பட்டாணி குருமா

தேதி: August 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்


 

பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து தூளாக்கி கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது வதங்கியதும் தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும். பட்டாணி, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்
எல்லாம் சேர்த்து நன்றாக கொதித்ததும் பொடித்தவற்றை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

காரம் அதிகமாக இருந்தது...
மிளகு சேர்த்ததால் சாப்பிட்ட பின் ரசம் சாப்பிட்ட உணர்வு இருந்தது..
நன்றி,
மோனா

பட்டாணி குருமா மிளகு போட்டு செய்வது இதுவே முதன்முறை நன்றாக இருந்தது நன்றி ரேணுகா
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா பட்டாணி குருமா நல்லா காரமா இருந்திருக்குமே,ஆனால் டேஸ்ட் ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

am from UAE ...where ur from???i need some recipes could u post here