தேதி: August 29, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - ஒன்று
சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.

அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

சாதத்துடன் முட்டை சேர்ந்து பொலபொலவென்று வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையான முட்டை புலாவ் ரெடி.

இந்த முட்டை புலாவை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. பார்வதி </b> அவர்கள். இவர் அசைவ சமையல்கள் செய்வதில் கைத்தேர்ந்தவர். அவருடைய இன்னும் பல குறிப்புகளை நம்மிடையே பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார்.

Comments
மகவும் சுலபமானது..
மிகவும் சுலபமான எக் புலாவ். அவசரத்துக்கு உடனடியாகச் செய்துகொள்ளலாம்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்