பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

சந்தனா...
பழமொழியை மறந்தது நல்லதாகிவிட்டது.

ஹைஷ் அண்ணன் தலைமறைவாகிவிட்டாரே... பூஷாரைக் கண்டால் அவர் தலைவைத்தும் படுக்க மாட்டார் அந்தப்பக்கம்.

///அப்படியா அதிரா? உங்களுக்கு நாப்பது என்றல்லோ நினைத்திருதோம், உண்மையில் அறுபதோ?? :))/// நான் இப்போ இருப்பது நம்நாட்டில்... அப்போ என்ன வயது???

///இஷானி - ஓடியாங்கோ.. இழமை யாமே?? :))/// சந்தனா நேர்ந்துவிட்ட மாட்டுக்கு பல்லைப்பிடித்துப் பார்க்கப்படாது:).... இனிமேல் நான் வாழ்க்கையில் "ழ" வை மறப்பேனா? இஷானியை மறப்பேனா? சந்தனாவைத்தான் மறப்பேனா...:).... சாமத்திலும் சிரிக்க வைத்திட்டீங்கள்.

இப் பூனைபாடல் என் கைக்கு கிடைத்ததிலிருந்து தினமும் பகலில், பாதிப்பொழுதாவது கேட்கிறேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, பயந்தீங்களே, ரொம்ப அழகா தீர்ப்பு சொல்லி இருக்கீங்க. அதுவும் மனிதனின் இடப் பெயர்ச்சி பற்றி கூறியது நல்ல பாயிண்ட். நீங்கள் சொன்ன இலங்கை கதைகள் எல்லாம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. எனவே கொஞ்சம் சந்தேகமாயிருந்தது, தீர்ப்பு எந்த பக்கமோ என்று:) நல்ல தீர்ப்பு அதிரா.

என் கணவரிடம் இந்த பட்டி மன்றம் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது, என் மகள் திடீரென்று கேட்டாள். அம்மா, அப்பா நீங்க உங்க ஹோம் கன்ட்ரிக்கு போனால், நான் எப்படி என்னுடைய ஹோம் கன்ட்ரியை விட்டு விட்டு வருவது! நான் பாவமில்லையா என்று:)

அவர் தலைமறைவாகிவிட்டார் தான், ஆனால் எனக்கு "முழு" லைசென்சும் வாங்கி தந்து விட்டு தான் போயிருக்கிறார்.. அந்த பூஷாரை கண்டு எமக்கு சிரிப்பு தான் வரும், பயம் வராது..

பழமொழி கண்டுபிடித்து விட்டேன் அதிரா.. உங்களை பிடிக்கும் வரை, வாட்டமே எமக்கு..

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம் கொக்கு..

ஊரிலே இருக்கீங்களா? அப்போ அறுபது ப்ளஸ் இருபது - ஆக, எண்பது வயதுக்காரர் போல தோற்றமளித்து கொண்டிருக்கீங்கள் போல.. அறுசுவையின் மூமூமூமூத்த சகோதரி என்று முன்பு ஒருவர் சொன்னது சரியாகத் தான் இருக்கு :)))

வின்னீ - குட்டீஸ் கிட்ட வாய் கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீங்க.. :)) இந்த மாதிரி பதிலே சொல்ல முடியாத கேள்விகளை அவங்களால தான் கேட்க முடியும்.. :))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஆராய்ச்சி எல்லாம் பண்ணி :) அருமையான விளக்கங்களுடன் தீர்ப்பு கொடுத்து இருக்கீங்க எனக்கொரு சந்தேகம் எதுக்காக தெர்ப்பை எழுதிட்டு பேனாவை உடைச்சு போடாறாங்க நான் இவ்வளவு நாள் நீதிபதிகள் தீர்ப்பு ( தூக்கு தண்டனை ) அதவாது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக இந்த தீர்ப்பை கொடுத்தாக வேண்டும் என்பதால் அந்த மாதிரி தீர்ப்பை கொடுத்துவிட்டு பேனாவை உடைத்து போடுவார்கள் என்று நினைத்து இருந்தேன் அதனால் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்களேன் :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிக வேலை பளு மற்றும் டூர் இருந்த்தால் அனைத்து பதிவுகளையும் நேற்றும் இன்று காலையும் தான் படிக்க முடிந்தது. இரு அணியினரும் மிக சிறப்பாக வாதாடி இருக்கிறார்கள். சூப்பர் சிங்கரில் ஹெல்மெட் போட்டு கையில் கோடரியுடன் பிரிதானியாபுரத்தில் பறக்கும் அனைத்து விமானிகளையும் பயமுறுத்திக் அட்டகாசம் செய்து கொண்டு இருந்த ”பூஸ்”, பூஸ் என்றால் ஆங்கிலத்தில் மதுவகைகள் என்று அரட்டையில் அதை அடித்த்தால் ”பூஷ்” ஆக்கிவிட்டது. இந்த பட்டி மன்றத்தில் இரு அணியினரின் சூடு பறக்கும் அதிரடி வாத்திறமையில் அடிதாங்காமல் ”பூசாகிவிட்டது”(பூசு ஆக்கிய அன்பு சகோதரி திருமதி சேகருக்கு மிகவும் நன்றி) எப்படியும் பட்டிமன்றம் தீர்ப்பை அவர் சொல்ல நீங்கள் எழுதி அவரை மட்டும் மேடையில் தனியே விட்டு சென்றதால் எதிரணியால் தாக்கப்பட்டு “புஸ்” என ஆகிவிட போகிறது. (அப்பாடா இனிமேல் எல்லா விமானிகளும் பயமில்லாமல் பிரித்தானியாபுரம் போவார்கள்) இனி எந்த நாட்டுக்கு வேண்டுமானலும் பயமில்லாமல் அன்பு சகோதரி இஷானி சொல்லிய படி இழந்து கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் வீங் மேலே சீட் போட்டு Free ஆ ட்ராப் பண்ணிடலாம். விமானி ட்ராப் பண்ணவில்லை என்றாலும் விமானம் திரும்பும் போது தானே ட்ராப் ஆகிவிடுவார்கள்

//பூஷாரைக் கண்டால் அவர் தலைவைத்தும் படுக்க மாட்டார் அந்தப்பக்கம்.// என் பயம் போக்கிய அனைத்து அன்பு சகோதரிகளுக்கும் மிக.......வும் நன்றி.

அருமையான நடத்தி முதல்தர உண்மையினை தீர்ப்பாக சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் ஆதிகால மனிதனின் வளர்ச்சியை வளர்ந்த நாடுகளுக்கும் சொந்த நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் காண்பித்தது மிகவும் நன்றாக இருந்த்து.

அன்பு சகோதரன்

பி.கு: இருஅணிக்கும் சொந்த ஊருக்கு ப்ரி ட்ராப்புக்கு முன் ஏதாவது பிரித்தானியாபுரம் பார்சல் இருந்தால் முன்னுரிமை கொடுத்து ப்ரி டெலிவரி செய்யப்படும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நல்ல விளக்கங்களுடன் அருமையான தீர்ப்புக்கூறியுள்ளீர்கள்.

செபா.

அன்பு சகோதரி லஷ்மிசங்கர் யாரவது நாட்டாமை தீர்ப்பை மாற்று சொல்லு என்றாலும் பேனா உடைந்து விட்டது என சாட்டு சொல்லதான் (புதுசா இன்னும் ஓரு பேனா கிடைக்குமே என்ற நப்பாசைதான். பழய பேனாவையும் உடைத்து இருக்க மாடாக). அதனால் ஒரு புது பேனாவுடன் தீர்ப்பை மாற்றி சொல்லவும். // எனக்கு எதற்கு ஊர் வம்பு//

ஒரு கதை: காட்டு வழியே ஒரு முனிவர் போய் கொண்டு இருக்கும் போது ஒருவன் ஆமை ஒன்றை பிடித்து சமைப்பதற்காக அதன் ஓட்டை உடைத்துக் கொண்டு இருந்தானாம். அவன் ரொம்ப கஷ்டபடவே அந்த முனிவர் அவன் மீது இரக்கப் பட்டு “அடேய் அந்த ஆமையை திருப்பி போட்டு அரி ஓட்டை உன்னால் உடைக்க முடியாது” என்றாராம். அதன் பின் உயிர் கொலை பாவம் அப்படி செய்யகூடாது என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு காட்டுவழி போய் விட்டாரம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சந்தனா.... ஓடியாங்கோ.... மீண்டும் வனிதாவை கவுத்துட்டாய்ங்க..... :((

இதுவரை கவுத்துட்டாய்ங்கன்னு அதிராவை கூவி அழைத்தேன்..... இன்று அவரே கவுத்துட்டாரே.... நான் யாரை அழைக்க???? சோகம் தாங்கலை தீர்ப்பு பார்த்து.

இறைவன் இருக்கிறானா..... மனிதன் கேட்கிறான்.... இருந்தால் உலகில் அவன் எங்கே வாழ்கிறான்?????????? - சோக கீதம் வேணுமல்லோ..... அதான்.

அதிரா..... எப்படியோ தீர்ப்பு சொன்ன விதம் அருமை.... அதனால் நீங்க தப்பிச்சீங்கோ. உண்மையில் நல்ல விளக்கம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கலக்குங்கோ.

பூஸ்'ஐ எந்த நாட்டுக்கு கடத்தினா கறி கடைக்கு அடி மாடு போல் அனுப்பலாம் என்று யோசிக்கிறேன்.... ஒலிந்தே இருக்க சொல்லுங்கோ. ;) என் கண்ணில் பட்டால் கதை முடிந்தது. நாளை "ஈஸி பூஸ் பிரை" என்று நானே அறுசுவையில் குறிப்பு குடுத்துடுவேன்.

சந்தனா..... வருக வருக.... நல்ல தலைப்போடு வருக. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா அருமையான தீர்ப்பு,எனக்கு தெரியும் இது தான் தீர்ப்பு என,நான் தான் சொன்னேன் அல்ல,புஷ் என்னிடம் முன்பே சொல்லிட்டது என்று:)

என்னவரிடமும் இப்ப தான் தீர்ப்பை சொல்லி ஆபிஸ் அனுப்பினேன்,

அவரால் என்னை நம்ப முடியவில்லை,நான் எப்படி பெற்றது அதிகம் என்று பேசினேன்,ஏனா எப்பொழுதும் நான் வீட்டில் புலம்புவேன் யாருமே இல்லைன்னு,

அதிரா மற்றும் பூஷுக்கு நன்றி.இதில் கலந்து அருமையாக வாதடிய அனைத்து தோழிகளுக்கும் நன்றி,கூடவே டிரெயினில் இருந்து கொண்டுவந்த ஜூஸ்.:)இங்கு பட்டி மன்றம் முடிந்தது,எல்லாம் இந்த வாரம் ஒழுங்கா சமைத்து வந்து அங்க சொல்லுங்க.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆஹா, முதல் முறையாக வெற்றி!! நன்றி அதிரா!! நல்ல விளக்கங்கள்!!

அதிரா, நன்றிக்கடனாக இனிமேல் சரியாக "ழ, ள" எழுத ஒர் வழி சொல்லித் தருகிறேன்: எங்கேயெல்லாம் "ள" போட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "ழ" போட்டுவிடுங்கள். அதேபோல, எங்கேயெல்லாம் "ழ‌" போட.... அதேதான், "ள‌" போட்டுவிடுங்கள்!! அழகாகப் புரிந்துகொண்டீர்களே!! உங்களுக்கா "ஒன்றும்" இல்லை என்று சில பேர் சொன்னார்கள்!!

உங்களுக்கு ள, ழ பிரச்னை என்றால், வனிதாவுக்கு ள, ல!! சரிதானே வனி?? கோச்சுக்காதீங்கப்பா யாரும்!!

சந்தனா, நீங்க தேடியது இந்தப் பழமொழியா? "ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு".

என்னாச்சு எனக்கு, என்னையே அறியாம தமிழ் டீச்சர் அவதாரம் எடுக்கிறேன் இன்னிக்கு? தீர்ப்பு சாதகமா வந்த சந்தோஷத்துல தலகால் புரியலயோ??

மேலும் சில பதிவுகள்