பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

சந்தனா, நீங்க பழமொழியைக் கண்டுபிடிச்சதைப் பார்க்காம‌ல் போட்டுட்டேன்!!

ஒரு மாதிரியாத்தான் ஆயிட்டேன் போல!!

////அதிரா, பயந்தீங்களே, ரொம்ப அழகா தீர்ப்பு சொல்லி இருக்கீங்க/// வின்னி மிக்க நன்றி. சிலவேளைகளில் பயப்படுவதும் நல்லதுதான்...

///என் கணவரிடம் இந்த பட்டி மன்றம் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது/// என் ஞாபகத்தையும் தட்டி விட்டுவிட்டீங்கள்.

பட்டிமன்றத்தலைப்புக்களில் சிலவற்றைத் தெரிவு செய்து, என் ஆத்துக்காரருக்குக் காட்டிக் கேட்டேன், எது நன்றாக இருக்கென்று. அவர்தான் சொன்னார் இத் தலைப்பு குடும்பத்தோடு சேர்ந்ததால் நன்றாக இருக்கு, இதைப்போடுங்கோ என. நானும் போட்டு, நடத்தி, தீர்ப்பும் சொன்னபின்னர்.

இன்று சொல்கிறார் "எந்த நாட்டில் இருந்தாலென்ன, உள்நாடோ? வெளிநாடோ? பெற்றது அதிகம் என்றும், நன்மை என்றும் எப்படிச் சொல்வது:), வெளிநாட்டிலாவது தப்பி இருக்கலாம் என்றால், மூட்டை முடிச்செல்லாம் பக் பண்ணிக்கொண்டு, மனைவி பக்கத்து சீற்றிலேயே இருந்து வந்துவிடுகிறார்:), சரி வந்ததுதான் வந்திட்டார், கொஞ்சநாளைக்கு ஊரில்போய் இருந்திட்டுவருவோமே எனப் போனால்... அதே மூட்டை முடிச்சோடு அங்கேயும் தொற்றிக்கொண்டு வந்துவிடுகிறார்.... இதில் எங்கே இருக்கு பெற்றது அதிகம்? எனக் கேட்டுவிட்டார்:):) அதுவும் என்னைப்பார்த்து:), வேலைக்குப் போகும் நேரமென்பதால், பெரியமனதுபண்ணி விட்டுவிட்டேன்:).

///ஆனால் எனக்கு "முழு" லைசென்சும் வாங்கி தந்து விட்டு தான் போயிருக்கிறார்/// சந்தனா உள்ளுக்குள்ளாலே இப்படியும் நடக்குதோ? , சட்டமெல்லாம் எங்களுக்குத்தான் போல:).

///ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம் கொக்கு../// வாட்டம் வேண்டாம், பூஷுக்குக் கிடைத்த பிஸ் பிறை(திமுசுக்கட்டை மீன்) இருக்கு அதை தந்துவிடுகிறேன்...

///அறுசுவையின் மூமூமூமூத்த சகோதரி என்று முன்பு ஒருவர் சொன்னது சரியாகத் தான் இருக்கு :)))/// ஆர் சொன்னது:) இங்கே கூட்டிவாங்கோ இப் பட்டிமன்றத்திலேயே அதுக்கும் ஒரு முடிவு கட்டிப்போடலாம்.

அநாமிகா மிக்க நன்றி. பேனா உடைக்கும் முறை நீங்கள் சொன்னதுதான் சரி. ஆனால் நான் உடைத்தது... அடுத்த பதிலைப் பாருங்கள் ஏனெனப்புரியும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

////நடுநிலை மாறாத நடுவர் அவர்களுக்கும், தீர்ப்பு சொல்லிய உங்கட புஸ்ஸ்சுக்கும் வணக்கம்.//// மிக்க நன்றி. பூஷ் இப்ப புஸ்ஸ்ஸ் என்றுதான் ஆகிவிட்டது.....

புல்லாகிப் பூண்ட்டாகி புழுவாகி மரமாகி என்பதைப்போல, பூனை.... பூஸாகி.... பூஷ்.. ஆகி........ இப்போ படிமன்றத் தீர்ப்பால், பூசாகிவிட்டதென யாரும் மனப்பால் குடித்திட வேண்டாம்...:). என்னவானாலும் ஆயுதத்தைக் கைவிடாது....:).

////அனைவருக்கும் வீங் மேலே சீட் போட்டு Free ஆ ட்ராப் பண்ணிடலாம். விமானி ட்ராப் பண்ணவில்லை என்றாலும் விமானம் திரும்பும் போது தானே ட்ராப் ஆகிவிடுவார்கள்/// அநியாயத்துக்கு நல்லவர் என்பதில் மிக உறுதியாகவே இருக்கிறார் எங்கள் அறுசுவையின் பைலட்...... விமானியாக்கியது பயணிகளைக்காப்பாற்ற, உதவ... இது படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயிலாக்கிடக்கே:):).

///அருமையான நடத்தி முதல்தர உண்மையினை தீர்ப்பாக சொல்லி இருக்கிறீர்கள்/// மிக்க நன்றி.

///பி.கு: இருஅணிக்கும் சொந்த ஊருக்கு ப்ரி ட்ராப்புக்கு முன் ஏதாவது பிரித்தானியாபுரம் பார்சல் இருந்தால் முன்னுரிமை கொடுத்து ப்ரி டெலிவரி செய்யப்படும்./// உங்கள் சேவை செய்யும் மனப்பான்மையைப் பார்த்து எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது:)... ஆகா அன்புத் தோழிகளே... சுவீட்டெல்லாம் கொடுத்துவிடுங்கோ.... ப்ரிரீஈஈஈஈஈஈஈஈஈ டெலிவரியாம்... அதுவும் பூஷிருக்கும் ஊருக்கு:).

செபா ஆன்டி மிக்க நன்றி. அனுபவசாலிகளெல்லாம் ஒரே பக்கத்திலேயே தீர்ப்பை ஒத்துக்கொள்ளும்போது, அனுபவம் பேசுகிறதென்று தெரிகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அநாமிகா... இங்க வாங்கோ... உங்கள் கேள்விக்குப் பதில்..
///அன்பு சகோதரி லஷ்மிசங்கர் யாரவது நாட்டாமை தீர்ப்பை மாற்று சொல்லு என்றாலும் பேனா உடைந்து விட்டது என சாட்டு சொல்லதான் ///
எவ்வளவு கரெக்ட்டாக கண்டுபிடித்துவிட்டார்:)(அறுசுவை கின்னஸ் புத்தகத்தில் என்றாலும் நிட்சயம் பெயர் பதிய வேண்டும்... கண்டுபிடிப்புக்கள் பகுதியில்:):)).

இப்படித்தான், பட்டிமன்றம் முடியும்வரை புற்றுக்குள்ளேயே:) இருந்துவிட்டு, பின்பு பூதம் கிணறுவெட்ட அணில் சேற்றைப் பூசிய கதையாக வந்துவிட்டாலும் என்றுதான், பேனாவை உடைத்தேன்:).
///நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு//// இப்படி யாரும் இனிச் சொன்னாலும் தீர்ப்பை மாற்றி எழுத பேனா இல்லையே..... எப்படி இந்த ஐடியா? இதையும் பூஷ்தான் சொல்லிக்கொடுத்தது எனக்கு.... "பூஷ் நீ எங்கேயோ போயிற்றே"... அறிவால்.....:).

அதுசரி என்ன இந்த முனிவர்??... சிலபேரைப்போல:) பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல இருக்கே....:).
////////////////////////////////

எதிர்க்கட்சியில் இருந்துவிட்ட உடன்பிறப்பே வனிதா... ///சந்தனா.... ஓடியாங்கோ.... மீண்டும் வனிதாவை கவுத்துட்டாய்ங்க..... :((/// தவறு என்னில் இல்லை:), போனதடவை கவிசிவா சொன்னது நினைவிலிருக்கோ??? எல்லோரும் ஒரே கட்சியில் இருந்தோம் எம் ராசி அப்படி.... என. இம்முறையும் அதேதானே...(சந்தனா, வனிதா, கவிசிவா....) அதனால் அதிராவில் தப்பில்லை... ராசி அப்படி(விதி;))... அதுதான் இப்படி ஆச்சு... இருப்பினும் தீர்ப்புச் சொன்னது பூஷ்தானே... எய்தவர் இருக்க அம்பை(என்னை) நோகலாமோ??.

///என் கண்ணில் பட்டால் கதை முடிந்தது. நாளை "ஈஸி பூஸ் பிரை" என்று நானே அறுசுவையில் குறிப்பு குடுத்துடுவேன்./// வனிதா சிரித்ததில் கவலையே போச்சு எனக்கு:).

இருந்தாலும் அப்பாடலைக் கேட்டால், பூஷை மன்னித்துவிட்டுவிடுவீங்க... பூஷ் பாவம் ரொம்ப நல்லது:).

அழுதழுது வாழ்த்தினாலும், வாழ்த்துக்கு நன்றி வனிதா.

/////////////////////////
ரேணுகா, ///அதிரா அருமையான தீர்ப்பு,எனக்கு தெரியும் இது தான் தீர்ப்பு என,நான் தான் சொன்னேன் அல்ல,புஷ் என்னிடம் முன்பே சொல்லிட்டது என்று:)./// மிக்க நன்றி. அவ்வளவு இலகுவில் பூஷின் வாயிலிருந்து விஷயங்களை நீங்கள் கறந்திருக்க முடியாதாம் எனப் பூஷ் சொல்லச்சொல்கிறது:).

///கூடவே டிரெயினில் இருந்து கொண்டுவந்த ஜூஸ்.:)இங்கு பட்டி மன்றம் முடிந்தது,எல்லாம் இந்த வாரம் ஒழுங்கா சமைத்து வந்து அங்க சொல்லுங்க/// ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துவிட்டீங்கள். அங்கே சந்திப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திருமதி ஹூசைன்.... ///ஆஹா, முதல் முறையாக வெற்றி!! நன்றி அதிரா!! நல்ல விளக்கங்கள்!!//// மிக்க நன்றி. பூஷுக்கு நன்றியில்லையோ??:).(எப்பவுமே ஒருபக்கம் முகம் கறுக்கப்பண்ணுவதே தொழிலாப்போச்சு..:), எங்கேயோ கேட்டமாதிரி இல்ல..:)).

///எங்கேயெல்லாம் "ள" போட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "ழ" போட்டுவிடுங்கள். அழகாகப் புரிந்துகொண்டீர்களே!! உங்களுக்கா "ஒன்றும்" இல்லை என்று சில பேர் சொன்னார்கள்!! /// ஆகா நல்ல விஷயம் சொல்லித்தாறீங்களே.. இனி அதைப் பின்பற்றலாமே என நினைத்தேன்... பின்னால் குழியல்லவா தோண்டுகிறீங்கள்:)...

///உங்களுக்கு ள, ழ பிரச்னை என்றால், வனிதாவுக்கு ள, ல!! சரிதானே வனி?? /// இது வேற இருக்கோ?... இப்பட்டிமன்றத்தோடு இதுக்கும் ஒரு தீர்ப்பு இனிமேல் வந்துவிடும்:)... அதுதான் நான் முடிவு பண்ணிட்டேன்... இனி ள, ழ வரும் சொற்கள் எதையும் பாவிக்கப்போவதில்லையென:), படிக்கப்போகும் உங்கள் எல்லோரையும் நினைக்கத்தான் அழுகை அழுகையாக வருகிறது....:)....
குழந்தை என்றால்... குந்தை...., வாழைப்பழம் என்றால்.... வாப்பம், இளமை என்றால்... இமை...(இமா அல்ல:)), இப்படித்தான் இருக்கப்போகுது... தமிழ் தெரியாதவர்கள் தயவுசெய்து படித்துவிட்டுவரவும்.. அதிராவின் தமிழ் படிக்க....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு ஹைஸ் - எங்களை திருப்பியனுப்ப முன்வந்த தங்கள் இலவச விமான சேவைக்கு மிக்க நன்றி.. :)) அப்படியே கூடவே, இங்கு வருவதற்கு எமக்கு ஏற்ப்பட்ட பொருட்செலவு, நேரச்செலவு, மற்றும் இதற்காக மேற்கொண்ட உழைப்பு (கூடவே அதிராவின் சுவீட்) - இவற்றையெல்லாம் பேக் செய்து அதே விமானத்டோடவே அனுபுவீர்களானால், விங்கின் மீது ஏறி என்ன, அதை பிடித்து தொங்கிக்கொண்டே வீடு வந்து சேரவும் நாங்கள் எல்லோரும் ரெடி.. :))))

வனிதா- பூஸ் ப்ரை.. வேறெங்கே ஆப்ரிக்காவுக்கே அனுப்பிடுவோம்.. :))

மிசஸ் ஹூசைன்.. உண்மை தான், தலை கால் புரியவில்லை உங்களுக்கு.. :))))

எம் தோழிகள் / அண்ணன்கள் அனைவரையும், இந்த வாரம் நன்கு சமைத்து அசத்தி, வார இறுதியில் நல்ல ரெஸ்ட் எடுத்து ப்ரெஷாக அடுத்த பட்டிமன்றத்துக்கு நேரத்துக்கு கிளம்பி வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..

அனைவருக்கும் இனிய வார நாட்கள்.. ரெயினில் சந்திப்போம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எல்லோரும் எவ்வ""வு.. அக்கறையாக இருக்கிறீங்க.. எனக்கு சுவீட் தர என நினைக்க புல்லரிக்கிறது...
உங்க... வா""த்துக்கு மிக்க நன்றி.... உங்கட தலைப்புக்கு வர ரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறோம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முதல்ல இருந்து நான் சொன்ன மாதிரி நிஜமாவே தீர்ப்பு எப்படி வரும்னு கவலையே இல்லாமல்தான் கருத்து சொன்னேன், ஆனால் தீர்ப்பு பெற்றதேஅதிகம்னு சொல்லி சந்தோசத்தயும் அதிகம் கொடுத்திட்டீங்க(எதிர்பார்க்காமல் கிடைத்ததால் சந்தோசமும் 2மடங்கு அதிகம்)நன்றி அதிரா!! ஆக எல்லாமே அதிகம் தான் கிடைச்சிருக்கு..

நானும் என்கணவர்கிட்ட இதுபற்றி பேசும்போது அவர் சொன்னார் வெளிநாட்டுல தனக்காக வாழலாம் நம்ம நாட்டுல அது முடியாதுனு சொன்னார்..அதிரா நீங்க சொன்ன உடை விஷயம்தான் அவரும் உதாரணமா சொன்னார்..இங்க சாதாரணமா நீ போடும் பேண்ட் சர்ட் கூட அங்க(எங்க ஊருல) போட முடியல, காரணம் அவ்வளவு தூரம் இந்தியாவும், நம்ம சொந்த ஊரும் கூட இன்னும் வளரல...இதிலிருந்து தெரியலயா?அங்க தனக்காக வாழ முடியாதுனு சொன்னார்..அப்படி தனக்காக வாழ்வேன் என்று பிடிவாதம் பண்ணினால் தான்தோன்றிதனமாக தான் தெரியும்..அப்படி வாழ யாரும் நினைக்கிறதில்ல,இது போல சின்ன சின்ன விஷயங்கள்க்கு கூட யாரோ சில பேருக்கு(ஊர் மக்கள்) பயந்து வாழுறோம்..எத்தன விதமா பார்த்தாலும், வெளிநாட்டில்தான் பெற்றது அதிகம், நீ தைரியமா உனக்கு என்ன தெரியுதோ அத சொல்லுனு சொன்னார்...இப்படி நானும் அவரும் சின்ன விஷயங்கள் கூட டிஷ்கஷ் பண்ண முடியுதுன்னா அது இங்க(வெளிநாட்டில்) இருக்கிறதாலதான்..

நீங்க சொன்ன இடமாற்றம், ஆப்பிரிக்கா பற்றி சொன்னது எல்லாமே ஹைலைட்!! you have done excellent job!!well done athiraa!!

சந்தனா

அடுத்த நடுவர் நீங்களா? இப்போதான் எனக்கு தெரிஞ்சது, உங்க பட்டிமன்றம் வர ஆசைதான், ஏன்னா நீங்க எதிர் அணில இருந்தாலும் எடுத்து சொன்ன பாயிண்ட் நறுக்குனு இருந்தது!! ஆனால் தலைப்பு எனக்கு பிடிச்ச மாதிரி(பேச தெரிஞ்ச மாதிரி) இருந்தால் கண்டிப்பா வருவேன்!! கலக்குங்க!!My hearty congrats!!

"இது ஆண்டவன் தீர்ப்பல்ல..... அதிராவின் தீர்ப்புத்தான்" அடடா நாங்க இவ்வளவு நாளும் 'பூஷ்' தீர்ப்பு சொல்லுதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தோம். உண்மை வெளிவந்துடுச்சே அதிரா. யாரோ தப்பா பூஸை இல்ல பிரை வைக்கலாம்னு தேடிகிட்டு இருந்தாங்க. ஆனா இப்ப .................... அதிரா தப்பா நினைச்சுக்காதீங்க. இது உங்கள மாட்டி விடணும்னு இல்ல. நூறு குற்றவாளி (நட்டமையையே வா) தப்பிச்சாலும் (தப்பிக்க விடமாட்டோம்) ஒரு நிரபராதி (பூஸ்) தண்டிக்கப்படக் கூடாதுங்குற நல்ல (!!!) எண்ணத்தில்தான்.

//இஷானி - ஓடியாங்கோ.. இழமை யாமே?? :)) // தெரியாத்தனமா அதை சொல்லிட்டேன்பா. என்னை விட்டுடுங்க. அதிரா நீங்க இனிமே பழத்தை "பம்" -ன்னும் குளத்தை "கும்" ன்னும் எல்லாம் எழுத வேண்டாம். "பளம், குழம்" -ன்னே எழுதுங்க. உமா (pops) வந்து உங்களையெல்லாம் கவனிச்சிப்பாங்க.

//இங்கு வருவதற்கு எமக்கு ஏற்ப்பட்ட பொருட்செலவு, நேரச்செலவு, மற்றும் இதற்காக மேற்கொண்ட உழைப்பு (கூடவே அதிராவின் சுவீட்) - இவற்றையெல்லாம் பேக் செய்து அதே விமானத்டோடவே அனுபுவீர்களானால், விங்கின் மீது ஏறி என்ன, அதை பிடித்து தொங்கிக்கொண்டே வீடு வந்து சேரவும் நாங்கள் எல்லோரும் ரெடி.. :)))) // ஓ இப்படியெல்லாம் வேற நெனப்பு இருக்கா. ஒரு நாட்டமை (அதிபுத்திசாலி) நிறைய யோசிச்சு அழகா ஒரு தீர்ப்ப (பெற்றதுதான் அதிகம்னு) சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறமுமா? இது தீர்ப்ப மாத்துன்னு சொல்லாம சொன்ன மாதிரியில்ல இருக்கு. கூட்டி கழிச்சி பாருங்க நீங்கதான் கொடுக்குறமாதிரி இருக்கும். ஏதோ போனா போகுதுன்னு ஒரு பைலட் ஹெல்ப் பண்ண வந்தா. அது என்னமோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே. கடவுளே... சந்தனா மாதிரி எனக்கும் மறந்திடுச்சே. ஆங்... இருக்க இடம் கொடுத்தா, படுக்கவும் இடம் கேட்பீங்கன்னு -என்னமோ வரும்.

வெளிநாட்டில் இருந்தால் தன்னம்பிக்கை வளரும்னு சொல்லிட்டு நீங்க இப்படி தலைமறைவா இருக்குறது நல்லா இல்ல. ஒருவேளை இந்த சந்தனா முதல் பதிவிலேர்ந்தே சொல்லிக்கிட்டு வராங்களே ஏதோ " காலம் வரணும் காலம் வரணும்" ன்னு (அவர் எப்ப வருவார்ன்னு தெரியலையே) அதுதான் உங்களுக்குமா? ஆனா உங்களுக்குத்தான் 60 வயசு ஆயிடுச்சுன்னு (உபயம்: சந்தனாவே தான் ) சொல்றாங்களே. இன்னுமா காலம் வரணும்.

பூசுக்கு பின்னால ஒளிஞ்சுகிட்டு, நடுங்கிகிட்டே தீர்ப்பு சொன்னாலும், சரியான விளக்கத்தோடு, உங்களின் அழகான எழுத்து நடையில், ரொம்ப தெளிவா தீர்ப்பு சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

எதிர்பார்த்த தீர்ப்பு என்றாலும் அருமையான விளக்கம் மனதார பாராட்டத்தக்கது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்