கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம் !!! சிறப்பு சமைத்து அசத்தலாம்.

வாங்க வாங்க எல்லாரும் வாங்க.... இத்தனை நாள் நம்ம சமையல் குறிப்பை எல்லாம் செய்து மற்றவரையும் செய்ய வைத்து நம்மை மகிழ வைத்த அதிரா, ரேணுகா குறிப்புகளை செய்து அசத்தப்போகும் "சிறப்பு சமைத்து அசத்தலாம்" பகுதி இது.

இன்று திங்கள் (24) தொடங்கி, வரும் திங்கள் (31) வரை சமைக்கலாம். அசத்தல் ராணி, இளவரசி எல்லாம் நம்ம புது கணக்க பிள்ளை இமா அவர்கள் செவ்வாய் அன்று தெரியப்படுத்துவார். அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி கேட்டுகொள்கிறேன். :)

அதிரா'வின் குறிப்புகள் கூட்டாஞ்சோறு பகுதியில் இருப்பதை விட யாரும் சமைக்கலாம் பகுதியில் தான் அதிகமாக உள்ளது. அதனால் அவர் குறிப்புகளின் தொகுப்பு கீழே இருக்கும் இழையில் காணலாம்.

http://www.arusuvai.com/tamil/forum/no/13572

இப்பெயர்களை தேடுக'வில் குடுத்தால் அதிரா குறிப்புகள் கிடைக்கும்.

ரேணுகா'வினுடையது கூட்டாஞ்சோறு பகுதியிலேயே உள்ளது.

http://www.arusuvai.com/tamil/experts/83

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் அலுவலத்தை ஆய்வு செய்ய என் தலைவர் வருவதால் இதில் முழுமையாக பங்கு கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். கண்டிப்பாக முடியும் போது சமைத்து பதிவு போடுகிறேன்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அதிரா, ரேணுகா

வழக்கம் போல என்னுடைய பங்களிப்பு இருக்கும். செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் வனிதா,

நான் ஆரம்பித்தாயிற்று, சுலபமானவையாக ஆரம்பித்திருக்கிறேன் - அதிராவின் புரோகோழி அவியல் & ரேணுகாவின் பிரட் டோஸ்ட் - காரம்.

'ப்ரொய்லர் கோழி' என்று இருந்திருந்தால் ஒரே ஓட்டமாய் ஓடி இருப்பேன். :)

டோஸ்ட் நன்றாக இருந்தது ரேணுகா.

காலையில் மீண்டும் வருகிறேன்.

நல்லிரவு.
இமா

‍- இமா க்றிஸ்

நான் அதிராவின் மீன் குழம்பு மற்றும் ரணபீன்ஸ் கறி செய்தேன். வித்தியாசமான சுவை. மிகவும் பிடித்து இருந்தது. சூப்பர்.

ரேணுவின் நக்கெட்ஸ், வெஜ் ஸ்ட்யூ செய்தேன். இரண்டுமே அருமையாக இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி திரு. ஹைஷ். அவசியம் செய்து சொல்ல வேணும். :) இல்லை என்றால் அதிரா விட மாட்டாங்க.

மிக்க நன்றி சீதாலஷ்மி... நீங்க எப்போ சமைச்சு கொண்டு வருவீங்கன்னு வனி வெயிட்டிங். ;)

இமா.... கணக்கு எடுக்க தெம்பு வேணுமல்லோ.... நிறைய வித விதமா செய்து சாப்பிடுங்கோ.... கணக்குலயும் சேர்த்துடுங்கோ. மிக்க நன்றி. :)

மிக்க நன்றி தனிஷா.... இத்தனை வேகமா சமைச்சு பார்த்து சொன்னது நீங்களும் இமா'வும் தான். :) தொடர்ந்து சமைச்சு அசத்துங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா.... ரேணுகா எங்கே காணவில்லை??? அவரிடம் சொல்லிட்டீங்க தானே இன்று ஆரம்பம் என்று??? என்னிடம் அவருடைய மெயில் ஐடி இல்லை, முடிந்தால் கொஞ்சம் சொல்லி வர சொல்லுங்கோ. நீங்களும் பட்டிமன்றத்துக்கு இடையே இங்கே தலையை காட்டுங்கோ.

இமா... என் கணக்கில் இதை சேருங்கோ.

அதிரா குறிப்பில் இருந்து:

வாழைக்காய்ப் பிரட்டல்
காராமணி வடை

பின்னூடம் இனி தான் தர வேணும். அறுசுவை சற்று ஸ்லோ.... அதனால் நாளை காலை நேரத்தில் கொடுக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,இமா
நான் இன்று செய்தது அதிரா குறிப்பிலிருந்து
சிக்கின் பிரட்டல் கறி
உருளைக்கிழங்கு பிரட்டல் ரெண்டும் நல்ல சுவையாக இருந்தது.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இன்று என்னுடைய மெனு அதிராவின் குறிப்பிலிருந்து

பாகற்காய் பிரட்டல்

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

வனிதா என்ன இது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.நான் நேற்று தான் பார்த்தேன்.ஆனால் தலைப்புதாந்தெரிந்தது.நெட்வொர்க் எரர் வந்திட்டது.31 தானே அதிரா சொன்னார்,அதற்க்குள் எங்கடா சமைத்து அசத்தலாம் என்று பயந்துவிட்டேன்.
மிக்க நன்றி வனிதா,எங்களுக்காக ஒரு சிறப்பு சமைத்து அசத்தலாம் என்று தொடங்கியதற்க்கு,நானும் 3 நாள் முயற்சித்து நேற்று தான் அனைவரையும் விசாரிக்க ஒரு தலைப்பு தொடங்கினேன்.அங்கு பதிவு போடுவதற்க்குள் போதும் என்று ஆகிவிட்டது.அத்தனை ஸ்லோவாக இருக்கு எனக்கு.மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிகொள்கிறேன்,என் சார்பாக அதிரா சார்பாகவும்...

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்