சில கேள்விகள்

அறுசுவையில் நான் புலம்பி வெகு நாட்கள் ஆகி விட்ட படியால் இங்கே குத்து விளக்கேற்றி என்னுடைய புலம்பலை ஆரம்பித்து வைக்கிறேன்:

1. பாபு மாமா - பாப்பி அக்கா இப்போவெல்லாம் ஏன் அடிக்கடி வருவதில்லை மன்றத்துக்கு? வேலைல பிஸியா இருப்பாங்க.. இல்ல?

2. ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கற புது தளம் எப்போ தான் வர போகுது? ஓ காசே இல்லாமல் ஃப்ரீயா உள்ள போறதுக்கு கேள்வி எல்லாம் கேக்க கூடாதோ?! :-/ காசே தராமல் ஃப்ரீயா உள்ளே போகறதுக்கு என்னா தோரணை பாத்தியானு பாப்பி அக்கா கிட்ட மாமா சொல்றார் கேக்குது.. இதுக்கேலாம் அசர மாட்டோம்லே..

3. புது தளம் வர தான் தாமதம் ஆகுது.. இந்த தளத்தோட லுக்கையாவது கொஞ்சம் மாற்றலாமே? ஃபார்மெட்டை சொல்லவில்லை அட்லீஸ்ட் நிறமாவது சேர்க்கலாமே.. 3 வருடமா ஒரே நிறத்தை பார்த்து போர் அடிக்கிறது! :-(

4. சுஹைனா, சுபா ஜெயப்ரகாஷ், ஜானகி ஆகியோரை தேடோ தேடென்று தேடுகிறேன் எங்கே காணோம்? அதுக்காக மத்தவங்களை தேடலைனு ஆகிடாது.. வகை வகையா நிறைய இடத்துல புலம்பி பாத்துட்டேன்.. ஒரு காலத்துல இருந்த பல பேர் சுத்தமாவே காணாம போயிட்டாங்க.. ஏங்க கொஞ்சம் வந்து தலையை காமிச்சுட்டு போங்க..

5. கற்பனை டூர், கெட்டுகெதர், கவிதைனு கலக்கலா இருந்த தளம் இப்போ வெறும் பட்டி மன்றத்தோட நிக்குது.. ஒரு வேளை பாபு அங்கிள் எல்லாத்தையும் புது தளத்துல போட்டுக்கலாம்னு விட்டுட்டாரோ?

6. முன்னெல்லாம் விவாதத்தில் பாபு அங்கிள் வந்தா தான் தனி கெத்தே இருக்கும்.. அவரு வந்த தான் வாய்க்கா தகராறு ஆலமரம் பஞ்சாயத்து எல்லாமே.. அப்படி இருக்கும் போது பட்டி மன்றத்தில் அவர் என் கலந்து கொள்வதில்லை? சும்மா நான் இதில் இருந்து ஒதுங்கி தான் இருப்பேன்னு இருக்கறது எல்லாம் நல்லாயில்லை ஆமா. இனிமே வந்து தான் ஆகணும். அப்புறம் அருண்ப்ரசங்கினு ஒரு அண்ணா இருந்தாரே.. எங்க அவரையும் காணோம்.. இப்படி ஆண்குல பிரதிநிதிகள் எல்லாம் காணாம போயிட்டா என்ன அர்த்தம்ங்கறேன்?

ஆக மொத்ததுல அறுசுவைல சில பல சுவைகள் குறைஞ்ச மாதிரி இருக்கு எனக்கு.. X-( யாராவது ஏதாவது வழி பண்ண கூடாதா?

கடுப்புடன்,
ஹேமா.

கேள்விகளுக்கு விடை வரும் வரை கால வரையற்ற தர்ணாவில் குதிக்கிறேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா,

சுஹைனா இப்போ தனி ப்ளாக் வைத்து எழுதி, புத்தகமெல்லாம் எழுதி, பெரிய எழுத்தாளராகி விட்டார். விவரங்களுக்கு இங்கே போய்ப் பாருங்கள்:
http://sumazla.blogspot.com/

மற்ற கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.

நானும் முன்பு இதுபோல் அட்மினிடம் சில (டெக்னிக்கல்) சந்தேகங்கள் கேட்டு ஒரு இழை தொடங்கியிருந்தேன். பலரின் ஆதரவு இருந்தாலும் ஒரு பதில்கூட வரவில்லை.

நீங்கள் தர்ணாவில் குதித்திருப்பதால், பார்க்கலாம், ஒருவேளை பதில்கள் வரலாம்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, இரவு வணக்கம்..... உங்கலுக்கு இனிய பொழுது, இனிய இரவு கிடைக்க வாழ்த்துக்கள்....

ஹாய் ஹேமா, mrs.hussain இதில் ஜெயந்தி மாமியும், ஜெயாலக்ஷ்மி, உத்தமி, சீனா மஹா,......... ஆலையே பார்க்க முடியலைப்பா? ஏன்?

அவங்க முன்ன மாதிரி வரதே இல்லை? தெரிந்தால் சொல்லுங்கபா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, இரவு வணக்கம்..... உங்கலுக்கு இனிய பொழுது, இனிய இரவு கிடைக்க வாழ்த்துக்கள்....

ஹாய் ஹேமா, mrs.hussain இதில் ஜெயந்தி மாமியும், ஜெயாலக்ஷ்மி, உத்தமி, சீனா மஹா,......... ஆலையே பார்க்க முடியலைப்பா? ஏன்?

அவங்க முன்ன மாதிரி வரதே இல்லை? தெரிந்தால் சொல்லுங்கபா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, இரவு வணக்கம்..... உங்கலுக்கு இனிய பொழுது, இனிய இரவு கிடைக்க வாழ்த்துக்கள்....

ஹாய் ஹேமா, mrs.hussain இதில் ஜெயந்தி மாமியும், ஜெயாலக்ஷ்மி, உத்தமி, சீனா மஹா,......... ஆலையே பார்க்க முடியலைப்பா? ஏன்?

அவங்க முன்ன மாதிரி வரதே இல்லை? தெரிந்தால் சொல்லுங்கபா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

கடுப்போடு நாங்கள்..
இப்படி ஒரு தலைப்பை போட்டு கேள்விக்கணைகளைத் தொடுத்து எங்களைக் கடுப்பில் ஆழ்த்திட்டீங்களே ஹேமா:), தினமும் வாற எங்களுக்கே எதுவும் புரியேல்லை, ஆண்டுக்கொருதடவை வந்து அட்டகாசம் பண்ணிட்டுக் காணாமல் போகும் உங்களுக்கு மட்டும் எப்படிப் புரியும்.

இத் தலைப்பைக் காணாமல், தேவாவின் தலைப்பில் உங்களுக்குப் பதிவு போட்டுட்டேன், எனக்கு உங்கள் கேள்வியில் ஒன்றுக்கு மட்டும்தான் பதில் கொஞ்சம் தெரியும், ... அவதாரம் எடுத்திட்டார் என நினைக்கிறேன்.. எல்லாம் ஒரு கண்டுபிடிப்புத்தான், தப்பா எடுக்காதீங்க, புரிஞ்சாச் சரி.

////கற்பனை டூர், கெட்டுகெதர், கவிதைனு கலக்கலா இருந்த தளம் இப்போ வெறும் பட்டி மன்றத்தோட நிக்குது.. ஒரு வேளை பாபு அங்கிள் எல்லாத்தையும் புது தளத்துல போட்டுக்கலாம்னு விட்டுட்டாரோ?//// சில விஷயங்களில் உங்களுக்கும் கிட்னி நல்லா வேலை செய்யுதுபோல தெரியுது...

இதுக்கு மேலும் நான் வாய் திறக்க விரும்பேல்லை... நல்வரவு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ennadhu nalvarava??! yenga naan menakettu ithana kelvi ketta adhuku pudhirai badhila solittu poringa? irunga unga veetuku auto anupittu varen..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

புதிராச் சொன்னாப் புரிகிற அளவு பக்குவம் இல்லையென்று, புரியாமல் சொல்லிட்டேன்...

எதுக்கு ஓட்டோ அனுப்பப்போறீங்க? ஏதாவது புதுஷா அமெரிக்காவில வந்திருக்கா?:) பறவாயில்லையே அனுப்பி வையுங்கோ... உங்களைப்போல நல்ல உள்ளம் படைதவர்களின்:) நட்புக் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்:).

ஓட்டோவுக்கும் நல்வரவு..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹேமா போஸ்டிங் பார்த்தீங்களா.. ஹேமா போஸ்டிங் பார்த்தீங்களா... ன்னு இன்னும் பான் கி-மூன் மட்டும்தான் என்கிட்டே போன் பண்ணி கேட்கலை.. நாளைக்கு அவரும் போன் பண்ணினாலும் பண்ணிடுவாரு.. அதுக்குள்ள இந்த த்ரெட்டை கண்டுபிடிச்சு பதில் கொடுக்க உட்கார்ந்துட்டேன். :-)

// பாபு மாமா - பாப்பி அக்கா இப்போவெல்லாம் ஏன் அடிக்கடி வருவதில்லை மன்றத்துக்கு?//

அவங்க எப்போ அடிக்கடி வந்தாங்க?!! :-)
எல்லாரும் கம்ப்பெல் பண்ணினதால, நானும் கம்ப்பெல் பண்ணி ஒரு த்ரெட் ஓபன் பண்ண வச்சேன். பாபு பொண்டாட்டியா இருந்துக்கிட்டு இப்படி தமிழ் எழுதலாமான்னு என்னையும் சேர்த்து ரெண்டு மூணு பேரு கேள்வி கேட்க, அத்தோட முருங்கைமரம் ஏறிட்டாங்க. இப்ப (எப்பவும் போல) மன்றத்தை பார்வையிடுறதோட சரி. என்னை மாதிரி ஒண்ணாவதுல இருந்து தமிழ் மீடியத்துல படிக்கலையாம். எல் கே ஜியில இருந்து இங்கிலீஷ் மீடியமாம். ஸோ.. டமில் அவ்ளவா எழ்த வராது.. ;-) ஆனா, ழகர, னகர, றகர வித்தியாசம் எல்லாம் பார்க்காம, தலைக்கு கால் போட்டு, சில பேர் இங்க தமிழ் புரட்சி பண்றதை படிச்சிட்டு, 'அவங்களையெல்லாம் ஒண்ணும் சொல்லாத.. என்னை மட்டும் சொல்லு..' ன்னு அப்பப்ப விலாவை இடிப்பாங்க.. அதுக்கு என்னோட பதில்.. "அவங்களையெல்லாம் அவங்க அவங்க வீட்டுக்காரங்க கேட்பாங்க.." :-)

//..புது தளம் எப்போ தான் வர போகுது?//

இதுக்கு என்கிட்டே சரியான பதில் இல்லை. ரொம்ப நாளாவே இதைப் பத்தி பேசி, வேலையைத் தொடங்கி செய்துக்கிட்டு இருந்தாலும், போன வருசம் நவம்பர், டிசம்பர்லதான் ரொம்ப சீரியஸ்ஸா ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். இந்த ஜனவரி வரைக்கும் ஒர்க் பண்ணி ஒரு 70 சதவீதம் முடிச்சேன். எப்படியும் பிப்ரவரியில வெளியிட்டுடலாம்ங்கிற நம்பிக்கையில இருந்தப்ப, வேற சில முக்கிய வேலைகள்ல இறங்க வேண்டியதாச்சு. அதை தொடர்ந்து முதுகு வலி, ட்ரீட்மெண்ட்ன்னு சிஸ்டம் பக்கமே ஒரு மாசமா வர முடியாத நிலைமை. முதுகு வலி முழுசா குணமான மாதிரி தெரியலை. முன்னெல்லாம் பத்து மணி நேரம்கூட தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்ய முடியும். இப்ப ஒரு மணி நேரமே கஷ்டமா இருக்கு.. (வயசாயிடுச்சாம்.. காலண்டர் சொல்லுது.:) டாக்டரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. (இதுக்காக எத்தனை தடவைத்தான் சேர் மாறி மாறி உட்கார்ந்து வேலை பார்க்குறது..:-))

ஒரு/ஒரே வேலையை ரொம்ப நாளா செய்துகிட்டு இருக்கிறப்ப, ஆரம்ப கால உற்சாகம் போயி, ஒரு கட்டத்துல ஒருவித சலிப்பு வந்துடும். இதெல்லாம் ஏன், எதற்குன்னு ஒரு சுய லாப, நஷ்ட கணக்கு போட்டுப் பார்த்து, இதனால அடைஞ்சது, இழந்தது பற்றி ஒரு மதிப்பீடு செஞ்சா, வித்தியாசம் என்னவோ மடுவும், மலையுமா இருக்கு. வகை வகையா சமையல் செய்ய, உலகத்தாருக்கு வழிமுறைகள் செஞ்சுக் கொடுக்கிற நேரத்துல, நம்ம வீட்டுல அடுப்பு எரியவும் சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கு. இப்ப கொஞ்ச காலமா கவனம் அதுல இருக்கிறதுனால, என்னால அறுசுவையில அதிக கவனம் செலுத்த முடியலை. ஒரு 20, 25 நாள் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்தா, மீதி உள்ள வேலைகளையும் முடிச்சு புது தளத்தை வெளியிட்டுடலாம். இந்த மாசத்துல எப்படியும் முடிச்சிடணும்னுதான் ஒவ்வொரு மாசமும் நினைக்கிறேன். அதுக்காக நேரம் ஒதுக்க முடியாதபடி மற்ற வேலைகள் இப்ப முக்கியமா இருக்கு.

நான் செய்ய வேண்டிய வேலைகளை வேற ஒருத்தரை வச்சு செய்யமுடியாது.
புதுசா ஒருத்தரை கொண்டு வந்து, நான் இதுவரை செய்திருக்கிற விசயங்களை விளக்கி, மீதி வேலைகளை வாங்குறதுக்கு செலவழிக்கிற நேரத்துல இன்னும் ரெண்டு சைட் டெவலப் பண்ணிடலாம்.

//..இந்த தளத்தோட லுக்கையாவது கொஞ்சம் மாற்றலாமே?//
//..எல்லாத்தையும் புது தளத்துல போட்டுக்கலாம்னு விட்டுட்டாரோ//

ஆமாம், இன்னும் கொஞ்ச நாள்ல புது தளம் வந்துடுங்கிற நம்பிக்கையிலேயே காலம் போனதால, இப்ப இருக்கிற தளத்துல கையை வைக்கலை. நிறைய புது விசயங்களோடு புது அறுசுவை வரணும்ங்கிறதுதான் என்னோட திட்டம். இதனாலேயே நிறைய பேரை காத்திருப்பில் வச்சிருக்கேன். அவங்க படைப்புகள் எல்லாம் புதுதளத்துல வரப்போகுது, வரப்போகுதுன்னே சொல்லி இதுநாள் வரைக்கும் அல்வா கொடுத்துக்கிட்டு வர்றேன். இப்ப அவங்களுக்கும் அல்வா சலிச்சு போயிருக்கும்.. :-) நிச்சயம் ஒருநாள் புது தளம் வரும். நீங்கள் கேட்ட (கேட்காத) நிறைய புது பகுதிகள் அதுல இருக்கும்.

//முன்னெல்லாம் விவாதத்தில் பாபு அங்கிள் வந்தா தான் தனி கெத்தே இருக்கும்.. அவரு வந்த தான் வாய்க்கா தகராறு ஆலமரம் பஞ்சாயத்து எல்லாமே.. //

ஏன் இந்த கெட்ட எண்ணம்... இப்பத்தான் கொஞ்ச நாளா அந்த மாதிரி தகராறு, பஞ்சாயத்து இல்லாம அறுசுவை அமைதியா ஓடிக்கிட்டு இருக்கு.. நானும் ஆலமரத்தையெல்லாம் மறந்து, போதி மரத்து பக்கம் ஒதுங்கி இருக்கேன்.. பொறுத்துக்க முடியாதே.. :-) (இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அறுசுவையை போர்க்களமா ஆக்கிடுறாங்கப்பா.. )

மன்றம் பக்கம் வரமுடியாததுக்கு காரணம் நேரமின்மைன்னு நான் (உண்மையை) சொன்னா, இந்த நேரமில்லைன்னு சொல்றவங்களையெல்லாம் தூக்குல போடணும்னு இலா ஒரு த்ரெட் ஆரம்பிச்சு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க.. :-) என்ன திட்டினாலும் உண்மை அதுதான். நான் ஏற்கனவே மன்றத்துல ரெண்டு மூணு இடத்துல எழுதி இருக்கேன். நேரமின்மை = முக்கியமில்லை. இதுதான் இதோட நேரடி அர்த்தம். முக்கியமில்லைங்கிறதுக்கு அர்த்தம் தேவையில்லைங்கிறது கிடையாது. இதைவிட முக்கியமான வேற வேலை இருக்குன்னு அர்த்தம். முக்கியமில்லைன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு பதிலா, நாம் எல்லாரும் கொஞ்சம் நாகரிகமா பயன்படுத்துற வார்த்தைதான் "நேரமில்லை".

பொழுதே போகலேன்னு சொல்றவங்களை பார்க்கையில எனக்கு ஆச்சரியமா இருக்கும். பொறாமையாவும் இருக்கும். டைம் மேனேஜ்மெண்ட் விசயத்துல நான் ரொம்ப வீக்கோன்னு சந்தேகமா வேற இருக்கும். படித்தல், பார்த்தல், கேட்டல், செய்தல் ன்னு இப்படி எல்லா வினைச்சொற்கள்லயும் நாம செய்ய வேண்டிய விசயங்கள் எவ்வளவோ இருக்கு. ஒரு வருசமா தேவா அவர்களை நச்சரிச்சு கேட்டு வாங்கின Prison Break சீரியல் 3 செசன்ஸ், 18 டிவிடி அப்படியே பெட்டியில இருக்கு. இன்னும் ஒண்ணைக்கூட பார்க்கலை.. :-) மூணு நாலு வருசமா புத்தக கண்காட்சியில வாங்கின புத்தகங்கள்ல 20 சதவீதம் புக்ஸ்கூட இன்னும் படிச்சு முடிக்கலை (இப்ப அதுல பாதி புக்ஸ் இரவல் போயிடுச்சுங்கிறது வேற விசயம்.) எழுத வேண்டிய விசயங்கள்/புத்தகங்கள், தொடங்க வேண்டிய இணைய தளங்கள், சந்திக்க வேண்டிய நபர்கள், செல்ல வேண்டிய இடங்கள்.. இப்படி நாலு பக்கத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.. இதுல ப்ரையாரிட்டி பேஸிஸ்லதான் ஒவ்வொன்னா செஞ்சுக்கிட்டு வர்றேன். அறுசுவைக்குதான் அதிகப்பட்ச ப்ரையாரிட்டி கொடுத்தாலும், இப்ப கொஞ்ச காலமா, அதுவும் தற்காலிகமா, அதை இரண்டாம், மூன்றாம் இடத்துல நிறுத்தி வைச்சிருக்கேன். கூடிய சீக்கிரம், சில வேலைகளை முடிச்சதும், என்னோட முழு நேரத்தையும் அறுசுவைக்காக ஒதுக்குவேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டு, நீங்க எல்லாரும் அறுசுவை ஆலமரத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருங்க. சீக்கிரமே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.

//மொத்ததுல அறுசுவைல சில பல சுவைகள் குறைஞ்ச மாதிரி இருக்கு.. யாராவது ஏதாவது வழி பண்ண கூடாதா?//

கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் அறுசுவையை நூறுசுவையாக்கிடலாம். ஹேமா பொண்ணு வருசத்துக்கு ஒரு பதிவு போடாம, பழையபடி எழுத ஆரம்பிச்சாலே ரெண்டு மூணு சுவை, குறிப்பா நகைச்சுவை சேர்ந்துடும். :-)

அட்மின் அண்ணா அவர்களுக்கு. நான் இப்பொதான்

முதல்தடவையா உங்களுக்கு பதில் பதிவு போடறேன்.

உங்களின் நிலமையை எவ்வளவு தெளிவாக அழகாக‌

விளக்கி எழுதி உள்ளிர்கள்.யார்,யார் எவ்வளவு சந்தே

கங்கள் கேட்டாலும் ,அவர்களுக்கு உங்களின் அரவணைப்

பான பதில் ரொம்ப நன்றாக இருக்கிறது.

நீங்கள் நல்ல ஆரோக்யத்துடன் இருந்தால்தான் நீங்கள்

நினைக்கும் நல்ல செயல்களை மேலும்,மெலும் சிற்ப்புடன்

செய்துவரமுடியும் இல்லையா? அதற்கு முதலில் நீங்கள்

உங்களின் உடல் நிலையில் நல்ல கவனம் செலுத்தவேண்டும்

அறுசுவையில் உள்ள எல்லா பகுதிகளிலும் சென்று முழுவதும்

இன்னமும் படித்துமுடிக்கலை.படித்தவரையிலும் இந்ததளத்தில்

இருக்கும் அனைவரிடமும் உங்களுக்கு மிக,மிக நல்ல பெயர்,

அள்வுகடந்தபிரியமும் நிரையவே இருக்கிறது. காசு பணம் இன்று

வரும் நாளை போகும். ஆனால் நீங்கள் அனைவரிடமும் சம்பாதித்

திருக்கும் இந்த நல்ல பெயர் என்றுமே உங்களின் கூடவேஇருக்கும்.

அந்த நல்லபெயர் வாழ்வில் எல்லா நலன்களையும் தேக ஆரோக்யத்

தையும் உங்களுக்கு என்றென்றும் கொடுக்கும்.

மேலும் சில பதிவுகள்