பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

அங்க படிச்சிட்டு வந்து தானே இங்க வந்து இந்த போடு போடு போட்டுட்டு இருக்கீங்க :))))) அப்பரம் அந்த கல்வி முறை சரியானதா அப்டின்னு கேட்டா எப்படி ?? .

//நம்மை பெற்று, வளர்த்து திருமணம் செய்து குடுத்து கடைமைகளை எல்லாம் நிறைவேற்றி அப்பாடா என்று ஓய்வு எடுக்கப் போகும் தாய், தந்தையரிடம், இந்தாங்க உங்க பேரப் பிள்ளை, இதையும் வளர்த்து ஆளாக்குங்கள் என்று கூறி விட்டு நம் வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம். வெளிநாட்டிலோ தன் கையே தனக்கு உதவி என்று எப்பாடு பட்டாவது நம் பிள்ளைகளை நாமே வளர்க்கிறோமே அப்போது கிடைப்பதும் தன்னம்பிக்கைதான்.

நான் சொன்னது வேலைக்கு போகும் பொது கிரீச்ல விடறதுக்கு பெற்றோரிடம் விடலாம் பாட்டி தாத்தாவும் சந்தோஷமா பார்த்துப்பாங்க. அவர்களும் இந்த தருணத்தை மிஸ் பண்ணறாங்க குழந்தைகளும் எல்லோர்ட கூடவும் இருக்கும் இங்க உள்ள குழந்தைங்க பெற்றோர்களை விட்டுடுட்டு இருப்பாங்களா??(அவசரித்திர்க்க்காகவாவது ) அப்பரம் வருஷம் ஒருமுறை ரெண்டு மாதம் லீவில பாட்டி வீட்ல போய் நீங்கல்லாம் என்ஜாய் பண்ணி இருப்பிங்களே அது இப்ப உள்ள குழந்தைகளுக்கு கிடைக்குதா ???
இப்ப ஊருக்கு கூட்டிட்டு போறோமே அப்படின்னு சொன்னா குழந்தைங்க என்ஜாய் பண்ணினாலும் எதோ ஒன்னு மிஸ்ஸிங் அப்படின்னு உங்க அணில தான் சொல்லி இருக்காங்க ஏன்னா நம்ம அடிக்கடியும் ஊருக்கு போவோம் இல்லன்ன அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க இங்க அப்படி கிடையாது அதனால இப்பவே அவர்கள் தனியாகவே இருந்து பழகிட்டாங்க அதனால அங்க போனா அவங்களுக்கு என்ஜாய் பண்ண முடியல அட்ஜஸ்ட் பண்ணி வாழறது அப்படிங்கறது எல்லாம் இல்ல

//தன்னம்பிக்கை வெளிப்படுவதற்கான சூழ்நிலை வெளி நாட்டில் அதிகம்
இந்தியாவிலேயே நீங்க தமிழ் நாட்டில் இருந்து வேறு எந்த நாட்டுக்கு போனாலும் உங்க தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல் வரும் :))) இல்ல கிராமத்திலிரிந்து நகரத்திற்கு நகரத்தில் இருந்து மாநகரத்திற்கு அப்படின்னு வந்தாலும் வெளிப்படும்:)))

//இங்க படிப்பிற்காக வரும் மாணவர்களை எடுத்துக்கோங்க. பெரிய செல்வந்தர்கள வீட்டு பிள்ளைகள் கூட உணவகங்களில் வெங்காயம் நறுக்குவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளை செய்து அவர்கள் தேவைக்காக பணம் சம்பாதிக்கிறார்கள். காசில்லை, பணம் அனுப்புங்கோன்னு வீட்டிற்கு தெரியப் படுத்துவதும் இல்லை. (இவையெல்லாம் நான் நேரில் பார்த்தது). உடனே இதற்கும் இங்கு ட்யூஷன் ஃபீஸ் அதிகம், வீட்டு வாடகை அதிகம் என்று சொல்லி விடாதீர்கள். இப்படி பெற்றோரை எதிர்பாராமல் தன்னை மட்டுமே நம்பி அவர்கள் முன்னேறுகிறார்களே. இதனால் அவர்களுக்கு கிடைப்பதும் தன்னம்பிக்கைதான்

இது இங்க மட்டும் இல்லங்க கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து வேலை பாருக்கும் போது எல்லாருக்குமே தேவையான சம்பளம் கிடைக்காது அப்பா அவங்க கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வராங்க என்ன்னோட அண்ணாவே முத முதலா வேலைக்கு அப்படின்னு வரும்போது அவனுக்கு கிடச்ச சம்பளம் பத்தாது எங்க வீட்லயும் சப்போர்ட் ஓரளவு முதல் மூணு மாதம் தான் பண்ண முடியும் அது அவனுக்கும் தெரியும் தெரிஞ்சுதான் போனான் அதுக்கப்பறம் அவனும் எங்க அம்மா அப்பாட்ட வந்து பணன்த்தை அனுப்புங்க அப்படின்னு கேக்கல. கஷ்ட்டபட்டுதான் தான் வந்தான் அவனோட தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல்
அங்கயே கிடைச்சுது
அங்க இருந்து கஷ்டப்பட்டு வந்தவங்கதான் இங்க தான் கஷ்டபட்டாலும் பரவா இல்லை தன் பெற்றோரை கஷ்டப்படுத்தக்கூடாது அப்டின்னு நினைக்கிறாங்க
நீங்க இங்கயே இருந்துட்டு உங்க குழந்தைகளுக்கு தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல் எப்படின்ங்க வரும் ???:))))

குழந்தைங்களுக்கும் ஓரளவு கஷ்டம் தெரிஞ்சாதான் அவங்களுக்கு நல்லது அதவிட்டுட்டு சொகுசா இருந்தா அப்பரம் கஷ்டம் வரும்போது ரொம்ப கஷ்டம்

//இஞ்சினியர்கள் எல்லாம் இப்போ சாஃப்ட்வேர் இஞ்சினியர்களா இருக்காங்க

எல்லாரும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்களா இல்லங்க பெரும்பான்மையானவர்கள் இருக்காங்க அதுக்கு காரணம் நீங்கதான் :))))))))
வெளிநாட்டில் வந்து செட்டில் ஆகறத பார்த்துட்டு அவங்களும் வர விரும்பறாங்க தப்பு ஒண்ணும் இல்லியே???:))

//இறுதியாக நான் சொல்லவது இதுதான். இங்கு கிடைக்கும் 'அதிகம்கள்' இந்தியாவில் இருப்பவர்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எங்கள் அணியினர் ஆசைப் படுகிறோம். ஆனால் எதிரணியினரோ, வேண்டாம், வேண்டாம் இந்தியாவில் இப்போது இருப்பதே போதும் என விடாப் பிடியாக இருக்கிறார்கள்.
நீங்க எல்லாரும் வளர்ந்த நாட்டில் வந்து இருந்து கொண்டு வளர்ந்து வரும் நாட்டை பத்தி இத மாதிரி இல்ல அப்படின்னு சொல்றீங்க

கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் அப்பவாவது அங்க வருவீங்கன்னு நினைக்கிறேன் :))) அப்ப உங்களை வரவேற்க நான் அங்கு தயாராக இருக்கிறேன்.

தீர்ப்பை எழுதப்போகும் பூஷ் உங்களை வரவேற்கவும் தயாராக இருக்கிறேன் தாய்நாட்டில் அதனால் வரவேற்ப்பு :)) உங்களுக்கு எப்படி வேண்டுமோ அதற்க்கு ஏத்தார் போல் தீர்ப்பை எழுதுமாறு :))) கேட்டுக்கொண்டு நன்றி கூறி விடை பெறுவது

யார்மனதையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

நிறைய யோசிச்சு எல்லாம் டைப் பண்ண முடியல. அதனால ஒரு சில வரிகளில் மட்டும் மற்றவர் கருத்துக்களுக்கு பதில். (இந்த வேகமா, நிறைய டைப் பண்றது எப்படின்னு அதிராவோ, santho - வோ சொல்லிகொடுங்கப்பா. அவங்க எல்லாம் டைப் பண்றாங்களா, இல்ல Voice Recognition Typing Software வச்சிருக்கங்கலான்னே தெரியலையே)

//அம்மா அப்பாவின் நடுவில் படுத்து தூங்கும் தூக்கம். மனதில் எந்த ஒரு நெனைப்பும் இல்லாமல் secured ஆன தூக்கம். இப்பொது தூங்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது.// இது குழந்தைல பண்றது. இப்ப ஊருல இருந்தாலும் இத பண்ண முடியாது. இங்க இருந்தும் என் புள்ள இதத்தான் பண்ணிக்கிட்டு இருக்கு.

//அண்ணாவின் நகைசுவை பேச்சு, பாசமான கவனிப்பு. நினைத்த பொது Ice crème சாப்பிடும் எண்ணம். அக்காகளின் அன்பான போதனைகள். + எலோரிடமும் போடும் சண்டை மிகவும் முக்கியமானது// இது கல்யாணத்துக்கு முன்னாடி. இப்ப உள்ள நிலமையில, இங்க இருந்தாலும், ஊருலேயே இருந்தாலும் அண்ணா வீட்டுக்கு போகும் போது இது நடக்கும். வெளிநாட்டு வாழ்க்கை இதற்கு தடை அல்ல.

//கல்யாண வீட்டு கலாட்டா முக்கியமாக கல்யாண சாப்பாடு// இது மிகப்பெரிய இழப்புதான் (சிலருக்கு)

// நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து அடிக்கும் அரட்டை// ஊருலேயே இருந்தாலும் இப்ப எல்லாம் போன்லதான் பேசிக்கணும். இங்க வந்ததினால இன்னும் நிறைய (இங்கும் சேர்த்து) நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதே உண்மை.

//விளையாட்டு indoor game எடுத்து கொள்ளுங்களேன், இப்போது மறந்தே விட்டது// ஊர்ல உள்ளவங்களுக்கும் இது மறந்திடுச்சு. இதுக்கும் வெளிநாட்டு வாழ்க்கையா காரணம்? நம்பமுடியல. வெளிநாடு வந்தவுடன் பேன்ட் போடனுமேன்னு Excercise பண்ண ஆரம்பித்த பெண்களைத்தான் நான் நிறைய பார்த்திருக்கிறேன்.

//மாமியாரின் பாசம் + சமையலின் மணம். அவர்களுடன் 1 1/2 வருடம் தனியாக இருந்தேன்.// பாராட்டுக்கள். எல்லாராலும் அப்படி முடியாது. கோடி கொடுத்தாலும் கூட்டு குடும்பம் வேண்டாம் என்ற நிலையில் உள்ள நிறைய பேரை அறுசுவை பார்த்துக் கொண்டிருக்கிறது.

//கடவுளே எப்பதான் ஊறுக்கு போவேனோ!!!!!!!!!!!!!!!!!!!!// கடவுள் எல்லாம் டிக்கெட் வாங்கி அனுப்பமாட்டரு. உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லுங்க. சந்தோசமா அனுப்பி வைப்பாரு. ரெண்டே மாசத்தில அங்க உள்ளவங்க உங்கள இங்க அனுப்பிச்சு வச்சிடுவாங்க.

//அங்கேயே போய் வருட கணக்கில் இருக்கும் நமக்கு தானே தெரியும் அது எத்தனை பெரிய துயரம் என்று// சிரியாவ பத்தி ரசிச்சு ரசிச்சு எழுதி, எல்லாரையும் சிரியாவுக்கு வர தூண்டின நீங்களா இப்படி சொல்றது. ஒன்னு தெரியுமா, வெளிநாடு யாரையும் புடிச்சி வைக்கல. நம்ம தான் அத புடிச்சிகிட்டு இருக்கோம். நீங்க விருப்ப பட்டால் எப்ப வேணாலும் உங்க பிடியை விடலாம். எந்த தடையும் இல்லை.

//போற இடத்தில் வெளி நாட்டுக்காறன் என்று அடித்து விரட்டும் நாடுகளும் உண்டு// நம்ம ஊருலயும் இது உண்டுங்க. Bangalore - லிருந்து தமிழ்நாட்டுக்கு விரட்டப்பட்டவர்களும் உண்டு.

//நீங்கள் சொல்வது அயல் நாட்டில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் ஆனால் அடித்தட்டு மக்களை பார்த்தால் அவர்களுக்கு பணத்தை தவிர அவர்களுக்கு வேறு எந்த நன்மையும் இல்லை. இழப்புதான் அதிகம்.// வெளிநாட்டில பணமாவது கிடைக்குது. நம்ம ஊருல பணமும் கிடையாது அவங்க உயிருக்கு ஒரு மதிப்பும் கிடையாது. சமூகத்துல ஒரு அந்தஸ்தும் கிடையாது.

//இப்பட்டி மன்றத் தலைப்பு இன்னும் ஒன்றிரண்டு வருடங்களுக்கு அப்புறம் மறுபடியும் வந்தால் ஆச்சர்யமில்லை, நான் அணி மாறினாலும் மாறியிருப்பேன்... எனினும் இந்த அணியிலேயே இருப்பதற்கான சாத்தியங்கள் தான் இப்போது அதிகம்// 2 வருஷம், 5 வருஷம், 10 வருசம்னு இங்கேயே இருப்பீங்க, ஆனா இழந்துகிட்டு இருக்கேன்னு சொல்லுவீங்க. முரண்பாடா தெரியல

//இப்பொழுது தெரியாது... உடம்பு நல்லாயிருக்கும் வரை இந்த ஊர் தாங்கும்... எந்த விதத்திலும் உடல்நலக் குறை ஏற்ப்பட்டால் அப்போது புரியும்// நாங்க தெளிவா இருக்கோங்க. வெளிநாடு நம்ம நாட்டைவிட உசந்ததுன்னு யாரும் பேசல. எப்ப எனக்கு இங்க இருந்தா இழப்புன்னு தெரியுதோ அப்ப நான் இங்க இருக்க மாட்டேன். நிச்சயமா ஊருக்கு போய்டுவேன். அது உடம்பு சரியில்லாம வந்தான்னு இல்ல எந்த காரணமாயிருந்தாலும்.

//அதிகமில்லை, கொஞ்சம் சத்தம் அதிகமாக பேசினாலும் பக்கத்து வீட்டில் தட்டுகிறார்கள்.. மிக்ஸீ மாலை வேலையில் போட முடியவில்லை.. காரணம் apartment அப்படி.. அவர்கள் மட்டும் சத்தமாக டிவி வைக்கிறார்கள்.// இது நம்மூரிலும் உள்ள பிரச்சனை. apartment மட்டுமல்ல சொந்த flat வச்சிருக்கவங்களுக்கே கூட உண்டு.

//என்னால் அவர்களுடன் தைரியமாக பேச முடியவில்லை.. காரணம் நான் இந்நாட்டுகாரரில்லை.. // காரணம் இந்நாடு அல்ல. நீங்கள். சொல்லும் முறையில் சொல்லி பாருங்கள் எல்லாம் சரியாகிவிடும் .

//இதுவே என் ஊராயிருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு பேசியிருக்க மாட்டேன்??// இதத்தான் நாங்க நம்ம ஊர் பிரச்சனையில ஒன்னா பேசிகிட்டு இருக்கோம். வரிஞ்சி கட்ட தெரிஞ்சவங்க எல்லாம் நாட்டமை ஆகிடுறாங்க. நான் உங்கள சொல்லல. நீங்க தான் ரொம்ப நல்லவங்கன்னு முன்னமே சொல்லிட்டேனே.

//எங்கள் நண்பர்கள் நல்ல திறமை இருந்தும் உயர்படிப்புக்கு மிக நல்ல கல்லூரி பெரும் வாய்ப்பை இழந்தார்கள், காரணம் இந்நாட்டு பிரஜை இல்லை.. அவர்களுக்கு போனது போக மிச்சம் இருக்கும் இடங்களே இவர்களுக்கு.. நம் நாட்டில் திறமைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் போயி வேலை செய்யலாம், இங்கு முடியுமா??// சொல்லிட முடியாது. Central govt வேலையும், படிப்பும்; Private Company வேலையும், Private college படிப்பும் மட்டுமே சாத்தியம். State Govt வேலையும் படிப்பும் சாத்தியம் அல்ல. (கேரளாவிலிருந்து Asst. Prof வேலைக்காக Entrance Exam எழுத தமிழ்நாடு வந்த கேரள மாணவர்களை,தமிழ்நாட்டில் கல்லூரி வளாகத்திலேயே அடித்து உதைத்த சரித்திரமும் உண்டு.)

//இந்நாட்டினருக்காக அடங்கி போகும் நிலைக்கு தள்ள படுகிறோம்.// இது நாட்டினருக்கு அடங்கி போகிறது இல்லங்க. அது சரி, நம்ம நாட்டில என்னைக்கு Rules -க்கு கட்டுபட்டோம். இங்க அத மதிச்சு நடந்தா அடங்கி போகிறோம்ன்னு சொல்றீங்களே.

//நண்பர்கள் வீட்டில் போய் காலையில் இருந்து இரவு வரை டிவி பார்த்து கொண்டு படுத்து கொண்டு இருக்க முடியும் என்பது சாத்தியமில்லை.// ஓ.. டிவி பாக்குறதும், படுக்குறதும் தான் உங்க பிரச்சனையா. இது பெரிய இழப்புதாங்க. நீங்க ஊருக்கு போயே ஆகணும்.

//இதில் எத்தனை பேர் உண்மையில் சந்தோஷமா இருக்கேன்.... என் நாட்டை நான் மிஸ் பண்ணவே இல்லை'னு சொல்றாங்க???// மிஸ் பண்ணலன்னு யாருங்க சொன்னது. கண்டிப்பா எல்லாரும் நம்ம நாட்ட மிஸ் பண்றோங்க. அங்க போன உடனே சந்தோசம் வந்துடும்னு சொல்றத தாங்க ஏத்துக்க முடியல.

//வாசல் தெலித்து ஒரு கோலம் போட முடியுதா// //கிணறுக்கு போய் துணி துவைத்து குளித்து// //தமிழர் திருநாள் பொங்கல் அன்று சூரியனுக்கு பொங்கல் வைக்கிற வெளி நாட்டு வாழ் மக்கள் எத்தனை? மாட்டு பொங்கலன்று மாடு விரட்டுவதை பார்த்து ரசிப்பவர் எத்தனை?// இதெல்லாம் வெளிநாட்டில் இருக்குறவங்க செய்றது இருக்கட்டும். நம்ம நாட்டுல எவ்வளவு பேரால் செய்ய முடியுது?

//எல்லா நாட்டிலும் சட்டமே அந்நாட்டின் மக்களுக்கு ஒரு மாதிரியும், வெளி நாட்டில் இருந்து வந்தவனுக்கு ஒரு மாதிரியும் தான் இருக்கு.// At least சட்டம் என்னன்னு நமக்கும் தெரியுது உள்ளூர் காரங்களுக்கும் தெரியுது. ரெண்டு பேருமே அத மதிச்சு நடக்கிறோம். நம்ம ஊருல. சட்டம் நல்லவர்களையும் ஏழைகளையும் அழிக்கவும் தீயவர்களையும் பணக்காரர்களையும் வாழ வைக்கவும் மட்டுமே உள்ளது.

//தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், சாப்பிட கூட வழி இல்லாத// பாபு அண்ணா ரொம்ப நாளா இந்த ரெண்டு முட்டாயும் எங்க கிடைக்குதுன்னு வலை போட்டு (நம்ம ஊருலதாங்க) தேடிகிட்டு இருக்காரு. நீங்க கொஞ்சம் அவர contact பண்ணினா புண்ணியமா போகும்.

//வாழக்காயா? வாழ்க்கையா// யாருங்க இங்க காமடி பண்ணிக்கிட்டு இருக்கிறது?

//ஒரு வருடம் முன் 10 லட்சத்துக்கு விற்ற நிலம் இன்று 60 லட்சம் விற்கிறது.... ஏன் தெரியுமா? வெளி நாட்டில் சம்பாதித்து கொண்டு வந்து கொட்ட ஆள் இருக்கு...// விஷயம் சரிதான். ஆனா காரணத்தை தான் உங்க அணிக்கு சாதகமா சொல்லிகிட்டீங்க. இந்த விலையேற்றம் நம் நாட்டில் ஏற்பட்ட IT boom -ஆல் வந்தது, வெளிநாட்டு மக்களால் அல்ல. இந்த IT boom கூட நீங்கள் சொல்லிய சில தீமைகளை செய்ததோடு பல நன்மைகளையும் செய்தது.

அப்புறம் சின்ன பிள்ளையில் விளையாடிய பல்லாங்குழி அது இதுன்னு என்னவெல்லாமோ சொன்னாங்க. ஒன்னும் இல்லைங்க ஒரே ஒரு test. இன்னைக்கு உங்க உறவினர் குழந்தை யாருக்காவது (நம்ம ஊருல உள்ள குழந்தைக்கு தாங்க) போன் பண்ணி நீங்க சின்ன பிள்ளையில் விளையாடிய விளையாட்டுகளின் பெயர்களை சொல்லி, ஏதாவது விளையாட தெரியுமான்னு கேளுங்க. எத்தனை பிள்ளைகள் எத்தனை விளையாட்டு தெரியும்னு சொல்லுதுன்னு நடுவருக்கு report பண்ணுங்க. அட விளையாட வேண்டாங்க எத்தனை பேருக்கு அப்படின்னா என்னன்னு தெரியுதுன்னு பார்ப்போம்.

எல்லா விசயங்களும் வாதத்திற்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. தெரியாமல் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

அதிரா, ஹைஸ் அண்ணாவையும் பாபு அண்ணாவையும் தீர்ப்பு சொல்லுற வரைக்கும் குண்டு போட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

திரும்ப வர நேரம் இருக்குமானு நினைச்சுக்கிட்டே இருந்தேன், ஆனால் வந்து எல்லோருக்கும் பதில் சொல்ல ரொம்ப ஆசை, ஆனால் நான் நோட் பண்ணிவச்சத எல்லாம் இலா,இஷானி 2பேரும் போட்டு தாக்கிட்டாங்க..

இழந்தது அதிகம்னு சொல்றவங்க எல்லோரும் ஒரு லிஸ்ட் போடுங்க வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றது என்ன?இழந்தது என்ன?னு எது பெரிய லிஸ்ட்னு பார்க்கலாம்..லிஸ்ட்ல கிணறு,கீரைல இருந்து எல்லாம் சேர்த்துக்கலாம்,அதுபோல அதிகம் என்பதிலும் வெளிநாட்டில் கால் வைக்கும்முன்னாலயே பெற்ற சுத்தமான ஏர்போர்ட்,சுகமான விமான பயண அனுபவமும் சேர்த்துக்கனும்..இழந்தது அதுன்னா பெற்றது இதுவும் தானே?

அப்புறம் யாருங்க அது? பாட்டி 4மாடி இறங்கி வந்தத ஒன்னுமே இல்லன்னா மாதிரி சொன்னது? இது நிஜமாவே பெரிய விஷயம் தான்ப்பா..இல்லைனு சும்மா எல்லாம் சொல்லகூடாது, அங்கவே இருந்திருந்தாலும் பாசம் கிடைச்சிருக்கும் ஆனால் அதீத பாசத்தின் வெளிப்பாடு தான் அது..அன்பு பாசம் கூட வெளிநாட்டில் இருப்பதால் அதிகம்தான்..

கடவுள வீட்டுக்குள்ள வச்சு கும்பிட்டாதான் அவருக்கு கேட்க்குமா? மனதில் வச்சுக்க கும்ப்பிட்டா நீங்க சரியான வழிபாடு பண்ணல கடவுள் கோபிக்க போறாரா? சரி கடவுள்ன்னா முருகனும்,சிவனும்,அம்மனும் மட்டுதானா? எல்லா கடவுளயும் கும்பிடலாம்..இது கூட ஏத்துக்க முடியாத பழங்காலத்தில பிறந்தவங்களா நீங்க?

நான் சென்னைல இருக்கும்போது கூட வாசலும் தெளிச்சதில்ல கோலமும் போட்டது இல்ல, அப்படி போட்டால் எதிர் ஃபிலாட்காரர் பார்க்கிற பார்வைல அந்த கோலமே அழிஞ்சு போகும்..பூஜை அறைலதான் கோலம் அதும் வாரம் ஒரு தரம்தான்..

இங்க வந்த பிறகுதான் நிறைய நிறைய கத்துக்கிட்டேன்,கத்துகிட்டு இருக்கேன்..சமையல்ல இருந்து சகலமும், கேட்க்கலாம் அங்க இருந்தாலும் எல்லாம் கத்துகிட்டு இருப்பீங்கனு, நானும் ஏத்துக்கிறேன் ஆனால் இது இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்..

நிஜமா முதன்முதல்ல 8வருஷம் முன்னால வெளிநாட்டில் காலடி எடுத்து வைக்கும் போதுகூட எனக்கு எந்த வித வருத்தமும் இல்ல, இன்னும் என்ன என்ன புது விஷயங்கள் எனக்காக காத்திருக்கோனு தான் நினைச்சேன்..ஏர்போர்ட்ல அப்பாவ விட்டு பிரியும்போது அவர் கண்ணில் பார்த்த 2சொட்டு கண்ணீர் சொன்னது என்னோட பிரிவு அவருக்கு எவ்வளவு கஷ்டம்னு ஆனால் அவ்வளவு பாசம் வச்ச அப்பாகூட என்கூட இந்தியாவில் இரும்மானு சொல்லல, காரணம் எல்லாரும் சொல்ற மாதிரி அவருக்கு பதில் பாசம் கொட்ட கணவர் இருப்பார்னு தான்..ஆக இழப்புகள் எவ்வளவி இருந்தாலும் அதுக்கு ஈடுகட்ட அதவிட மிக அருமையான விஷயங்கள் கிடைக்கும்..

அப்புறம் சாப்பாடு பிரச்சனை என்னமோ சாப்புடுவதற்கே வாழுற மாதிரி!!இல்லங்க வாழதானே சாப்பாடு? இது இது கிடக்கலனு வருத்த படுறத நிறுத்திட்டு ஆகா இது கூட இருக்கானு கிடைக்கிறத நினைச்சு பாருங்க..ரொம்ப சந்தோசமா இருக்கும்..நம்ம இந்தியாவில் தினமும் உழைக்கிறவங்களுக்கு கூட சாதாரண 3 வேளைக்கும் சாப்பாடு கிடைக்கிறதில்ல..சாப்பாடு என்னங்க நல்ல தண்ணீர் கூட கிடைக்கிறது இல்ல...

அது என்னங்க H4கைதி? அப்படி இருந்தால் அதாவது வேலைக்கு போகலன்னா மட்டும் கைதியா? அப்போ வேலைக்கு போக முடிஞ்சும்கூட,கிடைச்சும்கூட போகாமல் இருப்பவங்க எல்லாம்? ஏன் இந்தியாவில் கூட வேலை கிடைக்காமல் எத்தனை பேர்? சம்பந்தமே இல்லாத வேலைல இருக்கிறவங்க எத்தனை பேர்? தகுதிக்கு குறைவான வேலைல இருக்கிறவங்க எத்தனை பேர்? என்னமோ இந்தியாவில் கொட்டி கிடக்குற மாதிரியும் அத எல்லாம் உதரி தள்ளிட்டு இங்க வந்து கஷ்டபட்டுகிட்டு இருக்கிறமாதிரி சொல்றீங்க? அங்க இருக்கிறவிட இங்க இருக்கிறது மேல்னு தானே அதாவது பெறுவது அதிகம் தானே வந்தீங்க?

நில விலை அதிகம் ஆனதுக்கு மிக முக்கியமான காரணம் இருக்குப்பா,அது தேவை, மக்கள் தொகை பெருக்கம்..இந்தியாவில் எல்லோருமே தனி குடித்தனம் நடத்துவதால் எல்லோருக்கும் எல்லாமே தேவைப்படுது,அதனால வந்ததுதான் இந்த நில ஏற்றம் எல்லாம்..

கலாச்சாரம்..நல்ல கண்ணோட்டத்தோட பார்க்கனும்ப்பா எல்லாத்தையும்..இந்திய கலாச்சாரம்தான் பெஸ்ட்னு சொல்லிகிட்டு இருந்தேன், ஆனால் இங்க இருக்கிற பசங்க அப்பா அம்மாகூட பார்க்ல பார்க்கும்போது அவங்களோட அன்போன்யம் நம்ம கிட்ட இல்ல...ஆண் பெண் 2பேரும் நிறைய திருமணமும்,திருமணமே பண்ணாமல் சேர்ந்து வாழ்வது மட்டும் தான் முதல்ல என் கண்ணுல பட்ட விஷயம் ஆனால் அத தாண்டி பார்த்தால் பிரமிப்பா இருக்கு, தன் மனைவியோட குழந்தைகள தன் பிள்ளைகளோட சேர்ந்து விளையாட விட்டு எந்த ஒரு சின்ன உருத்தலும் இல்லாமல் சந்தோசமா நின்னு வேடிக்கை பார்க்கும் நிறைய பேர்..நம்ம ஊருல விதவை மறுமணம் பண்ணினாலே முகத்த திருப்பிட்டு போறவங்க எத்தனை பேர்? இல்ல நான் அப்படி இல்லனு சொன்னால் உங்கள் அண்ணனுக்கோ தம்பிக்கோ அந்த மாதிரி பொண்ண திருமணம் பண்ண மனப்பூர்வமா சம்மதிக்கிறோமா? ஆனால் திருமண வாழ்க்கை ஆண்களுக்கு சரியா அமையாமல் போனல் உடனே இன்னொரு திருமணம்தான்..எத ஃபாலோ பண்றதுனு தெரியலனு சொன்னவங்க தயவுசெய்து இந்திய கலாச்சாரம் எங்க எந்த மாதிரி போய்க்கிட்டு இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு புரிஞ்சுகிட்டு பேசுங்க..உங்க பிள்ளைங்களே எத ஃபாலோ பண்ணனுமோ அத பண்ணட்டும்,பிள்ளைங்க கண்டிப்பா நம்மவிட நல்ல முடிவு எடுப்பாங்க...

ஆக இலா சொன்னமாதிரி இழப்பதற்கு எதுவுமே இல்ல, ஆனால் எல்லாமே மாயை மாதிரி தான் தெரியும், அதவிட்டு வெளிய வந்து என்ன என்ன பெற்று இருக்கீங்கனு நினைச்சு பாருங்க..அதிரா முடிவு எப்படி இருந்தாலும் ஓகே தான்...ஒன்னுமே நினைக்க மாட்டேன்..என்னளவில் நான் பெற்ற்து அதிகம் தான்...எதுவுமே இழக்கலனு சொல்லல ஆனால் அதவிட முக்கியமான சந்தோசம் நிம்மதி அன்யோன்யம் எல்லாம் கிடைக்குது அதுவே எனக்கு போதும் தான்..மொத்தத்தில் வெளிநாட்டில் நான் நிறைவான வாழ்க்கைதான் வாழுகிறேன்,இந்தியாவில் இருப்பதைவிடவும்..

அதிரா அதிரா...

//ஏன்னா நடுவர் அடிச்சாலும் உதைச்சாலும் உண்மையே பேசுறீங்க.//

இதை படித்த பின்னரும் பத்து முறை விழுந்த (உதை தின்ற) பூஸ் ஒன்பது முறை எழுந்து நின்றது போலவே நானும் உங்களிடம் ஓடி வருகின்றேன் (உதை தின்பதற்காக) ... :))) [இந்த விடா முயற்சியும் எம்நாட்டிலிருந்து கற்றது தான்].. பூஸ் இங்கு வராவிட்டாலும் பரவாயில்லை... இது போன்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து எங்களை வாழ வைக்கும் பூஸ் - எங்கிருந்தாலும் வாழ்க :)))

என்னால் my mumma is the best என்று பேச முடியாது... என் அணிக்காக என்று மட்டுமே பேசுவது முடியாத காரியமாக உள்ளது.. ரெண்டு பக்கமும் உள்ள சாதக பாதகங்களை பார்த்து ஏன் அணியை தேர்வு செய்தேன் என்பது போலத்தான் எப்பவும் என்னுடைய முதல் பதிவு இருக்கும்... தோழிகளுடன் பேசுவது போல பேசிக்கொண்டிருக்கிறேன்.. பட்டிமன்றத்தில் எனக்கு வாதாட தெரியவில்லையோ என்று தோன்றுகிறது... :(( இருப்பினும், என் பக்கமுள்ள ஞாயங்களை மட்டும் சொல்லிவிட்டு போகிறேன்... பூஸ் காலை தூக்கி உதைக்க தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.. :)))

முதல் முக்கிய காரணம் - வெளிநாட்டில் எவ்வளவோ விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ஒரு சில விஷயங்களை மட்டும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இந்திய கலாச்சாரம் என்னவென்று என்னால் விளக்க முடியாது.. குறை இல்லாத விஷயங்களே இல்லை.. என்றாலும் எண்பது சதவிகிதம் அது நல்லதே என்று நினைக்கிறேன்.. அதில் உள்ள நல்லது கெட்டதுகளில் இருந்து நல்லதை எடுத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டோம்.. தம் குலத்தினை நலமோடு வாழ வைக்க குடும்பமென்பது அவசியம் என்பதை உணர்ந்து சில விஷயங்களை வழிமொழின்திருக்கிறார்கள்.. ஏற்ப்பதும் ஏற்காததும் நம் இஷ்டமே.. இங்கென்ன நடக்கிறது என்பது நாமறிந்தது தான்.. நாம் தான் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும் என்று மனோ அம்மா கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்.. (உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன்.. வாதத்தினை போலவில்லாமல் தங்கள் அனுபவங்களை சொன்ன விதம் அருமை..). இங்குள்ள வெள்ளையர்கள் யாரும் தம் பிள்ளைகளுக்கு கெட்டுப் போங்கள் என்று அறிவுரை வழங்குவதில்லை.. அதுகளாகவே நண்பர்களின் பழக்கங்களை கண்டு மாறி விடுகிறார்கள்..

இழப்பு அதிகமென்று தோன்றுவதற்கு மற்றுமொரு காரணம், உறவுகள்.. (போரடிக்கிறது என்று எதிரணியினர் கொட்டாவி விடுவது தெரிகிறது :) ).. ஆனால் அது தான் உண்மை.. நீண்ட தூர உறவுகள் இல்லை.. பெற்று வளர்த்து ஆளாக்கி அதிலே மகிழ்ச்சி கண்ட உறவுகள்.. இங்குள்ள வெள்ளையரை போன்று எண்பத்தி ஒன்பது வயதிலும் வேலைக்கு சென்று தன்னந்தனியே வாழும் நிலையில் எம் உறவுகள் இல்லை.. நமக்கு வயதிருக்கிறது, சார்ந்து வாழ்ந்த நாம் சார்பில்லாமலும் மாறிடலாம்.. ஆனால் அப்படியே வாழ்ந்து வயதாகிவிட்ட அவர்களால் அவ்வாறு வாழ முடியவில்லை.. என்ன செய்ய??
(அவ் வெள்ளைக்கார தாத்தாவும் வாழ்க்கை போரடிக்கிரதென்கிறார் - பல கொள்ளுப் பேர பேத்திகள் பெற்று விட்டாலும், யாரும் அருகில் இல்லை :(( )

நம் நாட்டில் சார்பென்பது வெளிநாட்டை விட அதிக காலம் நீடிக்கிறது என்பது உண்மை தான்.. அச்சார்பு இல்லாமலும் வாழ முடியும், ஆனால் சார்ந்திருந்து வாழ்ந்தால் நன்மையே... இன்னமும் அம்மா சாப்பாடு தான் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தைகளில்லை நாங்கள்.. எங்களால் செய்ய முடியாத போது அவர்களை எதிர்பார்க்கிறோம், அவர்களும் அப்படியே.. எதிரணியினர் அங்கிருந்த வரைக்கும் பெற்றோரையே சார்ந்திருந்தோம் என்று குறை பட்டுக்கொண்டார்கள்.. [ஆனால் இவர்களும் பிள்ளைகளை அப்படித்தான் வளர்ப்பார்கள் என்று நினைக்கிறேன் :))].. பணம் இல்லையென்றால் சரி, காலேஜுக்கு கட்ட பணமிருந்தும் கட்டாமல் வேலை செய்து சம்பாதித்து அதை வைத்துப் படி என்று சொல்லுவோமா? அதற்காகத்தானே இங்கிருந்து உழைத்துகொண்டிருக்கிறோம்.. சில விஷயங்களில் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் ஆக வேண்டும்.. கணவர் மனைவியையும் மனைவி கணவரையும் பிள்ளைகள் பெற்றோரையும், பெற்றோர் பிள்ளைகளையும்.. பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக பத்து வயதிலேயே வெளியே தள்ளிட முடியுமா?? கையில் பிடித்து நடக்க வைத்து, நடை வண்டி வாங்கிக் கொடுத்து, பிறகு தான் தனியே நடக்க விடுவார்கள்.. இல்லையென்றால் நீங்களே நடந்திருப்பீங்களா?? சைக்கிள் பழகும் போது கூட வந்து தான் கற்றுத் தர முடியும்.. நீயே பழகிக் கொள் என்று விட்டு விடமுடியுமா?? அப்படித்தான் நம்மை கல்லூரி வரை படிக்க உதவி இருக்கிறார்கள்.. தன்னம்பிக்கை தள்ளியிருந்தால் தான் அதிகமாகிரதென்றால் - பிள்ளைகளையும் கணவரையும் விட்டு மாதம் பத்து நாளாவது தனித்து பிரிந்திருக்கலாமே??

இழப்பு அதிகமென்று தோன்றுவதற்கு என் மூன்றாவது முக்கிய காரணம் - அதே அதே.. ஊர் ஊர் ஊர்.. மாறிக்கொண்டிருக்கும் ஊர் தான்... ஆனாலும் மனதுக்கு இதமான பதமான ஊர்.. அதெல்லாம் இங்கு சொல்லப் போவதில்லை.. பூஸும் ஊர் வாழ்க்கையை வாழ்ந்திருப்பதால், தானே உணர்ந்து புரிந்து கொள்ளும் என்று விட்டு விடுகின்றேன்..

ஊருக்கு போய் பார்த்தால் ஊர் மாறிவிட்டதேன்கிறார்கள்.. நான் பட்டணத்தில் தங்கி ஹாஸ்டலில் படித்துக் கொண்டிருந்த போது மாதமொரு முறை ஊருக்கு போனாலே இப்படித்தான் பீலிங் வரும் :)) ஆண்டுக்கொரு முறை போனால் தோணாதோ?? இங்கிருந்து திரும்பி போயி, ஒரு ரெண்டு வருஷம் கழித்து அமெரிக்கா வந்து பார்த்தாலும் அமெரிக்கா மாறி விட்டதாகத் தான் தோன்றும்.. ஏன், ஒரு மாசம் கழித்து அறுசுவைக்கு வந்து பார்த்தால் அறுசுவை கூட புதியவர்களால் நிரம்பி மாறித் தான் போயிருப்பது போல தோன்றும்.. நாமிங்கு கோட்டு சூட்டுக்கு மாறினால், அங்குள்ளவர்கள் எல்லாம் தாவணி பாவாடையை விட்டு சுரிதாருக்கு மாறக் கூடாதோ? (இங்குள்ள மொப்பி கூட கோட் சூட் தான் வேண்டுமென கேட்கிரதாமே?? ) பிள்ளைகள் பல்லாங்குழி விளையாடவில்லை என்கிறார்கள்.. இங்கு நாமெல்லாம் பேஸ் பாலுக்கு மாறினால் அங்கு அவர்கள் கிரிக்கெட் க்கு மாறக்கூடாதா??

ஒன்று மட்டும் புரிகிறது.. எதிரனிக்காரர்கள் இங்குள்ள சூழ்நிலைக்கேற்ப்ப தம் மனதை மாற்றி கொண்டு விட்டார்கள்.. இங்குள்ள பன்னையே தோசை என்று நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள் என்கிறார்கள்.. நம்பி சந்தோஷமாக இருக்கிறோம், நீங்களும் இருங்கள் என்கிறார்கள்.. ஒரு வழியில் பார்த்தால், இங்கு தான் இருப்போம் என்று முடிவெடுத்த பின்னர் அந்த நம்பிக்கை நன்மையே செய்யும்.. [இதைத்தான் rational thinking என்கிறார்களோ :))) ]. காரணம், இவர்கள் இங்கிருந்த காலம் அதிகம்... நாட்களாக ஆக, அங்கிருந்த பிணைப்பு குறைந்து இங்குள்ள சூழலுக்கு மாற்றிக் கொண்டார்கள்.. இதற்க்கு ஒரு உதாரணம் - தாங்களே தங்கள் வேலைகளை செய்து மகிழ்ந்து கொள்கிறோம் என்பது.. தன் பிள்ளையின் டென்னிஸ் கோச்சிங் காக இங்கு ஒரு மாத காலம் வந்து தங்கியிருந்த ஒரு அம்மா கேட்டார் - இங்கு ரொம்ப சிரமமான வாழ்க்கையாயிருக்கே என்று.. அவருக்கு அப்படி தெரியும் விஷயம் எதிரணியினருக்கு மகிழ்ச்சியா தெரியுதாமே...

[உண்மையில் இப்பட்டிமன்றம் எனக்கு நன்மையே செய்திருக்கிறது.. நானும் இங்கு இருக்கும் காலத்துக்காவது பன்னையே தோசை என்று நம்பலாம் என்றிருக்கிறேன்.. சீரியஸாக சொல்லுகிறேன் பூஸ், சிரித்து வைக்க வேண்டாம்]

அங்குள்ள சில குறைகளை எதிரணியினர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.. அவர்கள் சொல்லுவதையெல்லாம் இல்லவே இல்லை என்று மறுக்கப் போவதில்லை.. எனினும் நம்மை வாழ விடாமல் செய்யும் அளவிற்கு அவை மோசமானதல்ல என்கிறேன்... கல்லூரியில் படித்த ஆண்களில் நூத்துக்கு இருபது பேர் கெட்டவர்களே என்றாலும், எண்பது பேர் நம்மைப் போன்றவர்கள் தான் (அதாவது நல்லவர்கள் - பூசுக்கு புரியாதில்லோ).. அவர்களை கண்டு அஞ்சத் தேவையில்லை என்பது தான் என் வாதம்...

அங்குள்ள பள்ளி கல்வி முறையில் எமக்கும் ஏற்ப்பில்லை.. எனினும் கல்லூரி கல்வி அங்கு சிறப்பாக இருந்தது (டெக்னாலஜி தவிர்த்து) என்று தான் சொல்வேன்.. கல்விமுறை பற்றிய விழிப்புணர்வு இங்கு வந்த பின்பு இன்னமும் அதிகமாகியிருக்கிறது... இதையும் இல்லை என்று சொல்லப் போவதில்லை...

அங்கிருந்து அறுசுவைக்கு பதிவு போட முடியலைன்னு எதிரணி வருத்தப்படறாங்க.. அங்கிருந்து தான் ஒருத்தர் அருசுவையையே வளர்த்து வரார் - இதை என்னன்னு சொல்ல??

போறேன்னு சொல்லிட்டு மறுபடியும் வந்துட்டாளேன்னு பூஸ் முறைப்பது தெரிகிறது.. என்னை இந்த இஷானி வர வைத்து விட்டார்.. நேரமில்லை என்பதால் இதர கேள்விகளுக்கு பதில் சொல்லப் போவதில்லை.. என்றாலும் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் -
//ஒன்று முதல் 12 வரை ஆங்கிலத்தை ஒரு 'மொழிப்பாடமாக' படித்து முடித்தபின் ஒரு மாணவனால் அந்த மொழியில் ஒரு வாக்கியம் கூட பேச முடியவில்லையெனில் அந்த கல்வி முறை எப்படி சரியானதாக இருக்க முடியும்//

எம்மொழியையுமே பேசினால் தான் பழகும்.. இதை பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அதற்கு முனுமுனுப்புகள் கிளம்பும்.. அப்படி இல்லாத பட்சத்தில் அம்மொழியிலுள்ள நல்ல நல்ல இலக்கியங்களையும் இலக்கணங்களையுந்தான் பள்ளியால் கற்றுத் தர முடியும்.. பேச்சை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.. பேச்சுப்போட்டி, பட்டிமன்றங்கள் இதை போன்றவைகளிலெல்லாம் பங்கெடுத்து தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.. இங்கு ஸ்பானிஷ் மொழி படித்தவர்களாலும் அதை முழுமையாக பேச முடியாது.. ஆனால் அவர்களையே அந்த நாட்டுக்கு அனுப்பினால் - பேசிப் பழகி விடுவார்கள்...

//சில வருடங்கள் கழித்து அணி மாறினாலும் மாறியிருப்பேன், ஆனாலும் இவ்வணியில் இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் //

- இதிலே சில வருடங்கள் என்பது நோக்கம் நிறைவேறும் வரைக்கும்.. இப்படிச் சொல்லியிருப்பதிலே ஏதும் முரண்பாடிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.. முதலாமானது - இதர சில விஷயங்களையும் (உதா - பெற்றோர் வருகை) இங்கு கிடைக்கபெற்றால் இங்குள்ள சில விஷயங்களை ஏற்கப்பெற்றால் - பெறுவதே அதிகம் என்கிற மாதிரி.. அடுத்தது - இல்லை இழப்புகளே அதிகம் என்று தோன்றினால் - அப்போது கிளம்பியிருப்பேன்... அந்த இழப்புகள் எனக்காக அதுவரை காத்திருக்கும் என்கின்ற நம்பிக்கையில் தான் இப்போதிங்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்...

இஷானி - ஜோக்கை ஜோக்காத்தான் சொன்னேன்.. நீங்கள் அதிலே மிகைபடுத்தப்பட்டதொரு உண்மையை கண்டுபிடித்தால் நானென்ன செய்ய?? நடுவில வந்துட்டதால வீக் எண்டுல வர மாட்டேன்னு நினைச்சிட்டீங்களோ? வீக் எண்டுலயும் வந்திருக்கேன்.. நீங்களும் உண்மையையே விளிம்பியிருக்கீங்கள் - சந்தனா, நீங்கள் ரொம்ப நல்லவரென.. :))) எனவே நீங்களும் மிக நல்லவரே :))) நீங்க என்ன தான் ஆலோசனை சொன்னாலும் வந்த வேலையை முடிக்காமல் :))) திரும்ப போவதில்லை..

//அப்புறம் யாருங்க அது? பாட்டி 4மாடி இறங்கி வந்தத ஒன்னுமே இல்லன்னா மாதிரி சொன்னது? இது நிஜமாவே பெரிய விஷயம் தான்ப்பா..இல்லைனு சும்மா எல்லாம் சொல்லகூடாது//

தாமரை - நான் சொல்ல வந்த விஷயம் வேற.. அங்கயிருந்தா அப்படி தினமும் இறங்கி வரலைன்னாலும் பாசமுண்டு ன்ற மாதிரி தான் சொல்லியிருந்தேன்..

//அது என்னங்க H4கைதி? அப்படி இருந்தால் அதாவது வேலைக்கு போகலன்னா மட்டும் கைதியா? //

இது என்னிலையை வைத்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்.. எனக்கு என்னிலை அப்படித் தோன்றியதால்..

//அங்க இருக்கிறவிட இங்க இருக்கிறது மேல்னு தானே அதாவது பெறுவது அதிகம் தானே வந்தீங்க?//

நான் இந்நாட்டை குறை சொல்லாமல் இங்கு வந்ததால் பெற்ற சில விஷயங்களையும் இழந்த சில விஷயங்களையும் உடன்பாடில்லாத சில விஷயங்களையுந் தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.. இங்கிருந்துகொண்டே இந்நாட்டை ஏச மாட்டேன்.. எனக்கு நாடு விட்டு நாடு வந்து கல்வியோ செல்வமோ பெறுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை.. பெற வந்ததை பெற்ற பின்பும் எனக்கு இங்கு தங்கியிருப்பதில் விருப்பம் இல்லை - அவ்வளவே.. இவையிரண்டும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை என்றாலும், இவை மட்டுமே வாழ்க்கையில்லை என்று நினைக்கிறேன்- இதுவும் எனக்கான கருத்தே.. எனினும், ஏற்க்கனவே சொன்னது தான் - never say never again.. மேலும், தங்கியிருப்பவர்களை குறை சொல்லவும் இல்லை - ஒவ்வொருவருக்கும் தான் எங்கிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன், அடுத்தவர்களின் விருப்பத்தை மதிக்கவும் செய்கிறேன்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வின்னி ///நடுவர் அவர்களே தூங்காதீங்கோ:) எழுந்திருங்கோ:) இதோ நாங்கதான் வந்துட்டோமில்ல:)/// என் தூக்கம் போய் 6 நாளாகுது:).

///இதை இதைத்தான் நாங்க சொல்றோம். நம் தன்னம்பிக்கை வெளிப்படுவதற்கான சூழ்நிலை வெளி நாட்டில் அதிகம் என்கிறோம்/// ஆகா.. என்ன கண்டு பிடிப்பு..

///வெளிநாட்டிலோ தன் கையே தனக்கு உதவி என்று எப்பாடு பட்டாவது நம் பிள்ளைகளை நாமே வளர்க்கிறோமே அப்போது கிடைப்பதும் தன்னம்பிக்கைதான்/// எதிரணியினர் இப்போ நன்கு உணர்ந்திருப்பார்கள், தன்னம்பிக்கை என்றால் என்னவென்று, அதனால்தானோ ஆட்களையே காணவில்லையே..

///நடுவர் அவர்களே இதை படித்த பின்பும் எதிரணியினருக்கு டென்ஷன் வநதால் நீங்கதான் உங்களுக்கு அளிக்கப்படும் மோர், இளநீர் போன்றவற்றை அவங்களுக்கும் குடுத்து கூல் டவுன் ஆகச் சொல்லுங்கோ:)/// நானா மாட்டேன் என்கிறேன்?, அவங்க மேடையில இருந்தால்தானே நான் கொடுக்க முடியும்????

///வெளி நாட்டிற்கு கிளம்பி வரும்போது நம் சொந்தங்கள் யாரும் கூட வரமாட்டார்கள் என்று தெரிந்துதானே வருகிறோம். வந்தபின் அதை நினைத்தே கலவை கொள்வதால் எந்த பயனும் இல்லை/// இப்ப சொன்னீங்க பாருங்கோ ஒரு வசனம்... இதை எதிரணியினர் நிட்சயம் ஒத்துக்கொள்வார்கள்..

///ஆகவே நடுவர் அவர்களே நன்றாக சிந்தித்தால் எங்கள் வாதங்களில் உள்ள உண்மைகள் உங்களுக்கு புரியும் என்று கூறி விடைபெறுகிறேன்./// எனக்குப் புரிஞ்சு ஆகப்போவது ஒன்றுமில்லை:), பூஷாருக்குப் புரிஞ்சால் சரி, எப்ப பார்த்தாலும் சலனமற்ற முகத்தோடு இருக்கிறார்... பூஷார்.

//// //// //// //// //// //// //// //// //// //// ////
அநாமிகா ///தீர்ப்பை எழுதப்போகும் பூஷ் /// எல்லோரும் வரவர ரொம்ப ஷார்ப்பா இருக்கிறீங்க....

///இந்தியாவிலேயே நீங்க தமிழ் நாட்டில் இருந்து வேறு எந்த நாட்டுக்கு போனாலும் உங்க தன்னபிக்கை வெளிப்படுவதர்க்கான சூழல் வரும் :))) இல்ல கிராமத்திலிரிந்து நகரத்திற்கு நகரத்தில் இருந்து மாநகரத்திற்கு அப்படின்னு வந்தாலும் வெளிப்படும்:)))/// எங்கே பதில் வராதோ என ஏங்கினேன், பட்டென வந்து சட்டெனச் சொல்லிட்டீங்க.

///நீங்க எல்லாரும் வளர்ந்த நாட்டில் வந்து இருந்து கொண்டு வளர்ந்து வரும் நாட்டை பத்தி இத மாதிரி இல்ல அப்படின்னு சொல்றீங்க /// ஆகா இப்படியும் ஒரு விஷயம் இருக்கோ? எதிரணியினர் இதைப்பற்றி யோசிக்கவே இல்லைப்போல.

///தீர்ப்பை எழுதப்போகும் பூஷ் உங்களை வரவேற்கவும் தயாராக இருக்கிறேன் தாய்நாட்டில் அதனால் வரவேற்ப்பு :)) /// பேதியாக் குளிசை எடுக்காமலே, கலக்க வைக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா மற்றும் பூஷ்க்கு என் வணக்கம்.

நடுவரே நாங்கள் சொல்வதை குதர்க்கமாக யோசிப்பதே இந்த எதிர் அனிக்கு வேலையா போச்சு,

//அதிரா ஒன்று மட்டும் புரியவேயில்லை.. எதிரணியினர் எல்லாம் வெளிநாட்டுக்கு போய்த்தான் தன்னம்பிக்கை பெற்றார்களாமே?? தைரியம், சுய சிந்தனை எல்லாமே அங்கிருந்து தான் வந்ததாமே?? //இது உண்மை இல்லை என்று மறுக்க முடியுமா?நம்ம ஊரில் நைட் 10 மணிக்கு மேல் பெண்கள் மட்டும் வெளிய வர முடியுமா?
ஊரில் ஒரு பிரச்சனை என்றால் அதற்க்கு தீர்வு 40 பேர் சொல்லுவாங்க,ஆனால் தனியா இருக்கிற போது நமக்கு பிரச்சனை என்றால் நம்ம தான் நல்லது கெட்டது யோசிக்கனும்,அப்ப கட்டாயம் நமக்கு ஒரு பிரச்சனைக்கு தீர்வு வருகிறது தானே,அதை தான் சொல்கிரேன்,எதையும் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும் என்று,

நான் ஊரில் இருந்தவரை தனியாக எங்கும் போக பயம்,ஸ்கூல் வரை பஸில் போவதோடு சரி,எங்க போவதென்றே தெரியாது,நான் முதன் முதலில் வெளிநாடு வந்த போது தனியாக தான் வந்தேன்,அங்கே எப்படி எனக்கு தைரியம் வந்தது,வீட்டில் எல்லோரும் பயந்தனர்,இங்கயே எங்கும் போக மாட்டேனே எப்படி முத தடவ தனியா அனுப்பறது என்று வேறு வழி இல்லை என்கிற போது நாம் முடிவு எடுத்து தான் ஆக வேண்டும்,

நான் கை குழந்தைகளை பார்த்ததும் இல்லை தூக்கியதும் இல்லை எனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை,ஒரு பிள்ளையை தூக்க கூட தெரியா நான் தனியாக தான் பிள்ளை பெற்று கொண்டேன்,துணைக்கு யாரும் இல்லை.இது எந்த தைரியத்தில்,எந்த தன்னப்பிக்கயில் நான் இந்த முடிவை எடுத்திருப்பேன்.எல்லாம் நானே கற்று கொண்டேன்,இதே நான் ஊரில் இருந்தால் நிச்சயம் மீண்டும் இங்கு வந்து கஷ்ட்டபட்டிருப்பது நானாகதான் இருக்கும்,

யாருமில்லத நாட்டில் நாங்க கால் வைக்கிறோம் அப்ப தைரியம் வந்து தான் வைக்கிறோம்,இனி இங்கு நமக்கு நாம் தான் துணை யாரையும் நம்பி இல்லை,பிரச்சனைகளை எதிரிகொள்ள கற்று கொள்கிறோம்.

பாட்டி மேல இருந்து வந்தாதான் பாசம் என்று சொல்லலேயே,என் அண்ணனும் மெட்ராஸில் தங்கிதான் படிக்கிறாங்க,லீவுக்கு வந்தால் நைட் 12 மனிக்கு வருவாங்க,அப்ப யாரும் மேல இருந்து வருவது இல்லையே,என் பாட்டி என்ன என் அண்ணனோட அப்பா அதாவது என் பெரிப்பா அவரே வரமாட்டார்,காலையில் எழுந்து தான் என்னேரம் வந்த என்று விசாரிப்பாங்க,இதை ஏன் சொல்கிறேன் என்றால் நானும் அங்கேயே இருந்து இப்படி போனா ,நான் எப்பொழுதும் இப்படி தானே வரேன் என்று விட்டுடுவாங்க,தூரத்தில் இருப்பதால் தான் பொண்ணு வந்திருக்காலே பார்க்கனும்,பேசனும் என்று ஓடி வராங்க,

எனக்கு எதுன்னாலும் ஓடி வருவாங்க நான் இல்லை என்று சொல்லல,ஆனால் நான் தனியாக கஷ்டபடும் போது எனக்கு உதவ யாரும் வரமாட்டாங்க,அங்க இருக்கும் போது முடியாமல் போனா பார்ப்பாங்க,இங்க முடியாத போனா யாரு வராங்க,நாம தான் நம்மள பார்த்துக்கனும்,காரனம் அவங்களுக்கு அவங்க வேலை முக்கியம்,பிள்ளைகள் குடும்பம் என்று அவர்கள் நினைக்கும் போது நானும் என் குடும்பம் என்று இருக்க தானே செய்வேன்,முடியாத காலத்தில் குடும்பத்தை சமாளிப்பது பெரிய விஷயம் தானே,இது அனுபவமாக கற்று கொண்டேன்,பிரச்சனைகளை சந்தித்து தனியாக போராடி வெற்றி பெற்றால் தான் அதற்க்கு மதிப்பு அதிகம்.இதெல்லாம் இங்க தான் எனக்கு கிடைத்தது,எனக்கு ஒரு முகவரி கிடைத்தது இங்க தான்,

ரேணு சின்ன பொண்ணு அதுக்கு என்ன தெரியும் என்று சொன்னவங்க,இன்னிக்கு ரேணு என்ன சொன்னாலும் சரியா இருக்கும் என்று சொல்ற அளவுக்கு என்னை மாற்றி இருப்பது இந்த வெளி நாடு தான்.

ரியல் டைம்ல எந்த நண்பர்களோடு இப்படி பட்டி மன்றம் நடுத்துவீங்க,அறுசுவை ஆரம்பம் ஆனபோது சமையல் மட்டும் பார்த்தோம்,பிறகு சந்தேகம் வர கேள்விகள் கேட்டோம்,அது தொடர அப்படியே நன்பர்கள் ஆனோம்,நன்பர்கள் வேண்டும் என்று வரவில்லையே யாரும்,நாமாக தான் வருகிறோம் யாரும் கட்டாயபடுத்தியில்லை.

ஊரில் கதை எப்படி இருக்கும் தெரியுமா அடுத்தவர்களை பற்றி குறை கூறவே நேரம் இருக்காது,பக்கத்து வீட்டில் இங்கிட்டு ஒரு மாறி அங்கிட்டு ஒரு மாறி பேசறது,இத தவிர வேற என்ன தெரியும்,

ஆனால் அறுசுவையில் ஆளுக்கு ஒரு ஊரில் இருக்கோம்,கிராப்ட் செய்ய கத்துக்கிறோம்,புதுசா சமையல் செய்ய கத்துக்கிறோம்,சிரியாவை பற்றி தெரிஞ்சுக்கிறோம்,:)ஒரு சில விஷ்யங்கள் சிலருக்கு பிடிக்காது,ஆனாலும் பேசுவாங்க காரணம் சகிப்பு தன்மை,இதெல்லாம் வெளிநாட்டில் தான்,

//வெளிநாட்டில் இருந்தாலும் இவங்களை கண்டு பயப்படத் தான் வேண்டியிருக்கும்.. ஆனால் நியாயம் நம் பக்கம் இருந்தும், பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை பிடிக்க முடியாமல் இருக்கிறதே, அதைத்தான் சொல்ல வந்தேன்//நீங்க ஏங்க வெளி நாட்டுக்கு போயும் பக்கத்துவீட்ல சண்டை போடறீங்க,வெளி நாட்டில் எனக்கு பிடித்த விஷயமே இது தான் என்ன பிரச்சனை என்றாலும் சிரிச்சுகிட்டே சொன்னால் உடனே கேட்டுக்குவாங்க,அதை விட்டுவிட்டு அடிக்கிறாப்புல மிரட்டினால் யாரு தான் கேட்பாங்க

ஊரில் எங்க போனாலும் எப்படி தனியா போறது யாராவது இருந்தால் நல்லா இருக்குமே என்று இருக்கும்,வீட்டு பெரியவர்களும் தனியாக அனுப்ப மாட்டாங்க,உள்ளூரில் எங்காவது நம்மை தனியாக அனுப்புவார்களா?இல்லை,காரணம் பயம்,பொம்பள பிள்ளையை எப்படி இந்நேரத்திற்க்கு தனியா அனுப்பறதுன்னு சொல்லுவாங்க,ஆனால் வெளிநாடுக்கு நைட்டு 12 மனிக்கு தான் தனியா கிளம்பறோம்.

பன்பாடு கலாச்சாரம் என்றேல்லாம் பேசுராங்களே நான் தெரியாமல் தான் கேட்கறேன்,அதை ஏன் அடிக்கடி மாத்தறீங்க,நம் நாட்டு பழக்கங்களை எங்க போனாலும் கடைபிடிக்க வேண்டியது தானே.மனதில் அல்லவா உறுதி இருக்கனும்.வெளிநாட்டிற்க்கு போனதால் அந்த நாடு என் கலாசாரத்தை மாற்றிடுச்சு என்பது தவறு,நாடா உங்களை புடவையில் இருந்து ஜீன்ஸ்க்கு மாற சொல்லுச்சு?நீங்க தானே மாறினீங்க,,சோ இங்க உங்களுக்கு மனதில் உறுதி இல்லை.

வெளி நாட்டில் தான் பிள்ளைகள் சில அடிப்படை நாகரீகங்களை கற்கிறார்கள்,நம்மூரில் எத்தனை பேர் பேசும் போது சாரி,எக்ஸ்க்யூஸ் மீ தேக் யூ போன்றவற்றை பயன் படுத்துகிறார்கள்.

கிராமங்களை வெளிநாட்டில் இருப்பவரா வாங்குறோம்,வித்து தர சொல்லறோம்,இல்லையே இன்னும் சொல்ல போனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தான் கிராமங்களை நினைத்து வருத்த படுகிறார்கள்,உள்ளூர் மக்கள் அல்ல.அருகில் இருந்தால் அதன் அருமை தெரியாது தானே,

பிள்ளைகள் தாத்தா பாட்டியிடம் ஒட்டாமல் இருக்கு என்றால் அது பெற்றவர்கள் தவறு,அடிக்கடி அவர்களிடம் போட்டோ கான்பித்து சொல்ல வேண்டும்.ஊருக்கு போனால் அவர்கள் வாங்கி தரும் விளையாட்டு பொருளை பத்திரமாக கொண்டு வந்து இது யார் வாங்கி கொடுத்தா என்று கேட்கனும்,இப்படி அடிக்கடி செய்தால் எப்படி பிள்ளைகள் போகாமல் இருப்பார்கள்,

பிள்ளைகள் நம் நாட்டை விரும்ப வேண்டும்,நம் சொந்தங்களை ஏற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பல கதைகள் சொல்லி புரிய வைக்கலாம்.இதற்க்கு நாடு ஒரு பிரச்சனை இல்லை,ஊரில் இருந்தால் இன்று எத்தனை பிள்ளைகள் தாத்தா வீட்டுக்கு போறாங்க,முக்கால் வாசி சம்மர் கிளாஸ் தான் போகுது,வெளி நாட்டில் இருந்தாலாவது ஊருக்கு போனா எஞாய் செய்யறாங்க.

பணம் இருந்தால் தான் மதிப்பு,நாளைக்கே ஊரில் போய் ஒன்றும் இல்லாமல் இருந்து பாருங்கள் எந்த சொந்தம் மதிக்கும் என்று பார்க்கிறேன்,சொந்தம் என்றும் நம்மோடு வராது.அதனால் சொந்தத்தை விட்டு வந்துவிட்டேனே என்று கவலை படுவதை விட்டு விட்டு நாம் வெளிநாட்டில் இருப்பதால் மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசிக்கலாம்.

அறுசுவை நம் நாட்டில் இருந்து இயக்க பட்டாலும் இன்று நாம் வெளிநாட்டில் இருப்பதால் தான் வந்து பார்வையிட முடிகிறது.ஆசியா அக்கா சொல்வது போல் ஊரில் இருந்தால் அத்தனை பேராலும் வந்து போக இயலுமா??அது அறுசுவைக்கே பெரிய இழப்பு என்பது ஏற்க தான் வேனும்.

கணவரிடம் கூட கிண்டலடிக்க,சண்டை போட,கரெம் போர்ட் விளையாட வெளிநாட்டில் தான்,ஊரில் இதெல்லாம் சாத்தியமோ.ஊரில் மனைவிக்கு காய்ச்சல் என்றால் எத்தனை பேர் மனைவியை வீட்டை கவனிக்கிறார்கள்,ஆனால் வெளி நாட்டில் என்றால் நிச்சயம் அவர்கள்ள் தான் பார்க்கவேனும்.இதற்க்கு மேல் நான் சொல்லனுமா?

நடுவரே எமக்கு நேரம் பற்றாகுறையாக உள்ளது.இனி இங்கு வர முடியுமா என தெரியல.நேரம் இருந்தால் வருவேன்.இது ஏற்க்கனவே எழுதி வைத்தேன்,ஆனால் அறுசுவை கிடைக்காததால் இப்பொழுது போட்டேன்,

அதிரா பூஷ் என் பக்கமாம் என்னிடம் சொல்லியது,அதனால் தீர்ப்பு எனக்கு சாதகம் என நினைக்கிறேன்:)

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இஷானி/// நிறைய யோசிச்சு எல்லாம் டைப் பண்ண முடியல. அதனால ஒரு சில வரிகளில் மட்டும் மற்றவர் கருத்துக்களுக்கு பதில்/// இதுதான் உங்கள் ஒருசில வரியெனில், நீங்கள் நிறைய எழுதினால்:)????

///இது குழந்தைல பண்றது. இப்ப ஊருல இருந்தாலும் இத பண்ண முடியாது/// ஆகா.. ஆகா.. இதுக்குத்தான் சொல்றது, ஆ"ளு"ம் வளரணும் அறிவும் வளரணும் என்று, எதிரணிக்கு இனியாவது புரிஞ்சால் சரி.. (உங்கள் பதிவிலேயே "ள" எழுதும் சூழல் எனக்கு உருவாகிட்டுது:), டவுட்டோடுதான் எழுதியிருக்கிறேன் "ஆளும்").

//////மாமியாரின் பாசம் + சமையலின் மணம். அவர்களுடன் 1 1/2 வருடம் தனியாக இருந்தேன்.// பாராட்டுக்கள். எல்லாராலும் அப்படி முடியாது. கோடி கொடுத்தாலும் கூட்டு குடும்பம் வேண்டாம் என்ற நிலையில் உள்ள நிறைய பேரை அறுசுவை பார்த்துக் கொண்டிருக்கிறது////// எதிரணியினரே இதை நோட் பண்ணிக்கொள்ளுங்கோ..

///////போற இடத்தில் வெளி நாட்டுக்காறன் என்று அடித்து விரட்டும் நாடுகளும் உண்டு// நம்ம ஊருலயும் இது உண்டுங்க. Bangalore - லிருந்து தமிழ்நாட்டுக்கு விரட்டப்பட்டவர்களும் உண்டு.////// ஆகா ஆகா இதுதான் பதிலுக்குப் பதிலோ... பூஷே கலங்கிப்போய் நிற்கிறதே..

////////வாசல் தெலித்து ஒரு கோலம் போட முடியுதா// இதெல்லாம் வெளிநாட்டில் இருக்குறவங்க செய்றது இருக்கட்டும். நம்ம நாட்டுல எவ்வளவு பேரால் செய்ய முடியுது?//////// எதிரணியினர் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ??
கோலம் என்றதும் எனக்கு ஒரு நினைவு வருகிறது. எங்கள் நாட்டில் யாரும் வீட்டில் கோலம் போடுவதில்லை. (கோயிலில் அல்லது திருமணம் போன்ற விஷேஷங்களில் மட்டுமே பலவர்ணக்கோலம் கண்ணைக்கவரும்)பொங்கலுக்கு மட்டும் போடுவதாக நினைப்பு. எனக்கு கோலம் போட ஆசை. அதனால் ஊரிலே ஒருநாள், கல்கி பார்த்து, ஒரு அழகான புள்ளிக்கோலம், மாவைக் கரைத்து, அதில் வீட்டுக் கோலிலே போட்டேன். நீண்ட நாட்கள் அப்படியே அழகாக இருந்தது, ஈரத்துணிகொண்டு துடைத்துவிடுவேன். வருவோர் எல்லாம் பாராட்டினார்கள்(அங்கு யாரும் வீட்டில் போடுவதில்லை என்பதால் புதுமையாக இருந்தது).

///அதிரா, ஹைஸ் அண்ணாவையும் பாபு அண்ணாவையும் தீர்ப்பு சொல்லுற வரைக்கும் குண்டு போட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்/// அப்படியெண்டால், தீர்ப்புச் சொன்னபின் போடலாம் என்கிறீங்களோ?:), "அநியாயத்து நல்லவர்கள்" என்ற கட்சியில நீங்களும் சேர்ந்திட்டீங்களே!!!

//// //// //// //// //// //// //// ////
சந்தோ.. ///நான் சென்னைல இருக்கும்போது கூட வாசலும் தெளிச்சதில்ல கோலமும் போட்டது இல்ல, அப்படி போட்டால் எதிர் ஃபிலாட்காரர் பார்க்கிற பார்வைல அந்த கோலமே அழிஞ்சு போகும்..பூஜை அறைலதான் கோலம் அதும் வாரம் ஒரு தரம்தான்../// எதிரணியினரே நீங்களெல்லாம் முற்றத்தில் கோலம் போடுபவர்களாக இருந்தால்... ஓடிவாங்கோ.. இனியும் பொறுக்க வேண்டாம்..

////இங்க வந்த பிறகுதான் நிறைய நிறைய கத்துக்கிட்டேன்,கத்துகிட்டு இருக்கேன்..சமையல்ல இருந்து சகலமும், கேட்க்கலாம் அங்க இருந்தாலும் எல்லாம் கத்துகிட்டு இருப்பீங்கனு, நானும் ஏத்துக்கிறேன் ஆனால் இது இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்..//// உண்மையாகத்தான் சொல்லுறீங்களா? எதிரணியினர் இதை ஒத்துக்கொள்வார்களோ தெரியவில்லையே...

////நான் பெற்ற்து அதிகம் தான்...எதுவுமே இழக்கலனு சொல்லல ஆனால் அதவிட முக்கியமான சந்தோசம் நிம்மதி அன்யோன்யம் எல்லாம் கிடைக்குது அதுவே எனக்கு போதும் தான்..மொத்தத்தில் வெளிநாட்டில் நான் நிறைவான வாழ்க்கைதான் வாழுகிறேன்,இந்தியாவில் இருப்பதைவிடவும்../// எதிரணியினர் இதை எப்படி மறுக்கப்போகிறார்களெனப் பார்ப்போம்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

//அதை விட்டுவிட்டு அடிக்கிறாப்புல மிரட்டினால் யாரு தான் கேட்பாங்க//

உங்க முட்டை மசாலா வறுவல் சாப்பிட்டுகிட்டே இதை படிக்கறதால சும்மா விட்டுப் போட்டு போறேன்.. :)) இல்லாட்டி கண்டிப்பா உங்க கூடையும் சண்டை தான்.. :))))))

இல்லை ரேணு, விஷயம் அதுவில்லை.. நாங்கள் சற்று சத்தமாக பேசினால் அவர் வீட்டை இடி இடியென இடித்துக் காட்டுவார்... ஆனால், அவர் சற்று சத்தமாக டீவீ வைத்தால், பதிலுக்கு நாங்கள் இதைப்போல் வாழ வந்த இடத்தில் செய்ய விரும்பவில்லை.. இதெல்லாம் பேச்சு வார்த்தைகள் தோற்ற பின்னே எழுதியது தான்.. உண்மையில் நான் தான் அவரிடம் பேசுவேன், நான் பேசினால் அவர் அமைதியாக சென்று விடுவார்.. ஆனாலும் இதெல்லாம் தொடரும் .. என் கணவருக்கு அவர் மேல் மிகுந்த கோபம், அதனால் நீயே பேசிக்கோ என்று போய் விடுவார்..

//ரியல் டைம்ல எந்த நண்பர்களோடு இப்படி பட்டி மன்றம் நடுத்துவீங்க//

இதை தனி டாபிக்கா தான் பேசணும்...ரியல் டைம் நண்பர்களா இல்லை இணைய நண்பர்களான்னு.

நான் நிறைய பேரை வம்பிழுத்திருந்தாலும், இதுக்கு மேலே என்னை யாரும் வம்பிழுக்க மாட்டீங்கள் என்ற தைரியத்தில், இத்துடன் (எத்தனை வாட்டி தான் இதே டயலாக்கை திருப்பி திருப்பி கேட்பது என்று பூஸ் முகந்திருப்புவது தெரிகிறது...), அட நெசமாதாங்க,
இத்துடன் இப்பட்டிமன்ற உரையை முடித்துக் கொள்கிறேன்.. அதிரா - நல்ல டாபிக்கை தேர்ந்தேடுத்தீங்கள்.. உங்களுக்கும், பூசுக்கும், வாதாடிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.. .

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா...///[இந்த விடா முயற்சியும் எம்நாட்டிலிருந்து கற்றது தான்].. பூஸ் இங்கு வராவிட்டாலும் பரவாயில்லை... இது போன்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து எங்களை வாழ வைக்கும் பூஸ் - எங்கிருந்தாலும் வாழ்க :))) /// எந்தக் கட்சியில் இருந்தாலும் ரொம்ப நல்லவராக இருக்கிறீங்கள். இருப்பினும் பூஷ் சொல்கிறது, தான் புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கிட மாட்டேன் என்று:).

///பூஸ் காலை தூக்கி உதைக்க தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.. :)))// கவலைப்படாதீங்கோ.. காலைத்தூக்கினால் பூஷ்தான் விழும்:).

///இங்குள்ள வெள்ளையர்கள் யாரும் தம் பிள்ளைகளுக்கு கெட்டுப் போங்கள் என்று அறிவுரை வழங்குவதில்லை.. அதுகளாகவே நண்பர்களின் பழக்கங்களை கண்டு மாறி விடுகிறார்கள்.. ///சரியாகச் சொன்னீங்கள், எதிரணியினருக்கு ஒண்ணும் புரியமாட்டேன் என்கிறதே.. ஒருவேளை குழப்பத்தில் இருக்கிறார்களோ என்னவோ.

///தன்னம்பிக்கை தள்ளியிருந்தால் தான் அதிகமாகிரதென்றால் - பிள்ளைகளையும் கணவரையும் விட்டு மாதம் பத்து நாளாவது தனித்து பிரிந்திருக்கலாமே?? /// இது முறையான கேள்விதான், இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்களோ??

///பூஸும் ஊர் வாழ்க்கையை வாழ்ந்திருப்பதால், தானே உணர்ந்து புரிந்து கொள்ளும் என்று விட்டு விடுகின்றேன்.. /// உங்களுக்குத் தெரியாததோ சந்தனா.. பூஷுக்குத்தான் ஒரு வியாதி இருக்கே.. அது பழசெல்லாம் மறந்துபோச்சாம்... சொல்லிச் சிரிக்கிறது... நான் மறக்கவில்லை:)).

///(இங்குள்ள மொப்பி கூட கோட் சூட் தான் வேண்டுமென கேட்கிரதாமே?? ) /// பூஷ் மட்டுமில்லை, மொப்பியும் பட்டிமன்றம் வரை வந்துவிட்டதே... கொடுத்துவச்ச மொப்பி:).

///ஒரு வழியில் பார்த்தால், இங்கு தான் இருப்போம் என்று முடிவெடுத்த பின்னர் அந்த நம்பிக்கை நன்மையே செய்யும்.. [இதைத்தான் rational thinking என்கிறார்களோ :))) ]. காரணம், இவர்கள் இங்கிருந்த காலம் அதிகம்... நாட்களாக ஆக, அங்கிருந்த பிணைப்பு குறைந்து இங்குள்ள சூழலுக்கு மாற்றிக் கொண்டார்கள்.. இதற்க்கு ஒரு உதாரணம் - தாங்களே தங்கள் வேலைகளை செய்து மகிழ்ந்து கொள்கிறோம் என்பது.. தன் பிள்ளையின் டென்னிஸ் கோச்சிங் காக இங்கு ஒரு மாத காலம் வந்து தங்கியிருந்த ஒரு அம்மா கேட்டார் - இங்கு ரொம்ப சிரமமான வாழ்க்கையாயிருக்கே என்று.. அவருக்கு அப்படி தெரியும் விஷயம் எதிரணியினருக்கு மகிழ்ச்சியா தெரியுதாமே... /// அழகாகக் கேட்டுவிட்டீங்கள்..

///சீரியஸாக சொல்லுகிறேன் பூஸ், சிரித்து வைக்க வேண்டாம்]/// தீர்ப்பின் காலம் நெருங்குகின்றமையால் பூஷார் ரொம்ப சீரியசாகிவிட்டார், அவரைப் பார்க்க எனக்கே நடுங்குது.

///அங்கிருந்து அறுசுவைக்கு பதிவு போட முடியலைன்னு எதிரணி வருத்தப்படறாங்க.. அங்கிருந்து தான் ஒருத்தர் அருசுவையையே வளர்த்து வரார் - இதை என்னன்னு சொல்ல?? /// அடிச்சீங்கள் பாருங்கோ பந்தைத் திருப்பி... இம்முறை சிக்ஸர்தான்... (இருப்பினும் "அவரை" ப் புகழ பட்டிமன்றம்தான் கிடைத்ததோ?:)..).

/////அப்புறம் யாருங்க அது? பாட்டி 4மாடி இறங்கி வந்தத ஒன்னுமே இல்லன்னா மாதிரி சொன்னது? இது நிஜமாவே பெரிய விஷயம் தான்ப்பா..இல்லைனு சும்மா எல்லாம் சொல்லகூடாது/////// கடவுளே!! 80 வயதிலும் பாட்டிக்கு நிம்மதில்லை:), பட்டிமன்றத்தில் பாட்டியின் கதையாகவே இருக்கு:).

///எனக்கு நாடு விட்டு நாடு வந்து கல்வியோ செல்வமோ பெறுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை.. பெற வந்ததை பெற்ற பின்பும் எனக்கு இங்கு தங்கியிருப்பதில் விருப்பம் இல்லை /// அப்போ வெளிநாட்டில் எதையோ பெற்றிருக்கிறீங்கள்??? எதிரணியினரே நோட் திஸ் பொயிண்ட்... முழக்கத்தால பயந்து ஓடிற்றீங்களோ என்றுதான் பொயிண்ட் சொல்லித்தாறேன்.. பயப்படாமல் வந்து பதிலுக்கு முழங்குங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேனுகா!! எங்கே மேடையால இறங்கி ஓடிவிட்டீங்களோ என நினைத்தேன்..:), ஓடவில்லை.

///ஊரில் ஒரு பிரச்சனை என்றால் அதற்க்கு தீர்வு 40 பேர் சொல்லுவாங்க,ஆனால் தனியா இருக்கிற போது நமக்கு பிரச்சனை என்றால் நம்ம தான் நல்லது கெட்டது யோசிக்கனும்,அப்ப கட்டாயம் நமக்கு ஒரு பிரச்சனைக்கு தீர்வு வருகிறது தானே,அதை தான் சொல்கிரேன்,எதையும் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும் என்று,/// அழகாகப் பதில் சொல்லிட்டீங்கள்.

///யாருமில்லத நாட்டில் நாங்க கால் வைக்கிறோம் அப்ப தைரியம் வந்து தான் வைக்கிறோம்,இனி இங்கு நமக்கு நாம் தான் துணை யாரையும் நம்பி இல்லை,பிரச்சனைகளை எதிரிகொள்ள கற்று கொள்கிறோம்./// இதுவும் சரிதான், எதிரணியினர் ஏற்பார்களென்றே நினைக்கிறேன்.

///பிரச்சனைகளை சந்தித்து தனியாக போராடி வெற்றி பெற்றால் தான் அதற்க்கு மதிப்பு அதிகம்.இதெல்லாம் இங்க தான் எனக்கு கிடைத்தது,எனக்கு ஒரு முகவரி கிடைத்தது இங்க தான்,/// உண்மையாகவோ? எதிரணியினரே உங்களுக்கு எங்கே முகவரி கிடத்ததெனச் சொல்லுங்கோ???

///இதற்க்கு நாடு ஒரு பிரச்சனை இல்லை,ஊரில் இருந்தால் இன்று எத்தனை பிள்ளைகள் தாத்தா வீட்டுக்கு போறாங்க,முக்கால் வாசி சம்மர் கிளாஸ் தான் போகுது,வெளி நாட்டில் இருந்தாலாவது ஊருக்கு போனா எஞாய் செய்யறாங்க./// இது சரியாகத்தான் இருக்கும்...

///ஊரில் இருந்தால் அத்தனை பேராலும் வந்து போக இயலுமா??அது அறுசுவைக்கே பெரிய இழப்பு என்பது ஏற்க தான் வேனும்/// ஆகா அடிச்சுக்கலைச்சாலும் பறவாயில்லை என உண்மையைச் செப்பிவிட்டீங்கள்... கடவுளே ரேணுகாவைக் காப்பாற்று.....

///அதிரா பூஷ் என் பக்கமாம் என்னிடம் சொல்லியது,அதனால் தீர்ப்பு எனக்கு சாதகம் என நினைக்கிறேன்:)/// பூஷை இலகுவில் பக்கம் சாய்க்க முடியாது, எனவே பகல் கனவை விட்டுப்போட்டு, விவாதத்தைத் தொடரச்சொல்லி பூஷ்தான் சொல்கிறது.

//// //// //// //// //// //// //// //// //// //// ////
சந்தனா, எங்கே எதிர்க்கட்சியெல்லாரும் ஓடிவிட்டார்களோ எனப் பார்த்தேன், விடாது துரத்துகிறீங்கள்.. அதுக்கு பூஷ் வாழ்த்துச்சொல்லச் சொன்னது......

எதிரணியினரே எங்கே போயிட்டீங்க.... ஓடிவாங்கோ... பொறுத்ததுபோதும் பொங்கி எழுங்கோ.. நீங்கள் பேசாமல் இருப்பதால் மேடையில் உங்கள் எதிரணியினரின் கொட்டம் தாங்க முடியவில்லை....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்