பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

இங்கு ஒரே ஒரு குறை தான் சொந்தபந்தங்கள் அருகில் இல்லாமை தான்..அவர்களும் வெளிநாட்டில் நம்முடன் என்று ஒரு கணம் சிந்தித்தால் வேண்டாம் என்றா சொல்லுவோம்..நிச்சயம் இல்லை.
எனக்கு விடுமுறைக்கு ஊருக்கு போனாலே முதல் இருவாரம் எரிச்சலாக வரும்..எதுவுமே கைக்கு எட்டாதது போல் காதை சுற்றிப் பிடிப்பது போல இருக்கும்...பிறகு போக போக பழகிவிடும்..
எனக்கு சொந்தங்கள் அருகிலில்லா குறை தான் தவிற மற்ற எதைக் கொண்டு பார்த்தாலும் இங்கு பெற்றது அதிகம்.
என்னை விடுங்க என் உறவினர்கள் முக்கால்வாசி பேர் இங்கு தான் இருந்தார்கள் இந்த தலைமுறையில் இந்தியாவிலேயே பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து அங்கு செட்டில் ஆகி விட்டார்கள்..அவர்கள் அனைவரும் இன்றும் சொல்வது வெளிநாட்டு வாழ்க்கையில் கிடைத்தல் சந்தோஷம் இன்று இல்லை என்று தான்
இங்கு தம்பதியர்களில் குடுகுடு கிழவியென்றாலும் சந்தோஷமாக என்றும் பதிநாறு போல இருப்போம்.ஊருக்கு போனால் ஒரே மாதம் கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூட குறைந்து விடும்..முகத்தை பார்த்து பேசுவதற்கே பலமுறை சுற்றி பார்க்க வேண்டும்.
இங்கு தோளில் கைப்போட்டு நடந்த சந்தோஷ தம்பதியர்கள் ஊருக்கு போனபின் கீரியும் பாம்புமாக ஆன கதையை அனுபவத்தால் கண்டிருக்கிறேன் என்ன காரணம் என்பது தான் புரியவில்லை.
ஒரு விமான நிலையம் என்றே வைத்துக் கொள்வோம்..எனக்கு ஊரிலிருந்து வர ரொம்ப பயம்..எதோ திருடியை பார்ப்பது போல பார்ப்பான்..அதுவே இங்கு வந்து சேர்ந்ததும் புத்துணர்ச்சி வந்துவிடும்..மிட்டாஇ தந்து நம்மை வரவேற்றதும் சொந்தங்களை பிரிந்த சோகம் எல்லாம் மறந்து விடுவேன்
தோ இப்ப இப்ப கூட என் கசின் சொல்கிறாள் கொடுத்து வச்சவ நீ அந்த வாழ்க்கை இனி எனக்கு திரும்ப கிடைக்கவே கிடைக்காது போல என்று..பல வருடங்கள் இங்கிருந்து ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள் அதான் இந்த சோகம்
எப்படி பார்த்தாலும் இங்கு பெறுவது அதிகம் தான்

அதிரா... புறமுதுகிட்டு ஓடுறேன்னு சொல்லாம சொல்லிப்போட்டீங்களே?? :((( அதெல்லாம் இல்லை.. இந்த ரெண்டு மூணு நாளும் வீட்டுல சரியான சாப்பாடே இல்லை.. பேசிகிட்டே இருந்தா, யாரு வேலை பண்ணறது?? :)) அதான், கல்யாண சமையல் சாதம் சாப்பிடலாம்ன்னு கிளம்பிட்டேன்.. இன்னமும் ஒரு அயிட்டம் கூட இந்த சந்தனா பண்ணலையேன்னு நீங்க அங்க திட்டிகிட்டு இருப்பது தெரியுது... :)))

வயிற்றுக்கு உணவில்லாத போது, செவிக்கும் சற்று ஈயப்படும்.. (சரியா தான சொல்லியிருக்கேன்.. :))) )

அப்புறம், அந்த பூஸ் இங்க வரவே வேண்டாம்.. ரொம்ப கொஸ்டின் கேட்டு இன்சல்ட் பண்ணுது.. :((( இங்கயே ஏதாவது பாத்துக்கறேன்... பூசொட பழைய வாழ்க்கை அங்க ரொம்ப இனிமையா இருந்திருக்கும், அதை மறுபடியும் வாழத்தான் கூப்பிட்டேன்.. ம்ம்.. பூசு கூட மதிக்கலையே.. :((

அப்புறம் மறுபடியும் மறுபடியும் தன்னம்பிக்கை பத்தி எதிரணியினர் பேசிகிட்டே இருக்காங்க... அங்க கிணத்துல குதிச்சு பழகிட்ட நீச்சலைக் கொண்டு இங்க swimming pool வந்து நீச்சலடிச்சா (இவங்களை பொறுத்த வரைக்கும்) அதுக்கு பேரு தான் தன்னம்பிக்கை போல.. எனக்கு இதை படிச்சா தான் டென்ஷன் ஆவுது... அமெரிக்காவுக்கு வராததுக்கு முன்னாடியே வெளி மாநிலத்துல ராத்திரி பன்னண்டு மணிக்கு போயி இறங்கி புதிய கல்லூரி சூழலுக்கு தயாரான பெண்களை எனக்கு தெரியும்.. இத்தனைக்கும் இங்கயாச்சும் இங்க்லீஷ்... அதுங்க போயி இருந்த இடத்துல மொழியும் வேற மொழி.... அந்த மாதிரி ஒரு ரெண்டு வருஷம் இவங்களும் இருந்துட்டு வந்திருந்தாங்கன்னா அப்புறம் தெரியும் தன்னம்பிக்கை எங்க கிடைக்கும்ன்னு..

இந்தியாவுல லேபர் சோர்ஸ் அதிகம், அதனால வேலைக்கு ஆள் கிடைக்கும்.. இங்க கிடைக்காது, அப்படியே இருந்தாலும் காசு ரொம்பவே அதிகம்.. அதனால தான், தன் கையே தனக்குதவி... அம்புட்டு சீப்பா வேலை பண்ண ஆள் கிடைச்சா - இங்கயும் வேலையாள் தான் பண்ணிட்டு இருப்பாங்க...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நடுவர் அதிராவிற்க்கும் தீர்ப்பை எழுதப்போகும் பூஷுக்கும் எனது வணக்கங்கள்.
தாய்நாட்டில் இருப்பது போல் வெளிநாட்டில் இருக்கமுடியாது. ஒண்ண இழந்தாதான் இன்னொண்ணு பெறமுடியும் ஆனா அந்த இழப்பின் வலி பெறுவதின் பலனைக்காட்டிலும் அதிகம். தன்னம்பிக்கை என்பது வெளிநாடு வந்ததாந்தான் வரும் அப்படிங்கறது இல்லை தன்னம்பிக்கை வளர்க்கப்படும் விதத்தில்தான் வரும் அந்த தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல் எங்கு அமைகிறதோ அங்கங்கு அவை வெளிப்படும். குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அன்பான அரவணைப்பு கிடைக்கறது இல்ல குழந்தைகள் ரெண்டு பெரும் வேலைக்கு போற வீட்டில் கிரீச்ல கொண்டுவிடனும் ஆனா அங்க இருந்தா நம்ம பெற்றோர்கள் கிட்ட விட்டு வளர்க்கிற வாய்ப்புகள் இருக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறைக்கான வாய்ப்புக்களே இல்லை.இந்தியாவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இப்ப இருக்க அப்டின்னு கேட்டா குறஞ்சுட்டுதான் வருது ஆனா என்னிக்காவது ஒருநாள் பெற்றோர்கள் நம்மக்கூட வர வாய்ப்பு இருக்கு கலாசாரம் நம்ம என்னதான் நம்ம முறைப்படி வளர்க்கணும் அப்படின்னு முயன்றாலும் குழந்தைகள் பெரியவர்கள் ஆக வளரும்போது வெளிநாட்டுச்சூழல் அவர்களை அதிகமாக பாதிக்கும் நம்ம ஒன்னும் சொல்வோம் வெளிநாட்டுச்சூழல் வேறமாதிரி இருக்கும் அதனால் குழப்பம் தான் வரும். எப்ப வேணா இங்கிருந்து கிளபுங்க அப்படின்னு சொன்னா நம்ம நிலைமை என்ன??
வெளிநாட்டில் வாழும்பொழுது அகதிகளாக மாறி தாய்நாட்டிற்கு ஓடோடி வந்து தஞ்சம் புகுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் என்னிக்குமே தாய்நாடுதான் நமக்கு சொந்தம். நான் இதுல சொன்னது ஏற்கனவே சொல்லிஇருக்கலாம் ஆனாலும் என்னுடைய கருத்தையும் சொல்ல்லிட்டு போலாம் அப்படின்னு வந்தேன். நன்றி

.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

So If you want to get many things You have to lose something!!,

so I declare "Veli Naatil Pettrathey Athikam"

இலா!! எங்கே காணாமல் போயிட்டீங்களோ என நினைத்தேன்.... ஆனாலும் ஒன்று, அநேகமாக எல்லா அமெரிக்கர்களும் ஒரே கட்சியிலேயே இருப்பதுபோல இருக்கே... ஏதாவது ஒப்பந்தமோ?:)..

இலா, பூஷுக்கு சரியான சந்தோஷம், வணக்கம் சொல்லிட்டீங்கள் என்று, சரியான ஹப்பியாக இருக்கு, அதிகம் ஹப்பியாகி முடிவைக் கோட்டைவிட்டிடவேண்டாம் என வோண் பண்ணி வச்சிருக்கிறேன்:).

///என்னாத்தை அம்மா இழந்துவிட்டீர்கள்.. ஒன்னுமே இல்லை... சில அற்ப சுகங்கள்ன்னு சும்மாவும் சொல்ல முடியலை... // ஆகா வந்த வேகத்திலேயே கேட்டுவிட்டீங்களே ஒரு கேள்வி.

///இத்தனை வசதிகள் இருக்கும் இடத்தில நிம்மதி இல்லைன்னு சொன்னா பூஷே சிரிக்கும். நிம்மதி அவரவர் மனதில.. அது உள்நாட்டில இருந்தாலும் சரி வெளிநாட்டில இருந்தாலும் சரி./// ஆகா இலா, பூஷையே, எங்கோ கொண்டு போயிட்டீங்கள்... எதிரணியினர் திகைப்பார்கள் நிட்சயம், உங்கள் கேள்வியைப் பார்த்து.

///அதே கதை தான் உங்களால் சமூகத்துக்கு ( உள்நாடு/வெளிநாடு) ஒன்னும் செய்யலைன்னா... எதுக்கு வெளிநாடு வந்து இழந்துட்டோம்ம்ன்னு எண்ணனும்... ஆர்வம் இருக்க யாருக்காவது பயன் படுமே யாராவது குடும்பம் பொருளாதர நிலமையில் முன்னேறி இருக்குமே.. /// சிந்திக்க வைக்கிறீங்கள்.

///அன்பு காட்டுங்க அன்பு கிடைக்கும்.. ஏன் உங்க கூட பிறந்தவர்கள் தான் அத்தை/மாமான்னு சொல்லனுமா.. இங்க என் தோழியின் குழந்தை அத்தை என்று தான் அழைக்கும் .. யாருக்காவது ஒன்னுன்னா ஓடி போங்க அவங்களும் ஓடி வருவாங்க/// அற்புதமான கருத்துக்கள்.... எதிரணியினர் கலங்கியிருப்பார்களென்று நினைக்கிறேன்.

///கல்யாணம் ஆகி புக்கம் போனதும் அங்க எல்லாமே பிடிக்காது கொஞ்சநாள் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கணும்.. அது ஒரு பேஃஸ்.. அது முடிந்ததும் நின்னு நிதானமா வந்து சொல்லுங்க என்ன அடைந்து இருக்கீங்கன்னு ஓகேவா..../// எதிர்க்கட்சியினரே நிதானமாக வாங்கோ வந்து நிதானமாக இதுக்கு ஒரு பதிலைச் சொல்லுங்கோ... இலா ரொம்ப கொதிச்சுப்போயிருக்கிறா..:)
//// //// //// //// //// //// //// //// //// ////

தளிகா, நீண்ட நாள் காணவில்லையே... ///எனக்கு சொந்தங்கள் அருகிலில்லா குறை தான் தவிற மற்ற எதைக் கொண்டு பார்த்தாலும் இங்கு பெற்றது அதிகம்/// அப்படிச் சொல்லுங்கோ, இனியாவது ஒத்துக்கொள்கிறார்களா பார்ப்போம்.

///இங்கு தம்பதியர்களில் குடுகுடு கிழவியென்றாலும் சந்தோஷமாக என்றும் பதிநாறு போல இருப்போம்.ஊருக்கு போனால் ஒரே மாதம் கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூட குறைந்து விடும்..முகத்தை பார்த்து பேசுவதற்கே பலமுறை சுற்றி பார்க்க வேண்டும்./// ஒரு வரியில் நிறைய அர்த்தம் சொல்லிட்டீங்கள்... எதிரணியினர் புரிந்துகொண்டால் சரிதான்.

///இங்கு தோளில் கைப்போட்டு நடந்த சந்தோஷ தம்பதியர்கள் ஊருக்கு போனபின் கீரியும் பாம்புமாக ஆன கதையை அனுபவத்தால் கண்டிருக்கிறேன் என்ன காரணம் என்பது தான் புரியவில்லை/// இதுக்குப் பதிலை எதிரணியினர் எப்படியும் சொல்வார்கள்.

மன்னிக்கவும், பூஷுக்கும் எனக்கும் கொஞ்சம் நேரமில்லாத காரணத்தால் உடன் பதில் தரமுடியவில்லை... மிகுதிப் பதில் இதோ... அனுப்புவேன்... எங்கே எதிரணியினரைக் காணவில்லை... வாங்கோ.. எல்லோரும் வாங்கோ.... கட்சியைக் காப்பாற்றும் பொறுப்பு உங்களுடையது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தனா///அப்புறம், அந்த பூஸ் இங்க வரவே வேண்டாம்../// மிக்க நன்றியாம் பூஷ் சொல்லச்சொன்னது, நடக்கமுடியாத பூஷ் என்றதும் பயந்திட்டீங்கள்போல:).,

///அங்க கிணத்துல குதிச்சு பழகிட்ட நீச்சலைக் கொண்டு இங்க swimming pool வந்து நீச்சலடிச்சா (இவங்களை பொறுத்த வரைக்கும்) அதுக்கு பேரு தான் தன்னம்பிக்கை போல.. எனக்கு இதை படிச்சா தான் டென்ஷன் ஆவுது../// ஆகா என்ன அழகாக உவமை, சரியான கேள்விதான் கேட்டிருக்கிறீங்கள். நிட்சயம் எதிரணியினர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும், நீங்கள் டென்ஷன் ஆகாதீங்கோ..

///இந்தியாவுல லேபர் சோர்ஸ் அதிகம், அதனால வேலைக்கு ஆள் கிடைக்கும்.. இங்க கிடைக்காது, அப்படியே இருந்தாலும் காசு ரொம்பவே அதிகம்.. அதனால தான், தன் கையே தனக்குதவி... அம்புட்டு சீப்பா வேலை பண்ண ஆள் கிடைச்சா - இங்கயும் வேலையாள் தான் பண்ணிட்டு இருப்பாங்க/// நச்சென்று பதிலையும் கொடுத்துவிட்டீங்கள்... பார்ப்போம் என்ன ஆனார்களோ தெரியேல்லையே.... எதிரணியினர்.

//// //// //// //// //// //// //// ////
அநாமிகா //நடுவர் அதிராவிற்க்கும் தீர்ப்பை எழுதப்போகும் பூஷுக்கும் எனது வணக்கங்கள்// ஆகா இன்று பூஷுக்கு "வெள்ளி துலாவில்" அவ்வளவு குஷியாக இருக்குது.

///ஒண்ண இழந்தாதான் இன்னொண்ணு பெறமுடியும் ஆனா அந்த இழப்பின் வலி பெறுவதின் பலனைக்காட்டிலும் அதிகம். /// இப்படியும் ஒரு கருத்து இருக்கென்று அழககாகப் புரிய வைத்துவிட்டீங்கள்.

///வெளிநாட்டில் வாழும்பொழுது அகதிகளாக மாறி தாய்நாட்டிற்கு ஓடோடி வந்து தஞ்சம் புகுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் என்னிக்குமே தாய்நாடுதான் நமக்கு சொந்தம்/// இதை யாரும் மறுக்க முடியுமோ? இல்லை எதிரணியினர்தான் மறுத்துவிடுவார்களோ????

//// //// //// //// ////
சைனீஷ்... உங்கள் வரவு நல்வரவாகட்டும். புதியவர் என நினைக்கிறேன்(பதிவில்). கீழே எழுத்துதவி என இருக்கே, அதன் மூலம் தமிழில் எழுதலாம், பட்டிமன்றம் மூலம் தமிழில் எழுதி அறுசுவைக்குள் அடிஎடுத்து வைக்க என் வாழ்த்துக்கள். முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.

ஆராரிரோ பாடியதாரோ.. தூங்கிப்போனதாரோ........ பூஷ் எனக்குப் பாடுகிறது... மேடையில் ஒருவரும் இல்லையாம்... நிம்மதியாக என்னை நித்திரைகொள்ளட்டாம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

யாருப்பா அது, தூங்கிக்கிட்டுயிருந்த என்னை தாலாட்டு பாடி எழுப்பிவிட்டது.

சந்தனா நீங்க ரொம்ப நல்லவங்க. ஏன்னா நடுவர் அடிச்சாலும் உதைச்சாலும் உண்மையே பேசுறீங்க. எதிரணியில இருந்தாலும் எங்க அணிக்காக நிறைய வாதாடுறீங்க.

நாம எல்லோருமே rational thinkers (அப்படித்தான் எங்க அணிக்காரங்க நம்பிகிட்டு இருக்கோம்). எந்த விஷயம் நமக்கு அதிகமான Utility - ஐ (நன்மைன்னு கூட எடுத்துக்கலாம்) தருகிறதோ அதைத்தான் செய்வோம். இது "நார்மலான" ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். காரணங்கள் வேண்டுமானால் ஒருவருக்கொருவர் வேறுவேறாக இருக்கலாம். நமக்காக, கணவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, கணவருக்காக (??), குடும்பத்திற்காக, இன்னும் பல காரணங்கள். நீங்கள் மட்டுமல்ல வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். ஏனெனில் எந்த ஒரு external force -ம் நீங்கள் உங்கள் நாட்டுக்கு செல்வதை தடுக்கவில்லை. காரணம் எதுவாகிலும் பெறுவது அதிகம் என்பதால் தான் அவர்கள் அங்கிருக்கிறார்கள். நீங்களும் இப்போது நன்மைதான் அதிகம் என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். ("அதற்காக "பெற" வந்ததை "பெறாமலும்" போவதில்லை"). அடுத்து நீங்கள் சொல்லியது -("ஆனால் லாங் டேர்மாக இங்கேயே இருந்தால் இழப்புகளே அதிகமென்று தான் இன்று வரை தோன்றுகிறது.. எனினும், திரும்பி போவதென்ற முடிவு அங்கும் இங்கும் அப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையையும் மற்ற உறவுகளையும் பார்த்தே எடுக்கப் படும் என்பதால் இது தான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது")- இது பெரும்பாலும் எல்லோரும் ஆரம்ப காலங்களில் சொல்லும் வசனம்தான். ஆனால் முடிவில் பெரும்பாலும் திரும்பிச் செல்வதில்லை. அதற்கு ஒரு காரணம் Long term என்றால் எவ்வளவு காலம் என்பதே ஒரு கேள்விக்குறிதான். காலம் அங்கு நிர்ணயிக்கப்படவில்லை. என்னுடைய கணிப்புப்படி உங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் "பெறுவதே" அதிகமாக இருக்கும். (நான் நன்றாக சம்பாதித்த பின் தானம் செய்ய ஆரம்பித்திவிடுவேன் என்று சொல்பவன் ஒரு நாளும் தானம் செய்யப்போவதில்லை).

அடுத்து, ஜோக்குக்காக சொன்னாலும் ஒரு நிதர்சன உண்மையை சொல்லிவிட்டீர்கள். அதில் ஒரு சின்ன திருத்தம் மட்டுமே. மூன்றாவது பிள்ளை ரவுடியாக இருந்தால் மட்டும் போதாது. அரசியல்வாதியும், போலிசும், வக்கீலும் கூட ரவுடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும்.

//டாக்குமெண்ட் கொண்டு போனேங்க.. ஒன்னுல மிடில் இனிஷியல் இல்லைன்னு சொல்லி நிராகரிச்சுட்டாங்க.. :((( மத்தபடிக்கு இட் வாஸ் எ ட்ரூ டாக்குமெண்ட்.. :((( மறுபடியும் எல்லாத்தையுமே ஆரம்பிச்சோம்.// அங்க சரியான டாக்குமெண்ட் இல்லன்னுதான் நிராகரிச்சாங்க. நம்ம ஊருல டாக்குமெண்ட் மட்டும் போதும்னு யாரையாவது சொல்ல சொல்லுங்க.

சன நெரிசலும் அழுக்கடைந்த வீதியும் புழுதியும் வேர்வையும் ஏன் வறுமையும் என்னை பெரிதும் பாதித்ததில்லை. நம் நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் ஏட்டளவில் மட்டுமே. பணமும் பலமும் உள்ளவர்களுக்கு மட்டுமே நம்நாடு. நமது உரிமையை பெற கூட பரிசும் சிபாரிசும் தேவை. அரசு ஊழியர்கள் கூட தன் வேலையை தன் கடமையாக நினைப்பதில்லை. அவர்கள் ஏதோ மக்களுக்கு ஒரு Favor செய்வதாகவே நினைத்துக்கொள்கிறார்கள். இன்றும் நிறைய இடங்களில் அரைநாள் நம் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டுதான் Bank - இல் ஒரு DD எடுக்கவேண்டியுள்ளது. (இங்கு நான் கூட்ட நெரிசலை சொல்லவில்லை. அதிகாரிகளின் பொறுப்பின்மையை மட்டுமே சொல்கிறேன்.

என்று நம் கல்விமுறையில் இந்த "Rote System" மாறுமோ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம். எனக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கும்வரை என்பிள்ளை அப்படி ஒரு புத்தக மூட்டையை தூக்குவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன். (இதை யாராவது ஒரு விவாதமாகவோ, அடுத்த ப.மன்றமாகவோ நடத்தினால் நல்லது. 12 வருடங்கள் வெறும் மனப்பாடம் செய்வது எப்படி என்று மட்டுமே படிக்கிறோம். ஒன்று முதல் 12 வரை ஆங்கிலத்தை ஒரு 'மொழிப்பாடமாக' படித்து முடித்தபின் ஒரு மாணவனால் அந்த மொழியில் ஒரு வாக்கியம் கூட பேச முடியவில்லையெனில் அந்த கல்வி முறை எப்படி சரியானதாக இருக்க முடியும்.)

எங்கயோ ஆரம்பிச்சு எங்கோ முடிச்சிட்டேன். எங்க கட்சிகாரங்க நிறைய சொல்லிட்டாங்க. புரிஞ்சவங்க அவங்கவுங்க எடத்துல சந்தோசமா இருங்க. புரியாதவங்க.... என்ன சொல்றதுன்னு தெரியல. ஹைஸ் அண்ணன கூட காணும். இல்லன்னா அவர்கிட்டயாவது சொல்லி Free - ஆ Flight - லையே அவங்கவுங்க போக வேண்டிய இடத்துக்கு அனுப்பிச்சி வச்சிடலாம். நீங்க Address சொல்லாவிட்டாலும் Admin கிட்ட கேட்டாவது (ஹேமா அவரை எப்படியும் கண்டுபுடிசிடுவாங்கன்னு நெனைக்கிறேன்) உங்க இடத்துக்கு Flight (ஹைஸ் அண்ணா வந்தபிறகு இப்ப யாரும் Auto அனுப்புறது இல்ல ஹேமா) அனுப்பி வைக்கிறோம்.

நிறைய பேர் கலாச்சாரம்... கலாச்சாரம் -ன்னு பேசினாங்க. அப்படின்னா என்னங்க? ஆணாதிக்கத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடும் அதிலதாங்க இருக்கு.

எங்க அணிக்காரங்க நிறைய சொல்லிபார்த்திட்டாங்க. இன்னும் நான் வெளிநாட்டில் தான் இருப்பேன், இழந்துகொண்டுதான் இருப்பேன் என்று சொல்பவர்கள் எல்லாம், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

மீண்டும் தீர்ப்பிற்கு பிறகே வர முடியும். (என்ன சந்தனா, ஒரு தொல்ல ஒழிஞ்சிதுன்னு நினைக்குறீங்களா? நினைக்காதீங்க. திடீர்ன்னு வந்தாலும் வருவேன். நீங்க மட்டும் weekend வருவேன்னுட்டு இடையிலேயே வந்துடீங்கல்ல)அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

அதிராவிற்கும் எம் அணிக்கும்,எதிர் அணித்தோழிகளுக்கும் வணக்கம்.குத்துவிளக்கு ஏற்றிவிட்டு போனேன்.திரும்ப பட்டிமன்றத்திற்கு வருவதற்கே இந்தபாடு.காரணம் இப்ப நான் இருப்பது இங்கு.அங்கு இருந்தால் என் பதிவு தினமும் அறுசுவையில் இலலாமல் இருக்காது.இது ஒன்று போதும்,நான் இங்கு எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறேன் என்று உதாரணம் சொல்ல.எனவே தான் பெற்றதே அதிகம் அங்கு என்று ஆணித்தரமாக சொன்னேன். இந்த டாபிக் நிஜமாகவே ரொம்ப அருமை.என்னை விசாரித்த அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.பதிவு போடுவதற்கே நேரமில்லை என்பதால் இதில் தெரிவிக்கிறேன்.எம் அணித்தோழிகளின் பதிவை பார்த்த பின்பும் என்ன யோசனை,நல்ல தீர்ப்பு சொல்லுங்கள் நடுவரே!
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இஷானி ///யாருப்பா அது, தூங்கிக்கிட்டுயிருந்த என்னை தாலாட்டு பாடி எழுப்பிவிட்டது./// ஓ பூஷ் என்னைத் தூங்க வைக்கப்பாடிய பாட்டு, உங்களை எழும்பப்பண்ணிவிட்டதோ? அவ்வளவு மோசமாகவா பூஷ் பாடியது?

///ஏனெனில் எந்த ஒரு external force -ம் நீங்கள் உங்கள் நாட்டுக்கு செல்வதை தடுக்கவில்லை. காரணம் எதுவாகிலும் பெறுவது அதிகம் என்பதால் தான் அவர்கள் அங்கிருக்கிறார்கள்./// யாரைச் சொல்கிறீங்கள்? பூஷுக்கும் புரியவில்லையாம், ஓ எதிரணியினரை மறைமுகமாகத் தாக்குறீங்களோ?

///என்னுடைய கணிப்புப்படி உங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் "பெறுவதே" அதிகமாக இருக்கும். (நான் நன்றாக சம்பாதித்த பின் தானம் செய்ய ஆரம்பித்திவிடுவேன் என்று சொல்பவன் ஒரு நாளும் தானம் செய்யப்போவதில்லை)./// ஆகா.. தத்துவமாக அள்ளி மேடையில் வீசி, எதிரணியை மேடையை விட்டே ஓடப்பண்ணிவிடுவீங்க போல இருக்கே.

///பணமும் பலமும் உள்ளவர்களுக்கு மட்டுமே நம்நாடு. நமது உரிமையை பெற கூட பரிசும் சிபாரிசும் தேவை/// உண்மையாகவா சொல்கிறீங்கள்? எதிரணிக்குப் புரிஞ்சாச்சரி.

///ஹைஸ் அண்ணன கூட காணும். இல்லன்னா அவர்கிட்டயாவது சொல்லி Free - ஆ Flight - லையே அவங்கவுங்க போக வேண்டிய இடத்துக்கு அனுப்பிச்சி வச்சிடலாம். நீங்க Address சொல்லாவிட்டாலும் Admin கிட்ட கேட்டாவது/// இஷானி,,, மேடைக்கு வந்தால், பேசிப்போட்டு அடக்க ஒடுக்கமாக கதிரையில இருந்திடவேணும்:), சும்மா இருக்கிற சங்கையெல்லாம் ஊதிக்கெடுக்கப்படாது:), நீங்க குறிப்பிட்ட இருவருமே, அநியாயத்துக்கு ரொம்ப நல்லவங்க:), ஒருவர் குண்டை முக்கித்தக்கி பிளேனில ஏத்திவிட, மற்றவர் நேரே கொண்டுவந்து நடுவருக்குத்தான் போடுவார், கட்சிக்காரர்களுக்கல்ல:). பூஷிருக்கிற தைரியத்தில நடுங்காமல் இருந்தேன். அமராபதி, கணக்கை தப்பா எடுத்து 99 பாட்டோடு முகத்தைக்காட்டிக் கெடுத்ததுபோல(கதை சரியாகத்தான் இருக்கும்), இன்னும் 2 நாட்களே முடிவுக்கு இருக்க, அதுக்குள் ஞாபகப்படுத்திட்டீங்க:). இருந்தாலும் பூஷிருக்க எனக்கென்ன பயம்.

//ஹைஸ் அண்ணா வந்தபிறகு இப்ப யாரும் Auto அனுப்புறது இல்ல ஹேமா)/// நல்ல கண்டுபிடிப்பு இஷானி, நானே இதைக் கண்டுபிடிக்கேல்லை.

///எங்க அணிக்காரங்க நிறைய சொல்லிபார்த்திட்டாங்க. இன்னும் நான் வெளிநாட்டில் தான் இருப்பேன், இழந்துகொண்டுதான் இருப்பேன் என்று சொல்பவர்கள் எல்லாம், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது/// கடவுளே முழக்கமெல்லாம் ஒரு கட்சியில் இருந்துதான் கேட்கிறதுபோல இருக்கே. எதிரணியினர், உடைமைகள்யெல்லாம் எடுத்துக்கொண்டு மேடையை விட்டே போய்விட்டினமோ? எங்கே காணவில்லையே ஒருவரையும்.

((இஷானி நகைச்சுவைக்கே சில கதைகள், தப்பாக எடுக்கப்படாதென்று பூஷ் சொல்லச் சொன்னது)).

//// //// //// //// //// //// ////
ஆசியா ///பூஸ் பூஸ் பெற்றதே அதிகம்./// எங்க பிடித்தால் வெல்லலாம் என யோசிச்சுத்தான் பூஷாரைக் கூப்பிடுறீங்க, நடுவரில் வேலையில்லை, பூஷின் தீர்ப்புத்தான் தீர்ப்பு என்பதனை நன்கே தெரிஞ்சுகொண்டு வந்திருக்கிறீங்கள்.

///இப்ப நான் இருப்பது இங்கு. அங்கு இருந்தால் என் பதிவு தினமும் அறுசுவையில் இலலாமல் இருக்காது.இது ஒன்று போதும்,நான் இங்கு எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறேன் என்று உதாரணம் சொல்ல/// என்ன அழகாக உங்களையே காரணம் காட்டிச் சொல்லிட்டீங்கள். இனிமேலும் எதிரணியினர் மேடையில் ஏறுவினமோ?????????

///எம் அணித்தோழிகளின் பதிவை பார்த்த பின்பும் என்ன யோசனை,நல்ல தீர்ப்பு சொல்லுங்கள் நடுவரே!/// பதிவைப் பார்த்த பின்னர்தானே எனக்கும் பூஷுக்கும் மண்டை கலங்கிப்போச்சு.... தீர்ப்பு நல்லதாகத்தான் இருக்கும் பக்கம்தான் எதுவென தெரியவில்லை பூஷாருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவர் அவர்களே தூங்காதீங்கோ:) எழுந்திருங்கோ:) இதோ நாங்கதான் வந்துட்டோமில்ல:)

// அந்த தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல் எங்கு அமைகிறதோ அங்கங்கு அவை வெளிப்படும்//

இதை இதைத்தான் நாங்க சொல்றோம். நம் தன்னம்பிக்கை வெளிப்படுவதற்கான சூழ்நிலை வெளி நாட்டில் அதிகம் என்கிறோம்.

நம்மை பெற்று, வளர்த்து திருமணம் செய்து குடுத்து கடைமைகளை எல்லாம் நிறைவேற்றி அப்பாடா என்று ஓய்வு எடுக்கப் போகும் தாய், தந்தையரிடம், இந்தாங்க உங்க பேரப் பிள்ளை, இதையும் வளர்த்து ஆளாக்குங்கள் என்று கூறி விட்டு நம் வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம். வெளிநாட்டிலோ தன் கையே தனக்கு உதவி என்று எப்பாடு பட்டாவது நம் பிள்ளைகளை நாமே வளர்க்கிறோமே அப்போது கிடைப்பதும் தன்னம்பிக்கைதான்.

இங்க படிப்பிற்காக வரும் மாணவர்களை எடுத்துக்கோங்க. பெரிய செல்வந்தர்கள வீட்டு பிள்ளைகள் கூட உணவகங்களில் வெங்காயம் நறுக்குவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளை செய்து அவர்கள் தேவைக்காக பணம் சம்பாதிக்கிறார்கள். காசில்லை, பணம் அனுப்புங்கோன்னு வீட்டிற்கு தெரியப் படுத்துவதும் இல்லை. (இவையெல்லாம் நான் நேரில் பார்த்தது). உடனே இதற்கும் இங்கு ட்யூஷன் ஃபீஸ் அதிகம், வீட்டு வாடகை அதிகம் என்று சொல்லி விடாதீர்கள். இப்படி பெற்றோரை எதிர்பாராமல் தன்னை மட்டுமே நம்பி அவர்கள் முன்னேறுகிறார்களே. இதனால் அவர்களுக்கு கிடைப்பதும் தன்னம்பிக்கைதான்.

நடுவர் அவர்களே இதை படித்த பின்பும் எதிரணியினருக்கு டென்ஷன் வநதால் நீங்கதான் உங்களுக்கு அளிக்கப்படும் மோர், இளநீர் போன்றவற்றை அவங்களுக்கும் குடுத்து கூல் டவுன் ஆகச் சொல்லுங்கோ:)

இப்பவும் நான் அப்ப சொன்னதையேதான் திரும்ப சொல்றேன்.இந்தியாவில் எல்லா துறைகளிலுல் வேலை வாய்ப்பு, சம்பளம் எல்லாம் சரி சமமா இருக்குன்னா ஏன் ஏகப்பட்ட மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல் etc.. இஞ்சினியர்கள் எல்லாம் இப்போ சாஃப்ட்வேர் இஞ்சினியர்களா இருக்காங்க:-( இந்த நிலை மாறினால் ரொம்ப சந்தோஷமே.

வெளி நாட்டிற்கு கிளம்பி வரும்போது நம் சொந்தங்கள் யாரும் கூட வரமாட்டார்கள் என்று தெரிந்துதானே வருகிறோம். வந்தபின் அதை நினைத்தே கலவை கொள்வதால் எந்த பயனும் இல்லை.

இறுதியாக நான் சொல்லவது இதுதான். இங்கு கிடைக்கும் 'அதிகம்கள்' இந்தியாவில் இருப்பவர்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எங்கள் அணியினர் ஆசைப் படுகிறோம். ஆனால் எதிரணியினரோ, வேண்டாம், வேண்டாம் இந்தியாவில் இப்போது இருப்பதே போதும் என விடாப் பிடியாக இருக்கிறார்கள். ஆகவே நடுவர் அவர்களே நன்றாக சிந்தித்தால் எங்கள் வாதங்களில் உள்ள உண்மைகள் உங்களுக்கு புரியும் என்று கூறி விடைபெறுகிறேன்.

இஷானி, நீங்க நம்ம அணின்னு சொல்லி போட்டு ஆளையே காணோமேன்னு பார்த்தேன்:) அதுக்குள்ளே போறேன்னு சொல்லிட்டீங்க. சந்தனா வேறு என்னை ரொம்ப முறைக்கிறாங்க:) நீங்கள் இன்னொரு முறை வருவதற்கு முயற்சி பண்ணுங்கள்.

மேலும் சில பதிவுகள்