பச்சை தொக்கு

தேதி: August 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினாக் கட்டு- 2
கொத்தமல்லிக் கட்டு-1
கறிவேப்பிலை- 4 கொத்து
புளி -ஒரு சிறிய ஆரஞ்சு அளவு
மிளகாய் வற்றல்- 1 கை
கடலைப்பருப்பு- 50கிராம்
உளுத்தம்பருப்பு- 50 கிராம்
இஞ்சி- 50 கிராம்
பச்சை மிளகாய்-5
காயம்- சிறிது
நல்லெண்ணெய்-200 கிராம்
தேவையான உப்பு


 

கடலைப்பருப்பு, வற்றல் மிளகாய், காயம், உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
ஆறியதும் சிறிது கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, கீரைகள், பச்சை மிளகாய், புளியை நன்கு அரைக்கவும். எண்ணெயை சூடாக்கிய பின், மிதமான தீயில் அரைத்ததை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பொடியை சிறிது சிறிதாகத் தூவி கிளறிக்கொண்டே இருக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
லேகியப் பதம் வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிங்க. இப்ப எல்லாம் வருவதே இல்லை,ரொம்ப நன்றாக இருந்தது. நான் இன்று செய்தேன், இந்த் முறையில் நான் கொத்தமல்லி மட்டும் செய்துள்ளேன். மிக்க டேஸ்டி & ஹெல்தி.

கடந்த ஒரு மாதமாக தஞ்சாவூரில் இருந்தேன். இப்போதுதான் இங்கு திரும்பி வந்தேன். உங்களின் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பச்சை தொக்கு நன்றாக வந்தது மகிழ்வாக இருந்தது. உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றிகள்!!