வாழைக்காய் பொரியல்

தேதி: August 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய்-2
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்- 3 ஸ்பூன்
வெங்காயம்[பொடியாக அரிந்தது]-1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- சில இலைகள்
பொடியாக அரிந்த கொத்தமல்லி-2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
காயப்பொடி- சிறிது
தேங்காய்த்துருவல்- அரை கப்


 

வாழைக்காயை சிறு துண்டுகளாய் நறுக்கி சிறிது தண்ணீரிஒல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
கடுகைப்போட்டு அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காயம் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
வெந்த வாழைக்காயைச் சேர்த்து சில நிமிடங்கள் பிரட்டவும்.
கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு புரட்டி புரட்டி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்