சமைத்து அசத்தலாம் - 18, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -17, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -18 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , சுபா ஜெயபிரகாஷ் (517)இன் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். வரும் செவ்வாய்க்கிழமை (08/09) முடிவடையும். புதன்கிழமை(09/09), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

மீண்டும் நாம் எம் சமையல் ரெயினை... ஓட ஆரம்பிக்கிறோம். ஆனைவரும் வாங்கோ. வந்து பழையபடி கலந்துகொள்ளுங்கோ. மீண்டும் எமது ரெயின் களைகட்டவேண்டும்.

சிறப்பு சமைத்து அசத்தலாம் நடக்கிறதே, இதை அடுத்தவாரம் ஆரம்பிக்கலாமோ என எண்ணினேன், ஆனால் அடுத்த வாரம் ஆரம்பித்தால் பட்டிமன்றமும் இதுவும் ஒரே வாரத்தில் நடக்குமென்பதால், நாளைக்கே ஆரம்பித்தால் நல்லதென ஆரம்பிக்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

தொடர்ந்து சமைக்க கஸ்டமாக இருக்கென எண்ணாமல், தயவுசெய்து எல்லோரும் வாங்கோ உங்களால் முடிந்தவரை செய்து சொல்லுங்கோ. சிறப்பு சமைத்து அசத்தலாமை நாம் மிஞ்சிவிடவேண்டும்:) சமையலில்..:) வாங்கோ. நாளை திங்கட்கிழமை(31/08) சமைக்கத் தொடங்குவோம். எங்கள் எக்கவுண்டன் ரேணுகாவும் ரெடியாக இருக்கிறார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சேசிங்...

உங்களை அங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், ரகசியமாக ற்றைனுக்குள் வந்துட்டீங்களோ?? எல்லாரும் சமைப்பார்கள், இம்முறை அதிக வேலை இல்லாமல் தப்பித்திடலாமேன்று நினைத்தேன்.. முடியாது போல இருக்கிறதே??

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வந்துட்டேன் அதிரா....

உடனடி கார சட்னி
கடலை மாவு சட்னி - முறை 1

இது இரண்டும் கணக்கில் சேருங்கோ. காலை தோசைக்கு செய்தாச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகள் எல்லாரும் ஓடி வாங்க,சமைத்து அசத்தலாம் டிரெயின் வந்துவிட்டது.எல்லாரும் விடுமுறையை முடித்துவிட்டீங்க என்று நினைக்கிறேன்,இனி பழையபடி சமைக்க வேண்டியது தான்,சமைச்சு தானே ஆகனும்.எல்லோரும் நிறையா சமைத்து சொல்லுங்க,இப்ப நான் எல்லாருக்கும் ரோஸ் மில்க் தரேன்.குடிச்சு போட்டு தெம்பா வேலை செய்யூங்க.

சந்தனா லீவு விட்டா ரூல்ஸ் மறக்குது.இங்க சமைக்காமல் ஒரு பதிவு போட்டா 2 குறிப்புகள் செய்து சொல்லனும்,நீங்க 10 செய்ய பிளான் பன்னி இருந்தா 12 செய்து சொல்லுங்க,:)

வனிதா குத்து விளக்கு ஏற்றி டிரைவர் சீட்டை பிடிச்சுட்டீங்க,அப்படியே இருக்கனும் சமத்தா:)தினமும் நிறையா செய்ங்க ,முடியும் போது வந்து சொல்லிட்டு போங்க.

அதிரா நான் எல்லோரையும் கவனித்தால் நீங்கள் என்னை கவனீப்பீங்க,நான் இன்று ஒன்னும் சமைக்கல.நான் ஒரு குறிப்பும் இன்னும் தேடல.இன்று இரவு தேடி நான் நாளை முதல் சமைக்கிறேன்.எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலையாக உள்ளது.இன்னும் காபி கூட குடிக்கல. எல்லாருக்கும் பதிவு போட்டுட்டு தான் அடுத்தவேலை என்று உட்காந்தேன்,மணி 12 ஆச்சு,கோவிக்காதீங்க,நாளை என் கணக்கை ஓபன் செய்யலாம்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று சேமியா கிச்சடி மற்றும் தேங்காய் சட்னி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிரா, ரேணுகா

நான் செய்தது - காலைக்கு கோதுமை தோசை, மதியத்துக்கு பீன்ஸ் காரட் பொரியல்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

எல்லோரும் இங்கே வாங்கோ
அந்த சமையல் பகுதி மூடியாச்சு, இப்போ இது திறந்தாச்சு, எல்லோரும் இங்கே வாங்கோ. அவர்களோடு போட்டிபோட்டுக் கூப்பிடப்படாது எங்களிடம் வாங்கோ என்றுதான் கொஞ்சம் அடக்கி வாசித்துக்கொண்டிருந்தேன். இனி ஓடிவாங்கோ.

நீங்களாகவே வந்து உடனே செய்துசொல்லிவிட்டீங்கள்..

சந்தனா வாங்கோ.. சமைத்ததெல்லாம் வந்து சொல்லுங்கோ.

வனிதா வாங்கோ, மிக்க நன்றி. அங்கே மட்டுமல்லாமல் இங்கேயும் புகுந்து வி"ளை"யாடுறீங்கள். இன்னும் செய்யுங்கோ.

///அதிரா நான் எல்லோரையும் கவனித்தால் நீங்கள் என்னை கவனீப்பீங்க,/// ரேணுகா என்னை நல்லாவே புரிஞ்சுவைச்சிருக்கிறீங்கள்... இப்படிச் சொன்னால் விடமாட்டேன்.. விரைவில் சமைத்துக்கொண்டு வாங்கோ..

அநாமிகா வாங்கோ மிக்க நன்றி. இன்னும் முடிந்தவரை செய்யுங்கோ.

சீதாக்கா வாங்கோ நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கலகலப்பாக வந்திருக்கிறீங்கள். மிக்க நன்றி.

தொடர்ந்து சமைத்தால் அலுத்துப்போகும் என்றுதான் இடைவேளை... அதுவும் பெரிய இடைவேளை விட்டோம்... இனி உஷாராகி இருப்பீங்கள்... எல்லோரும் வாங்கோ.... ரெயினில் படம் போடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது... விரைவில் வந்துவிடும் எங்கள் புதிய த... போல்... கடவுளே எனக்கேன் ஊர்வம்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று புடலங்காய் பொரியல் மற்றும் கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்ஷ்மி இந்த முறை உங்களுக்கு போட்டியே இல்லை என நினைக்கிறேன்:))),நீங்கள் தான் விடாமல் சமைக்கிறீங்க,சமத்து இப்படியே நிறையா செய்து சொல்லுங்க,

சீதா அக்கா மிக்க நன்றி மீண்டும் இனைந்ததுக்கு,வீட்டில் அனைவரும் நலமா?உங்களை ரெம்ப நாள் காண முடியல,மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க அக்கா.

அதிரா என் கணக்கை நீங்கள் ஓபன் செய்யலாம்,கடலை மாவு சட்னி - 2,அது சரி உங்கள் கணக்கை நான் எப்ப ஓபன் செய்வது,எல்லாரையும் சமைக்க சொல்லும் எங்கள் அதிரா நீங்களும் சமைத்து வரவேனும்,இல்லாவிட்டால் பனிஷ் மெண்ட் தான்.

தோழிகளே எங்கள் பெட்டியெல்லாம் காலியா கிடக்கு,இப்பவே ஏறிக்கலாம்,அப்பறம் இடம் இல்லை என்ற வருத்த பட கூடாது.

எல்லாரும் எங்க இருக்கீங்க,சத்தத்தையே காணாம்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா, ரேணுகா..... இருவரும் நலமா? இரண்டு நாட்களாக இந்த பக்கம் வந்து பதிவு போட முடியல..... என் கணக்கில் சேர்த்துடுங்கோ நேற்றும் இன்றும் செய்தவை:

ரவை பனியாரம்
புதினா சாதம்
காய்கறி ஃப்ரை பொடி
உருளை கறி
சேமியா உப்புமா

அனைத்தும் மிகவும் சுலபமாக செய்ய கூடியதாகவும் சுவையாகவும் இருந்தது. இன்னும் பின்னூட்டம் தரவில்லை. கோவிக்க வேண்டாம்.... நேரம் போதவில்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்