, ஷாப்பிங், சில மருத்துவ தேவைகள்... இப்படியே வரும் 1 மாத லீவும் போயிடுது பலருக்கு.

தமிழர் திருநாள் பொங்கல் அன்று சூரியனுக்கு பொங்கல் வைக்கிற வெளி நாட்டு வாழ் மக்கள் எத்தனை? மாட்டு பொங்கலன்று மாடு விரட்டுவதை பார்த்து ரசிப்பவர் எத்தனை? தீபாவளிக்கு வெடி வெச்சு கொண்டாடும் மக்கள் எத்தனை? கார்திகை தீபம்'னு வீடு முழுக்க விளக்கு ஏற்றும் சுதந்திரம் இருக்கா எல்லா நாட்டிலும்???? பக்கத்து வீட்டுகாரன் மட்டுமில்லை, போலீஸும் சேர்ந்து கதவை தட்டும் சில நாடுகளில். எத்தனை நாட்டில் நீங்க நம்பி வணங்கும் இறைவனின் படத்தை எடுத்துகிட்டு போய் வைத்து வணங்க முடியும்??? ஆசை பட்டதும் கோவிலுக்கு போக கூடிய நாடு எத்தனை??? இது எல்லா மதத்துக்கும் பொருந்தாமல் இருக்கலாம்.... ஆனால் என்னை பொருத்தவரை இவை கூட நான் இழந்தவை தான்.

இவ்வளவு ஏங்க??? எல்லா நாட்டிலும் சட்டமே அந்நாட்டின் மக்களுக்கு ஒரு மாதிரியும், வெளி நாட்டில் இருந்து வந்தவனுக்கு ஒரு மாதிரியும் தான் இருக்கு. அவனே உங்க சுதந்திரத்துக்கு உள்ளே நுழையும் போதே அளவு விதிச்சிடறான். என்னை பொருத்தவரி எங்கையோ வெளி நாட்டில் போய் அடிமை அரசனாய் வாழ்வதை விட உள்நாட்டில் சுதந்திர ஆண்டியாய் வாழலாம்.

நீங்க சொல்ற மாதிரி வெளி நாடு போகும் அனைவரும் விரும்பி போவதில்லை. நான் வேலை பார்த்து வந்த கம்பனியில் இருந்து என் நண்பர்கள் எல்லாருமே விரும்பி முதலில் போனார்கள்.... பின் அங்கிருந்து விட்டால் போதும் என்றே ஓடி வந்தார்கள். இப்போது பணம் குடுத்தால் கூட போக தயாராக இல்லை அவர்கள். அவங்களை கேட்டா தெரியும் இழந்தது அதிகமா கம்மியான்னு.... நானெல்லாம் விரும்பி போகலை... வேறு வழி இல்லை கல்யாணம் பண்ணிகிட்டேன் போனேன்... என்னவரும் விரும்பி அங்க போகல... வேலை அப்படி போனார். இப்பவும் எங்களுக்கு வரப்போகும் இந்தியா போஸ்டிங்க்குக்காக தான் இருவரும் காத்திருக்கோம். வெளி ஊரில் இருந்தாலும் நம் நாட்டில் இருப்பது தான் சந்தோஷம்'னு இருவருமே நினைக்கிறோம். எங்களோட வேலை பார்க்கும் பலரும் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கறாங்க.... காரணம்... வெளி நாட்டு வாழ்க்கை பழகிபோன பிள்ளைகள் நம் நாட்டு கலாச்சாரம், அன்யூன்யம் எல்லாம் மறந்து போனார்கள். ஒரு வயதுக்கு மேல் பெற்றோரோடு நேரம் செலவிடுவதில்லை. அவர்களுக்கென தனி அரை... போய் கதவை சாத்திகொண்டு பெற்றோரே அனுமதி கேட்டு தான் உள்ளே வர வேண்டிய நிலை. என்ன செய்கிறார்கள், ஏது செய்கிறார்கள்... எதுவும் தெரிவதில்லை. இரவு நேரம் பார்ட்டிக்கு போகிறார்கள்.... திரும்பி வரும் வரை தூங்காமல் காத்திருக்க இயலாத பெற்றோர்..... பார்த்து பார்த்து சரி இது தான் இனி வரும் சங்கதியின் வாழ்க்கை என்று விட்டு விடுகிறார்கள். இது வளர்ப்பில் மட்டும் உள்ள தவறில்லை.... அவர்கள் பார்த்து வளரும் வாழ்க்கை சூழல் அப்படி... அவர்களுக்கு அது தவறாக தோன்றுவதில்லை.

இப்படி எல்லாம் பிள்ளைகளை பார்க்கும் போது பின்னால் தெரியும்.... நம் நாட்டின் அருமை பெருமை எல்லாம்.

வாழ்வது குடிசை ஆனாலும் உன் சொந்த மண்ணில் வாழும் மகிழ்ச்சியும், நிம்மதியும், சுதந்திரமும் வெளி நாட்டில் கோபுரத்தில் வாழ்ந்தாலும் கிடைக்காது.

நடுவர் அவர்களே.... பூஸை கெட்டியாக பிடித்து கொண்டு நான் சொன்னவற்றை எல்லாம் நல்லா யோசிச்சு நல்ல தீர்ப்பு சொல்லுங்கோ. ஒரு தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், சாப்பிட கூட வழி இல்லாத வெளி நாட்டு வாழ்க்கை தேவையா??? என் கட்சியினர் நல்ல வாதங்களோடு வந்திருக்காங்க... எல்லாருடைய கருத்தும் சூப்பர். கலக்குங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹேமா, ///எதையுமே இழக்காமல் எதையும் பெற முடியாது, இது உலக நியதி. ஆகவே பிறந்த மண் - சொந்தங்களை விட்டு வேற்று மண்ணுக்கு வருகிறோமேயானால் அது நன்மைகளுக்காகவே/// ஹேமா, இன்னொரு சோடாக்குடிச்சதும் தத்துவமாக அள்ளி வீசுறீங்களே எதிரணியினருக்கு...

///புது நிகழ்ச்சிகளை பாருங்கள். வீட்டை அலங்கரியுங்கள். பின்னர் 2 - 3 டாகுமெண்ட் சேர்ந்த பின் லைசென்ஸ் வாங்குங்கள். நீங்களே வன்டையை ஓட்டி ஊர் சுற்றுங்கள். H4 எல்லாம் ஸ்வைன் ஃப்ளூ போல வெறும் ஹைப் தான். நான் H4ல் இருந்த காலத்தில் தான் மிக சந்தோஷமாக இருந்தென் என கூறுவேன் :-)/// இனியாவது எதிரணியினர் உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறார்களா பார்ப்போம். அதுசரி H4 என்றால் என்ன? பூஷைக் கேட்டேன் தனக்கும் புரியவில்லையாம்... மண்டையை மண்டையை ஆட்டுகிறது.

///பாட்டி தாத்தா அத்தை மாமா எல்லாம் எட்டி தான் பாக்க முடியுமே தவிர, கூடவே இருக்க முடியாதே - ஏன்னா அவங்க குடும்பம் பசங்க இதை எல்லம் யார் பாக்கறது? எனவே எங்கு இருந்தாலும் ஓரளவு தான் சொந்தமோ நண்பர்களோ செய்ய முடியும். அதற்கு மேல நம் கை தான். /// இதுக்குமேலயும் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாதென்றே நினைக்கிறேன்... எதிரணியினரே.. ஏற்றுக்கொள்ளுறீங்களோ மாட்டீங்களோ?

///இனிமே ஓர பார்வை தான். பாத்து தீர்ப்பு சொல்லுங்க!/// பார்த்துத்தான் சொல்லுவேன், ஓரப்பார்வை அல்ல நல்ல வடிவாப்பார்த்திட்டு, பூஷும் நானும் எமக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பைச் சொல்றம்.. உங்கள் கட்சிக்கு உதவி தேவைப்பட்டால் வந்து கைகொடுங்கோ மீண்டும். நன்றி.

///P.S: ஆமா பூஷ்னா என்ன??? அப்போலேர்ந்து கேக்கணும்னு நினைச்சு மறந்து போயிடுது!/// இதைப் பார்த்ததும் பூஷின் முகமே வாடிப்போச்சு:), தனக்கிது பெரிய இன்சல்ட் ஆம்:), கற்பனைக்கு உயிர் கொடுத்து, என் பாதுகாப்புக்காக மேடையில் ஏத்தியிருக்கிறேன்:), நேரமிருந்தால், இதுக்கு முந்தின பட்டிமன்றங்கள் பார்த்தால் ஓரளவாவது புரியும்:). புரிஞ்சுதோ? அல்லது இன்னும் குழப்பிட்டனோ?:).

//// //// //// //// //// //// //// ////
ரேணுகா,... பூஷுக்கு வணக்கம் சொல்லி வாட்டத்தைப் போக்கிவிட்டீங்கள், இப்பத்தான் சிரிக்குது:). ரீ க்கு மிக்க நன்றி, பறவாயில்லை இருவரும் பங்குபோட்டுக் குடிக்கிறோம்.

///மற்றபடி இங்கும் அங்கும் ஒரே சூழ்நிலை தான்.என்ன தான் உள்நாட்டிலேயே அம்மாவும் நானும் தனிதனியாக இருந்தாலும் அங்கு இருக்கும் போது இருக்கும் பாசத்தை விட நான் வெளிநாட்டில் இருக்கும் போது இரட்டிப்பாக கிடைக்கும்/// ஆகா ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே.... எதிரணியினர் யாரையும் காணவேயில்லை.

///வெளிநாட்டில் சுதந்திரமாக சிந்திக்கிறோம்.யாரை பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.நான்,என் கணவர்,என் பிள்ளை என்று மட்டும் தான் இருக்கிறோம்.அவர்களுக்கான கடமையை நாம் முடித்த பிறகு நாம் நம்மை பற்றி சிந்திக்கலாம்,நம்முடைய திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.கற்றுகொள்ள எத்தனையோ விஷயங்கள் உள்ளன/// இதுக்கு எதிர்த்தாக்குதல் இருக்காதென்றே நம்புகிறேன்...

///இன்னும் சொல்ல போனால் ஊரில் நம் வீட்டு பண்டிக்கை மட்டுமே கொண்டாடுவோம்.ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் தீபாவளி பொங்கல் மட்டும் இல்லை ரம்ஜான்,பக்ரித்,கிர்ற்ஸ்மஸ் என எல்லா பண்டிக்கையும் கொண்டாடுகிறோம்./// ஊருக்குப் போய் வந்ததால நல்ல ப்றெஸ்சாக யோசிக்கிறீங்க ரேணுகா...

///என் பாட்டி 80 வயதிலும் நைட் ஒரு மணிக்கு நாலு மாடி கிழே இறங்கி வந்து என்னை பார்க்கறாங்கன்னா நான் வெளிநாட்டில் இருந்து வரேன் பார்த்து நாளாச்சு என்பதால் தானே,அந்த பாசம் இதுவே நான் அடிக்கடி போனால் இத்தனை சந்தோஷம் இருக்குமா??என்னமோ வந்தா போனா என்று தானே இருக்கும்./// இதுக்கு... இதுக்கு நிட்சயம் எதிரணியினர் பதில் கொடுத்தே ஆகவேண்டும்... பார்ப்போம்.. பதில் வருகுதோ என்று.

ரேணுகா, சற்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தொடருங்கோ.. திரும்பவும் என்னை மட்டும், ரீ குடிக்கச் சொல்லுறீங்களே!!! ஒருக்கால் பூஷைச் சமாளித்து பாதி கொடுத்தேன், இனியும் சமாளிக்க முடியாது:), ஒரு சொக்கலேற் மில்க்காவது குடுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுகா,, ///எம்மாலேயே ஒரு முடிவுக்கு வரமுடியதபோது எம்பிள்ளைகள் என்னபன்னுவர்கள்.சரி எனக்கு எங்கள் கலச்சாரம் தான் பிடிக்கிகுது அதுக்காண்டி என்பிள்ளயளையும் அதற்க்கு வற்புறுத்த முடியுமா?இங்கு அது முடியதவிசயம் எண்டு உங்களுக்கே தெரியும் நம் நாட்டில் எண்டால் இதபற்றி யோசிக்கவே தேவை இல்லையே/// அதுதானே அப்படிச் சொல்லுங்கோ சுகா, இனியாவது எதிரணிக்கு புரியுதோ பார்ப்போம்.

///நல்லா காலம் அறுசுவையில் நல்லுறவுகள் கிடைத்திருக்கின்றன அதனால் எங்களுக்கு நன்மையே.அனான் இனைய தலங்களில் தப்பான நற்புகொண்டு சிலர் படும் அவஷ்தகள் சொல்லிலடங்க்கது.இந்தா பிரச்சனை நமுரில் இல்லையே/// சுகா வர வர நிறைய நல்ல விஷயங்களையெல்லாம் சிந்தித்துக்கூறி எதிரணியத் திணற வைக்கிறீங்கள்.

///அதிரா உங்கள் புஷ் என்னேரம் முடிந்துவிட்டது எண்டு சொல்வதால் இத்துடன் இன்றைய வாதத்தய் முடிக்கிறேன்./// சுகா, நீங்கள் பூஷைத் தப்பாய் எடை போட்டுவிட்டீங்கள், நீங்கள் வராவிட்டால்தான் பூஷுக்கு அப்செட்டாம்... சொல்லச் சொன்னது.. சொல்லிட்டேன்.

//// //// //// //// //// //// //// ////
///பெரிய நடுவரம்மா & சின்ன நடுவர் (பூஸ்)/// திருமதி ஹூசைன், நீங்கள் பூஷுக்கும் வணக்கம் சொன்னது, அதுக்குப் பிடிச்சிருக்கு, ஆனாலும் சின்ன நடுவர் என்றது, கொஞ்சம் பிடிக்கேல்லை, ஏனென்றால், மாட்டேன் எனச் சொன்ன பூஷை, நீங்கள்தான் பொஸ், வாங்கோ மேடைக்கு எனச் சொல்லித்தான் அழைத்து வந்தேன்.

///அப்படித் திரும்பிப் போயிருக்கும் யாராவது ஒருவர் எதிரணியில் உண்டா? அல்லது இழக்க நேரிடும் என்று அயல்நாடு வரமறுத்த ஒருவர் உண்டா?/// வந்த வேகத்திலேயே, நச்செனக் கேட்டீங்கள் பாருங்கோ ஒரு கேள்வி, இதுக்கு எப்படி எதிரணியினர் பதில் தருவார்களோ????

//ஆனால் அதிரா மனம்வருந்துமோ என்று (ஹி..ஹி..) என் தரப்பையும் விளக்கிச் சில பதிவுகள் மட்டும் போட வந்தேன்// மிக்க நன்றி. பட்டிமன்றமென்றால் அப்படித்தான், முடிந்ததும் மறந்துவிடவேண்டும். அதை நினைத்து வருந்தக்கூடாது. இது ஒருவித விழையாட்டுத்தானே.

///ஆனால், இந்தியாவில் அன்றைய சுத‌ந்திரம் முதல் இன்றுள்ள லேட்டஸ்ட் மருத்துவ வசதிகள், டெக்னாலஜிகள் வரை வெளிநாடு சென்று படித்து/ சம்பாதித்து வந்தோரின் பங்கே அதிகம்!! புரியவில்லையா?/// இப்போ புரிஞ்சிருக்குமென நினைக்கிறேன் எதிரணிக்கு, இனி எதிர்க்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

///இன்றும் ஒருவர் இந்தியாவில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால், உடனே ஒரு என்.ஆர்.ஐ - யைத்தான் பங்குதாரராகச் சேர்க்க விழைகிறார்!! ஏன், பணத்திற்காக மட்டுமா? அவர் வெளிநாட்டில் இருப்பதால் லேட்டஸ்ட் தொழிநுட்பங்களையும் பெற்று, கற்று தருவார் என்பதாலும்தானே?/// இதுக்கு மேலும் எதிரணியினர் மேடையில் இருக்கமாட்டார்களென்றே நினைக்கிறேன்.

///இழந்தது சிலவற்றை என்றாலும், இன்று வயதான காலத்தில் நிறைவாக வாழும் வாழ்வு அயல்நாட்டு வேலை தந்த பரிசே!!/// ஆகா என்ன அழகாகச் சொல்லிவிட்டீங்கள்.

///அவசியம் இருந்தால் மீண்டும் வருவேன்!!/// எதிரணியினர் விடவா போகிறார்கள்... நீங்கள் மீண்டும் வரவேண்டித்தான் வருமென நினைக்கிறேன்... வந்து தொடருங்கோ..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவருக்கும் மற்றும் துனையாக நிற்கும் பூஷ் க்கும் என்னுடைய வணக்கம்,அனைத்து தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம்.மன்னிக்கவும் அதிரா பூஷ்க்கும் பால் எடுத்து வைத்தேன்,சூடுது ஆறட்டும் என இருந்தேன் அதற்க்குள் அறுசுவை வராமல் போய்விட்டது ,பிடிங்க நீங்க விரும்பி கேட்ட சாக்லேட் மில்க் இரண்டு பேருக்கும் தான்.இனி பூஷ்க்கு சந்தோஷம் தானே//

நடுவரே எதிர்கட்சியினர் நினைத்து கொண்டார்கள் நாங்கள் எல்லாம் நாட்டை பிரிந்து சந்தோஷமாய் இருக்கோம் என்று,ஒன்றை விட்டு கொடுத்தால் தான் ஒன்றை பெற முடியும்,அப்படி இருக்க எல்லாமுமே எனக்கு வேண்டும் என்று ஒரே இடத்தில் உட்காந்திருந்தால் ஒன்னத்துக்கும் ஆகாது போய் விடுவோம்.

வாசல் தெளித்து கோலம் போட எனக்கும் ஆசை தான்.நான் ஊரில் இருப்பவர்களிடம் எனக்கு கோலம் போடனுன்,கிணத்துல துணி துவைக்கனும் ,காடு கரை எல்லாம் சுத்தனும்,எனக்கு பிடித்த சமையலா சாப்பிடனும் கோவிலுக்கு போகனும்,மார்கெட் போகனும் இதெல்லாம் வெளிநாடு போனா கிடைக்காது நான் இங்கேயே இருக்கேன் என்று சொன்னால் எல்லாரும் என்ன சொல்லுவாங்க,அய்யோ பாவம் பிள்ளை அங்க போன இதெல்லாம் கிடைக்குமா?நீ இங்கயே இரும்மா என்று சொல்லுவாங்க.???????????சொல்லுங்க நடுவரே!!

என்ன புள்ள நீ இதெல்லாம் பார்த்தா வாழ முடியுமா?ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடம் போனா நாலு நல்லது கெட்டது இருக்கதான் செய்யும்,எல்லாத்தையும் பழகிக்கவேனும்,சும்மா இங்க இருந்தா எல்லாம் கிடைச்சிடுமா?நாளா பக்கம் போனா தானே பிழைக்க முடியும் என்று தானே சொல்றாங்க,

இது தான் எதார்த்தம்.என்னவர் அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.மனசு சொல்வதை கேட்காதே,முளை சொல்வதை கேள் என்பார்,ஏனென்றால் மனசு ரெம்ப இழகும்,செண்டிமெண்ட் பார்க்கும்,ஆனால் மூளை அப்படி இல்லை இது தான் முடிவு என்றால் அப்படியே செய்ய சொல்லும் பாவம் பார்க்காது என்பார்,எல்லா விஷயத்துக்கும் நாம் செண்டிமெண்டா யோசிச்சா நிறையா நல்ல விஷயங்கள் இழப்போம்.என்பதே உண்மை.கொஞ்சம் இல்லை நான் நிறையா செண்டிமெண்டா யோசிச்சு நிறையா திட்டு வாங்குவேன்,

வாழக்காய்க்கும்,வாழை பூவுக்கும் ஆசைப்பட்டு யாராவது வாழ்க்கையை இழப்பாங்களா?சொல்லுங்கள் நடுவரே!

வாசலில் பொங்கல் தானே வெளி நாட்டில் வைக்கமுடியாது.வீட்டுக்குள் வைத்து எல்லாம் கொண்டாடலாம் தானே,நம் ஊரில் இன்று கிராமங்களை தவிர வேறு எங்கு வாசலில் கோலம் போட்டு பொங்கல் வைக்கறாங்க,எங்க பார்த்தாலும் அப்பார்ட்மெண்ட்,அவங்க எல்லாரும் நம்மூரில் தானே இருக்காங்க வந்து வாசல்ல பொங்கல் வைக்க வேண்டியது தானே!???

இனையத்தில் நண்பர்கள் தேடுவோர் எத்தனை பேர்.அப்படியே திசை மாறினாலும் பெற்றோர்கள் கோப படாமல் அவர்களுடன் அதிகம் நேரம் செலுத்தினால் மாறுவார்கள்,ஆனால் நம் ஊரில் ஏமாறுவது போல் சீட்டு கம்பெனி இங்கு இல்லை,கிரெடிட் கார்ட் மிரட்டல் இல்லை,இதெல்லாம் நீங்கள் ஏற்க தான் வேண்டும்

ஊரில் எத்தனை அப்பா தன் பிள்ளையோடு நேரம் செலவு செய்கிறார்கள்,வேலை முடிந்து வந்தவுடன் சாப்பிட்டோமா டீவி பார்த்தோமா படுத்தோமா என்று தான் இருக்கிறார்கள்,ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை,24 மணிநேரமும் வேலை செய்தாலும் அப்பா வீட்டுக்கு வந்ததும் பிள்ளையிடம் விளையாடிவிட்டு தானெ ஓய்வெடுக்கிறார்,தினமும் கதை ,நம்மூரில் எத்தனை வீட்டில் அப்பா பிள்ளை நனபர்கள் போல் பேசி பார்த்திருக்கீங்கள்

நடுவரே இறுதியாய் ஒரு கருத்து வெளிநாட்டுக்கு வந்தால் சொந்தங்கள் இல்லை,பண்டிக்கை இல்லை,காய் கறி இல்லை,,ஆறு இல்லை குளம் இல்லை,என்று புலம்புகிறார்கள்,இது எல்லாமே வாழ்க்கையில் ஒரு பகுதி தான்.பல நல்ல விஷயங்கள் வெளிநாட்டில் கற்று வாழ்கிறார்கள்,அதனால் தான் நம் வாழ்க்கையே ஓடுகிறது என்று யோசிக்காமல் புலம்புகிறார்கள்,இன்று இது போன்ற விஷயங்களை விட்டு கொடுத்தால் தான் நாளைய பொழுதாவது நல்லபடியாக போகும்.

சொந்த நாட்டுக்கு போகும் போது எவ்வளவு சந்தோஷத்துடன் போகிறோமோ திரும்பும் போது அதை விட கவலையாக தான் வருகிறோம்.வேறு வழியில்லை.இன்று நான் என் சொந்த மண்னை பிரிந்தால் தான் நாளை நல்ல எதிர்காலம் அமையும் என்றால் நான் இருந்து ஆக வேண்டும் தான்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நடுவர் அவர்களே, நான் வெளி நாட்டிற்கு வந்த புதுசில் இந்த கேள்வியை கேட்டு இருந்தா என் பதில் இழந்தது அதிகம் என்றுதான் இருக்கும். ஆனால் வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில், இப்போ என் பதில் நான் பெற்றது அதிகம் என்பதுதான். வந்த புதிதில் இங்கு பிடிக்கவில்லை என்று சொந்த நாட்டிற்கு திரும்ப போயிருந்தால் பல அனுபவங்களை இழந்திருப்பேன்.

இங்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், நினைத்த நேரத்தில் அம்மா, அப்பா அக்காவை போய் பார்க்க முடியவில்லையே என்ற ஒரு குறைதான்.

இன்று நம் ஊரிலும் வாழ்க்கை முறையெல்லாம் மாறிவிட்டது. அவரவர் தம் வேலையைப் பார்த்து கொண்டு போய் கொண்டே இருக்கிறார்கள்.

பரபரப்பான நியூயார்க் அருகில் அப்படித்தான். அவர்களுக்கு நடக்கவே நேரம் இருக்காது. இதில் எங்கே நம் முகத்தை பார்த்தபடி நடப்பார்கள்? இதுவே ஒரு ஸ்மால் டௌனில் நடந்தால் hai, how are you? சொல்லிவிட்டு செல்பவர்கள் ஏராளம். சரி...நம்மை அவங்க பார்த்து நடந்தா, என்ன, பார்க்காம நடந்தா என்ன:)

இங்க கத்திரிக்கா கிடைக்கலை, மாங்காய் கிடைக்கலை என்று நினைத்து ஏங்குவதை விட்டு விட்டு இங்கு கிடைக்கும் காயை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கலாம் ஒரு புது ரெஸிப்பியாவது கிடைக்கும். நான் கஷ்டப்பட்டு அவரைக்காய், கோவைக்காய்க்கு எல்லாம் மாற்று காய் கண்டு பிடிச்சேனாக்கும்:-)

இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா!! நம் ஊரில் திறமை இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்யலாமாம். கம்ப்யூட்டர் துறையை தவிற வேறு எந்த துறைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு? அப்படி இருந்தா வேறு துறையச் சார்ந்த இஞ்சினியர்கள், டாக்டர்கள் ஏன் வெளி நாடுகளுக்கு வர்றாங்க. அவர்களுடைய திறமைக் கேற்ற வாய்ப்பும், சம்பளமும் கிடைக்கவில்லை என்றுதானே?

என்னுடைய மகள் பிறந்த போது யாரும் உதவிக்கு என்னருகே இல்லை, கணவர் மட்டுமே. இப்போது நினைத்து பார்த்தால் ஒரு பெரிய சாதனை போல் உள்ளது. இதுவே இந்தியா என்றால் ஓடி போய் அம்மா வீட்டில் டேரா போட்டிருப்பேன். நம்மால் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்தது வெளி நாட்டு வாழ்க்கையே.

குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, சுத்தம், சுகாதாரம்,அனைவரும் சட்டத்தை மதிக்கும் பண்பு, தன்னம்பிக்கை, சுதந்திரம், லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாதது இப்படி பல அனுபவங்கள் பெற்றுத் தந்ததால் வெளி நாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகம் என்று கூறி முடிக்கிறேன்.

ரேணு, உங்கள் தலைப்பை பார்த்து சிரித்து விட்டேன். சிரிக்கவும், சிந்திக்கவும் அருமையான தலைப்பு.நம் அணியில் பேசும் சகோதரிகளுக்கு. வாழ்த்துக்கள். சோர்ந்திடாமல் போராடுங்கள். ரேணு சூப்பரா டீ போட்டு தருவாங்க:)

வனிதா... ///வாழவே வழி இல்லை, சுதந்திரம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று நாட்டை விட்டு ஓடியவர்கள் பல..... இதில் எத்தனை பேர் உண்மையில் சந்தோஷமா இருக்கேன்.... என் நாட்டை நான் மிஸ் பண்ணவே இல்லை'னு சொல்றாங்க??? /// இப்ப கேட்டீங்களே வனிதா இது ஒரு முறையான கேள்வியேதான், எதிர்கட்சியினரின் பதிலைப் பார்ப்போம்.

//எத்தனை வகை நம்ம ஊரில்.... பழகி போன நாட்டு காய்கறிகளின் சுவையை நான் இத்தனை வருடன் இழந்தேனே//
///கிணறுக்கு போய் துணி துவைத்து குளித்து விட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை இங்கிருந்தால் வருடத்தில் சில நாட்களாவது அனுபவிக்கிறோம்.... அங்கே அனுபவிக்க முடியுமா??? /// ஊர் வாழ்க்கையை அழகாகச் சொல்லிவிட்டீங்கள்... இதைப் பார்த்தபின்னரும் யாராவது வெளிநாடுதான் நல்லதெனக் கதைப்பார்களோ தெரியவில்லையே.

///என்னை பொருத்தவரி எங்கையோ வெளி நாட்டில் போய் அடிமை அரசனாய் வாழ்வதை விட உள்நாட்டில் சுதந்திர ஆண்டியாய் வாழலாம்./// அப்படிச் சொல்லுங்கோ வனிதா, இது புரியவில்லையே எதிரணிக்கு.

///வாழ்வது குடிசை ஆனாலும் உன் சொந்த மண்ணில் வாழும் மகிழ்ச்சியும், நிம்மதியும், சுதந்திரமும் வெளி நாட்டில் கோபுரத்தில் வாழ்ந்தாலும் கிடைக்காது./// எதிரணியினரே ஓடாதீங்கோ... இதுக்குப் பதிலைச் சொல்லி உண்மையா இல்லையா என நிரூபியுங்கோ.

///நடுவர் அவர்களே.... பூஸை கெட்டியாக பிடித்து கொண்டு நான் சொன்னவற்றை எல்லாம் நல்லா யோசிச்சு நல்ல தீர்ப்பு சொல்லுங்கோ. ஒரு தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், சாப்பிட கூட வழி இல்லாத வெளி நாட்டு வாழ்க்கை தேவையா??? /// கடவுளே கடவுளே... நான் மறந்திருந்த குருவிமிட்டாய், குண்டுபோடும் பிளேனை எல்லாம் திரும்பி ஞாபகப்படுத்தி, என்னைப் பயமுறுத்துறீங்களே:), இருப்பினும் பூஷிருக்க எனக்கென்ன பயம்:).

//// //// //// //// //// //// ////

ரேணுகா, எங்கே மேடையை விட்டே ஓடிட்டீங்களோ என நினைத்தேன், வாழ்க்கையா வாழக்காயா எனக் கேட்கும்போதே தெரிகிறது எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்களென.

///எல்லா விஷயத்துக்கும் நாம் செண்டிமெண்டா யோசிச்சா நிறையா நல்ல விஷயங்கள் இழப்போம்.என்பதே உண்மை/// அழகாக பதில் கொடுத்துவிட்டீங்கள் ஏற்றுக்கொள்வார்களோ எதிரணியினர் தெரியவில்லையே.

///நடுவரே இறுதியாய் ஒரு கருத்து வெளிநாட்டுக்கு வந்தால் சொந்தங்கள் இல்லை,பண்டிக்கை இல்லை,காய் கறி இல்லை,,ஆறு இல்லை குளம் இல்லை,என்று புலம்புகிறார்கள்,இது எல்லாமே வாழ்க்கையில் ஒரு பகுதி தான்.பல நல்ல விஷயங்கள் வெளிநாட்டில் கற்று வாழ்கிறார்கள்,அதனால் தான் நம் வாழ்க்கையே ஓடுகிறது என்று யோசிக்காமல் புலம்புகிறார்கள்,இன்று இது போன்ற விஷயங்களை விட்டு கொடுத்தால் தான் நாளைய பொழுதாவது நல்லபடியாக போகும்/// தத்துவமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டீங்கள்... இனி எதிரணியினர் முடிவைப் பார்க்க மட்டும்தான் மேடைக்கு வருவார்களோ என யோசனையாக இருக்கு எனக்கு. எங்கே எதிரணியினரே....

///பூஷுக்கு இப்பத்தான் ஹாப்பி... கால்மேல் கால்போட்டுக்கொண்டு சொக்கலேட் மில்க் குடிக்கிறது.. டொம் மாதிரி.

//// //// //// //// //// //// //// ////
வின்னி ///வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில், இப்போ என் பதில் நான் பெற்றது அதிகம் என்பதுதான். வந்த புதிதில் இங்கு பிடிக்கவில்லை என்று சொந்த நாட்டிற்கு திரும்ப போயிருந்தால் பல அனுபவங்களை இழந்திருப்பேன்./// அப்போ இப்ப, உங்கள் அனுபவம் பேசுகிறதென்கிறீங்கள்..

///இங்க கத்திரிக்கா கிடைக்கலை, மாங்காய் கிடைக்கலை என்று நினைத்து ஏங்குவதை விட்டு விட்டு இங்கு கிடைக்கும் காயை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கலாம் ஒரு புது ரெஸிப்பியாவது கிடைக்கும்/// ஆகா ஆகா என்ன அழகாகச் சொல்லிவிட்டீங்கள், இப்பத்தான் எனக்கும் தெரியுது, எப்படி அறுசுவைக்கு புதுப்புது ரெசிப்பி எல்லாம் வருகுதென்று.

///ஏன் வெளி நாடுகளுக்கு வர்றாங்க. அவர்களுடைய திறமைக் கேற்ற வாய்ப்பும், சம்பளமும் கிடைக்கவில்லை என்றுதானே?/// இது உண்மையான கேள்வி, எதிரணியினரை மேடையிலேயே காணவில்லை, விடை தேடப்போய் விட்டார்களோ என்னவோ..

///நம்மால் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்தது வெளி நாட்டு வாழ்க்கையே./// சிந்திக்கத்தான் வைக்கிறது உங்கள் பதிவு. எதிரணியினரே எங்கே போய்விட்டீங்கள்? கேள்விகேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள் கெதியா வாங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்