ப்ளைன் கடல்பாசி

தேதி: September 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

இந்த ப்ளைன் கடல்பாசி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

கடற்பாசி (சைனா கிராஸ்) - 10 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்
சீனி - 6 - 8 மேசைக்கரண்டி
ரோஸ்மில்க் எசன்ஸ் அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பால் - ஒரு கப் (விருப்பப்பட்டால்)


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் அதில் கடற்பாசியை சேர்க்கவும்.
கடற்பாசி கரைந்ததும் அதனுடன் சீனியை சேர்த்து காய்ச்சவும்.
கடற்பாசி மற்றும் சீனி கரைந்ததும் இறக்கி வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இரண்டு தட்டில் பால் மற்றும் எசன்ஸை தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.
அதில் காய்ச்சிய கடற்பாசி நீரை சேர்க்கவும். பால் உள்ள தட்டில் கடற்பாசியுடன் சில துளி எசன்ஸ் சேர்க்கவும். இப்பொழுது தட்டில் ஊற்றிய கடற்பாசி ரெடி.
இதனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் 2 மணி நேரங்கள் வைத்திருந்தால் அப்படியே செட்டாகிவிடும். பின்பு விருப்பப்பட்ட வடிவங்களில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான ஜில்லென்ற ஜெல்லி ரெடி. இது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் தினமும் செய்வது வழக்கம். விருந்து சமயம் கூட டெசர்ட் உடன் பரிமாறலாம். இதனை நட்ஸ் போட்டு அலங்கரித்து பரிமாறலாம். குழந்தைகள் மனதை கவரும் ஈசியான ரெசிப்பி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா....... அந்த ரெட் கலர் பார்க்கவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு. :D கடற் பாசின்னா சைனா கிராஸா??? இதுவரை நான் சமைத்ததில்லை. பார்த்த பின் செய்ய ஆசை வந்துட்டுது. கிடைச்சா வாங்கி செய்யறேன். மிக்க நன்றி. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் திருமதி. ஆசியா உமர்,

நான் இந்தியா செல்ல உள்ளேன் இந்தியாவில் கடற் பாசி எங்கு கிடைக்கும் தெரிவிக்கவும்
நன்றி

ஆசியா அக்கா!!! சூப்பர்... இப்ப நான் கடல்பாசிக்கு பெரிய ரசிகை ஆயிட்டேன்.. இது நல்ல சுவையுடன் இருக்கு. அதுவும் இல்லாம.. இதில இருக்கும் நார்சத்தும் நல்லதாம்... வெஜிடேரியனும் கூட.. வேறென்ன வேறென்ன வேண்டும்.. கடல் பாசி மட்டும் போதும் :))

தெளிவான புகைப்படம்.. தமிழ் தெரியலன்னா.. படம் கூடவா பாக்க தெரியாதுன்னு என் பங்களாதேஷ் நண்பிகிட்ட சொன்னேன் :
நன்றி!!!
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வனிதா நிஜமாகவே அந்த ரோஸ்மில்க் எசன்ஸ் இந்த கடற்பாசி காம்பினேஷன் அருமையாக இருக்கும். சோமா ,சைனா கிராஸ் அல்லது அகார் அகார் என்று எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் கிடைக்கும்.10 கிராம் பாக்கட்டாகவே இந்தியாவில் கிடைக்கும்.
இலா உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா உமர் அவர்களுக்கு,
தங்களின் பதிலுக்கு நன்றி இந்தியா சென்றதும் செய்து பார்க்கிறேன்

சோமா

ஹாய் இலா இதுல இவ்வலோவிசயம் இருக்கா ( இதில இருக்கும் நார்சத்தும் நல்லதாம்... வெஜிடேரியனும் கூட.. வேறென்ன வேறென்ன வேண்டும்.. கடல் பாசி மட்டும் போதும் :)) ) உங்க விளக்கதுக்கு நன்றிப்பா.... நன்றி இலா...

ஆசியா அக்கா நானும் செய்ய போரான்... வாங்கிட்டு வந்து சொஞுட்டு சொல்லரான்... நன்றிக்கா...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஆஹா... ஆசியா அக்கா, சூப்பரோ சூப்பர்! கலக்கிட்டிங்க‌ போங்க! அதிலும் அந்த ரோஸ் மில்க் எசன்ஸ் போட்ட லைட் பிங்க் கடல்பாசி, அதை நீங்க ப்ரசன்ட் பண்ணி எடுத்திருக்கிற அந்த போட்டோ ரொம்ப அழகு!
கடல்பாசி இதுவரை நான் உபயோகப்படுத்தியது இல்லை. இதுல இத்தனை அழகா, இவ்வளவு ஈஸியா ஒரு ஐய்ட்டம் பண்ணமுடியும்னு இத்தனை நாள் தெரியாம போச்சே! இனி உடனடியாக செய்திட வேண்டியதுதான்.
மிக்க நன்றி, ரெஸிப்பியுடன் கடல்பாசியின் மற்ற பெயர்களை குறிப்பிட்ட ஆசியா அக்காவிற்கும், அத்தோடு கூடுதல் தகவல் கொடுத்த இலாவிற்கும்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா இது கண்ணில் படவில்லை,நான் ரோஸ்மில்க் கடல்பாசி செய்கிறேன்.பார்க்கவே அழகா இருக்கு,ஒரு பக்கெட்டுக்கு 34 கிராம் வருது.அதுக்கு ஏற்றது போல் செய்துட்டு ஞாயிறு அன்று சொல்கிறேன்.ரெம்ப நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்க கடற்பாசி குறிப்பு செய்துட்டேன் இன்று. ;) நீங்க சொன்ன மாதிரி எனக்கு ப்ளைன் விட, ரோஸ் மில்க் கலந்து செய்தது ரொம்ப ரொம்ப பிடிச்சது. இந்த கடற்பாசி தேடி உங்க குறிப்பு வந்த நாளா என் தங்கையிடமும், தங்கை கணவரிடமும் சொல்லி சொல்லி, எங்கும் கிடைக்கல. இன்னைக்கு அதிர்ஷ்டவசமா ஒரு சின்ன சூப்பர் மார்க்கட்டில் கிடைத்ததுன்னு தங்கை வாங்கி வந்தா.... உடனே செய்துட்டேன். :) எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது. இனி அடிக்கடி செய்வேன். மிக்க நன்றி ஆசியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓடி வந்துவிட்டேன்,கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்,அனாமிகா பதிவை வேறு பார்த்தேனா? உங்கள் இருவரின் பின்னூடத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த குறிப்பினை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் தயாரித்த ப்ளைன் கடல்பாசியின் படம்

<img src="files/pictures/aa327.jpg" alt="picture" />

பார்க்க அழகாக இருக்கு.கடற்பாசியை காய்ச்சி வடிகட்டினீங்களா?கடற்பாசி நன்கு கரைந்தால் தான் சாஃப்டாக இருக்கும்.கலர் கலராக செய்து அசத்தியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெளியாயிட்டுதா??? மிக்க நன்றி அட்மின்.

ஆசியா.... வடிகட்டி தான் செய்தேன். இப்போ இதுல நான் நிறைய ட்ரை பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஒன்னு நீங்க சொன்ன மாதிரி ரோஸ் மில்க், இன்னும் ஒன்னும் பாதாம் மில்க் (நீங்க இதுவரை செய்யலன்னா அவசியம் ட்ரை பண்ணுங்கோ.... ரொம்ப சூப்பரா இருந்தது), இன்னும் ஒன்னு மேங்கோ பிளேவர் (ஸ்லைஸ்(Slice) சேர்த்து செய்தது. இதுவும் சூப்பரா இருந்தது). மிக்க நன்றி ஆசியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் ப்ளைன் ஜெல்லி என்று கூட்டாஞ்சோறுவில் கொடுத்தேன்,அதில் இந்த பாதாம் எசன்ஸ் பற்றி சொல்லிருந்தேன்,கவனிக்கலையா?போட்டோ எடுக்கும் பொழுது ரோஸ்மில்க் எசன்ஸ் உபயோகித்ததால் அதனை குறிப்பிட்டு இருந்தேன்.தேங்காய் பாலில் கூட ட்ரை பண்ணி பாருங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Super o super dhatha jasakilra

Pakave superarku

Kalam pon ponrathu